நாம் அவரை நம்புகிறோமா? கடினம் நல்லது
விவகாரத்தை பொருட்படுத்தாது, கர்த்தரிலும் அவரது திட்டத்திலும் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னேறிச் செல்பவர்களுக்கு கடினம் நன்மையாயிருக்கும்.
நான் தொடங்குவதற்கு முன்னால், அண்மை சூறாவழிகள் மற்றும் பூமியதிர்ச்சிகளின் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதிநிதியாக, எங்களுக்கு உதவியும் நம்பிக்கையும் கொடுத்த உதவிக் கரங்களுக்கும், அவர்களை நெறிப்படுத்தியவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டைத் தெரிவிக்கிறேன்.
அக்டோபர் 2016ல் நான் என்னுடைய, பொது மாநாட்டின் முதல் உரையைக் கொடுத்தேன். கர்த்தர் நம்மை நம்புகிறார் என்ற உறுதியையும் சேர்த்து, உலகமுழுவதிலுமுள்ள சபைக்கு ஒரு முக்கிய செய்தி என நான் உணர்ந்தேன்..
மிக அநேக வழிகளில் உண்மையில் அவர் நம்மை நம்புகிறார். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், இந்த ஊழியக்காலத்தில் அதன் பரிபூரணத்தையும் அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அதன் முறையான பயன்பாட்டிற்காக முழுமையான திறவுகோல்களுடன் அவருடைய ஆசாரியத்துவத்தை அவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். அந்த வல்லமையுடன், நாம் ஆசீர்வதிக்கலாம், சேவை செய்யலாம், நியமங்களைப் பெறலாம், உடன்படிக்கைகளைச் செய்யலாம். பரிசுத்த ஆலயங்களையும் சேர்த்து அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையை நம்பிக்கையுடன் கொடுத்திருக்கிறார். பூலோகத்தில் கட்டப்படவும், இது பரலோகத்திலும் கட்டப்படச் செய்யவும் முத்திரிக்கும் வல்லமையுடன் அவர் அவரது ஊழியக்காரர்களை நம்பிக் கொடுத்திருக்கிறார். பூலோக பெற்றோர்களாக, ஆசிரியர்களாக, அவரது பிள்ளைகளுக்கு அக்கறையளிப்பவர்களாக இருக்கவும் அவர் நம்மை நம்புகிறார்.
உலகத்தின் அநேக பகுதிகளில் பொது அதிகாரியாக இருந்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்னும் அதிக நிச்சயத்தோடு நான் பிரகடனப்படுத்துகிறேன், அவர் நம்மை நம்புகிறார்.
“நாம் அவரை நம்புகிறோமா?” என்பது இப்பொழுது இந்த மாநாட்டிற்கான கேள்வி.
நாம் அவரை நம்புகிறோமா?
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழுஇருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே” நீதிமொழிகள் 3:5–7) என தலைவர் தாமஸ் எஸ். மான்சன் எப்போதும் நமக்கு நினைவுபடுத்துகிறார்.
நமக்கு நன்மையாயிருக்க அவருடைய கட்டளைகளை நாம் நம்புகிறோமா? குறைவுள்ளவர்களாயிருந்தாலும் அவருடைய தலைவர்கள் நம்மை நன்றாக நடத்துகிறார்களா? பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் நம்மை அறிந்திருக்கிறார்களென்றும் நமக்கு உதவி செய்ய விரும்புகிறார்களென்றும் நீங்கள் நம்புகிறீர்களா? சோதனைகள், சவால்கள், கஷ்டமான நேரங்களுக்கு மத்தியிலும் இன்னமும் நாம் அவரை நம்புகிறோமா?
ஊழியத்திலிருக்கும்போதோ, ஒரு புதிய வேலையை ஆரம்பிக்கும்போதோ, எனது அழைப்புகளை சிறப்பாக செய்ய முயற்சிக்கும்போதோ, ஒரு பெரிய குடும்பத்தை வளர்த்து வரும்போதோ, அல்லது சுயசார்புள்ளவனாக போராடிக்கொண்டிருக்கும்போதோ, கடினமான நேரங்களில் சில சிறந்த பாடங்களை நான் கற்றுக்கொண்டேன். கடினம் நல்லது எனத் தெரிகிறது!
கடினம் நம்மை பெலப்படுத்துகிறது, நம்மை தாழ்மைப்படுத்துகிறது, நம்மையே நாம் நிருபிக்க சந்தர்ப்பத்தை அளிக்கிறது. தங்களுடைய எல்லைமீறிய கஷ்டங்களில்தான் கைவண்டி முன்னோடிகள் தேவனை அறிந்தார்கள். பித்தளைத் தகடுகளைப் பெற நெப்பிக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் ஏன் இரண்டு அதிகாரங்கள் தேவைப்பட்டன, வனாந்தரத்தில் இஸ்மவேலின் குடும்பத்தினரை அவர்களோடு சேர்த்துக்கொள்ள மூன்று வசனங்கள் மாத்திரம் தேவைப்பட்டது? (see 1 நெப்பி 3–4; 7:3–5). பித்தளைத் தகடுகளைப் பெறுவதில் போராட்டத்தின் மூலமாக நெப்பியை பெலப்படுத்த கர்த்தர் விரும்பினார் என தோன்றுகிறது.
நமது வாழ்க்கையில் கடினமான காரியங்கள் ஆச்சரியமில்லாமல் வரவேண்டும். பலியின் நியாயப்பிரமாணத்தின்படி வாழ்வது கர்த்தருடன் நாம் செய்கிற ஆரம்பகால உடன்படிக்கைகளில் ஒன்று. விளக்கப்படி பலி என்பது விரும்புகிற ஏதோ ஒன்றை விட்டுவிடுதல் சம்பந்தப்பட்டது. தொடருகிற ஆசீர்வாதத்தை ஒத்துப்பார்த்தால் செலுத்தவேண்டிய இது, சிறிய விலை என அனுபவத்தில் நாம் உணருகிறோம். “சகல காரியங்களையும் தியாகம் செய்வதற்கு அவசியமில்லாத ஒரு மதம், வாழ்க்கைக்கும் இரட்சிப்புக்கும் அவசியமான விசுவாசத்தை விளைவிக்க போதுமான ஆற்றலை ஒருபோதும் பெற்றிருப்பதில்லை” ”1 என ஜோசப் ஸ்மித் வழிகாட்டலில் இது சொல்லப்பட்டது.
தேவத்துவத்தின் அங்கத்தினர்கள் கடினமான காரியங்களுக்கு அன்னியர்களில்லை. சிலுவையிலறைதலின் மரணத்தையும் சேர்த்து, பாவநிவர்த்தியின் பயங்கரமான பாடுகளுக்கு பிதாவாகிய தேவன் தனது ஒரேபேறான குமாரனை பலிகொடுத்தார். “பட்டபாடுகளினாலே இயேசு கிறிஸ்து கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” (எபிரெயர் 5:8) என வேதங்கள் சொல்கிறது. பாவநிவர்த்தியின் வியாகுலத்தை அவர் தானாக முன்வந்து பாடுபட்டார். பரிசுத்த ஆவியானவர் சிலநேரங்களில் அசட்டை செய்யப்பட்டு, தவறான அர்த்தம் கொடுக்கப்பட்டு, அல்லது மறந்துபோக மட்டுமே, உணர்த்தவும், எச்சரிக்கவும் நம்மை வழிநடத்தவும் நீடிய பொறுமையுடன் இருக்கிறார்.
திட்டத்தின் பகுதி
சுவிசேஷ திட்டத்தின் பகுதி கடினமானது. இந்த வாழ்க்கையின் நோக்கங்களில் ஒன்று நாம் நிரூபிக்கப்படவேண்டியது ஆபிரகாம் 3:25 பார்க்கவும்). ஆல்மாவின் ஜனங்களைவிட சிலர் அதிகத் தகுதியில்லாது பாடுபட்டார்கள். லாமானியர்களிடம் அடிமைகளாயிருக்க துன்மார்க்க நோவா ராஜாவிடமிருந்து அவர்கள் தப்பி ஓடினார்கள்! அவருடைய ஜனங்களை அவர் கடிந்துகொண்டு, அவர்களுடைய பொறுமையையும் விசுவாசத்தையும் சோதிக்கிறாரென்பதை அந்த சோதனைகளின் மூலம் கர்த்தர் போதித்தார் (மோசியா 23:21).
லிபர்டி சிறைச்சாலையில், பயங்கரமான நாட்களின்போது அதில் நன்றாய் நிலைத்திருக்க கோ.உ 121:8) ஜோசப் ஸ்மித்துக்கு கர்த்தர் போதித்து. அவர் அப்படிச் செய்தால், இந்தக் காரியங்கள் யாவும் உனக்கு அனுபவத்தைத் தந்து, உன்னுடைய நன்மைக்காயிருக்கும் (கோ.உ 112:7) என வாக்களித்தார்.
எளிதானதை தவறாகச் செய்வதற்குப் பதிலாக கடினமானதை சரியாகச் செய்ய எப்போதுமே நாம் தெரிந்தெடுப்போமாக என தலைவர் தாமஸ் எஸ். மான்சன் வேண்டினார்.” 2 நமது ஆலயங்களைப் பொருத்தமட்டில் [ஆலய] ஆசீர்வாதங்களைப் பெற எந்த தியாகமும் பெரியதல்ல, எந்த கிரயமும் அதிகமில்லை, எந்த போராட்டமும் அதிகக் கடினமானதல்ல என அவர் உரைத்தார்”3
இயற்கை உலகத்தில் வாழ்க்கை சுற்றில் கடினம் பகுதியாயிருக்கிறது. அதன் கடினமான முட்டை ஓட்டிலிருந்து பொரித்து வெளியேவர ஒரு குஞ்சுக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் யாரோ ஒருவர் அதை எளிதாக்க முயற்சித்தால் ஜீவிப்பதற்கான அவசியமான பெலத்தை குஞ்சு விருத்தி செய்யாது. அதே வழியில், பட்டுப்பூச்சி கூட்டிலிருந்து தப்பிக்க ஒரு பட்டாம்பூச்சியின் போராட்டம், அது வாழப்போகிற வாழ்க்கைக்கு அதை பெலப்படுத்துகிறது.
இந்த எடுத்துக்காட்டுக்களிலிருந்து கடினம் நிரந்தரமானதென்பதை நாம் காண்கிறோம். நம் எல்லோருக்குமே மாறுதல்கள் உண்டு! கடினத்திற்கு நமது பிரதிசெயல் வேறுபடுகிறது.
ஒரு சமயத்தில் சில மார்மன் புஸ்தக ஜனங்கள் “மகா துன்புறுத்தல்களிலும்,” “பெரிய உபத்திரவங்களிலும்” பாடனுவித்தார்கள். (ஏலமன் 3:34) அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஆத்துமாக்கள் சந்தோஷத்தாலும் ஆறுதலாலும் நிரப்பப்படும்வரைக்குமாய் அவர்கள் உபவாசமிருந்து, அடிக்கடி ஜெபித்தார்கள், ” (ஏலமன் 3:35. ) பலஆண்டுகளின் யுத்தத்திற்குப் பின்னர் மற்றொரு எடுத்துக்காட்டு நடந்தது. “ஆனால் இதோ, நெப்பியர்களுக்கும் லாமானியர்களுக்கும் இடையேயான யுத்த காலம் மிகவும் நீண்டிருந்ததினாலே, அநேகர் கடினப்பட்டுப்போனார்கள் மற்றும் அநேகரோ தங்கள் உபத்திரவங்களினிமித்தம் மென்மையானவர்களாகி, தாழ்மையின் ஆழங்களிலே, தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தினார்கள்.” (ஆல்மா 62:41).
கடினத்திற்கு நமது பிரதிச்செயலை நாம் ஒவ்வொருவரும் தெரிந்தெடுக்கிறோம்.
சுலபமாக கவனமாயிருங்கள்
இந்த அழைப்புக்கு முன் டெக்ஸாஸின் ஹூஸ்டனில் நான் ஒரு நிதி ஆலோசகராக இருந்தேன். தங்களுடைய சொந்த வியாபாரங்களை செய்த கோடீஸ்வரர்களுடன் எனக்கு அதிக வேலையிருந்தது. கடின உழைப்பால், அவர்களில் அநேகர் தங்களுடைய வெற்றிகரமான வியாபாரத்தை உருவாக்கியிருந்தார்கள். தங்களுடைய பிள்ளைகளுக்கு எளிதாயிருக்க அவர்கள் விரும்புவதாக அவர்களில் சிலர் சொல்லியது எனக்கு மிகுந்த துக்ககரமாயிருந்தது. அவர்களைப்போல அவர்களின் பிள்ளைகள் கஷ்டப்பட அவர்கள் விரும்பவில்லை. வேறு வார்த்தைகளிலெனில், அவர்களை வெற்றி அடையச் செய்த காரியங்களை அவர்களுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் கொடுப்பதில்லை.
மாறாக, ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்த ஒரு குடும்பத்தினரை நாங்கள் அறிவோம். அவனுக்கு எட்டு வயதாகும்போது, அவனுடைய சொந்த நிதி நிலையை அவனே பார்த்துக்கொள்ளவேண்டுமென அவனுடைய தகப்பன் அவனுக்குச் சொன்ன ஜெ.சி. பென்னியின் அனுபவத்தால் பெற்றோர்கள் உணர்த்தப்பட்டார்கள். அவர்கள் அவர்களுடைய சொந்த கருத்துடன் வந்தார்கள், தங்கள் பிள்ளைகள் தங்களுடைய உயர்நிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்றபின்பு தங்களுடைய உயர் படிப்புக்கும் (கல்லூரி, பல்கலைக்கழகம் முதலியன) நிதி பராமரிப்புக்கும் (உண்மையில் சுயசார்பு) (கோ.உ 83:4 பார்க்கவும்) அவர்கள் தங்களுடைய நிதி நிலையைப் பராமரிக்கவேண்டும். பிள்ளைகள் சந்தோஷமாக, புத்திசாலித்தனமாக ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே கல்லூரி பட்டதாரிகள், அவர்களில் அநேகர் பட்டப்படிப்பை முடித்திருந்தார்கள், இது எல்லாமுமே அவர்களுடைய சொந்த நிதியிலிருந்தே. இது எளிதாயிருக்கவில்லை, ஆனால் அவர்கள் அதைச் செய்தார்கள். கடின உழைப்புடனும் விசுவாசத்துடனும் அதை அவர்கள் செய்தார்கள்.
அவரை நம்ப விசுவாசம்
“நாம் அவரை நம்புகிறோமா?” என்ற கேள்வி “அவரை நம்ப நமக்கு விசுவாசமிருக்கிறதா?” என சிறப்பாக உரைக்கப்பட்டிருக்கலாம்.
நம்முடைய வருடாந்தர சொந்த வருமானத்தின் 100 சதவீதத்தைவிட நமது வருவாயின் 90 சதவீதத்துடன் கர்த்தரின் உதவியையும் சேர்த்து நாம் சிறப்பாயிருக்கிறோம் என்ற தசமபாகத்தைப்பற்றிய அவருடைய வாக்குத்தத்தத்தை நம்ப நமக்கு விசுவாசமிருக்கிறதா?
நமது உபத்திரவங்களிலே அவர் நம்மை சந்திப்பார் (மோசியா 24:14 பார்க்கவும்) என்றும், நம்மோடு வழக்காடுகிறவர்களோடே அவர் வழக்காடுவார் (ஏசாயா 49:25; 2நெப்பி 6:17 பார்க்கவும்) என்றும், நமது உபத்திரவங்களை நமது ஆதாயத்திற்கென அர்ப்பணிப்பார் (2நெப்பி 2:2 பார்க்கவும்) என்றும் நம்ப நமக்கு போதுமான விசுவாசமிருக்கிறதா?
உலகப்பிரகாரமாகவும் ஆவிக்குரியபிரகாரமாகவும் நம்மை அவர் ஆசீர்வதிக்கும்படியாக அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படிக்கு அவசியமான விசுவாசத்தை நாம் பிரயோகிப்போமா? அவருடைய பிரசன்னத்திற்குள் அவர் நம்மை வரவேற்கும்படியாக இறுதிபரியந்தம் உண்மையுள்ளவர்களாயிருக்க நாம் தொடர்ந்திருப்போமா? (மோசியா 2:41 பார்க்கவும்).
சகோதர சகோதரிகளே, அவரை நம்ப நமக்கு விசுவாசமிருக்கலாம்! நமக்கு சிறப்பானதை அவர் விரும்புகிறார் (மோசே 1:39 பார்க்கவும்). நமது ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார் (கோ.உ 112:10 பார்க்கவும்). அவருடைய வாக்குத்தத்தத்தை (கோ.உ 1:38 பார்க்கவும்). அவர் காத்துக்கொள்வார் (ஆல்மா 37:16 பார்க்கவும்). அவர் சகலத்தையும் அறிகிறார்! மிகமுக்கியமாக சிறப்பானது எதுவென்பதை அவர் அறிகிறார் (ஏசாயா 55:8–9 பார்க்கவும்).
ஒரு அபாயகரமான உலகம்
இன்றைய நமது உலகம் கடினமானது. எல்லா நாடுகளிலும் தீமைகளும் லஞ்சமும் பரவியிருக்கின்றன, பாதுகாப்பான இடங்களிலும் தீவிரவாதம் வந்துசேர்ந்திருக்கிறது, பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம், வியாதி, இயற்கை அழிவுகள், உள்ளூர் சண்டைகள், துன்மார்க்கத் தலைவர்கள் முதலியன நமக்கிருக்கிறது. நாம் என்ன செய்யவேண்டும்? நாம் ஓடிப்போகவேண்டுமா அல்லது சண்டைபோடவேண்டுமா? எது சரி? இரண்டு தீர்மானமும் அபாயகரமாயிருக்கலாம். ஜார்ஜ் வாஷிங்டனும் அவருடைய இராணுவத்தினரும் சண்டை போட்டதும், நமது முன்னோடிகளான முன்னோர்கள் ஓடிப்போனதும் அபாயமானதாயிருந்தது. விடுதலைக்காக போராடிய நெல்சன் மன்டேலாவுக்கு அது அபாயகரமானதாயிருந்தது. நல்ல மனிதர்கள் எதையும் செய்யாமலிருப்பது மட்டுமே தீமை நிலைத்திருக்க அவசியமாயிருக்கிறது. 4
பயப்படாதே!
நாம் எதைச் செய்தாலும், பயத்தின் ஆவியுடன் நாம் தீர்மானிக்கக்கூடாது, செயல்படக்கூடாது. உண்மையாகவே, “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை” (2தீமோத்தேயு 1:7). (வேதங்கள் முழுவதிலும் “பயப்படாதே” என்ற வார்த்தை வலியுறுத்தப்பட்டிருப்பதன் கருத்தை நீங்கள் உணர்ந்தீர்களா?) ஊக்கமிழப்பதுவும், பயமும் எதிரியின் கருவிகள், என கர்த்தர் எனக்குப் போதித்தார். கடினமான நேரங்களுக்கு கர்த்தருடைய பதில் விசுவாசத்துடன் முன்னேறிச் செல் என்பதே.
எது கடினம்?
கடினமென்பது என்னவென்று நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கருத்திருக்கலாம், பணநெருக்கடி இருக்கும்போது தசமபாகத்தைச் செலுத்துவது கடினமென சிலர் கருதலாம். தசமபாகத்தை ஏழைகள் செலுத்துவதை எதிர்பார்க்க, சிலநேரங்களில் தலைவர்கள் கடினமாகக் காண்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள அல்லது ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்க விசுவாசத்துடன் முன் செல்ல நம்மில் சிலருக்கு கடினமாயிருக்கலாம். “கர்த்தர் அருளிய காரியங்களில் மனரம்மியமாக இருக்க” (ஆல்மா 29:3) [அவர்கள்] கடினத்தைக் காண்பார்கள். நமது தற்போதைய அழைப்பில் திருப்தியடைவது கடினமாயிருக்கலாம் (ஆல்மா 29:6 பார்க்கவும்). சபையின் ஒழுங்கு முறை கடினமாகத் தோன்றலாம், ஆனால் சிலருக்கு இது உண்மையான மனந்திரும்புதலின் முறையின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
விவகாரத்தை பொருட்படுத்தாது, கர்த்தரிலும் அவரது திட்டத்திலும் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னேறிச் செல்பவர்களுக்கு கடினம் நன்மையாயிருக்கும்.
எனது சாட்சி
என் சகோதர சகோதரிகளே, எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற இந்த தலைவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என நான் சாட்சியளிக்கிறேன். கர்த்தருக்கு சேவை செய்வதும் நமது இருதயங்களில் சுவிசேஷத்தை ஸ்திரப்படுத்த நமக்குதவுவதுமே அவர்களின் விருப்பம்.
நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவை நான் நேசிக்கிறேன். நமது இரட்சகராகவும் மீட்பராகவுமாகிற அளவுக்கு அவர், பிதாவையும் நம்மையும் நேசித்தாரென்றும் அப்படிச் செய்ததில், “வேதனையினிமித்தம் நடுங்கி, ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் கசிந்து, சரீரம் ஆவி இரண்டிலும் பாடுபட வைத்த” (கோ.உ 19:18) வகையில் அவர் பாடுபட்டாரென்றும் நான் ஆச்சரியப்படுகிறேன். இந்த பயங்கர சூழ்நிலைகளை எதிர்கொண்டதுடனும், அதன் தேவைகளை உணர்ந்தும் பிதாவிடம் அவர், “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42) என உறுதியளித்தார். தூதர்களின் வார்த்தைகளை நான் மகிமைப்படுத்துகிறேன். “அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார்” (மத்தேயு 28:6).
அவருடைய எடுத்துக்காட்டு உண்மையிலேயே “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறது” (யோவான் 14:6). அந்த எடுத்துக்காட்டைப் பின்பற்றுவதால் மாத்திரமே நாம் “இம்மையில் சமாதானத்தையும் மறுமையில் நித்திய ஜீவனையும்” (கோ.உ 59:23) அடைவோம். நான் அவரது உதாரணத்தைப் பின்பற்றி இருக்கிறேன். அவரது “மகா உன்னதமானதும் அருமையானதுமான வாக்குத்தத்தங்கள்” ஒவ்வொன்றும் உண்மையானவை என நானே அறிந்து கொண்டேன். (2 பேதுரு 14:6).
மார்மனுடன் ஒரு உண்மையான சீஷனாக எழுந்து நிற்கவும், (3நெப்பி 5:13 பார்க்கவும்) “நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” (மத்தேயு 25:21) என ஒருநாள் அவருடைய வாயிலிருந்து கேட்பதுமே என்னுடைய மிகுந்த வாஞ்சை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.