2010–2019
கர்த்தரின் சத்தம்
அக்டோபர் 2017


2:3

கர்த்தரின் சத்தம்

நாம் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்ட்டிருக்கிறோம் என நான் சாட்சியளிக்கிறேன். நம் ஒவ்வொருவருக்கும் பரீட்சை நாம் எப்படி பிரதியுத்தரம் அளிக்கிறோம் என்பதே.

முதலாவதாக, சிறு பிள்ளைகளுக்கு ஒரு அன்பான வார்த்தை. ஆம், இதுதான் மாநாட்டின் கடைசிக் கூட்டம், நான் தான் கடைசி செய்தியாளர்.

அண்மையில் ப்ரோவோ சிட்டி சென்டர் ஆலயத்துக்கு நான் சென்றபோது, முதல் தரிசனம், தூரத்திலிருந்து, என தலைப்பிடப்பட்ட ஓவியத்தைக் கண்டு வியப்புற்றேன். அந்த ஓவியம் பிதாவும் குமாரனும் இளம் ஜோசப் ஸ்மித்துக்கு தரிசனமானபோது, பரலோகத்திலிருந்து வந்த ஒளியையும் வல்லமையையும் குறிப்பிடுகிறது.

தூரத்திலிருந்து முதல் தரிசனம்

மறுஸ்தாபிதத்தின்போது ஏற்பட்ட மிகப் பரிசுத்தமான நிகழ்ச்சிக்கு ஒப்பிடாமல், இந்த பொது மாநாட்டில் இறங்குகிற ஒளியையும் தேவ ஆவியின் வல்லமையையும் பிரதிபலிக்கிறதையும், அவ்வாறே அந்த வல்லமையும் ஒளியும் உலக முழுவதும் செல்வதையும் போன்ற காட்சியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது,

பொது மாநாட்டின் மீது இறங்குகிற ஒளியும் ஆவிக்குரிய வல்லமையும்
வல்லமையும் ஒளியும் உலக முழுவதும் செல்லுதல்

இயேசுவே கிறிஸ்து எனவும், இந்தப் பரிசுத்த பணியின் காரியங்களை அவர் வழிநடத்துகிறார் எனவும், பொது மாநாடு, கர்த்தர் தன் சபைக்கு வழிகாட்டுதல் கொடுக்கிற மற்றும் நம்மோடு தனிப்பட்ட முறையில் பேசுகிற மிக முக்கிய நேரங்களில் ஒன்று.

உன்னதத்திலிருந்து போதிக்கப்படுகிறோம்

சபை அமைக்கப்பட்ட நாளில், கர்த்தர் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராகவும் நியமித்து, 1 சபைக்குச் சொன்னார்,

“ஏனெனில் எல்லா பொறுமையோடும் விசுவாசத்தோடும் என் சொந்த வாயிலிருந்து வந்ததுபோல அவனுடைய வார்த்தைகளைப் பெறுவீர்கள்.

“ஏனெனில் இந்த காரியங்களைச் செய்வதால் நரகத்தின் வாசல்கள் உங்களை எதிர்த்து நிற்க முடியாது,... கர்த்தராகிய தேவன் உங்களுக்கு முன்பிருந்து இருளின் வல்லமைகளை கலைத்துப்போடுவார், உங்களின் நன்மைக்காக பரலோகங்களை நடுங்கச் செய்வார்.” 2

பின்னர், பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும், ஆதரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். 3

இப்போது தலைவர் தாமஸ்  எஸ். மான்சனின், வழிகாட்டுதலின் கீழ், நாம் கூடும்போது, உண்மையாகவே “கர்த்தரின் சித்தத்தைக் கேட்பது, கர்த்தரின் மனதாயும், கர்த்தரின் குரலாயும், இரடசிப்புக்காக கர்த்தரின் வல்லமையாகவும் இருக்கும்.” 4 அவரது வாக்குத்தத்தத்தை நாம் நம்புகிறோம்: “என் சொந்தக்குரலால் அல்லது என் ஊழியக்காரனின் குரலால் இருந்தாலும், அது ஒன்றே.” 5

நமது தற்போதைய உலகத்தின் கொந்தளிப்பு மற்றும் குழப்பத்தில், நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், தரித்திருப்பதற்கும் பிரதான தலைமை மற்றும் பன்னிருவர் குழுமத்தின் வார்த்தைகளை நம்புவது முக்கியமானது. 6

இந்த அற்புதமான மாநாட்டுக்காக நாம் ஒன்று கூடியிருக்கிறோம். 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 93 மொழிகளைப் பேசுகிற மில்லியன் கணக்கான பிற்காலப் பரிசுத்தவான்களும், விசுவாசமிக்க பிறரும் இக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர் அல்லது மாநாட்டு செய்திகளை வாசிக்கின்றனர்.

நாம் ஜெபித்து ஆயத்தப்பட்டு இங்கு வந்திருக்கிறோம். நம்மில் அநேகருக்கு கடுமையான வருத்தங்களும், நேர்மையான கேள்விகளும் இருக்கின்றன. நாம் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தைப் புதுப்பிக்கவும், சோதனைகளை எதிர்க்கும் திறமையை பலப்படுத்தவும், கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும் விரும்புகிறோம். நாம் உன்னதத்திலிருந்து போதிக்கப்பட வந்திருக்கிறோம்.

கர்த்தரின் மனதும் சித்தமும்

ஒவ்வொரு மாநாட்டிலும் பேசுகிற பிரதான தலைமை மற்றும் பன்னிருவருக்கும், செய்திகளை ஆயத்தம் செய்யும் மிகப்பெரிய பொறுப்பானது தொடர்ச்சியான பாரமும் ஒரு பரிசுத்த கடமையுமாக இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது அதிகாரியாக பணியாற்றுவதற்கு முன்பு, நான் மூப்பர் டாலின் எச். ஓக்ஸிடம் ஒவ்வொரு பிணைய மாநாட்டுக்கும் வெவ்வேறு செய்திகளை அவர் ஆயத்தப்படுத்துவாரா எனக் கேட்டேன். இல்லை என அவர் பதிலளித்து மேலும் சொன்னார், “ஆனால் எனது பொது மாநாட்டுச் செய்திகள் வித்தியாசமானவை. நான் என்ன சொல்ல வேண்டும் என கர்த்தர் விரும்புகிறாரோ, என்பதை உறுதிசெய்ய நான் 15 அல்லது 20 பிரதிகளை வாசிப்பேன்.” 7

ஒரு பொது மாநாட்டுக்கான உணர்த்துதல் எப்போது, எப்படி வருகிறது?

 தலைப்புக்கள் கொடுக்கப்படாமல், ஒவ்வொரு மாநாட்டிலும் பரலோகம் நித்திய சத்தியத்தின் கருத்துக்களையும் தலைப்புக்களையும் அழகாக ஒருங்கிணைப்பதை நாம் பார்க்கிறோம்.

அவரது கடந்த ஏப்ரல் செய்திக்குப் பின் உடனே இம்மாநாட்டுக்கு தலைப்பு அவருக்கு கொடுக்கப்பட்டதாக சகோதரர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார். மூன்று மாதத்துக்கு முன்னால் எனவும், தான் இன்னும் ஜெபித்துக்கொண்டு கர்த்தருக்குக் காத்திருக்கிறேன் எனவும் இன்னொருவர் குறிப்பிட்டார். ஒரு விசேஷித்த உணர்ச்சிபூர்வமான செய்தியை ஒன்றிணைக்க எவ்வளவு நாளாகும் என கேட்டபோது மற்றொருவர் பதிலளித்தார், “இருபத்தைந்து ஆண்டுகள்.”

சில சமயங்களில் மையக்கருத்து உடனே வந்து விடும், ஆனால் உள்ளடக்கத்துக்கும் விவரங்களுக்கும் எக்கச்சக்கமான ஆவிக்குரிய முயற்சி தேவைப்படுகிறது. உபவாசமும் ஜெபமும், படிப்பும் விசுவாசமும், எப்போதும் அந்த நடைமுறையின் பங்காகும். அவரது பரிசுத்தவான்களிடம் அவரது குரலை மங்கச் செய்வதை கர்த்தர் செய்யத் தேவையில்லை.

ஒரு பொது மாநாட்டு செய்திக்கான வழிநடத்தல் நமது சிந்தனையிலேயே இல்லாத இரவில் அல்லது அதிகாலை நேரத்தில் அடிக்கடி வருகிறது. திடீரென ஒரு எதிர்பாராத உள்ளுணர்வு, சில சமயங்களில் குறிப்பிட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் சுத்தமான வெளிப்படுத்தல்களாக வழிந்தோடுகின்றன. 8

நீங்கள் கேட்கும்போது, நீங்கள் பெறுகிற செய்தி அப்படியே இருக்கலாம் அல்லது அவை உங்களுக்காக எளிதாக்கப்பட்டிருக்கலாம்.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது மாநாட்டில் பேசும்போது, ஒரு ஆச்சரியத்துடன் ஊழியம் செய்ய நான் ஆயத்தப்பட்டிருந்தேனா என என் மனதுக்குள் நுழைந்த சொற்றொடரைப்பற்றி நான் சொல்லப்பட்டேன். அந்த சொற்றொடர், “உனக்கு எதுவும் தெரியாது, ஆனால் உனக்கு எல்லாம் தெரியும்.” 9 அன்று பொது மாநாட்டில் அமர்ந்திருந்த ஒரு இளம்பெண், திருமணத்துக்கான வரனைப்பற்றி ஜெபித்துக் கொண்டிருந்ததாகவும் அவள் அந்த இளைஞனை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறாள் என வியப்புற்றதாகவும் அன்று என்னிடம் சொன்னாள். “உனக்கு எதுவும் தெரியாது, ஆனால் உனக்கு எல்லாம் தெரியும்” என்ற வார்த்தைகளை நான் பேசியபோது அவள் அவனை போதுமானபடி அறிகிறாள் என ஆவி அவளுக்கு உறுதி செய்தது. அநேக ஆண்டுகளாக அவர்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து வாழ்ந்தார்கள்.

நீங்கள் உங்கள் ஆவியை ஆயத்தம் பண்ணி, நீங்கள் கர்த்தரின் குரலைக் கேட்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடு வந்தால், உங்களுக்காக விசேஷமாக எளிதாக்கப்பட்ட சிந்தனைகளும் உணர்ச்சிகளும் உங்கள் மனதில் வரும். நீங்கள் ஏற்கனவே அவற்றை இந்த மாநாட்டில் பெற்றிருப்பீர்கள் அல்லது வரவிருக்கிற வாரங்களில் நீங்கள் இந்த செய்திகளைப் படிக்கும்போது, நீங்கள் பெறுவீர்கள்.

இப்போதைக்கும் வருகிற மாதங்களுக்கும்

தலைவர் மான்சன் சொன்னார்,

“மாநாட்டு செய்திகளைப்படிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். 10

அவைகளைப்பற்றி சிந்தியுங்கள். ... நான் அவற்றை ஆழமாகப் படிக்கும்போது அந்த உணர்த்தப்பட பிரசங்கங்களிலிருந்து நான் அதிகம் கற்கிறேன் என கண்டு பிடித்தேன்.” 11

பொது மாநாட்டுச் செய்திகள் இப்போதைக்கும் வருகிற மாதங்களுக்கும், கர்த்தர் நம்முன் வைத்துள்ள எதிர்பார்ப்புகள்.

மேய்ப்பன் “தன் ஆடுகளுக்கு முன்னே போகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் அவனுக்குப் பின் செல்கிறது.” 12

அடிக்கடி அவரது குரல் நமது வாழ்க்கையில் ஒன்றை மாற்ற நம்மை வழிநடத்துகிறது. அவர் நம்மை மனந்திரும்ப அழைக்கிறார். அவர் நம்மை “அவரைப் பின்பற்ற” அழைக்கிறார்.

இந்த மாநாட்டிலிருந்து வாசகங்களைப் பற்றி சிந்தியுங்கள்;

தலைவர் ஹென்றி பி.  ஐரிங், இன்று காலை செய்தியிலிருந்து: “பிதாவாகிய தேவன் ஜீவிக்கிறார், அவரிடத்தில் வீட்டுக்கு நீங்கள் வர விரும்புகிறார் என நான் சாட்சியளிக்கிறேன். இதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை. அவர் உங்களை அறிகிறார். அவர் உங்களை நேசிக்கிறார்.  அவர் உங்களைக் கண்காணிக்கிறார்.” 13

தலைவர் டியடர்  எப். உக்டர்ப், நேற்றைய செய்தியிலிருந்து: தேவனிடத்தில் வழிநடத்துகிற சிறந்த பயணத்தில் நாம் ஈடுபட்டு அல்லது தொடரும்போது, நமது வாழ்க்கை சிறப்பாகும்... நம்மைச் சுற்றியுள்ளவர்களை ஆசீர்வதிக்கவும் நித்திய நோக்கங்களை செயலாக்கவும் விசேஷித்த வழிகளில் கர்த்தர் நம்மை பயன்படுத்துவார். 14

தலைவர் ரசல்  எம். நெல்சன், நேற்று மாலை பேசியதிலிருந்து: “நீங்கள் உங்களை மார்மன் புஸ்தகத்தில் தினமும் அமிழ்த்திக் கொள்ளும்போது, ஆபாசம் என்கிற கவ்விப்பிடிக்கிற கொள்ளைநோய் மற்றும் பிற மனதை மழுக்கும் அடிமைத்தனங்கள் உள்ளிட்ட இன்றுள்ள தீமைகளுக்கு எதிராக தடுக்கப்படுவீர்கள் என உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்கிறேன்.” 15

மூப்பர் டாலின்  எச். ஒக்ஸ், நேற்று பேசியதிலிருந்து: “குடும்பத்தைப்பற்றிய பிரகடனம் நித்திய சத்தியத்தின் வாசகம், தன் பிள்ளைகளுக்கான கர்த்தரின் சித்தம், என நான் சாட்சியளிக்கிறேன்.” 16

மூப்பர் எம்.  ரசல் பல்லார்ட், சில நிமிடங்களுக்கு முன் பேசியதிலிருந்து: “நாம் தேவனின் பிள்ளைகளை மனதுருக்கத்துடன் தழுவிக் கொள்ள வேண்டும், இனவாதம், பாலினவாதம், மற்றும் தேசியவாதம் உள்ளிட்ட தப்பான எண்ணங்களை விலக்க வேண்டும்.” 17

நமக்கு அதிகமாக ஒரு நிமிடம் இருப்பதால், மூப்பர் ராபர்ட் டி.  ஹேல்ஸ் பற்றி சுருக்கமான நினைவை சொல்ல நான் விரும்புகிறேன். அவரது உடல்நிலை அனுமதிக்குமானால் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டத்தில் அவர் ஒரு சுருக்கமான செய்தி கொடுக்கலாம் என மூப்பர் ராபர்ட் டி. ஹேல்ஸிடம் பிரதான தலைமை சொல்லியிருந்தார்கள். அவருடைய உடல்நிலை அனுமதிக்காதபோதும், அவர் ஒரு செய்தியை ஆயத்தம் செய்திருந்தார், அதைக் கடந்த வாரம் முடித்து என்னுடன் பகிர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட மூன்று மணிநேரத்துக்கு முன்பு அவர் மரித்து விட்டதால் அவரது செய்தியிலிருந்து நான் மூன்று வரிகளை பகிர்ந்து கொள்கிறேன்.

மூப்பர் ஹேல்ஸை  மேற்கோள்காட்டி: “நாம் விசுவாசத்தைத் தெரிந்துகொள்ளும்போது, நாம் தேவனின் சமூகத்தில் நிற்க ஆயத்தப்படுகிறோம். ... இரட்சகரின் சிலுவையிலறைதலுக்குப் பின் அவர்கள் அநித்தியத்தில் வாழ்ந்தபோது, [அவரைப்] பற்றிய சாட்சியில் விசுவாசமாயிருந்தவர்களுக்கு அவர் காட்சியளித்தார். [கோ.உ 138:12.] ‘தீர்க்கதரிசிகளின் சாட்சிகளை மறுதலித்தவர்கள் இரட்சகரின் பிரசன்னத்தை காணவோ, அல்லது அவரது முகத்தை பார்க்கவோ முடியவில்லை.’ [ கோ.உ 138:21]. நமது விசுவாசம் கர்த்தரின் சமூகத்தில் நாமிருக்க நம்மை ஆயத்தப்படுத்துகிறது.

இக்காலைக் கூட்டம் முடிந்த உடனே தலைவர் ரசல்  எம். நெல்சன் இக்கட்டிடத்திலிருந்து சென்று, மதிய உணவை தவிர்த்து, மூப்பர் ஹேல்ஸின்  படுக்கையருகில் இருக்க விரைந்து சென்றார், அவரது குழுமத் தலைவர், தூதுவர் போன்ற மேரி ஹேல்ஸுடன் அவர் அநித்தியத்திலிருந்து கடந்து செல்லும்போது அங்கு வந்து அங்கிருக்க கர்த்தர் என்ன விதமாக உணர்த்தியிருக்கிறார்.

கர்த்தரின் சத்தத்துக்கு பதிலளித்தல்

இந்த மாநாட்டில் நாம் அவருடைய குரலைக் கேட்டிருக்கிறோம் என நான் சாட்சியளிக்கிறேன்.

கர்த்தரின் ஊழியக்காரர்களின் வார்த்தைகள் உலகத்தின் சிந்தனைக்கு விரோதமாக, சில சமயங்களில் நமது சொந்த சிந்தனைக்கு விரோதமாக இருந்தால் நாம் திகிலடையத் தேவையில்லை. அது எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது. நான் சகோதரர்களுடன் மண்டியிட்டிருக்கிறேன், அவர்களது ஆத்துமாக்கள் பற்றி சாட்சியளிக்கிறேன். அவர்களது மிகப்பெரிய வாஞ்சை கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துவதும், அவரது சமூகத்துக்கு தேவனின் பிள்ளைகளை திரும்பக் கொண்டு சேர்க்க உதவுவதும்தான்.

அழகிய இசையும் சிந்தனைமிக்க ஜெபங்களும் போல, எழுபதின்மர், ஆயம், ஒத்தாசைச் சங்கம், இளம் பெண்கள், ஆரம்ப வகுப்பு, மற்றும் பிற துணைக்குழுத் தலைவர்கள் இந்த மாநாட்டுக்கு அபரிமிதமான உணர்த்துதலைச் சேர்த்திருக்கிறார்கள்.

பொது மாநாட்டின் செய்திகளில் உங்கள் கண்டுபிடிப்புக்காக, பரலோக வழிநடத்தலின் பொக்கிஷப் பெட்டி காத்திருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குமான பரீட்சை நாம் கேட்பனவற்றுக்கும் உணர்வனவற்றுக்கும் நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதுதான்.

தலைவர் ரசல்  எம். நெல்சனின் வாழ்க்கையிலிருந்து தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு பதிலளிப்பது பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்:

1979ல் ஒரு பொது அதிகாரியாக அவரது அழைப்புக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பொது மாநாட்டுக்கு முன்பு மூப்பர் நெல்சன் ஒரு கூட்டத்துக்குச் சென்றார். உலகம் முழுவதற்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல தங்கள் அடிகளை நீட்டி வைக்குமாறு தலைவர் ஸ்பென்சர்  டபிள்யூ. கிம்பல் “அங்கிருந்தவர்களுக்கு சவால் விட்டார். தலைவர் கிம்பல் தனித்துவமாக குறிப்பிட்ட நாடுகளில் சீனா இருந்தது, அவர் அறிவித்தார், ‘நாம் சீனர்களுக்கு சேவை செய்ய வேண்டும். நாம் அவர்களது பாஷையைக் கற்க வேண்டும். நாம் அவர்களுக்காக ஜெபித்து, உதவ வேண்டும்.’” 18

தலைவர் நெல்சன் ஒரு அறுவைச் சிகிச்சை மருத்துவராக

54 வயதில் சகோதரர் நெல்சன், கூட்டம் நடந்தபோது தான் மாண்டரின் கற்க வேண்டும் என உணர்ந்தார். அவர் ஒரு இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக இருந்தாலும் அவர் உடனே ஒரு ஆசிரியரின் சேவையைப் பெற்றார்.

அவரது படிப்பைத் தொடங்கியதற்கு சற்று பின்பு, ஒரு கருத்தரங்கத்துக்கு சென்றார், எதிர்பாராத விதமாக ஒரு “சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர். வூ யிங்காய் அருகில் அமர்ந்தார். [சகோதரர் நெல்சன்], மாண்டரின் படித்துக் கொண்டிருந்ததால், அவர் டாக்டர். [வூ வுடன்] உரையாடத் தொடங்கினார்.” 19

டாக்டர். ரசல் எம். நெல்சன் டாக்டர். வூ யிங்கையுடன்

தீர்க்கதரிசியைப் பின்பற்ற டாக்டர். நெல்சனின் விருப்பம், டாக்டர். வூ, சால்ட் லேக் சிட்டி வரவும், டாக்டர். நெல்சன் சீனாவுக்குச் சென்று உரையாற்றவும், அறுவைச் சிகிச்சைகள் செய்யவும் வழிநடத்தியது.

சீனர்கள் மீது அவரது அன்பும், அவர் மீது அவர்களது அன்பும் மரியாதையும் வளர்ந்தது.

1985 பெப்ரவரியில் பன்னிருவர் குழுமத்துக்கு அவரது அழைப்புக்குப் பிறகு, சீனாவின் மிகப் புகழ்பெற்ற ஒபேரா பாடகரின் நோயுற்ற இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய பெய்ஜிங்கிற்கு வருமாறு, டாக்டர் நெல்சனைக் கேட்ட ஆச்சரியமான தொலைபேசியழைப்பைப் பெற்றார். தலைவர் கார்டன்  பி. ஹிங்க்லியின் ஊக்குவித்தலுடன் மூப்பர் நெல்சன் சீனாவுக்குத் திரும்பினார். அவர் செய்த கடைசி அறுவைச் சிகிச்சை சீன மக்கள் குடியரசில் தான்.

தலைவர் ரசல் எம் நெல்சன் கௌரவிக்கப்படுதல்

இரண்டு ஆண்டுகளுக்கு முன், அக்டோபர் 2015ல் தலைவர் ரசல்  எம். நெல்சன் “சீனாவின் பழைய நண்பர்” என அழைக்கப்பட்ட ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பால் மீண்டும் கௌரவிக்கப்பட்டார்.

பின்பு நேற்று, இப்போது 93 வயது வயதாகிற, தலைவர் ரசல்  எம்.  நெல்சன், தலைவர் தாமஸ் எஸ். மான்சனின் வேண்டுகோளாகிய “நாம் ஒவ்வொருவரும் [கடந்த ஏப்ரல் மாநாட்டில்] ஒவ்வொரு நாளும் மார்மன் புஸ்தகத்தை ஜெபத்துடன் படித்து சிந்திக்க வேண்டுமென்பதை பேசக் கேட்டோம்.”

ஒரு சுறுசுறுப்பான இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக, மாண்டரின் ஆசிரியரை அமர்த்தி, அவர் செய்ததைப் போலவே, கடந்த ஏப்ரல் பொது மாநாட்டுக்குப்பின், தலைவர் நெல்சன், தலைவர் மான்சனின் ஆலோசனையை எடுத்துக் கொண்டு, தன் வாழ்க்கையில் பயன்படுத்தினார். வாசிப்பது மட்டுமல்லாமல், அவர், “மார்மன் புஸ்தகம் என்றால் என்ன, அது எதை உறுதியளிக்கிறது, அது எதை ஆட்சேபிக்கிறது, அது எதை நிறைவேற்றுகிறது, அது எதைத் தெளிவு படுத்துகிறது, அது எதை வெளிப்படுத்துகிறது என பட்டியலிட்டு, நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் சிபாரிசு செய்கிறேன்” 20 என்றார்.

ரசிக்கத்தக்க வகையில் இரண்டாவது சாட்சியாக தலைவர் ஹென்றி  பி. ஐரிங்கும் தலைவர் மான்சனின் அறிவுரைக்கு தன் பதில் பற்றி பேசினார். அவர் சொன்னார், “உங்களில் அநேகர் போல தீர்க்கதரிசியின் வார்த்தைகளை எனக்கு கர்த்தரின் சத்தமாக நான் கேட்டேன். மேலும் உங்களில் அநேகர் போல, நான் அந்த வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய முடிவு செய்தேன்.” 21

நமது வாழ்க்கைக்கு நாம் இதை ஒரு உதாரணமாகப் பார்ப்போமாக.

ஒரு வாக்குத்தத்தமும் ஆசீர்வாதமும்

இந்த பொது மாநாட்டுப் போதனைகளில் உங்களுக்கான கர்த்தரின் குரலை நீங்கள் கேட்கும்போது, பின் அந்தத் தூண்டுதல்படி செயல்படும்போது, பரலோகத்தின் கரங்கள் உங்கள் மீது இருப்பதை உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கையும் உங்களைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்படும். 22

இந்த மாநாட்டின்போது, நாம் நமது தீர்க்கதரிசி தலைவர் தாமஸ் எஸ். மான்சனை நினைத்திருக்கிறோம். இந்த மேடையிலிருந்து தலைவர் மான்சன் பேசிய அவரது வார்த்தைகளோடு நிறைவு செய்கிறேன். அவர் சொன்னார், “நாம் இந்த மாநாட்டை விட்டு செல்லும்போது, பரலோகத்தின் ஆசீர்வாதங்கள் உங்கள் மீது இருக்கும்படியாக வேண்டுகிறேன். பரலோக பிதா உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறேன். இந்த மாநாட்டின் செய்திகளும் ஆவியும் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும், உங்கள் வீடுகளிலும், உங்கள் வேலையிலும், உங்கள் கூட்டங்களிலும், உங்கள் போக்கிலும் வரத்திலும் விளங்குவதாக.”

அவர் முடித்தார்: “நான் உங்களை நேசிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போதும் எப்போதும் அவரது வாக்குத்தத்தம் செய்யப்பட்ட சமாதானம் உங்களோடு இருப்பதாக.” 23

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:1பார்க்கவும்.

  2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:5–6.

  3. மார்ச்  27, 1836ல் கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டையில் நிகழ்ந்த பின்வருவனவற்றை ஜோசப் ஸ்மித் பதிவு செய்தார்:

    “பின்னர் நான் ஒரு சிறு உரையாற்றி, [பிரதான] தலைமையை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும் ஏற்றுக்கொள்ளவும், அவர்களைத் தங்கள் ஜெபங்களில் தாங்குமாறும் நான் பல குழுமங்களையும் பரிசுத்தவான்களின் கூட்டத்தையும் அழைத்தேன். அவர்கள் எழுந்திருந்து அப்படிச் செய்ய உடன்படிக்கை செய்தார்கள்.

    “நான் பின்பு குழுக்களையும் கூட்டத்தினரையும் அங்கிருந்த பன்னிரு அப்போஸ்தலர்களை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும், பூமியின் தேசங்களுக்கு விசேஷித்த சாட்சிகளாகவும், அவர்களுக்குள்ளே, திறக்க அல்லது திறக்கும்படி செய்ய ராஜ்யத்தின் திறவுகோல்களைத் தரித்திருப்பவர்களாகவும், தங்களின் ஜெபங்களில் அவர்களைத் தாங்கும்படியாகவும், கேட்டேன், அதற்கு அவர்கள் எழுந்து நின்று சம்மதித்தார்கள்.” Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 205).

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:4.

  5. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:38.

  6. தலைவர் ஹென்றி  பி. ஐரிங் ஒருமுறை சொன்னார்:

    “தீர்க்கதரிசன ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளாமலிருப்பது, நாம் நிற்கிற தரையையே மாற்றுகிறது. அது மிகுந்த ஆபத்தாகிறது. தீர்க்கதரிசன ஆலோசனைகளை எடுத்துக்கொள்ள தவறுதல், வருங்காலத்தில் உணர்த்தப்பட்ட ஆலோசனைகளை எடுத்துக்கொள்ள நமது வல்லமையைக் குறைக்கும். நோவா பேழையைக் கட்ட உதவ முடிவெடுத்த சிறந்த நேரம் அவன் முதலில் கேட்ட நேரம். அதற்குப் பிறகு அவன் கேட்ட ஒவ்வொரு நேரமும் பதிலளிக்க ஒவ்வொரு தோல்வியும், ஆவியின் உணரும் தன்மையை குறைத்திருக்கும். ஆகவே மழை வரும்வரை அவன் கேட்ட ஒவ்வொரு விண்ணப்பமும் முட்டாள்தனமாகத் தோன்றியது. பின்பு அது மிகத் தாமதமானது.

    “உணர்த்தப்பட்ட ஆலோசனையை பின்பற்ற நான் தாமதிக்க தெரிந்து கொண்ட ஒவ்வொரு சமயமும், அல்லது முடிவெடுத்ததும் விதிவிலக்கு. நான் தீமையின் வழியில் என்னை வைத்தேன் என அறிந்தேன். நான் தீர்க்கதரிசிகளின் ஆலோசனையைக் கேட்ட ஒவ்வொரு சமயமும், ஜெபத்தில் உறுதிப்பட்டதை உணர்ந்தேன், பின்பு பின்பற்றினேன், நான் பாதுகாப்புக்கு நகர்ந்து விட்டதாக கண்டேன்.” (“Finding Safety in Counsel,” Ensign, May 1997, 25).

  7. See Neil L. Andersen, “Teaching Our Children to Love the Prophets,” Ensign, Apr. 1996, 47.

  8. பாய்ட் கே. பாக்கர் ஒருமுறை சொன்னார்,

    வெளிப்படுத்தல் சம்மந்தப்பட்ட விஷயங்கள் குறித்த அநேக வாசகங்களில் தலைவர் ஹரோல்ட் பி. லீ இதுபோன்று தெரிவித்து தொடங்குவதை நான் கேட்டிருக்கிறேன். காலையின் முன் மணி வேளைகளில், இக்காரியம் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது,... வெளிப்படுத்தல் தேவைப்படுகிற பிரச்சினைகள் பற்றி புது விழிப்புடைய அதிகாலையில் வேலை செய்யும் பழக்கத்தை அவர் உருவாக்கினார்.

    கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் அவர் தெரிவிக்கும்போது கர்த்தர் ஒரு காரியத்தை அறிந்திருந்தார், தேவைக்கு மேல் அதிகம் தூங்காதீர்கள். நீங்கள் சோர்வடையாதபடிக்கு சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுங்கள். உங்கள் சரீரங்களும் மனங்களும் புத்துணர்வு பெறும்படிக்கு, சீக்கிரம் எழுந்திருங்கள். கோ.உ 88124....

    படுக்கைக்கு சீக்கிரம், எழுவதும் சீக்கிரம் என்ற கட்டளையின் வல்லமையை நான் கற்றிருக்கிறேன். நான் அழுத்தத்தில் இருக்கும்போதும் நான் நடு இரவு விழித்திருப்பதை நீங்கள் காண முடியாது. நான் அதிக சீக்கிரம் படுக்கையில் இருப்பேன், காலையின் அமைதியான நேரத்தில் எழுந்திருக்கும்போது தன் பணியை நடத்துகிற அவருக்கு நான் நெருக்கமாக இருக்க முடியும். Teach Ye Diligently [2005], 244–45).

  9. Neil L. Andersen, “You Know Enough,” Liahona, Nov. 2008, 13.

  10. Thomas S. Monson, “Until We Meet Again,” Liahona, May 2014, 115.

  11. Thomas S. Monson, “God Be with You Till We Meet Again,”Liahona, Nov. 2012, 110.

  12. யோவான் 10:4.

  13. Henry B. Eyring, “Fear Not to Do Good,” Liahona, Nov. 2017, 103.

  14. Dieter F. Uchtdorf, “A Yearning for Home,” Liahona, Nov. 2017, 22, 24.

  15. Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?Liahona, Nov. 2017, 63.

  16. Dallin H. Oaks, “The Plan and the Proclamation,” Liahona, Nov. 2017, 30.

  17. M. Russell Ballard, “The Trek Continues!Liahona, Nov. 2017, 106.

  18. Spencer J. Condie, Russell M. Nelson: Father, Surgeon, Apostle (2003), 215.

  19. Spencer J. Condie, Russell M. Nelson, 215.

  20. Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?” 61.

  21. Henry B. Eyring, “Fear Not to Do Good,” 100.

  22. கார்டன் பி. ஹிங்க்லி ஒருமுறை சொன்னார்

    கொடுக்கப்பட்ட போதனைகளை பயன்படுத்தும்போது, சோதனை வரும். இனிமேல் நாம் கொஞ்சம் அதிக தயவுடனும், கொஞ்சம் அதிக நெருக்கமாகவும் இருந்தால், அவரது போதனைகளையும், உதாரணத்தையும் பின்பற்ற அதிக உறுதியான தீர்மானத்தோடு நாம் இரட்சகருக்கு நெருக்கமாகச் சென்றால், இந்த மாநாடு அற்புதமான வெற்றியாக இருக்கும். மாறாக, நமது வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையானால், பேசியவர்கள் பெருமளவில் தோற்றிருக்கிறார்கள்.

    அந்த மாற்றங்கள் ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அளக்க முடியாதது. தீர்மானங்கள் விரைவிலேயே எடுக்கப்பட்டு, விரைவிலேயே மறக்கப்படுகின்றன. ஆனால் இன்றிலிருந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, கடந்த காலத்தில் நாம் செய்ததை விட நன்றாக செய்தால், அபோது இந்த நாட்களின் முயற்சிகள் வீணாகியிருக்காது. (“An Humble and a Contrite Heart, Ensign, Nov. 2000, 88).

  23. Thomas S. Monson, “A Word at Closing,” Liahona, May 2010, 113.