அளவிட முடியாத மதிப்பு
நமது ஆவிக்குரிய தகுதியை சோதிக்கிற பரிசுத்த ஆவியானவரின் இனிமையான கிசுகிசுப்புக்களை நாம் அடிக்கடி ருசிக்கலாம்.
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சியாரா லியோன் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, ஒரு பிணைய ஆரம்ப வகுப்பு தலைவரால் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் நான் பங்கேற்றேன். அன்பு, கிருபை மற்றும் நம்பிக்கையுடன் மரியமா நடத்தியது, அவள் நீண்ட காலமாக சபை அங்கத்தினராயிருக்கலாம் என எளிதாக எண்ணவைத்தது. ஆயினும் மரியமா சமீபத்தில் மனமாறியவராயிருந்தார்.
அவளுடைய இளைய சகோதரி சபையில் சேர்ந்து, அவளுடன் சபை வகுப்பில் பங்கேற்க மரியமாவை அழைத்தாள். செய்தியால் மரியமா ஆழமாக உணர்த்தப்பட்டாள். பாடம் கற்புடமை நியாயப் பிரமாணத்தைப்பற்றியிருந்தது. அவளுக்கு அதிகமாகப் போதிக்கும்படி ஊழியக்காரர்களை அவள் கேட்டுக்கொண்டு, விரைவிலேயே தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தைப்பற்றி ஒரு சாட்சியை அவள் பெற்றாள். 2014ல் அவள் ஞானஸ்நானம் பெற்று, கடந்த மாதத்தில் அவளுடைய மகள் ஞானஸ்நானம் பெற்றாள். நினைத்துப் பாருங்கள், மரியமாவை மனமாறுவதற்கு நடத்திய இரண்டு அடிப்படை போதனைகள் கற்புடமை நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துமே. இந்த இரண்டு சிறப்பு குறிப்புகளை ஒவ்வாததாக, காலங்கடந்ததாக அல்லது சௌகர்யமற்றதாக வழக்கமாக உலகம் பார்க்கிறது. ஆனால் அவள் வெளிச்சத்திற்கு கவரப்பட்ட ஒரு விட்டில் பூச்சி, போலவென மரியமா சாட்சியளிக்கிறாள். “நான் சுவிசேஷத்தைக் கண்டபோது நான் என்னையே கண்டேன்” என அவள் சொன்னாள். தெய்வீக கொள்கைகள் மூலமாக அவளுடைய தகுதியை அவள் கண்டுபிடித்தாள். தேவனுடைய குமாரத்தியாக அவளுடைய மதிப்பு பரிசுத்த ஆவியின் மூலமாக அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
இந்தியாவிலிருந்து சிங் சகோதரிகளை இப்பொழுது நாம் சந்திக்கலாம். சபையில் சேர்ந்த ஐந்து சகோதரிகளில் முதலாவதான வலது ஓரத்திலிருக்கும் ரேனு இந்த சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறாள்.
“சபையைப்பற்றி விசாரிக்க நான் ஆரம்பிப்பதற்கு முன்பு, நான் மிக விசேஷித்தவள் என்பதை உண்மையில் உணராதிருந்தேன். அநேக மக்களில் நானும் ஒருத்தி, ஒரு தனிப்பட்டவளாக எனக்கு எந்த மதிப்பிருக்கிறதென என்னுடைய சமுதாயமும் கலாச்சாரமும் எனக்குப் போதிக்கவில்லை. நான் சுவிசேஷத்தைக் கற்று, நான் நமது பரலோக பிதாவின் ஒரு குமாரத்தி என அறிந்தபோது அது என்னை மாற்றியது. திடீரென நான் மிக விசேஷித்தவளென உணர்ந்தேன், மதிப்புடனும் ஒரு நோக்கத்துடனும் தேவன் என்னை உண்மையாகவே உருவாக்கி எனது ஆத்துமாவையும் எனது வாழ்க்கையையும் சிருஷ்டித்திருக்கிறார்.
“எனது வாழ்க்கையில் சுவிசேஷத்தைப் பெறுவதற்கு முன்பு நான் விசேஷமானவளாயிருந்தேன் என மற்றவர்களுக்கு நான் எப்போதும் நிரூபிக்க முயற்சித்தேன். ஆனால் நான் தேவனின் குமாரத்தி என்ற சத்தியத்தை நான் அறிந்தபோது நான் எதையும் யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை. நான் விசேஷித்தவளென நான் அறிவேன். . . . நீங்கள் ஒன்றுமில்லாதவர்களென எப்போதுமே நினைக்காதிருங்கள்.”
“ஒரு ஆத்துமாவின் தகுதி தேவனைப் போலாகுவதற்கான அதன் திறமைகளென” 1 இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டியபோது தலைவர் தாமஸ் எஸ். மான்சன் இதைச் சரியாகச் சொன்னார்.
இதே சத்தியத்தைப் புரிந்துகொண்ட மற்றொரு இளம் பெண்ணை சந்திக்க சமீபத்தில் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். அவளுடைய பெயர் டையானா. சால்ட் லேக் சிட்டியின் ஆரம்ப குழந்தைகள் மருத்துவமனையில் நான் அவளை சந்தித்தேன். அவளுக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டபோது அவள் உயர்நிலைப்பள்ளி இளம் மாணவியாக இருந்தாள். சில வாரங்களுக்கு முன், மரித்துப்போவதற்கு முன் 18 மாதங்களாக அவள் துணிவுடன் போராடினாள். டையானா முழு ஒளியிலும் அன்பிலுமிருந்தாள். அவளுடைய தொற்றிக்கொள்ளும் புன்னகைக்கு அவள் பேர்போனவள், அவளுடைய இரட்டை வெற்றிச் சின்னம் அவளுடைய உரிமைச் சின்னம். “டையானா, நீ ஏன் இப்படி?” என மற்றவர்கள் கேட்கும்போது “நான் ஏன் அப்படி இருக்கக்கூடாது?” என்பது அவளது பதிலாயிருந்தது. அவள் மிகவும் நேசித்த இரட்சகரைப்போலாக அவள் நாடினாள். எங்களுடைய சந்திப்புகளின்போது, டையானா தனது தெய்வீகத் தகுதியைப் புரிந்துகொண்டாளென நான் அறிந்துகொண்டேன். அவள் தேவனின் குமாரத்தி என அறிந்துகொண்டது அவள் செய்த உறுதியான வழியில், அவளுடைய அடக்குகிற சோதனைகளை மேற்கொள்ள அவளுக்கு சமாதானத்தையும் துணிவையும் கொடுத்தது.
நமது தெய்வீக தகுதியை பரிசுத்த ஆவி நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உறுதி செய்யும் என்பதை மரியமாவும், ரேனுவும் டையானவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். நீங்கள் தேவனின் குமாரத்தி என்பதை உண்மையில் அறிந்துகொள்வது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்து ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்கிற சேவையில் உங்களை வழிநடத்தும். இந்த மகிமையான வார்த்தைகளை தலைவர் ஸ்பென்சர் டபுள்யு. கிம்பல் இவ்வாறாக விவரிக்கிறார்.
“தேவன் உங்கள் பிதா. அவர் உங்களை நேசிக்கிறார். பரலோகத்திலுள்ள அவரும் உங்கள் தாயும் அளவிடமுடியாததற்கும் அப்பால் உங்களை மதிக்கிறார்கள். ... நீங்கள் தனித்துவமானவர்கள். நித்திய ஜீவனைக் கோரக்கூடிய நித்திய புத்திசாலித்தனத்தில் செய்யப்பட்ட நீங்கள் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள்.
“ஒரு தனிப்பட்டவராக உங்கள் தகுதியைப்பற்றி உங்கள் மனதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நித்திய முன்னேற்றமும் தெய்வீகத்திற்கு சாத்தியமுமான உங்களுடைய முழு தகுதியை அடைய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதே சுவிசேஷத் திட்டத்தின் முழு எண்ணம்.” 2
இரண்டு முக்கியமான வார்த்தைகளுக்கிடையிலுள்ள வித்தியாசத்திற்கான தேவையை நான் சுட்டிக்காட்டுகிறேன். தகுதி, தகுதியாயிருத்தல். அவைகள் ஒன்றுபோலில்லை. ஆவிக்குரிய தகுதி என்பது உலகம் நம்மை மதிப்பிடுதலில்லை, பரலோக பிதா நம்மை மதிப்பிடுகிற வழியில் நம்மையே நாம் மதிப்பிடுவதாகும். இந்த பூமிக்கு நாம் வருவதற்கு முன்பே நமது தகுதி தீர்மானிக்கப்பட்டது. “தேவனின் அன்பு அளவிடமுடியாதது, அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.” 3
மாறாக, கீழ்ப்படிதலின் மூலமாக தகுதியாயிருத்தல் அடையப்படுகிறது. நாம் பாவம் செய்தால் நாம் தகுதிக் குறைவுள்ளவர்களாகிறோம், ஆனால் நாம் எப்போதுமே தகுதிக் குறைவுள்ளவர்களில்லை, நாம் தொடர்ந்து மனந்திரும்பி நமது தகுதியின் முழுமையுடன் இயேசுவைப்போலிருக்க முயற்சிக்கிறோம். தலைவர் பிரிகாம் யங் போதித்ததைப்போல, “இப்போது பூமியிலிருக்கிற, மிகத் தரந்தாழ்ந்த ஆவி... உலகங்களுக்கு தகுதியானது.” 4 எதுவும் பொருட்டின்றி நமது பரலோக பிதாவின் கண்களில் நாம் எப்போதும் தகுதியாயிருக்கிறோம்.
இந்த அற்புதமான சத்தியமிருப்பினும், நம்மைப்பற்றி எதிர்மறையான நினைவுகளுடன் அல்லது உணர்வுகளுடன் காலங்காலமாக நம்மில் எவ்வளவுபேர் போராடுகிறோம்? நான் போராடுகிறேன். இது ஒரு எளிய பொறி. விசேஷமாக நமது சொந்த தெய்வீக தன்மையையும் நோக்கத்தையும்பற்றிய தவறான கருத்துக்கு இது வரும்போது, எல்லா பொய்களுக்கும் சாத்தானே தகப்பனாயிருக்கிறான். நம்மைப்பற்றி குறைவாக நினைத்துக்கொண்டிருப்பது நமக்கு நல்லதல்ல. மாறாக நம்மை பின்னுக்குத் தள்ளுகிறது. வழக்கமாக நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டதைப்போல “உங்களுடைய சம்மதமில்லாமல் யாராலும் உங்களை குறைவாக உணரவைக்கமுடியாது.” 5 நம்முடைய மிகமோசமானதை யாரோ ஒருவரின் சிறப்பானதோடு ஒப்பிடுவதை நிறுத்தலாம். “ஒப்பிடுதல் மகிழ்ச்சியின் திருடன்.” 6
மாறாக, நம்மிடம் நற்குண சிந்தனைகளிருக்கும்போது நம்பிக்கையுடன், உண்மையில் நாம் யாரென்று அறிந்துகொள்ளும் நம்பிக்கையுடனும் அவர் நம்மை ஆசீர்வதிப்பாரென்று கர்த்தர் நமக்கு உறுதியளிக்கிறார். அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க இதைவிட மிகமுக்கியமான நேரம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை. அவர் சொன்னார், “உனது சிந்தனைகளை நற்குணம் அலங்கரிப்பதாக. பின்னர் உனது தன்னம்பிக்கை தேவனின் பிரசன்னத்தில் பெலப்படும். பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய நிரந்தர சிநேகிதராயிருப்பார்.” 7
இந்த கூடுதலான சத்தியத்தை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு கர்த்தர் வெளிப்படுத்தினார், “தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன், தேவனுக்கு அதை கணக்கொப்புவிப்பானாக, ஏற்றுக்கொள்ள தகுதியாக இருக்கும்பொருட்டு அவன் தேவனிடத்தில் கணக்கொப்புவித்தானென அவன் களிகூர்வானாக.” 8 இந்த வசனம் விளக்குகிறதைப்போல பரிசுத்த ஆவியை நாம் உணரும்போது, நாம் உணருவது நமது நேசமுள்ள பரலோக பிதாவிடமிருந்து வருகிறதென்பதை நாம் அடையாளம் காண்கிறோம். நம்மை ஆசீர்வதிப்பதற்காக நாம் ஏற்றுக்கொண்டு அவரை துதிக்கிறோம். பின்னர் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக நாம் எண்ணப்படுவதற்காக நாம் களிகூர்கிறோம்.
ஒரு நாள் காலை நீங்கள் வேதங்களைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் படித்துக்கொண்டிருப்பது சத்தியமென பரிசுத்த ஆவி மிக மென்மையாக உங்களிடம் பேசுகிறாரென கற்பனை செய்யுங்கள். நீங்கள் அவருடைய அன்பை உணர்ந்தீர்களென்றும் பெறுவதற்கு தகுதியுள்ளவராயிருந்தீர்களென்றும் பரிசுத்த ஆவியை நீங்கள் அடையாளம் கண்டு சந்தோஷப்படுவீர்களா?
தாய்மார்களே, அவனுடைய படுக்கை நேர ஜெபத்தை அவன் செய்யும்போது உங்கள் நான்கு வயது மகனுடன் நீங்கள் முழங்காலில் நிற்கலாம். நீங்கள் அதைக் கேட்கும்போது உங்கள்மேல் ஒரு உணர்வு வழிகிறது. நீங்கள் அன்பையும் சமாதானத்தையும் உணருகிறீர்கள். உணர்வுகள் சுருக்கமாயிருக்கிறது, ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் பெறுவதற்கு தகுதியுள்ளவராக எண்ணப்படுகிறீர்களென நீங்கள் அடையாளம் காண்கிறீர்கள். நாம் எப்போதாவது, இல்லையென்றால் எப்போதுமே நமது வாழ்க்கையில் மிக அதிக வெளிப்படுத்தல்களைப் பெறுகிறோம், ஆனால் நமது ஆவிக்குரிய தகுதியின் உண்மையை சரிபார்த்து பரிசுத்த ஆவியின் இனிமையான மெல்லிய குரலை நாம் அடிக்கடி ருசிக்கிறோம்.
கர்த்தர் பின்வருமாறு சொல்லியபோது நமது தகுதிக்கும் அவருடைய மகத்தான பாவநிவர்த்தியின் பலிக்கும் இடையிலுள்ள உறவை அவர் விவரிக்கிறார்.
“ஆத்துமாக்களின் மதிப்பு தேவனின் பார்வையில் பெரிதாயிருக்கிறதென்பதை நினைவுகூருங்கள்,
“ஏனெனில், இதோ, உனது மீட்பரான கர்த்தர் மாம்சத்திலே மரணமடைந்து பாடுபட்டார், ஆகவே, சகல மனுஷரும் மனந்திரும்பி அவரிடத்தில் வரும்படிக்கு, அவர் சகல மனுஷர்களின் வேதனைக்காகப் பாடுபட்டார்.” 9
சகோதரிகளே, அவர் நமக்காக செய்தவைகளால் “அன்பான கட்டுக்களால் நாம் அவரோடு கட்டப்பட்டிருக்கிறோம்.” 10 அவர் சொன்னார், “நான் சிலுவையில் உயர்த்தப்படவும், நான் சிலுவையின்மேல் உயர்த்தப்பட்ட பின்பு நான் எல்லா மனுஷரையும் என்னிடத்தில் இழுக்கும்படியாகவும் பிதா என்னை அனுப்பினார்.” 11
நமது இரட்சகரோடு இந்த கட்டுக்களின் இணைப்பைப்பற்றி பென்யமீன் இராஜாவும் விவரிக்கிறான். , “இதோ, தன் ஜனத்தின் துன்மார்க்கம் மற்றும் அருவருப்புகளுக்காக மரணத்திற்குட்படாமல் மனுஷன் படக்கூடிய துன்பங்களைக் காட்டிலும், அதிகமாய் அவர் சோதனைகளாலும், வேதனைகளாலும், பசியாலும், தாகத்தாலும், சோர்வினாலும் பாடனுபவிப்பார், தன் ஜனத்தினுடைய துன்மார்க்கத்தினாலும், அருவருப்புகளாலும் அவர் மிகவும் வியாகுலப்படுவார். அதன் நிமித்தம் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் வெளிவரும்.” 12 அந்த பாடுகளும் அந்த பாடுகளின் விளைவுகளும் அன்புடனும் நன்றியுணர்வுடனும் நம் இருதயங்களை நிரப்புகிறது. “உலகத்தை நோக்கி நம்மை இழுக்கிற தடங்கல்களை நாம் நீக்கி, அவரை நாட நமது சுயாதீனத்தை செயல்படுத்தும்போது, அவரை நோக்கி நம்மை இழுக்கிற ஒரு சிலஸ்டியல் சக்திக்கு நமது இருதயங்களை நாம் திறக்கிறோம்” 13 என மூப்பர் கோயில்லிகர் போதித்தார். இரட்சகர் மீதும், அவர் நமக்காக செய்தவற்றின் மீதும் நாம் உணர்கிற அன்பு, பெலவீனத்திற்கும், சந்தேகங்களுக்கும் அல்லது கெட்ட பழக்கங்களுக்கும் நாம் கொடுக்கிறதைவிட அதிகமாயிருக்கிறது, பின்னர் நமது வாழ்க்கையின் பாடுகளுக்குக் காரணமான காரியங்களை மேற்கொள்ள அவர் நமக்கு உதவுவார். நம்முள்ளிருந்தே அவர் நம்மை இரட்சிக்கிறார்.
நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இரட்சகரிடத்தில் நமக்குள்ள விசுவாசத்தையும் நம்பிக்கையையும்விட உலகத்தின் இழுப்பு பெலமுள்ளதாயிருந்தால், ஒவ்வொரு சமயமும் உலகத்தின் இழுப்பு இருந்துகொண்டேயிருக்கும். இரட்சகரிடத்தில் பற்றிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, நமது எதிர்மறையான சிந்தனைகளுக்கும் நமது தகுதிக்கான சந்தேகங்களுக்கும் கவனம் செலுத்த தீர்மானித்தால், பரிசுத்த ஆவியின் உணர்த்துதல்களை உணர அதிகக் கஷ்டமாகிறது.
சகோதரிகளே, நாம் யாரென்பதைப்பற்றி நாம் குழப்பமடையாதிருப்போமாக! நமது தெய்வீக அடையாளத்தை நினைக்கவும் தழுவவும் ஆவிக்குரிய முயற்சிகளை செய்வதைவிட ஆவிக்குரியதில் செயலிழந்திருப்பது வழக்கமாக எளிதாயிருக்கிறது, இந்த பிற்காலங்களில் அந்த இடங்கொடுத்தல் நம்மால் முடியாதது. சகோதரிகளாக நாம் “கிறிஸ்துவில் விசுவாசமாயிருப்போமாக; . . . கிறிஸ்து [நம்மை] உயர்த்துவாராக, அவருடைய பாடுகளும் மரணமும். . . . அவருடைய இரக்கமும் நீடிய சாந்தமும், அவருடைய மகிமை, நித்திய ஜீவன் ஆகியவைகளின் நம்பிக்கையும் [நமது மனங்களில்] என்றென்றும் தங்குவதாக.” 14 உயர்வான இடத்துக்கு நம்மை இரட்சகர் உயர்த்துவது போல, நாம் யார் என்பது மட்டுமின்றி, ஆனால் நாம் எப்போதும் கற்பனை செய்திராத அளவுக்கு அவருக்கு நெருக்கமாயிருக்கிறோம் என்பதை நாம் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் ஆமென்.