நெடுந்தூரப் பயணம் தொடர்கிறது!
பரலோக பிதாவிடம் திரும்பும் நமது நெடுந்தூரப் பயணம் நமது வாழ்க்கையில் மிக முக்கிய நெடுந்தூரப் பயணம்.
நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாக பிரிகாம் யங் சால்ட் லேக் பள்ளத்தாக்கினூடே பார்த்து அறிவித்தார், “இதுதான் சரியான இடம்!” 1 அவருக்கு அந்த இடம் தெரியும், ஏனெனில் கர்த்தர் அவருக்கு அதை வெளிப்படுத்தியிருந்தார்.
1869ல் 70,000-க்கும் அதிகமான பரிசுத்தவான்கள் இதைப்போன்ற ஒரு நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டார்கள். மொழியில், கலாச்சாரத்தில், குடியுரிமையில் அவர்களுக்குள் அநேக வித்தியாசங்கள் இருந்தாலும், பிதா. குமாரன், பரிசுத்த ஆவியைப்பற்றியும், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப்பற்றியும் அவர்களின் சாட்சியையும், இரட்சகரின் இரண்டாம் வருகைக்காக சமாதானம், சந்தோஷம், மற்றும் அழகிய இடமான சீயோனைக் கட்ட அவர்களின் விருப்பத்தையும் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
யூட்டாவை வந்தடைந்த முதல் பரிசுத்தவான்களுக்குள், விடுதலையடைந்த ஒரு அடிமையின் மகளான, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு ஒரு மனமாறியவரான, கடினமான சவால்களை சந்தித்தவரான, மிக குறிப்பிடத்தக்க சீஷையான ஜேன் மான்னிங் ஜேம்ஸ் இருந்தார். 1908ல், தனது மரணம் வரை சகோதரி ஜேம்ஸ் ஒரு உண்மையுள்ள பிற்காலப் பரிசுத்தவானாக நிலைத்திருந்தார்.
அவர் எழுதினார், “பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையால் போதிக்கப்பட்டதைப்போல, நான் ஞானஸ்நானம் பெற்றதைவிட இன்று பெலமாக இருப்பதால், சாத்தியமானால் நான் இங்கேயே தங்க விரும்புகிறேன். நான் என் தசமபாகத்தையும் காணிக்கைகளையும் செலுத்துகிறேன், ஞானவார்த்தையைக் கைக்கொள்ளுகிறேன், விரைவிலேயே படுக்கைக்குச் சென்று காலையிலேயே எழுந்திருக்கிறேன், அனைவருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டை ஏற்படுத்த என்னுடைய தாழ்மையான முறையில் நான் முயற்சிக்கிறேன்.” 2
அநேக பிற பிற்காலப் பரிசுத்தவான்களைப்போல, இரத்தத்துடனும், வேர்வையுடனும், கண்ணீருடனும் சீயோனைக் கட்டுவதற்கு மட்டுமல்ல, அவரை நேர்மையாக நாடுகிற அனைவருக்கும் குணமளிக்கிற இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைத் தரித்திருக்கும்போது அவரால் முடிந்தவரை சவிசேஷ கொள்கைகளின்படி வாழ்வதன் மூலமாக கர்த்தரின் ஆசீர்வாதங்களையும் சகோதரி ஜேம்ஸ் நாடினார்.
ஆரம்பகால பரிசுத்தவான்கள் பரிபூரணர்களாயிருக்கவில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு நமது ஒப்புக்கொடுத்தலிலும், பக்கத்திலிருப்பவர்களுக்கும் தூரத்திலிருப்பவர்களுக்கும் உதவ நமது தன்னார்வ முயற்சிகளிலும், உலகமுழுவதிலுமுள்ள பற்பல செய்தித்தாள்களில் மேற்கோள் காட்டப்பட்ட, அவர்கள் அமைத்த அஸ்திபாரத்தின் மீது, அன்பு செலுத்துகிற, உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுகிற குடும்பங்களையும் சமுதாயத்தையும் நாம் ஏற்படுத்தினோம். 3
தலைவர் ஐரிங் உங்கள் பாராட்டுக்குரிய, டெக்ஸாஸிலும், மெக்ஸிகோவிலும், பிற இடங்களிலும் பணியாற்றுகிற பல்லாயிரக்கணக்கான மஞ்சள் சட்டை தூதர்களை நானும் பாராட்டுகிறேன்.
நமக்கு முன்பு சென்றவர்களுடன் நமது இணைப்புகளை, முன்னோடிகளான நமது முன்னோர்களான தகப்பன்களையும் தாய்களையும் சேர்த்து, நாம் இழந்தால் நாம் ஒரு மிக அருமையான பொக்கிஷத்தை இழப்போம் என்ற ஒரு ஆழமான திடநம்பிக்கையிருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீதும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் மீதும் ஆரம்பகால பரிசுத்தவான்கள் கொண்டிருந்த அதே வகையான விசுவாசம் வளர்ந்துவரும் தலைமுறைகளுக்கிருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறபடியால் ஒவ்வொரு காலடியிலும் விசுவாசம் வைத்திருப்பதைப்பற்றி முன்பு நான் பேசினேன், வருங்காலத்திலும் பேசுவேன். 4
கைவண்டிகளை இழுத்து, பளுவான வண்டிகளை ஓட்டி, யூட்டாவுக்கு நடந்து சென்ற உண்மையுள்ள பரிசுத்தவான்களுக்கு மத்தியில் என்னுடைய சொந்த முன்னோடிகளான முன்னோர்களிருந்தனர். சகோதரி ஜேம்ஸைப்போல, தங்களுடைய நெடுந்தூரப் பயணத்தில் அவர்கள் சென்றபோது அவர்களின் ஒவ்வொரு காலடியிலும் ஆழமான விசுவாசத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள்.
கஷ்டங்கள், பசி, வியாதி, தேவனிடத்திலும் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திலும் அவர்களுடைய விசுவாசத்தின் விவரங்களால் அவர்களுடைய நாட்குறிப்புகள் நிரம்பின.
அவர்களிடம் உலக சம்பந்தமான பொருட்கள் சிறிதிருந்தன ஆனால், இயேசு கிறிஸ்து சபையில் அவர்கள் கண்ட சகோதரத்துவம், சகோதரியத்துவத்திலிருந்து ஏராளமான ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவித்தார்கள். அவர்களால் முடிந்தபோது, தாழ்ந்தவர்களை உயர்த்தி, ஒருவருக்கொருவரின் சேவையினாலும், தேவனின் ஆசாரியத்துவத்தினாலும் வியாதியஸ்தர்களை ஆசீர்வதித்தார்கள்.
யூட்டாவின் காசே பள்ளத்தாக்கில் “வறுமையிலிருப்பவர்களுக்கு உதவ ஒற்றுமையாக பணியாற்ற” 5 ஒத்தாசைச் சங்கத்தின் ஆவியால் சகோதரிகள் பரிசுத்தவான்களுக்கு பணிவிடை செய்தார்கள். 40 ஆண்டுகளாக லோகன் இரண்டாவது தொகுதியில் ஆயராக தலைமையாற்றிய அவருடைய கணவர் ஹென்றியுடன் எனது கொள்ளுப் பாட்டி மார்கரட் மெக்நீல் பாலர்ட் சேவை செய்தார். அந்த ஆண்டுகளில், 30 ஆண்டுகள் மார்கரட் தொகுதி ஒத்தாசைச் சங்கத் தலைவராக இருந்தார். ஏழைகளை, நோயுற்றவர்களை, விதவைகளை, அனாதைகளை அவர்களுடைய வீட்டிற்கு அவர் அழைத்துவந்தார், எப்போதுமே மரித்தவர்களுக்கு சுத்தமான ஆலய ஆடைகளை அவர் அணிவித்தார்.
வரலாற்றுப் பிரசித்தம் பெற்ற 19வது நூற்றாண்டின் மார்மன் முன்னோடிகளின் நெடுந்தூரப் பயணத்தை நினைவுகூருவது பொருத்தமாகவும் முக்கியமானதாகவுமிருந்தாலும், நமது சொந்த “விசுவாசத்தை ஒவ்வொரு காலடியிலும்!” நாம் நிரூபிக்கும்போது, நம் ஒவ்வொருவருக்கும் வாழ்கையினூடே நெடுந்தூரப் பயணம் தொடருகிறதென்பதை நாம் நினைவுகூரவேண்டும்.
மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முன்னோடிகளின் குடியிருப்பில் புதிய மனமாறியவர்கள் இனியும் கூடுவதில்லை. பதிலாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பரலோக பிதாவை பரிசுத்தவான்கள் தொழுதுகொள்கிற உள்ளூர் ஜெபக்கூடங்களில் மனமாறியவர்கள் கூடுகிறார்கள். உலக முழுவதிலும் 30,000க்கும் மேலான சபைகளை ஸ்தாபித்து, அனைவரும் அவர்களுடைய சொந்த சீயோனில் கூடுகிறார்கள். வேதங்கள் குறிப்பிடுவதைப்போல, “இருதயத்தில் சுத்தமுள்ள இதுவே சீயோன்.” 6
நாம் வாழ்க்கையின் சாலையில் நடக்கும்போது, “கர்த்தர் கட்டளையிட்ட சகல காரியங்களையும் செய்ய கவனமாயிருக்கிறதைப் பார்க்க” 7 நாம் சோதிக்கப்படுகிறோம்.
தனிப்பட்ட நிறைவுக்கும் ஆவிக்குரிய தெளிவுபடுத்துதலுக்கும் நடத்துகிற கண்டுபிடிப்பின் அற்புதமான பயணத்தில் நம்மில் அநேகரிருக்கிறோம். ஆயினும் நம்மில் சிலர், துக்கத்திற்கும், பாவத்திற்கும், நம்பிக்கையின்மைக்கும் நடத்துகிற நெடுந்தூரப் பயணத்திலிருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் தயவுசெய்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய முடிவான நோக்கம் என்ன? உங்களுடைய காலடிகள் உங்களை எங்கே அழைத்துப்போகிறது? இரட்சகர் வாக்களித்த அந்த “பெருக்கமான ஆசீர்வாதங்களுக்கு” உங்கள் பயணம் உங்களை நடத்துகிறதா? 8
நமது பரலோக பிதாவினிடத்திற்குத் திரும்ப ஒரு நெடுந்தூரப் பயணம் நமது வாழ்க்கையின் மிக முக்கியமான நெடுந்தூரப் பயணம், அவரிடத்திலும், அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் நமது விசுவாசத்தை நாம் அதிகரிக்கும்போது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்கிறது.
வாழ்க்கையில் நமது காலடிகள் நம்மை எங்கே கொண்டுபோகிறதென்பதில் நாம் கவனமாயிருக்கவேண்டும். நாம் கவனமாயிருந்து, இந்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது அவருடைய சீஷர்களுக்கு அவர் கொடுத்த ஆலோசனைகளுக்கு நாம் செவிகொடுக்கவேண்டும். “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும்.
“இயேசு பதிலளித்து அவர்களுக்குச் சொன்னார், ஒருவனும் [பெண்களும், என நான் சேர்க்கிறேன்] உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” 9
சபைத் தலைவர்களிடமிருந்து வந்த ஆரம்ப ஆலோசனையை இன்று நான் திரும்பச் சொல்லுகிறேன்..
-
சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவின் கோட்பாட்டை தூய்மையாக கைக்கொள்ளுங்கள், கோட்பாட்டை திருத்துகிறவர்களால் ஒருபோதும் வஞ்சிக்கப்படாதிருங்கள். இந்தக் கடைசி ஊழியக்காலத்திற்காக பிதா, மற்றும் குமாரனின் சுவிசேஷம் தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித் மூலமாக மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது
-
நியமிக்கப்படாதவர்கள், சபையில் தங்களுடைய அழைப்புகளுக்கு தெரிந்தெடுக்கப்படாதவர்கள், அங்கத்தினர்களின் பொது சம்மதத்தால் அங்கீகரிக்கப்படாதவர்களுக்கு செவிகொடாதிருங்கள். 10
-
இன்றைய அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும், இல்லை, அல்லது புரிந்துகொள்ளவில்லை என அவர்கள் சொல்லி, கோட்பாட்டின் கேள்விகளுக்கு இரகசிய பதில்களை கோருகிற ஸ்தாபனங்கள், குழுக்கள் அல்லது தனிப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்
-
விரைவில் பணம் சம்பாதிக்கும் திட்டங்களுடன் உங்களை ஏமாற்றுகிறவர்களுக்கு செவிகொடாதிருங்கள். நமது அங்கத்தினர்கள் அதிக அளவில் பணத்தை இழந்திருப்பதால், கவனமாயிருங்கள்.
சில இடங்களில், நமது மக்களில் அநேகர் இலக்குக்கும் அப்பால் நோக்கி, குணமாக்குதலையும் ஆதரவையும் அளிக்க அதிக விலையுயர்ந்த, கேள்விக்கான பழக்கங்களில் இரகசிய அறிவை நாடுகிறார்கள்.
ஒரு ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வமான சபை அறிவிப்பு இப்படி உரைக்கிறது. “அற்புதமான குணமாக்குதலுக்கு அல்லது சரியாக நியமிக்கப்பட்ட ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களுக்கு புறம்பே, குணமாக்குதலின் வல்லைமையைப் பெறுவதற்கு விசேஷித்த வல்லமையைக் கொண்டிருப்பதாக பணத்திற்காக வாக்களிக்கிற எந்த குழுவுடனும் பங்கெடுப்பதைப்பற்றி எச்சரிக்கையாயிருக்க சபை அங்கத்தினர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” 11
சபை கையேடு ஆலோசனையளிக்கிறது. “ஒழுக்க நெறியின்படியும், சட்டப்பூர்வமாகவும் கேள்வி கேட்கப்படுகிற மருத்துவ அல்லது ஆரோக்கிய நடைமுறைகளை அங்கத்தினர்கள் பயன்படுத்தக்கூடாது. ஆரோக்கிய பிரச்சினைகளுள்ளவர்கள் அவர்கள் வாழுகிற நாடுகளில் உரிமம் பெற்ற மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறும்படி உள்ளூர் தலைவர்கள் அங்கத்தினர்களுக்கு புத்திசொல்லவேண்டும்.” 12
சகோதர சகோதரிகளே, அத்தகைய சிகிச்சைகள் உணர்வுபூர்வமாக கவனத்தைக் கவரலாமென புத்தியாகவும் கவனமாகவுமிருங்கள், ஆனால் இறுதியாக ஆவிக்குரியதிலும் சரீரத்திலும் கேடு விளைவிப்பதாயிருக்கலாம்.
நமது முன்னோடிகளான முன்னோர்களுக்கு சுதந்திரமும் சுயசார்பும் முக்கியமானதாயிருந்தது, ஆனால் அவர்களுடைய சமுதாய உணர்வும் அப்படியே முக்கியமானதாயிருந்தது. அவர்களுடைய நேரங்களிலிருந்த சரீர மற்றும் உணர்வுபூர்வ சவால்களை மேற்கொள்ள அவர்கள் ஒன்றாக வேலை செய்து ஒருவருக்கொருவர் உதவினார்கள். ஆண்களுக்காக ஆசாரியத்துவ குழுமமிருந்தது, பெண்கள் ஒத்தாசைச் சங்கம் மூலம் சேவை செய்தார்கள். நம் நாட்களிலும் இந்த பலன்கள் மாறவில்லை.
ஒத்தாசைச் சங்கமும் ஆசாரியத்துவ குழுமங்களும் நமது அங்கத்தினர்களின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமான நல்வாழ்விற்கு வழங்குகிறார்கள்.
பரலோக பிதா மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு பாதுகாப்பாக நீங்கள் திரும்பிப்போகும்படியாக, “ஒவ்வொரு காலடியிலும் விசுவாசத்தைக்” கொண்டிருப்பதிலும், சுவிசேஷத்திலும் நிலைத்திருங்கள். கர்த்தர் நமது அருமையான இரட்சகர். அவர் உலகத்தின் மீட்பர். நாம் அவருடைய பரிசுத்த நாமத்தைக் கனம்பண்ணி, எந்த விதத்திலாவது அதை துர்ப்பிரயோகம் பண்ணாமல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள எப்போதும் முயற்சிக்கவேண்டும். நாம் அப்படிச் செய்தால் அவர் நம்மை ஆசீர்வதித்து வீட்டுக்கு பத்திரமாக திரும்ப நம்மை நடத்துவார்.
இன்று, தங்களுடைய பயணத்தில் அவர்கள் எங்கிருந்தாலும், தன்னுடைய நெடுந்தூரப் பயணத்தை மேற்கொள்கிற அவன் அல்லது அவள் யாராயிருந்தாலும் பொருட்டின்றி, அவர்களை வரவேற்று அணைத்துக்கொள்ள என் குரலைக் கேட்டுக்கொண்டிருக்கிற எல்லோரையும் நான் அழைக்கிறேன்.
மறுஸ்தாபிதத்தின் செய்தியைவிட மிக உயர்ந்த, யாரும் பகிர்ந்துகொள்ளக்கூடிய எந்த ஆசீர்வாதங்களுமில்லை என தயவுசெய்து நினைவில்கொள்ளுங்கள். அதைப் பெற்று வாழும்போது நித்திய மகிழ்ச்சியையும் சமாதானத்தையும், நித்திய ஜீவனைக்கூட வாக்களிக்கிறது. அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை வழிநடத்த சுவிசேஷ கோட்பாட்டின் வல்லமையை அவர்கள் கொண்டிருக்கும்படியாக நமது சக்தியையும், பெலத்தையும் சாட்சிகளையும் நாம் பயன்படுத்துவோமாக.
இனம், பாலினம், குடியுரிமையையும் சேர்த்து எந்த தவறான அபிப்பிராயத்தையும் உதறி, இரக்கத்துடன், தேவனுடைய பிள்ளைகளை நாம் தழுவிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை நாம் உண்மையாக நம்புகிறோம் என சொல்லப்படுவதாக.
நெடுந்தூரப் பயணம் தொடருகிறதென நான் சாட்சியளிக்கிறேன். நமது பரலோக பிதாவையும் அவரது நேச குமாரனையும் உண்மையாக நேசிக்கிற அனைவருக்காகவும் காத்திருக்கிற “பன்மடங்கு ஆசீர்வாதங்களைப்” பெற, நாம் ஒற்றுமையுடன் நமது இருதயங்களை தூய்மையாகவும், நமது கரங்களை சுத்தமாகவும் வைத்திருக்கும்படியாக, அன்பிலும் இரக்கத்திலும் தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் அணுகுவதால் தொடர்ந்து முன்னேறிச் செல்லும்போது சுவிசேஷப் பாதையில் நிலைத்திருக்க நான் உங்களை அழைக்கிறேன், அதற்காக இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் தாழ்மையாக ஜெபிக்கிறேன், ஆமென்.