பொது மாநாடு
கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருக்க
அக்டோபர் 2021 பொது மாநாடு


9:49

கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருக்க

கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருக்க நமது செயல்கள், நடத்தை மற்றும் வாழ்க்கையில் இரட்சகரின் செயல்களுக்கு ஏற்ப முயல்வதாகும்.

வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, வேதங்களைப் பற்றிய எனது தனிப்பட்ட படிப்பில், பின்னர் பவுல் என்று அறியப்பட்ட தர்சீஸின் சவுலின் மனமாற்றத்தால் நான் ஈர்க்கப்பட்டேன்.

சபை மற்றும் கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதில் பவுல் சுறுசுறுப்பாயிருந்தான். ஆனால், பரலோகத்தின் வல்லமை மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினால் அவன் முற்றிலுமாக மாறி, தேவனின் மாபெரும் ஊழியக்காரர்களில் ஒருவனானான். அவன் வாழ்க்கையின் மாதிரி இரட்சகராகிய இயேசு கிறிஸ்து.

கொரிந்தியருக்கு பவுலின் போதனைகள் ஒன்றில், அவனே கிறிஸ்துவைப் பின்பற்றுபவனாக இருந்ததைப்போல, அவனைப் பின்பற்றுபவர்களாக இருக்க அவர்களை அவன் அழைத்தான் (1 கொரிந்தியர் 11:1 பார்க்கவும்). கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருக்க, பவுலின் காலத்திலிருந்து இன்றுவரை, இது ஒரு உண்மையான மதிப்புமிக்க ஒரு அழைப்பாயிருக்கிறது.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக ஆக என்பதற்கு அர்த்தமென்ன என நான் சிந்திக்க ஆரம்பித்தேன். மிக முக்கியமாக, “எந்த வழியில் நான் அவரைப் போலிருக்க வேண்டும்?” என நான் கேட்க ஆரம்பித்தேன்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருக்க நமது செயல்கள், நடத்தை மற்றும் வாழ்க்கையில் இரட்சகரின் செயல்களுக்கு ஏற்ப முயல்வதாகும். அது நல்லொழுக்கங்களைப் பெறுவதாகும். இது இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனாயிருப்பதாகும்.

இரட்சகரின் வாழ்க்கையின் சில அம்சங்களை நான் படித்துள்ளேன், இன்று எனது செய்தியின் ஒரு பகுதியாக, நான் பின்பற்ற முயற்சிக்கும் அவருடைய நான்கு தன்மைகளை நான் தக்கவைத்துள்ளேன், உங்களுடன் அதை நான் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இரட்சகரின் முதல் பண்பு தாழ்மை. அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையிலிருந்து இயேசு கிறிஸ்து மிக தாழ்மையானவர். பரலோக ஆலோசனை சங்கத்தில், மனுக்குலத்திற்காக இரட்சிப்பின் திட்டத்தில் தேவனின் சித்தம் ஜெயிக்க அவர் அதை அங்கீகரித்து அனுமதித்தார். அவர் சொன்னார், “பிதாவே உமது சித்தம் செய்யப்படும், மகிமை என்றென்றைக்கும் உம்முடையவைகளே” (மோசே 4:2).

இயேசு கிறிஸ்து தாழ்மையைப் போதித்தார், அவருடைய பிதாவை மகிமைப்படுத்த தன்னையே தாழ்த்தினார் என நாம் அறிவோம்.

தாழ்மையில் நாம் வாழுவோமாக, ஏனெனில் அது சமாதானத்தைக் கொண்டுவருகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:23 பார்க்கவும்). தாழ்மை மகிமைக்கு முன்னதாக வருகிறது, அது தேவனின் தயவை நம் மீது கொண்டு வருகிறது: “அந்தப்படி, நீங்கள் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1 பேதுரு 5:5). அடக்கம் மென்மையான பதில்களைக் கொண்டுவருகிறது. இது நீதியுள்ள குணத்தின் ஆதாரம்.

மூப்பர் டேல் ஜி. ரென்லன்ட் போதித்தார்:

“தேவனுடன் தாழ்மையுடன் நடக்கிற தனிப்பட்டவர்கள், அவர்களுக்காக பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் செய்தவற்றை நினைவுகூருகிறார்கள்.”

“தேவனுடன் தாழ்மையுடன் நடப்பதால் அவருடன் நாம் கௌரவமாக செயல்படுகிறோம்” (“Do Justly, Love Mercy, and Walk Humbly with God,” Liahona, Nov. 2020, 111, 109).

இரட்சகரின்இரண்டாவது பண்பு தைரியம். 12 வயதில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் நினைக்கும் போது, தேவனின் ஆலயத்தில் நியாயசாஸ்திரிகள் மத்தியில் அமர்ந்துகொண்டு அவர்களுக்கு தெய்வீக காரியங்களைக் கற்பித்தபோது, ஏற்கனவே தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே, நல்ல தைரிய உணர்வு, ஒரு குறிப்பிட்ட தைரியம் அவருக்கிருந்தது. அந்த வாலிப பையன் நியாயசாஸ்திரிகளால் கற்பிக்கப்படுவான் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்கும்போது, “அவர் பேசுவதை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்து அவரிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர்” (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, லூக்கா 2:46 [in லூக்கா 2:46, footnote c).

2016லிருந்து 2019வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் Mbuji-Mayi ஊழியத்தில் நாங்கள் ஒரு முழுநேர பணியைச் செய்தோம். ஊழியத்தில் ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்கு பயணிக்கும் வழி சாலை வழியாக இருந்தது. கூர்மையான ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் சாலையை பழுதாக்கி பயணிகளின் நடமாட்டத்தை தொந்தரவு செய்யும் ஒரு நிகழ்வு அந்த பகுதியில் எழுந்துள்ளது.

இடமாற்றத்தின் ஒரு பகுதியாக ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணிக்கும் ஐந்து ஊழியக்காரர்கள் இந்த இடையூறுகளுக்கு பலியாகினர். சிலசமயங்களுக்கு முன்பு இந்த நிகழ்வுக்கு நாங்களே பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், உயிருக்கும், எங்கள் அனைவரின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் நாங்கள் பயப்பட ஆரம்பித்து, ஊழியக்காரர்களை சந்திக்கவும், மண்டல மாநாட்டை நடத்தவும் இந்த சாலைகளில் பயணிக்க தயங்கினோம். இது எவ்வளவு காலம் நீடித்திருக்குமென்று எங்களுக்குத் தெரியவில்லை. நான் ஒரு அறிக்கையை தயாரித்து, அதை பிரதேச தலைமைக்கு அனுப்பினேன், எங்கள் ஊழியக்காரர்களை அடைய சாலை மட்டுமே வழியாக இருக்கும் போது தொடர்ந்து பயணம் செய்வதைப்பற்றிய என்னுடைய உணர்வுகளை நான் தெரியப்படுத்தினேன்.

ஆப்பிரிக்கா தென்கிழக்கு பிரதேசத்தின் எங்கள் தலைவராக இருந்த மூப்பர் கெவின் ஹாமில்டன் அவரது பதிலில் எனக்கு எழுதினார்: “உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்வதே எனது ஆலோசனை. புத்திசாலித்தனமாகவும் ஜெபத்துடனுமிருங்கள். தெரிந்தே உங்களையோ அல்லது உங்கள் ஊழியக்காரர்களையோ கெடுதலுக்கு உள்ளாக்காதீர்கள், ஆனால் அதே சமயத்தில் விசுவாசத்தில் முன்னேறுங்கள். ‘தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்’ (2 தீமோத்தேயு 1:7).”

இந்த அறிவுறுத்தல் எங்களை பெரிதும் பலப்படுத்தியது மற்றும் எங்கள் ஊழியத்தின் இறுதி வரை தைரியத்துடன் பயணிக்கவும் சேவை செய்யவும் எங்களை அனுமதித்தது, ஏனென்றால் அந்த வசனத்தின் மூலம் பரலோகத்தில் உள்ள எங்கள் பிதாவிடமிருந்து நாங்கள் வழிநடத்துதலைக் கேட்டோம்.

நமக்கு கர்த்தருடைய ஊக்குவித்தலை எண்ணி ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசியின் உணர்த்தப்பட்ட வார்த்தைகளை தற்கால வேதத்தில், நாம் வாசிக்கிறோம்: “சகோதரரே, ஒரு மகத்தான காரணத்திற்காக நாம் போகக்கூடாதோ? முன்னோக்கிச் செல்லுங்கள், பின்னோக்கியல்ல. தைரியம் கொள்ளுங்கள் சகோதரரே, முன்னேறுங்கள் ஜெயத்தை நோக்கி!” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:22).

அது பிரபலமில்லாத போது கூட சரியானதைச் செய்ய, நமது விசுவாசத்தைப் பாதுகாக்கவும், விசுவாசத்தில் செயல்படவும் நமக்கு தைரியம் இருப்பதாக. அன்றாடம் மனந்திரும்பவும், தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொள்ளவும், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும் நமக்கு தைரியம் இருப்பதாக. நீதியாக வாழவும், நமது பல்வேறு பொறுப்புகளிலும் பதவிகளிலும் நம்மிடம் எதிர்பார்க்கப்படுவதை செய்யவும் நமக்கு தைரியம் இருப்பதாக.

இரட்சகரின் மூன்றாவது பண்பு மன்னிப்பு. அவருடைய பூலோக ஊழியத்தில், விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை கல்லெறியப்படுவதிலிருந்து இரட்சகர் தடுத்தார். “போ, இனி பாவஞ்செய்யாதே” (யோவான் 8:11) என அவளுக்குக் கட்டளையிட்டார். மனந்திரும்புதலுக்கும், இறுதியில் மன்னிப்புக்கும் நேராக இது அவளை நகர்த்தி, வேதங்கள் பதிவுசெய்தபடி, “அந்த மணிநேரத்திலிருந்து அந்தப் பெண் தேவனை மகிமைப்படுத்தி அவருடைய நாமத்தை நம்பினாள்”(Joseph Smith Translation, John 8:11 [in யோவான் 8:11, footnote c)

டிசம்பர் 2018ம் ஆண்டில், கிறிஸ்துமஸ் ஆராதனையின்போது, இரட்சகரிடமிருந்து நாம் பெற்ற நான்கு வரங்களைப்பற்றி நமது அன்புள்ள தலைவர் ரசல் எம். நெல்சன் பேசினார். இரட்சகர் வழங்குகிற ஒரு வரம் மன்னிக்கும் திறன் என அவர் சொன்னார்:

“அவருடைய முடிவற்ற பாவநிவர்த்தியின் மூலம், உங்களை காயப்படுத்தியவர்களை, உங்களுக்கு அவர்கள் செய்த கொடுமைக்கு ஒருபோதும் பொறுப்பேற்காதவர்களை நீங்கள் மன்னிக்கலாம்.

“உங்களுடைய மன்னிப்பை தீவிரமாகவும் தாழ்மையுடனும் நாடுகிற ஒருவரை மன்னிப்பது வழக்கமாக எளிதாயிருக்கும். ஆனால் எந்த வழியிலும் உங்களை தவறாக நடத்திய யாரையாவது மன்னிக்கும் திறனை இரட்சகர் உங்களுக்கு அருளுவார்” (“Four Gifts That Jesus Christ Offers to You” [First Presidency Christmas devotional, Dec. 2, 2018], broadcasts.ChurchofJesusChrist.org).

பிதாவின் மன்னிப்பைப் பெற நாம் ஒருவருக்கொருவர் உண்மையாகவே மன்னிப்போமாக. மன்னிப்பு நம்மை விடுதலையாக்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் திருவிருந்தில் பங்கேற்க நம்மை தகுதியாக்குகிறது. இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாயிருக்க மன்னிப்பு நமக்குத் தேவையாயிருக்கிறது.

இரட்சகரின் நான்காவது பண்பு தியாகம். இது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பகுதி. நாம் மீட்கப்படும்படியாக, உயர்ந்த பிராயச்சித்தமான அவருடைய ஜீவனை நமக்காக இரட்சகர் கொடுத்தார். தியாகத்தின் வேதனையை உணர்ந்து, பாத்திரத்தை அகற்ற அவருடைய பிதாவிடம் அவர் கேட்டார், ஆனால் அவர் நித்திய தியாகத்தின் முடிவுக்குச் சென்றார். இது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி.

தலைவர் எம். ரசல் பல்லார்ட் இதைப் போதித்தார்: “தியாகம் என்பது தூய அன்பின் செயல் விளக்கம். கர்த்தருக்காகவும், சுவிசேஷத்திற்காகவும், நம் சக மனிதர்களுக்காகவும் நம் அன்பின் அளவை, நாம் அவர்களுக்காக தியாகம் செய்யத் தயாராக இருப்பதன் மூலம் அளவிட முடியும்.”(“The Blessings of Sacrifice,” Ensign, May 1992, 76).

ஊழியம் செய்வதற்காக, மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக, நன்மை செய்வதற்காக, குடும்ப வரலாற்றுப் பணியைச் செய்வதற்காக, நமது சபை அழைப்புகளை விரிவாக்க நமது நேரத்தை நாம் தியாகம் செய்யமுடியும்.

பூமியில் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்ட, தசமபாகத்தை, உபவாசக் காணிக்கைகளை, பிற நன்கொடைகளை செலுத்துவதால் நமது நிதிகளை நம்மால் கொடுக்கமுடியும். இரட்சகருடன் நாம் செய்த உடன்படிக்கைகளை கைக்கொள்ள நமக்கு தியாகம் தேவை.

என் ஜெபம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, அவருடைய பாவநிவர்த்தி ஆசீர்வாதங்களைப் பெறுவதன் மூலம், நாம் மேலும் மேலும் தாழ்மையுடன் இருக்கிறோம், நாம் தைரியமாக இருக்கிறோம், மேலும் மேலும் நாம் மன்னிக்கிறோம், மேலும் அவருடைய ராஜ்யத்திற்காக நாம் அதிக தியாகம் செய்கிறோம்.

நமது பரலோக பிதா ஜீவிக்கிறார் என்றும், அவர் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறிவார் என்றும், இயேசுவே கிறிஸ்து என்றும், தலைவர் ரசல் எம். நெல்சன் இன்று தேவனுடைய தீர்க்கதரிசி என்றும், நான் சாட்சியளிக்கிறேன். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியின்மேல் தேவனுடைய ராஜ்ஜியம் என்றும், மார்மன் புஸ்தகம் உண்மையானதென்றும் நான் சாட்சியளிக்கிறேன். நமது மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.