2010–2019
அற்புதங்களின் நாள் ஒழிந்துபோனதோ?
அக்டோபர் 2017


அற்புதங்களின் நாள் ஒழிந்துபோனதோ?

தேவனுடைய பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடிய ஆவிக்குரிய அற்புதங்களின்மேல் நமது மிக அதிகமான கவனம் இருக்கவேண்டும்.

ஒரு ஆண்டுக்கு முன், கலிபோர்னியா மாநிலத்தில் கொடுக்கப்பட்ட ஒரு பணியில், கிளார்க்கையும், ஹோலி பால்ஸையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் அவர்களின் வீட்டில் சந்திக்க ஒரு பிணையத் தலைவருடன் நான் சென்றேன். சமீபத்தில் அவர்களுக்கு ஒரு அற்புதம் நடந்ததென எனக்குக் கூறப்பட்டது. நாங்கள் அங்கு போய் சேர்ந்தபோது, ஒரு முதுகுப் பட்டையையும், கழுத்துப் பட்டையையும், கைகளில் பட்டையையும் கிளார்க் அணிந்திருந்ததால் எழுந்து நின்று எங்களை வாழ்த்த அவர் போராடிக்கொண்டிருந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன், கலிபோர்னியாவிலுள்ள மிக உயரமான மலையுச்சிகளில் ஒன்றான ஷாஸ்தா மலையின் 14,180 அடி (4322 மீ) சிகரத்தில் ஏற, கிளார்க்கும், அவருடைய மகனும், சுமார் 30 வாலிபர்களும் தலைவர்களும் ஒரு பிணைய துணிகர நிகழ்ச்சிக்கு புறப்பட தயாரானார்கள். மிகக்கடினமான மலை ஏறுதலின் இரண்டாவது நாளில் மலை ஏறுபவர்களில் அநேகர் உச்சியை அடைந்தார்கள், மாதக்கணக்கான ஆயத்தத்தால் ஒரு மெய்சிலிர்க்கும் சாதனை சாத்தியமாயிற்று.

அந்த நாளில் உச்சிக்குச் சென்ற முதல் மனிதர்களில் கிளார்க் இருந்தார். சிகரத்தின் விளிம்புக்குப் பக்கத்தில் சிறிது ஓய்வுக்குப் பின், அவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார். அவர் நடந்தபோது, அவர் தடுமாறி உச்சியின் ஓரத்தில் பின்னோக்கி விழுந்தார். சுமார் 40 அடிகள் (12 மீ) கீழே நழுவி, பின்னர் கட்டுப்பாடில்லாமல், பனிச்சரிவில் மற்றொரு 300 அடிகள் (91 மீ) கிழே தடுமாறி விழுந்தார். குறிப்பிடத்தக்கவிதமாக, கிளார்க் பிழைத்துக்கொண்டார், ஆனால் அவர் மிகமோசமாக காயமடைந்தார், அவரால் நகர முடியவில்லை.

இந்த அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியின்போது கிளார்க் அனுவித்த அற்புதங்கள் இப்போதுதான் ஆரம்பமாகிக்கொண்டிருக்கிறது. முதலாவதாக அவரை அடைந்தவர்களில், மலை வழிகாட்டிகளையும் அவசரகால மருத்துவ நிபுணர்களையும் சேர்த்து மலை ஏறுபவர்களின் ஒரு பிரிவினர்களாய் “இருந்தார்கள்.” உடனடியாக கிளார்க்குக்கு அவர்கள் சிகிச்சையளித்து உற்சாகமாயிருக்க ஊக்கமளித்தனர். இந்த பிரிவினர் ஒரு தொலைதொடர்பு சாதனத்தை பரிசோதிக்க “நேர்ந்தது,” கைபேசியின் அலைகள் கிடைக்காத இடத்திலிருந்து உதவிக்கு ஒரு உடனடி வேண்டுகோளை அனுப்பினார்கள். ஒரு மணிநேரத்திற்குள் ஒரு சிறிய ஹெலிகாப்டர் ஷாஸ்தா மலைக்கு வந்து சேர்ந்தது. உச்சியில் இறங்க இரண்டு அபாயகரமான, ஆனால் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பின்னர், மிகமோசமான காற்றின் நிலைமைகளில் விமானத்தின் ஆற்றல்களைத் தாண்டி போராடி, விமானி இறுதியான மூன்றாவதான முயற்சியை ஆரம்பித்தார். வேறு ஒரு கோணத்திலிருந்து ஹெலிகாப்டர் அணுகியபோது காற்று திசை மாறி, விமானம் தரையிறங்கியது. விமானிக்கு பின்னாலுள்ள இருக்கையில் கிளார்க்கை வேகமாகவும், வேதனையுடனும் நெருக்கி அமரவைக்குமளவுக்கு குழுவினருக்கு போதுமான இடமில்லாமலிருந்தது.

ஒரு அவசர சிகிச்சை மையத்தில், கிளார்க்கின் நிலைமையை மதிப்பிட்டபோது, அவருடைய கழுத்திலும், முதுகிலும், விலா எலும்புகளிலும், மணிக்கட்டுகளிலும் பற்பல எலும்பு முறிவுகளிருப்பதாகவும், துளைக்கப்பட்ட நுரையீரலுடன், அதிகக் காயங்களும், சிராய்ப்புகளுமிருப்பதாக சோதனைகள் தெரிவித்தன. அந்நாளில், ஒரு பிரசித்தமான நரம்பு அவசர அறுவை சிகிச்சை மருத்துவர் அங்கே இருக்க “வேண்டியிருந்தது.” ஆண்டில் ஒருசில நேரங்களில் மட்டுமே அவர் இந்த மருத்துவமனைக்கு வருவார். முதுகுத்தண்டிலும், தலைக்கும் முதுகுக்கும் போகிற இரத்த நாளங்களும் இவ்வளவு சேதப்பட்டு உயிர்வாழ்கிற யாரையும் நான் ஒருபோதும் பார்க்கவில்லை என பின்னர் இந்த மருத்துவர் சொன்னார். உயிர் வாழ்வதற்கு மட்டுமல்ல, முழுமையாக செயல்பட கிளார்க் எதிர்பார்த்தார். நரம்பு காயங்களைப்பற்றிய தனது சகல விஞ்ஞான அறிவுக்கும் எதிராக கிளார்க்கின் நிலைமை சென்றதாகவும் இதை ஒரு அற்புதம் என்றே விவரிக்கமுடியுமென தன்னை ஒரு யதார்த்தவாதியாக விவரித்த அந்த மருத்துவர் சொன்னார்.

இந்த கடுமையான விவரத்தை கிளார்க்கும் ஹோலியும் விவரித்தபோது, பேசக் கடினமாயிருந்ததை நான் கண்டேன். இது தெளிவான அற்புதங்களால் இல்லை, அதற்கும் மேலாயிருந்தது. அந்நாளில் என்ன நடந்திருந்தாலும் ஏற்றுக்கொண்டு, இன்னமும் அவர்கள் ஆவிக்குரியவிதமாக முன்னேறியிருப்பார்களென்ற அத்தகைய விசுவாசத்தை அவர்களின் பெற்றோரைச் சுற்றியிருந்த அழகான பிள்ளைகளும் கிளார்க்கும் கொண்டிருந்ததால், ஒரு ஆவிக்குரிய சாட்சியான மகத்துவமான உணர்த்துதல் எனக்கிருந்தது. கிளார்க்கும் ஹோலியும் அவர்களுடைய இரண்டு மூத்த பிள்ளைகளான டை மற்றும் போர்ட்டரும் இன்று மாநாட்டு மையத்தில் நம்முடனிருக்கிறார்கள்.

பால்ஸ் குடும்பத்தினரைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தபோது பிற அநேகரின் சூழ்நிலைகளைப்பற்றி நான் அதிகமாக நினைத்தேன். விசுவாசத்தால் நிறைந்து, ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, நிறுத்தாமல் ஜெபிக்கிற, உடன்படிக்கையைக் கைக்கொள்ளுகிற, முழுநம்பிக்கையுள்ள எப்போதுமே அற்புதம் வராத, ஏராளமான பிற்காலப் பரிசுத்தவான்கள் பற்றி என்ன சொல்வது? குறைந்தபட்சம் இவ்விதமாக ஒரு அற்புதத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். குறைந்தபட்சம் இவ்விதமாக மற்றவர்கள் அற்புதங்களைப் பெறுவதாகத் தோன்றுகிறது.

சரீரத்திலும், மனதளவிலும், உணர்வுபூர்வமாகவும் பல ஆண்டுகளாக அல்லது அவர்களுடைய முழு அநித்திய வாழ்க்கையிலும் மிகஅதிகமாகப் பாடுபடுகிறவர்களைப்பற்றி என்ன சொல்வது? மிக இளமையில் மரித்தவர்களைப்பற்றி என்ன சொல்வது?

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆலய சிபாரிசைத் தரித்திருந்த திருமணமான, இரண்டு தம்பதியினர் மற்றும் மூன்று முழுநேர ஊழியக்காரர்களுடனும் அவர்களுடைய இதர ஐந்து பிள்ளைகளுடனும் ஒரு சிறிய விமானத்தில் தங்களின் சிறிய பயணத்தை ஆரம்பித்தனர். விமானப் பயணத்திற்கு முன் பாதுகாப்புக்காக ஜெபித்திருப்பார்களென்றும், விமானம் மோதி நொறுங்குவதற்கு முன், மோசமான இயந்திரக்கோளாறுக்குள்ளானபோதும் சிரத்தையோடு அவர்கள் ஜெபித்திருப்பார்களென நான் நம்புகிறேன், அவர்களில் யாருமே பிழைக்கவில்லை. இவர்களைப்பற்றி என்ன சொல்வது?

மார்மனால் கேட்கப்பட்ட, “அற்புதங்களின் நாள் ஒழிந்துபோனதோ?” 1 என்ற இந்த கேள்வியை நன்மை செய்கிற மக்களும், அவர்களுக்கு அன்பானவர்களும் கேட்க காரணமிருக்கிறது.

சிலநேரங்களில் தெய்வீக குறுக்கீடு இருக்கிறது, மற்ற நேரங்களில் இருப்பதில்லை ஏன், என என்னுடைய குறைந்த அறிவு விவரிக்கமுடியாது. ஆனால் ஒருவேளை ஒரு அற்புதம் எதினால் ஏற்படுகிறதென்ற புரிந்துகொள்ளுதல் நமக்கு குறைவாயிருக்கலாம்.

மருத்துவ விஞ்ஞானத்தால் ஒரு முழு விளக்கமில்லாமல் குணமாக்கப்படுதலை அல்லது ஒரு தெளிவான உணர்த்துதலுக்கு செவிகொடுப்பதால் பயங்கரமான அபாயத்தை தவிர்த்தலை ஒரு அற்புதம் என வழக்கமாக நாம் விவரிக்கிறோம். ஆயினும், “அநித்தியமானவர்கள் புரிந்துகொள்ளாத தெய்வீக வல்லமையின் மூலமாக ஒரு பலனளிக்கும் நிகழ்ச்சி கொண்டுவரப்படுவதாக” 2 ஒரு அற்புதத்தை விவரிப்பது, இயற்கையில் அதிக நித்தியமான காரியங்களுக்கு ஒரு விசாலமான பார்வையைக் கொடுக்கிறது. அற்புதத்தைப் பெறும்போது, விசுவாசத்தின் முக்கிய பங்கை சிந்திக்க இந்த வறையரை நம்மை அனுமதிக்கிறது.

“அவர்களுக்குள் விசுவாசம் உண்டான பிறகே, எப்பொழுதும் எந்த அற்புதமும் செய்யப்பட்டிருக்கிறது,” 3 என மார்மன் போதித்தான். “மனுஷன் விசுவாசத்தினாலே, பலத்த அற்புதங்களைப் புரிய தேவன் வழியை ஏற்படுத்திக்கொடுத்தார்” 4 என அம்மோன் அறிவித்தான். “நானே கர்த்தர். . . எனது நாமத்தில் நம்பிக்கை கொண்ட யாவருக்கும் அற்புதங்களையும், அறிகுறிகளையும், அதிசயங்களையும் நான் காண்பிப்பேன்” 5 என கர்த்தர் ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தினார்.

ஒரு பொற்சிலையை தேவனாக, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உண்டாக்கி, அதைப் பணிந்துகொள்ளும்படி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை கட்டளையிட்டு, பயமுறுத்தி, “நீங்கள் பணிந்து கொள்ளாதிருந்தீர்களேயானால், எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள். உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?” 6 என பின்னர் அவர்களை அவன் நிந்தித்தான்.

“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். . . விடுவிக்காமற் போனாலும் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்க்கடவது” 7 என இந்த மூன்று அர்ப்பணிப்பான சீஷர்கள் சொன்னார்கள்.

தேவன் அவர்களைப் பாதுகாப்பார் என்ற முழு நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந்தார்கள், “விடுவிக்காமற் போனாலும்” அவருடைய திட்டத்தின்மீது அவர்களுக்கு முழு விசுவாசமிருந்தது.

இதைப்போன்றே, ஆசாரியத்துவ ஆசீர்வாதத்திற்கு வேண்டிக்கொண்ட வாலிபனிடம் ஒருசமயம் மூப்பர் டேவிட்  எ. பெட்னார் கேட்டார். “உன்னுடைய ஊழியத்தில் தொடர, உன்னுடைய வாலிப வயதில் ஆவிஉலகத்திற்கு மரணத்தால் நீ மறுரூபமாக்கப்பட, நமது பரலோக பிதாவின் சித்தமாயிருந்தால், குணமாக்கப்படாமல் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க உனக்கு விசுவாசமிருக்கிறதா?” 8 நமது பூலோக துயரங்களிலிருந்து குணமாக்கப்படாது, நித்தியத்தில் நாம் குணமாக்கப்பட நமக்கு விசுவாசமிருக்கிறதா?

தியானிக்கவேண்டிய மிக முக்கியமான கேள்வி, நமது விசுவாசத்தை நாம் எங்கே வைக்கிறோம். வேதனையிலிருந்தும் பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்படவேண்டுமென்பதில் நமது விசுவாசம் கவனம் செலுத்துகிறதா? அல்லது தேவனாகிய பிதாவிலும், அவருடைய பரிசுத்த திட்டத்திலும், இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய பாவநிவர்த்தியிலும் உறுதியாக கவனம் செலுத்தப்படுகிறதா? நித்தியத்திற்கு நாம் ஆயத்தப்படும்போது, அவர்களுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் பிதாவிலும், குமாரனிலுமுள்ள விசுவாசம் நம்மை அனுமதிக்கிறது.

இன்று அற்புதங்களை நான் சாட்சியளிக்கிறேன். தேவனுடைய பிள்ளையாயிருப்பது ஒரு அற்புதம். 9 அவருடைய சாயலில் ஒரு சரீரத்தைப் பெறுதல் ஒரு அற்புதம். 10 இரட்சகரின் வரம் ஒரு அற்புதம். 11 இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி ஒரு அற்புதம். 12 நித்திய ஜீவனுக்கான தகுதி ஒரு அற்புதம். 13

நமது அநித்திய ஜீவியத்தில், சரீர பாதுகாப்புக்கும், குணமடைவதற்கும் ஜெபிப்பதும் நடப்பதும் நல்லதாயிருக்கும்போது, தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஆவிக்குரிய அற்புதங்கள் நமது மிகமுக்கிய அக்கறையாயிருக்கவேண்டும். நமது இனம் பொருட்டின்றி, நமது நாடு பொருட்டின்றி, நாம் செய்தவைகள் பொருட்டின்றி, நமக்கு என்ன செய்யப்பட்டிருக்கிறதென்பது பொருட்டின்றி நாம் மனந்திரும்பினால் இந்த அற்புதங்கள் நம் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கிறது. நாம் அற்புதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், கூடுதலான அற்புதங்கள் முன்னாலிருக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

அச்சிடவும்