சகலவற்றின் சத்தியம்
ஒரு பலமான சாட்சியைப் பெறவும், காத்துக்கொள்ளவும், தேவையானவற்றைச் செய்ய, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட பொறுப்பு உண்டு.
ஏதாவது விதத்தில் சத்தியத்தைப் போதிக்கிற பரிசுத்த ஆவியால் நாம் பெலப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் நாம் இன்றிரவில் இங்கு வந்திருக்கிறோம். 1 இது நான் பேச விரும்புகிற தனிப்பட்ட சத்தியத்தின் தேடலைப்பற்றியதே.
ஒரு இளைஞனாக சபையைப்பற்றி எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. என்னுடைய கேள்விகளில் சில மனப்பூர்வமானவை. மற்றவை அப்படியல்ல, பிறரின் சந்தேகங்களைப் பிரதிபலித்தன.
நான் அடிக்கடி என் கேள்விகளை என் அம்மாவுடன் கலந்துரையாடினேன். எனது கேள்விகளில் அநேகம் மனப்பூர்வமானவை, எனது இருதயத்திலிருந்து வந்தவை என என் அம்மா உணர்ந்திருக்க வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். குறைவான உண்மையுடைய அதிக விவாதத்துக்குரிய அந்தக் கேள்விகள் அவரை ஏமாற்றமடையச் செய்தன என எண்ணுகிறேன். எனினும் அவர் என்னை ஒருபோதும் கேள்வி கேட்டதற்காக ஏமாற்றவில்லை. அவர் கேட்டு, அவற்றுக்கு பதிலளிக்க முயற்சி செய்வார். அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் சொல்லிவிட்டார், என்னிடம் இன்னும் கேள்விகள் இருக்கின்றன என உணரும்போது, அவர் இப்படிச் சொல்வார், “டேவிட், அது ஒரு நல்ல கேள்வி. நீபதிலுக்காக தேடி, வாசித்து, ஜெபிக்கும்போது நீ செய்ய வேண்டும் என அறியும் காரியங்களை ஏன் செய்யக்கூடாது, செய்யக்கூடாது என நீ அறிந்த காரியங்களை ஏன் செய்யாமலிருக்கக் கூடாது?” சத்தியத்தைப்பற்றிய என் தேடலுக்கு இது மாதிரியானது. படிப்பு, ஜெபம் மற்றும் கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் எனது எல்லா முக்கிய கேள்விகளுக்கும் பதில்கள் உள்ளன என நான் கண்டேன். சில கேள்விகளுக்கு தொடர்ந்த விசுவாசமும், பொறுமையும், வெளிப்படுத்தலும் தேவை என கண்டுபிடித்தேன். 2
விசுவாசத்தை விருத்தி செய்வது மற்றும் பதில்களைக் கண்டுபிடிப்பதைப்பற்றிய பொறுப்பை அம்மா என் மீது போட்டு விட்டார். பரலோக பிதா குறித்திருக்கிற வழியில் என் சத்தியத் தேடலுக்கான முக்கிய பதில்கள் வரும் என அவர் அறிந்தார். நான் சத்தியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் அறிந்தார். எனது கேள்விகளில் நான் உண்மையாக இருக்க வேண்டும், நான் ஏற்கனவே சத்தியமானவை என அறிந்தவற்றின்படி செயலாற்ற வேண்டும் என அவர் அறிந்தார். நான் படிக்கவும் ஜெபிக்கவும் வேண்டும், கர்த்தரிடமிருந்து நான் பதில்களை நாடும்போது நான் அதிக பொறுமையை விருத்தி செய்ய வேண்டும் என அவர் அறிந்தார். பொறுமையாயிருக்கச் சித்தமாயிருப்பது, நமது சத்தியத் தேடலின் ஒரு பகுதி மற்றும் சத்தியத்தை வெளிப்படுத்தும் கர்த்தரின் மாதிரியின் ஒரு பகுதி. 3
காலப்போக்கில் என் அம்மா சத்தியத்தைத் தேட பரலோக பிதாவின் மாதிரியைக் கற்பித்தார் என அறிந்தேன். விசுவாசம் வளர்ந்தது, பதில்கள் வரத் தொடங்கின, நான் ஊழிய அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.
என் ஊழியத் தொடக்கத்தில், சபை உண்மையானதா, ஜோசப் ஸ்மித் உண்மையானவரா, என நான் அறிய வேண்டும் என நான் அறிந்த நேரம் ஒன்று வந்தது. நமது கடந்த பொது மாநாட்டில் தலைவர் தாமஸ் எஸ். மான்சன் மிகத் தெளிவாக தெரிவித்ததை நான் உணர்ந்தேன்: “இந்தக் காரியங்களைப்பற்றி உங்களுக்கு உறுதியான சாட்சி இல்லையென்றால், அதைப் பெற தேவையானதைச் செய்யுங்கள். இந்தக் கடினமான காலங்களில், உங்களது சொந்த சாட்சியைப் பெறுவது முக்கியமாகும், ஏனெனில் பிறரது சாட்சிகள் உங்களை இம்மட்டுமே கொண்டு போகும்.” 4 அது தேவை என நான் அறிந்தேன். ஒரு உள்ளார்ந்த இருதயத்தோடும், உண்மையான நோக்கத்தோடும் நான் மார்மன் புஸ்தகத்தை வாசித்து, அது உண்மையா என தேவனிடம் கேட்க வேண்டியிருந்தது.
தீர்க்கதரிசி மரோனி மூலம் கொடுக்கப்பட்ட நமது பரலோக பிதாவின் விசேஷித்த வாக்குத்தத்தத்தைக் கேளுங்கள்: “இக்காரியங்களை நீங்கள் பெறும்போது, நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நித்திய பிதாவாகிய தேவனிடத்தில் இக்காரியங்கள் சத்தியமற்றவையா என கேட்க வேண்டுமென்று உங்களுக்கு அறிவுரைக்கிறேன். நீங்கள் உண்மையான இருதயத்தோடும் முழு நோக்கத்தோடும் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துக் கேட்பீர்களானால், அவர் அதன் சத்தியத்தை உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் தெரியப்பண்ணுவார்.” 5
மார்மன் புஸ்தகத்தில் இருப்பதை அறிய நான் அதை வாசிக்க வேண்டும். நான் புஸ்தகத்தின் ஆரம்பத்தில் தொடங்கி தினமும் வாசித்தேன். சிலர் சீக்கிரத்தில் சாட்சி பெறுகிறார்கள். பிறருக்கு அதற்கு அதிக நேரமும், அதிக ஜெபமும் தேவைப்படும். புஸ்தகத்தை பல தடவைகள் படிப்பதும் அடங்கலாம். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட சாட்சியை நான் பெறுமுன் நான் முழு புஸ்தகத்தையும் வாசிக்க வேண்டும். எனினும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் சத்தியத்தை எனக்கு தெரியப்படுத்தினார்.
என் ஊழியக் குறிப்பிதழில், சத்தியத்தை அறிவதன் சந்தோஷத்தையும், எனது தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலின் தெரிவிப்பையும், நான் பெற்ற சத்தியத்தின்படி செயலாற்ற உண்மையான நோக்கத்தையும் விவரித்தேன். நான் எழுதினேன், “எனது மிஞ்சிய வாழ்க்கையில் 100 சதவீதத்தைக் கொடுக்க சிறப்பானதைச் செய்ய பரலோக பிதாவிடமும் என்னுடனும் நான் சத்தியம் செய்திருக்கிறேன், என்ன கேட்கப்பட்டாலும் நான் செய்வேன், ஆனால் இப்போது என் ஊழியத்தின் மீதி இருக்கிறது, நான் தவறாக உணராதபடி, எனக்காகவல்ல, கர்த்தருக்காக நான் அதை மகத்தான ஊழியமாக்கப் போகிறேன். நான் கர்த்தரை நேசிக்கிறேன், இப்பணியை நேசிக்கிறேன், இந்த உணர்வு ஒருபோதும் என்னை விட்டு நீங்கக்கூடாது என நான் ஜெபிக்கிறேன்.”
மனந்திரும்பவும் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் தொடர்ந்த போஷிப்பும், முயற்சியும், அந்த உணர்ச்சி விலகாதிருக்க தேவைப்படுகின்றன என அறிந்தேன். தலைவர் மான்சன் சொன்னார், “தேவனின் கட்டளைகளுக்கு தொடர்ந்த கீழ்ப்படிதல், தினசரி ஜெபம் மற்றும் வேத வாசிப்பு மூலம் ஒரு சாட்சி உயிரோட்டமுள்ளதாகவும் ஜீவனுள்ளதாகவும் காக்கப்பட வேண்டும்.” 6
பல ஆண்டுகளாக சத்தியத்தை நாடவும், சாட்சி பெறவும், தங்கள் சொந்த முயற்சியால் அவர்கள் எப்படித் தொடங்கினார்கள் என உலக முழுவதிலுமுள்ள ஊழியக்காரர்களிடமும் இளைஞர்களிடமும் நான் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எந்த விதிவிலக்கமுமின்றி தொடக்கத்திலிருந்து மார்மன் புஸ்தகத்தை வாசிக்க தங்களது சொந்த தீர்மானத்துடனும், அது சத்தியமானதா என தேவனிடம் கேட்டதிலும் ஒரு தனிப்பட்ட சாட்சி பெற தங்களது சொந்த முயற்சி தொடங்கியது என அவர்கள் பதிலளித்தனர். இதைச் செய்ததில், பிறரின் சந்தேகங்களால் அவர்கள் “செய்ய வைக்கப்பட்டதை” 7 விட “செய்யத்” தெரிந்து கொண்டனர்.
சத்தியத்தை அறிய நாம் சுவிசேஷத்தின்படி வாழ்ந்து8 வார்த்தையை சோதித்துப்9 பார்க்க வேண்டும். கர்த்தரின் ஆவியைத் தடுக்கக் கூடாது என நாம் எச்சரிக்கப்பட்டுள்ளோம். 10 மனந்திரும்புதல் கட்டளைகளைக் கைக்கொள்ளும் தீர்மானத்துடன் இணைவது, ஒவ்வொரு தனிப்பட்டவரின் சத்தியத்தின் தேடுதலுக்கும் முக்கிய பகுதியாகும். 11 உண்மையில் சத்தியத்தை அறிய நாம் எல்லாவற்றையும் விட்டுவிட சித்தமாயிருக்க வேண்டும். 12
படிப்பதாலும் விசுவாசத்தாலும் கற்றலை நாடவும், ஞான வார்த்தைகளை சிறந்த புஸ்தகங்களிலிருந்து தேடவும் நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். 13 சத்தியத்துக்கான நமது தேடல், சிறந்த புஸ்தகங்கள் மற்றும் சிறந்த ஆதாரங்களில் கவனிக்கப்பட வேண்டும். மிகச் சிறந்த புஸ்தகங்களில் வேதங்களும் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் உள்ளன.
ஒரு பெலமான சாட்சியைப் பெறவும் காத்துக் கொள்ளவும், தேவையானதைச் செய்ய நம் ஒவ்வொருவரையும் தலைவர் மான்சன் கேட்டிருக்கிறார். 14 உங்கள் சாட்சியை ஆழமானதாக்கவும் பலப்படுத்தவும் எது தேவை? ஒரு பலமான சாட்சியைப் பெற்று காத்துக் கொள்ள தேவையானதைச் செய்ய நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
சத்தியத்தை அறிய, கர்த்தரிடமிருந்து பதில் பெற “தேவையானதைச்” செய்துகொண்டே பொறுமையாக நமது உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்வது தேவனின் மாதிரியின் பகுதி ஆகும். விசேஷமாக காரியங்கள் கடினமாக இருக்கும்போது, “கர்த்தரின் சித்தம் அனைத்துக்கும் நாம் உற்சாகமாகவும் பொறுமையாகவும் ஒப்புக்கொடுப்பது” தேவைப்படலாம். 15 பொறுமையாக உடன்படிக்கையைக் காத்துக்கொள்ளுதல் நமது தாழ்மையை அதிகரித்து, சத்தியத்தை அறியும் வாஞ்சையை ஆழமாக்கி, “நாம் ஆசீர்வதிக்கப்பட்டு, விருத்தியடைந்து, காக்கப்பட்டு ஞானத்தின் பாதையில் நம்மை வழிநடத்த” 16 பரிசுத்த ஆவியை அனுமதிக்கிறது.
சபையின் சில விஷயங்களால் அவளது வாழ்க்கையின் அதிக பகுதியில் போராடிய, என் மனைவி மேரியும் நானும் அதிகம் நேசிக்கிற ஒருவர் உண்டு. அவள் சுவிசேஷத்தை நேசிக்கிறாள், சபையை நேசிக்கிறாள், ஆனால் இன்னமும் கேள்விகள் வைத்திருக்கிறாள். அவள் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டுள்ளாள், சபையில் ஆர்வமாக இருக்கிறாள், தன் அழைப்புகளை நிறைவேற்றுகிறாள், ஒரு அற்புதமான தாய் மற்றும் மனைவி. இத்தனை ஆண்டுகளாக தான் சரியானது என நினைப்பதை செய்ய முயன்றிருக்கிறாள், தவறு என தான் அறிந்த காரியங்களை செய்வதிலிருந்து ஒதுங்கி இருந்திருக்கிறாள். தன் உடன்படிக்கைகளைக் காத்துக்கொண்டு, தொடர்ந்து ஆய்வு செய்கிறாள். சில சமயங்களில் பிறரின் விசுவாசத்தைப் பற்றிக்கொள்ள நன்றியுடையவளாய் இருந்திருக்கிறாள்.
சமீபத்தில் அவளையும் அவளது கணவனையும் தன்னைப் பார்க்குமாறு அவளது ஆயர் சொன்னார். ஆலய நியமங்கள் தேவைப்பட்டவர்களுக்கு பதிலிகளாக இருக்க ஒரு பொறுப்பை ஏற்குமாறு கேட்டார். இந்த அழைப்பு அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் ஏற்றுக்கொண்டு, கர்த்தரின் வீட்டில் தங்கள் சேவையைத் தொடங்கினர். அவர்களது பதின்ம வயது மகன் சமீபத்தில் குடும்ப வரலாற்று ஆய்வில் பங்கேற்றான், ஆலய நியமங்கள் முடிக்கப்படாத ஒரு குடும்பத்தினரின் பெயரைக் கண்டுபிடித்தான். சரியான நேரத்தில் அவர்கள் பதிலிகளாக இருந்து, அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆலய நியமங்களை முடித்தனர். பீடத்தில் அவர்கள் முழங்கால் படியிட்டு முத்திரிக்கும் நியமங்கள் நிறைவேற்றப்பட்டபோது, இந்த அற்புதமான, பொறுமைசாலியான, நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த பெண், ஒரு தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றாள். அதனிமித்தம் ஆலயமும் அங்கு நிறைவேற்றப்படும் ஆலய நியமங்களும் உண்மையானவை என அறிந்தாள். அவள் தன் தாயை அழைத்து தன் அனுபவத்தைப்பற்றி சொன்னாள், அவளுக்கு இன்னும் சில கேள்விகள் இருந்தாலும், ஆலயம் உண்மையானது, ஆலய நியமங்கள் உண்மையானவை, சபை உண்மையானது என அறிந்ததாக சொன்னாள். ஒரு அன்பான பொறுமையான பரலோக பிதாவுக்காகவும், பொறுமையாக தொடர்ந்து ஆராய்கிற மகளுக்காகவும் நன்றியுணர்வுடன் அவளது தாய் அழுதாள்.
பொறுமையாக உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்ளுதல் நமது வாழ்க்கையில் பரலோக ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது. 17
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே நீங்கள் சகலவற்றின் சத்தியத்தையும் அறிந்து கொள்வீர்கள், 18 என்ற கர்த்தரின் வாக்குத்தத்தத்தில் நான் பெரிய ஆறுதல் கண்டேன். அனைத்தையும் அறியாமலேயே நாம் சத்தியத்தை அறிய முடியும். மார்மன் புஸ்தகம் உண்மையானது, என நாம் அறியலாம். உண்மையாகவே இம்மாலையில் தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தபடி, “மார்மன் புஸ்தகம் சந்தேகமின்றி தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது என நமது இருதயங்களின் “ ‘ஆழங்களிலிருந்து நாம் உணரலாம்” [ஆல்மா 13:27 பார்க்கவும்]. “அது இல்லாமல் ஒரு நாள் கூட நாம் வாழ விரும்பவில்லை எனவும் ஆழமாக” நாம் உணரலாம். 19
தேவன் நமது பிதா, அவர் நம்மை நேசிக்கிறார், அவரது குமாரனான இயேசு கிறிஸ்து நமது இரட்சகரும் மீட்பருமாவார் என நாம் அறியலாம். அவரது சபையில் அங்கத்தினரத்துவம் பாராட்டப்படக்கூடியது மற்றும் வாரந்தோறும் திருவிருந்தில் பங்கேற்பது நாமும் நமது குடும்பமும் பாதுகாப்பாக இருக்க உதவும் என நாம் அறியலாம். ஆலய நியமங்கள் மூலம் குடும்பங்கள் என்றென்றைக்கும் ஒன்றாக இருக்க முடியும் என நாம் அறிய முடியும். இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தியும் மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பின் ஆசீர்வாதங்கள் உண்மையானவை என நாம் அறிய முடியும். நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி, தலைவர் தாமஸ் எஸ். மான்சன், கர்த்தருடைய தீர்க்கதரிசி, அவரது ஆலோசகர்களும் பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களும் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்கள் என நாம் அறிய முடியும்.
இவை எல்லாம் சத்தியமானவை என இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நான் என் சாட்சியை கூறுகிறேன், ஆமென்.