கர்த்தாவே, என் கண்கள் திறக்கப்படப் பண்ணுவீரா
இரட்சகரின் கண்கள் மூலமாக நாம் பிறரைப் பார்க்க வேண்டும்.
சிங்க இராஜா, ஆப்பிரிக்க சாவன்னா காடுகளைப்பற்றிய ஒரு தரமான அனிமேஷன் திரைப்படம். தனது மகனைக் காப்பாற்றும்போது, சிங்க இராஜா மரிக்கிறான், இளம் சிங்க இளவரசன் தலைமறைவாயிருக்க கட்டாயப் படுத்தப்பட்டான், அப்போது ஒரு கொடுங்கோலரசன் சாவன்னாவின் சமநிலையை அழிக்கிறான். ஒரு ஆலோசனையாளர் மூலமாக சிங்க இளவரசன் தன் இராஜ்யத்தைத் திரும்பப் பெறுகிறான். சாவன்னாவின் மாபெரும் உயிரினச் சுழற்சியின் சமநிலையின் தேவையைப்பற்றி அவனது கண்கள் திறக்கப்பட்டன. இராஜாவாக தன் உரிமைப்பட்ட இடத்தை அடைந்து, “பார்ப்பதற்கு அப்பாலும் பார்க்கும்” ஆலோசனையை இளஞ்சிங்கம் பின்பற்றியது. 1
நமது பரலோக பிதாவிடமுள்ள அனைத்திற்கும் சுதந்தரவாளிகளாகுவதற்கு நாம் கற்றுக்கொள்ளும்போது, நாம் பார்ப்பதற்கும் அப்பால் பார்க்க சுவிசேஷம் நமக்கு ஆலோசனையளிக்கிறது. நாம் பார்ப்பதற்கு அப்பாலும் பார்க்க நாம் பிறரை இரட்சகரின் கண்கள் மூலமாகப் பார்க்க வேண்டும். சுவிசேஷ இணைப்பு பலவிதமான ஜனங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. நமது உலகத்திலும், சபையிலும், குடும்பங்களிலும் கூட ஜனங்களின் தெரிந்தெடுப்புகளையும் மனோதத்துவ பின்னணிகளையும் நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் எளிய கணிப்புகளையும் ஒரே விதமான எண்ணத்தையும் தாண்டி பார்த்து, நமது சொந்த அனுபவத்தின் சிறு உருப்பெருக்கியை விசாலமாக்க வேண்டும்.
ஊழியத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, “நான் பார்க்க முடிந்ததற்கும் அப்பால் பார்க்க” நான் என் கண்களைத் திறந்தேன். தன் கண்களில் சந்தேகத்துடன் ஒரு இளம் மூப்பர் வந்தார். நாங்கள் நேர்காணலில் சந்தித்தபோது, அவர் விரக்தியுடன் சொன்னார், “நான் வீட்டுக்குப் போக வேண்டும்.” நான் எனக்குள்ளே நினைத்தேன், “நாம் இதைத் தீர்த்து வைக்க முடியும்.” கடினமாக வேலை செய்யவும், ஒரு வாரத்துக்கு இதைப்பற்றி ஜெபிக்கவும், பின்பு என்னை அழைக்கவும் ஆலோசனையளித்தேன். சரியாக ஒரு வாரத்துக்குப் பின்னர், அவர் என்னை அழைத்தார். அவர் இப்போதும் வீட்டுக்குப்போக விரும்பினார். நான் அவருக்கு மீண்டும் ஜெபிக்கவும் கடினமாக உழைக்கவும் ஒரு வாரத்துக்குப் பிறகு அழைக்கவும் ஆலோசனையளித்தேன். எங்களது அடுத்த நேர்காணலிலும் காரியங்கள் மாறவில்லை. அவர் வீட்டுக்குச் செல்வதையே வலியுறுத்தினார்.
நான் இது நடக்க அனுமதிக்கப்போவதில்லை. நான் அவரது அழைப்பின் பரிசுத்த தன்மையைப்பற்றி கற்பிக்கத் தொடங்கினேன். அவர் “தன்னை மறந்து விட்டு பணியாற்றச் செல்ல” ஊக்குவித்தேன். 2 நான் எந்த சூத்திரத்தைக் கொடுத்தாலும், அவரது மனம் மாறவில்லை. நான் இதை முழுமையாகப் பார்க்கக் கூடாது என நினைத்தேன். அப்போது இந்தக் கேள்வியைக் கேட்க நான் உந்தப்பட்டேன். “மூப்பரே உங்களுக்கு எது கடினமாக இருக்கிறது?’ அவர் சொன்னது என் இருதயத்தை ஊடுருவியது, “தலைவரே, என்னால் வாசிக்க முடியாது.”
அவருக்குக் கொடுக்க மிக முக்கியமானது என நான் நினைத்த ஆலோசனை, அவரது தேவைகளுக்கு ஒருபோதும் பொருத்தமானது இல்லை. நான் எனது அவசரக் கணிப்புக்கு அப்பால் பார்த்து, அந்த மூப்பரின் மனதில் உண்மையாகவே என்ன இருந்தது என நான் புரிந்துகொள்ள ஆவியை அனுமதிப்பதுதான் அவருக்கு அதிகமாகத் தேவைப்பட்டது. நான் அவரைச் சரியாகப் பார்த்து நம்புவதற்கு ஒரு காரணத்தைக் கொடுக்க அவர் எதிர் பார்த்தார். பதிலுக்கு, நான் ஒரு ராட்சஷ உடைத்தழிக்கும் பந்தாக செயல்பட்டேன். அந்த துடிப்பான மூப்பர் வாசிக்கக் கற்று இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனானார். அவர் என் கண்களை கர்த்தரின் வார்த்தைகளுக்குத் திறந்தார், “மனுஷன் முகத்தைப் பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7).
கர்த்தரின் ஆவி நமது பார்வையை விசாலப்படுத்தும்போது அது எப்படிப்பட்ட ஆசீர்வாதம். தங்கள் குதிரைகளுடனும் இரதங்களுடனும் பட்டணத்தைச் சுற்றிவளைத்த அசீரிய சேனையைக் காண எழுந்திருந்த தீர்க்கதரிசி எலிசாவை நினைத்துப் பாருங்கள். அவனது வேலைக்காரன் பயந்தான், அப்பிரச்சினையை எதிர்த்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என எலிசாவைக் கேட்டான். அந்த நினைவுகூரத்தக்க வார்த்தைகளுடன் எலிசா அவனைக் கவலைப்படாமலிருக்கச் சொன்னான், “பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” (2 இராஜாக்கள் 6:16). தீர்க்கதரிசி சொல்வதைப்பற்றி வேலைக்காரனுக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. அவன் பார்ப்பதற்கு அப்பால் அவனால் பார்க்க முடியவில்லை. எனினும் தீர்க்கதரிசியின் ஜனங்களுக்காக யுத்தம் செய்ய தயாராயிருந்த தூதர்களின் சேனைகளை எலிசா கண்டான். ஆகவே அந்த இளைஞனுடைய கண்களைத் திறக்குமாறு எலிசா கர்த்தரிடம் ஜெபித்தான். “இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.” ( 2 இராஜாக்கள் 6:17)
நாம் பார்க்கிற வித்தியாசங்களால் பிறரை நம்மிடமிருந்து பிரிக்கிறோம். நம்மைப் போல சிந்திக்கிற, பேசுகிற, உடுத்துகிற, மற்றும் செயலாற்றுகிறவர்கள் நம்மைச் சுற்றி இருந்தால், நாம் சௌகரியமாக உணர்கிறோம், வித்தியாசமான சூழ்நிலைகளிலிருந்தும், பின்னணிகளிலிருந்தும் வருகிறவர்களால் அசௌகரியமடைகிறோம்? உண்மையில் நாம் வித்தியாசமான நாடுகளில் இருந்து வரவில்லையா, வித்தியாசமான மொழிகள் பேசவில்லையா? நமது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் ஏராளமான வரையறைகள் மூலம் உலகத்தை நாம் பார்ப்பதில்லையா? ஏனெனில் சிலர் ஆவிக்குரிய கண்களினால் தீர்க்கதரிசி எலியா போலப் பார்க்கிறார்கள், நான் என்னுடைய படிக்காத ஊழியக்காரரிடம் அனுபவத்தைப் பெற்றதுபோல சிலர் மாம்ச கண்களால் பார்க்கிறார்கள்.
ஒப்பிடுதலை, அடையாளப்படுத்துதலை, விமரிசனங்களை ஊட்டுகிற, உலகில் நாம் வாழ்கிறோம். சமூக ஊடகங்களின் உருப்பெருக்கி மூலமாக பார்ப்பதற்குப் பதிலாக, நாம் ஒவ்வொருவரும் உரிமைகோருகிற தேவ தன்மைகளுக்காக நாம் உள்ளார்ந்து நோக்க வேண்டும். இந்த தேவ தன்மைகள் மற்றும் ஏக்கங்கள் பின்ட்ரஸ்ட்டிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிடப்பட முடியாது.
பிறரை ஏற்றுக்கொள்வதும் நேசிப்பதுவும், அவர்களது கருத்துக்களை நாம் கடைபிடிக்கிறோம் என்பதாகாது. வெளிப்படையாகவே, சத்தியம், நாம் ஏற்கிற உயர் கட்டளையாக இருந்தாலும், இது தயவுக்கு ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும் வறையறைகளையும் ஒருபோதும் நம்மால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியாதவர்களான மக்களின் சிறந்த முயற்சிகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளுதல், உண்மையாகவே பிறரை நேசிக்க தேவையாயிருக்கிறது., நாம் பார்க்க இயல்வதற்கு அப்பால் பார்த்தலுக்கு, இரட்சகரை விழிப்புடன் பார்ப்பது தேவைப்படுகிறது.
மே 28, 2016ல் 16 வயது ப்யூ ரிச்சியும், அவனது நண்பன் ஆஸ்ட்டினும், கொலொராடொவில் குடும்ப பண்ணையில் இருந்தார்கள். ப்யூவும் ஆஸ்ட்டினும் தாங்கள் எங்கும் ஓட்டக்கூடிய வாகனங்களில் சாகச நாளை எதிர்பார்த்து ஏறினார்கள். அவர்கள் அதிக தூரம் செல்வதற்கு முன்னேயே வித்தியாசமான நிலையை எதிர்கொண்டார்கள், அந்த இடத்தில் சோகம் நிகழ்ந்தது. ப்யூ ஓட்டிச் சென்ற வண்டி திடீரெனப் புரண்டு, ப்யூ 400 பவுண்டு (180 கிலோ) எஃகுக்கடியில் மாட்டிக் கொண்டான். ப்யூவின் நண்பன் அவனிடம் சென்றபோது, ப்யூ உயிருக்காக போராடிக்கொண்டிருந்தான். தனது முழு பெலத்தோடும் தன் நண்பனை வண்டியிலிருந்து வெளியே இழுக்க முயற்சி செய்தான். அது நகரவில்லை. அவன் ப்யூவுக்காக ஜெபித்துவிட்டு, உதவிக்காக விரைவாக ஓடினான். அவசர உதவி ஆட்கள் கடைசியில் வந்தனர், ஆனால் சில மணிநேரத்துக்குப் பின் ப்யூ மரித்தான். அவன் இந்த அநித்திய உலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டான்.
இருதயம் உடைந்த அவனது பெற்றோர் வந்துசேர்ந்தனர். ப்யூவின் நெருங்கிய நண்பன், மற்றும் குடும்பத்தினர் அச்சிறு மருத்துவமனையில் நின்றுகொண்டிருந்தபோது, காவல் அதிகாரி அவ்வறையில் நுழைந்து ப்யூவின் கைபேசியை அவனது தாயிடம் கொடுத்தார். அவர் கைபேசியை எடுத்தவுடன் அதன் மணி அடித்தது. அவர் திறந்தபோது ப்யூவின் தினசரி எச்சரிக்கை மணியைப் பார்த்தார். தினமும் வாசிக்க தன் பதின்ம வயதுடைய, சாகசங்களை விரும்புகிற மகன் பதிந்து வைத்திருந்த செய்தியை சத்தமாக வாசித்தார். அது சொன்னது, “இன்று, இயேசு கிறிஸ்துவை உன் வாழ்க்கையின் மையமாக வைக்க நினைவுகொள்.”
அவன் இல்லாதபோது தன் மீட்பர் குறித்து ப்யூவின் பார்வை அவனை நேசித்தவர்களின் துக்கத்தைக் குறைக்கவில்லை. எனினும் அது ப்யூவின் வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் தெரிந்தெடுப்புகளுக்கும் பெரும் நம்பிக்கையையும் அர்த்தத்தையும் கொடுக்கிறது. அவனது அகால மரணத்தின் துக்கத்துக்கு அப்பாலும் அடுத்த வாழ்க்கையின் சந்தோஷமிக்க உண்மைகளை அவனது குடும்பத்தையும் நண்பர்களையும் பார்க்க அனுமதித்தது. அவன் அதிகம் பொக்கிஷப்படுத்தியதை தங்களது மகனின் கண்கள் மூலமாக பார்ப்பது ப்யூவின் பெற்றோருக்கு எவ்வளவு மென்மையான இரக்கம்.
சபையாராக, இரட்சிப்பை விடுத்து அநித்திய கண்களுடன் மட்டும் நாம் பார்க்கும்போது, நம்மை எச்சரிக்கிற தனிப்பட்ட எச்சரிக்கை மணியால் நாம் வரமளிக்கப்பட்டுள்ளோம். நாம் அவரை எப்போதும் நினைக்கும்படிக்கும், நம்மோடு எப்போதும் அவரது ஆவியை வைத்திருக்கும்படிக்கும், திருவிருந்து, இரட்சகரை தொடர்ந்து உற்றுநோக்குகிற வாராந்திர நினைவூட்டுதலாகும். (கோ.உ 20:77 பார்க்கவும்). இருப்பினும் நாம் இந்த நினைவூட்டு உணர்வுகளையும் எச்சரிக்கை மணியையும் சிலசமயங்களில் உதாசீனம் செய்துவிடுகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவை நமது வாழ்க்கையின் மையமாகக் கொண்டிருக்கும்போது, நாம் மட்டுமே புரிந்துகொள்கிறதைவிட பெரிய சாத்தியங்களுக்கு நமது கண்கள் திறக்கப்படும்படி செய்வார்.
ஒரு விசுவாசமிக்க சகோதரியால் அனுபவிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை மணியைப்பற்றி ஒரு ரசிக்கத்தக்க கடிதம் பெற்றேன். அவள் எப்படி உணர்ந்தாள் என அவளது கணவன் புரிந்து கொள்ள உதவும் முயற்சியாக அவளை எரிச்சலூட்டிய, அவன் சொன்ன அல்லது செய்த காரியங்களை, அவளது கைபேசியில் மின்னணு பட்டியலாக வைக்கத் தொடங்கியதாக அவள் சொன்னாள். சரியான நேரம் வரும்போது, அவனது வழிகளை மாற்றும்படியாக தொகுக்கப்பட்ட எழுத்துமூலமான நிரூபணத்தை அவனுடன் பகிர்ந்து கொள்வாள் என அவள் நியாயப்படுத்தினாள். எனினும் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவிருந்தில் பங்கேற்று, இரட்சகரின் பாவநிவர்த்தியைப்பற்றி உற்றுநோக்கும்போது, தன் கணவனைப்பற்றி எதிர்மறை உணர்வுகளை பதிவுசெய்தது ஆவியை அவளிடமிருந்து துரத்தியது மற்றும் அவனை ஒருபோதும் மாற்றப்போவதில்லை என அவள் உணர்ந்தாள்.
அவளது இருதயத்தில் ஒரு ஆவிக்குரிய எச்சரிக்கை மணி ஒலித்தது, அது சொன்னது, “அது போகட்டும், அது எல்லாம் போகட்டும். அந்தக் குறிப்புகளை அழித்துவிடு. அவை உதவக்கூடியதல்ல.” அவள் பின்பு மேற்கோள் காட்டினாள், “எனக்கு ‘அனைத்தையும் தேர்வு செய்’ தட்ட சிறிது நேரமும், ‘அழி’ தட்ட அதிக நேரமும் ஆனது. ஆனால் நான் செய்தபோது அந்த எதிர்மறை எண்ணங்கள் ஆகாயத்தில் மறைந்து விட்டன. எனது இருதயம் அன்பால், என் கணவர் மேல் அன்பாலும், கர்த்தர் மீது அன்பாலும் நிரம்பியது.” தமஸ்குவுக்குச் செல்லும் சாலையில் சவுலைப்போல அவளது பார்வையை மாற்றிக் கொண்டாள். திசைதிருப்பும் செதில்கள் அவளது கண்களிலிருந்து விழுந்தன.
நமது இரட்சகர் அடிக்கடி சரீரபிரகாரமாயும் ஆவிக்குரிய பிரகாரமாயும் குருடானவர்களின் கண்களைத் திறந்தார். உண்மையாகவும் உருவகமாகவும் நமது கண்களை தெய்வீக சத்தியத்துக்கு திறப்பது அநித்திய கிட்டப்பார்வையை குணப்படுத்த நம்மை ஆயத்தப்படுத்துகிறது. பாதையை சரிப்படுத்துவதற்கு அல்லது பெரிய நித்திய நோக்கத்துக்கு தேவையை சமிக்ஞை செய்கிற ஆவிக்குரிய எச்சரிக்கை மணிக்கு நாம் கவனம் செலுத்தும்போது, நம்மோடு அவரது ஆவியை வைத்திருக்கும் திருவிருந்து வாக்குத்தத்தத்தை நாம் பெறுகிறோம். அநித்திய வரையறைகளின் “திரை” “அவர்களது மனங்களிலிருந்து அகற்றப்பட்டு, அவர்களது புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்படும்,” என வாக்களித்த இயேசு கிறிஸ்துவால் உறுதியான சத்தியங்கள் போதிக்கப்பட்டபோது, கர்த்லாந்து ஆலயத்தில் ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கௌட்ரிக்கும் இது நிகழ்ந்தது. (கோ.உ 110:1)
இயேசு கிறிஸ்துவின் வல்லமையின் மூலமாக நாம் உண்மையாகப் பார்ப்பதற்கும் அப்பால் ஆவிக்குரிய விதமாகப் பார்க்கும்படியாக நம்மால் முடிகிறது என நான் சாட்சியளிக்கிறேன். நாம் “அவரை நினைவுகூர்ந்து அவரது ஆவியை நம்மோடு கொண்டிருக்கும்போது,” நமது புரிந்துகொள்ளும் கண்கள் திறக்கப்படும். அப்போது மாபெரும் உண்மை, நம் ஒவ்வொருவருக்குள்ளும் நமது இருதயங்களில் அதிக வல்லமையோடு தாக்கம் ஏற்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.