2010–2019
அத்தியாவசியமான சத்தியங்கள் – செயல்பட நமது தேவை
அக்டோபர் 2017


2:3

அத்தியாவசியமான சத்தியங்கள் – செயல்பட நமது தேவை

இந்த வாழ்க்கையிலும் நமது மேன்மையடைதலிலும் முதல் தரிசனமும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் நமது மகிழ்ச்சிக்குத் தேவையான அறிவையும் சத்தியத்தையும் கொண்டு வந்தனர்.

எனக்கு சுமார் ஏழு வயதாயிருக்கும்போது, நான் என்னுடைய தாயைக் கேட்டேன், “நீங்களும் நானும் எப்போது மரித்து பரலோகத்திற்குப் போவோம், அங்கேயும் நீங்கள் என் தாயாயிருப்பீர்களா?” அவர் இத்தகைய கேள்வியை எதிர்பார்க்கவில்லை. பதிலளிக்க அவருக்குத் தெரிந்த சிறப்பானதில் அவர் சொன்னார், “இல்லை, பரலோகத்தில் நாம் சகோதர சகோதரிகளாயிருப்போம். நான் உன் தாயாயிருக்கமாட்டேன்.” நான் எதிர்பார்த்த பதில் அது இல்லை என நான் நம்பினேன்.

அந்த சுருக்கமான உரையாடலுக்குப் பின் சிலநாட்கள் கழித்து எங்களுடைய வீட்டின் வாசலுக்கு இரண்டு வாலிபர்கள் வந்தடைந்தார்கள். என்னுடைய தந்தை அவர்களை உள்ளே அனுமதித்தது ஆச்சரியம். அவர்கள், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஊழியக்காரர்கள் என அவர்களைப்பற்றிச் சொன்னார்கள்.

அவர்களை இப்படியாக நாங்கள் அழைக்க அறிந்துகொண்ட இந்த மூப்பர்கள், எங்கள் குடும்பத்திற்கு போதிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தபோது எங்களின் சந்தோஷத்தையும் ஆர்வத்தையும் நான் தெளிவாக நினைவுகூருகிறேன். எந்த சபை உண்மையானதென்று தேவனைக் கேட்க ஒரு வாலிபன் ஒரு தோப்பிற்குள் சென்றானென்றும், அங்கே அவன் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பார்த்தானென்றும் எங்களுக்கு அவர்கள் சொன்னார்கள். 1 அந்த தரிசனத்தின் ஒரு படத்தை மூப்பர்கள் எங்களுக்குக் காட்டினார்கள், நான் அதைப் பார்த்தபோது, ஜோசப் ஸ்மித் உண்மையிலேயே பிதாவாகிய தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் கண்டாரென்று நான் அறிந்தேன். இந்த தரிசனத்தால் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை மீண்டும் பூமியிலிருக்கிறது என மூப்பர்கள் சொன்னார்கள். 2

முதல் தரிசனம்

தேவனின் சந்தோஷத்தின் திட்டத்தைப்பற்றியும் மூப்பர்கள் எங்களுக்குப் போதித்து, மதத்தைப்பற்றிய எங்கள் குடும்பத்தினரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள். உண்மையில் இந்த வாழ்க்கைக்குப் பின்னரும், தகப்பனாக, தாயாக, குமாரர்களாக, குமாரத்திகளாக குடும்பங்கள் ஒன்று சேர்ந்திருக்கலாமென அவர்கள் எங்களுக்குப் போதித்தார்கள்.

எங்கள் குடும்பம் ஞானஸ்நானம் பெற்றோம். பழைய பழக்கங்களை மாற்றும் பாதை, பாரம்பரியங்களை விட்டுவிடுதல், சபையின் ஊக்கமுள்ள அங்கத்தினர்களாகுதல் சிலநேரங்களில் கடினமாக இருந்தது. ஆனால் தேவனின் இரக்கத்தால், அன்பால், அநேக தலைவர்களால், அங்கத்தினர்களால் முதல் சவாலான ஆண்டை நாங்கள் முடித்தோம்.

ஏற்கனவே சபையில் சேர்ந்த லட்சக்கணக்கானோரும், அப்படியே ஒவ்வொரு வாரமும் மனமாறி ஞானஸ்நானம் பெறுகிற அநேகரும் முதல் தரிசனத்தைப்பற்றிய ஒரு சாட்சியைப பெற்றார்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் எளிய சத்தியங்களின்படி வாழ நாம் முயற்சிக்கும்போது நம் ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவர் மீண்டும் மீண்டும் இந்த சாட்சியைக் கொடுப்பார்.

இந்த வாழ்க்கையில் நமது சந்தோஷத்திற்கும் தேவனின் பிரசன்னத்தில் நமது மேன்மையடைதலுக்கும் அத்தியாவசியமான கூடுதலான அறிவையும் சத்தியத்தையும் முதல் தரிசனமும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் கொண்டுவந்தார்கள். நாம் பெற்ற மூன்று சத்தியங்களை நான் குறிப்பிடுவேன், ஒரு வாலிபன் சிரத்தையோடு முழங்கால் படியிட்டதால் அதன்படி நாம் செயல்படவேண்டும்.

நம்மை நடத்தவும் வழிகாட்டவும் தீர்க்கதரிசிகளை தேவன் அழைக்கிறார்

நமக்கு அறிவுறுத்த, வழிநடத்த, எச்சரிக்க நம்மை நடத்த, தீர்க்கதரிசிகளையும், 3 ஞானதிருஷ்டிக்காரர்களையும், வெளிப்படுத்துபவர்களையும் தேவன் அழைக்கிறாரென்பது முதல் தரிசனத்திலிருந்தும் ஜோசப் ஸ்மித்திடமிருந்தும் நாம் அறிந்துகொள்கிற ஒரு அத்தியாவசியமான சத்தியம். 4 இந்த மனிதர்கள் கர்த்தரின் நாமத்தில் பேசவும் செயல்படவும் அதிகாரத்துடன், பூமியில் தேவனின் கருத்துக்களை வெளியிடக்கூடியவர்களாய்5 இருக்கிறார்கள்6. அவர்களுடைய ஆலோசனைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதில் இந்த பூமியில் நமது பயணத்தில் நாம் பாதுகாக்கப்பட்டு தெரிந்தெடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

ஒரு வாலிபனாக, திருமணமாகாதவனாக, ஊழியம் செய்து திரும்பியவனாக பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, ஆலய சதுக்கத்தின் டாபர்னாக்களில் பொது மாநாட்டின் ஆசாரியத்துவக் கூட்டத்தில் நான் பங்கேற்றேன். திருமணத்தை மிகமுக்கியமாக எடுத்து, அதற்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்குமாறு ஊழியம் செய்து திரும்பிய ஒவ்வொருவரையும் சபையின் அப்போதைய தலைவரான எஸ்றா டாப்ட் பென்சன் வலியுறுத்தினார். 7 கூட்டத்திற்குப் பின் நான் மனந்திரும்ப அழைக்கப்படிருக்கிறேன் என்றும் தீர்க்கதரிசியின் ஆலோசனையின்படி நடக்கவேண்டும் என்றும் நான் அறிந்தேன்.

அப்படியாக, ஒரு மனைவியைக் கண்டுபிடிக்க என்னுடைய சொந்த நாடான பிரேசிலுக்குப் போக நான் தீர்மானித்தேன். இரண்டு மாத பயிற்சிக்கு பிரேசிலுக்கு புறப்படுவதற்கு முன்பு நான் என் தாயையும் நண்பர்களையும் தொலைபேசியில் அழைத்தேன், தகுதியுள்ள மனைவியாக இருக்கக்கூடிய 10 இளம் பெண்களின் பட்டியலை அவர்கள் கொடுத்தார்கள்.

பிரேசிலில் இருந்தபோது அதிக தியானத்திற்கும் ஜெபத்திற்கும் பின், பட்டியலிலுள்ள இளம்பெண்களில் ஒருத்தியை நான் சந்தித்து, காதலித்து, நிச்சயம் செய்து, திருமணத்திற்கான ஒரு நாளைக் குறித்தேன். யூட்டாவின் ப்ரோவோவில், காதலித்து நிச்சயம் செய்வதற்கு மாணவர்களுக்கு நேரமிருக்காது, ஆனால் பிரேசிலில் அது மிகவேகமாக நடந்தது.

சில மாதங்களுக்குப் பின்னர், எலைனை நான் திருமணம் செய்தேன். அவள் என் வாழ்க்கையின் அன்பு, ஆசீர்வாதத்தின் தெரிந்தெடுப்பு.

ஒவ்வொருவரும் ஒரு பட்டியலை உண்டாக்கவேண்டுமென நான் ஆலோசனையளிக்கவில்லை, ஆனால் நாம் எப்போதும் நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சின்படி நடக்கவேண்டுமென நான் ஆலோசனைக்கும் மேலாக ஆலோசனையளிக்கிறேன்.

தலைவர் தாமஸ் எஸ். மான்சனின் படம்

இன்று, தேவனின் தீர்க்கதரிசி தலைவர் தாமஸ் எஸ். மான்சன். துல்லியமாக அவரது ஆலோசனையைப் பின்பற்றுவதால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.

தேவனின் உண்மையான தன்மையின் அறிவு

முதல் தரிசனத்தாலும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தாலும் நாம் அறிந்துகொள்ளும் மற்றொரு சத்தியம், தேவனின் உண்மையான தன்மை. நம்மைப்போலவே தொட்டுணரத்தக்க சரீரத்துடனும் மாம்சத்துடனும் தேவனிருக்கிறாரென்றும், 8 நாம் புரிந்துகொள்ளமுடிகிற, பழங்காலங்களிலும் இந்த பிற்காலங்களிலுமுள்ள தீர்க்கதரிசிகளுக்கு அவரையும் அவருடைய குமாரனையும் காண்பித்து வெளிப்படுத்திய ஒரு உண்மையான தேவனை நாம் தொழுதுகொள்ள முடிகிறதென்பதில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் கற்பனை செய்துபாருங்கள். 9 நமது ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிற தேவனாய் அவரிருக்கிறார், 10 மேலே வானத்திலிருந்து நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிற ஒரு தேவனாய், 11 அவர் நம்முடைய ஆவிக்குரிய, மாம்சத்துக்குரிய நன்மைகளில் அக்கறை கொண்டவராய், அவரைப் பின்பற்றவும், கட்டாயமில்லாமல் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் நமக்கே சுயாதீனம் கொடுத்த தேவனாய், 12 நமக்கு ஆசீர்வாதங்களைக் கொடுத்து, நாம் வளர்ந்து அவரைப்போலாகும்படியாக சோதனைகளை எதிர்கொள்ள நம்மை அனுமதிக்கிற ஒரு தேவனாயிருக்கிறார்.

இந்த வாழ்க்கையிலும் நித்தியத்திலும் நாம் சந்தோஷத்தை அனுபவிக்க முடிகிறதின் மூலமாக ஒரு திட்டத்தைக் கொடுத்த அவர் ஒரு நேசமுள்ள தேவன்.

இயேசு கிறிஸ்து நமது இரட்சகர்

முதல் தரிசனத்திலிருந்தும், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திலிருந்தும் உண்மையையும், நமது மதத்தின் மூலைக்கல்லாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஊழியத்தையும் நாம் பெற்றுக்கொண்டோம்.

உலகத்துக்கு மரணம் அறிமுகப்படுத்தப்பட்டதால், நிச்சயமாய் இப்போது நாம் வாழ்வதைப்போல ஒரு நாள் நாம் மரிப்போம். மரணத்தின் பாதிப்புகளில் ஒன்று நமது சரீர உடம்பின் நிரந்தர இழப்பு, அதைத் திரும்பப்பெற நம்மால் எதையும் செய்யமுடியாது. கூடுதலாக, இங்கே பூமியில் நமது பயணத்தின்போது நாம் பாவம் செய்வதால் நமது பரலோக பிதாவின் பிரசன்னத்திற்கு நம்மால் ஒருபோதும் திரும்பமுடியாது.

தேவனின் பிரசன்னத்திற்கு மறுக்கப்படுவதின் விளைவுகளையும், ஒருபோதும் மீண்டும் சரீரமில்லாதிருத்தலையும் உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா?

மரணத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்க ஒரு இரட்சகரும் மீட்பரும் தேவைப்படுகிறார். பரலோக பிதாவின் வழிநடத்துதலின் கீழ், இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து பாடுபட்டு, சிலுவையில் மரித்து, சிரத்தையான மனந்திரும்புதலுடனும் பரிசுத்த உடன்படிக்கைகளை செய்து கைக்கொள்ளுவதுடனும் மீண்டும் தேவனின் பிரசன்னத்திலிருக்க, நாமும் உயிர்த்தெழும்படியாக அவர் உயிர்த்தெழுந்தார்

“இந்த அஞ்சத்தக்க கொடியவனின் பிடியிலிருந்து, நாம் தப்பித்துக்கொள்ளும் வழியை ஆயத்தம் செய்த, தேவனுடைய நன்மை எவ்வளவு மகத்தானதாயிருக்கின்றது, ஆம், மரணமும், பாதாளமும் ஆகிய கொடியவனை நான் சரீர மரணம் என்றும் ஆவியின் மரணம் என்றும் அழைக்கிறேன்”13 என யாக்கோபு விவரித்தான்.

கல்லறையில் இயேசுவும் மரியாளும்

இயேசு வாக்கள்ளிக்கப்பட்ட மேசியா, நியாயப்பிரமாணிக்கர், இஸ்ரவேலின் பரிசுத்தர், நமது கர்த்தர், நமது இரட்சகர், நமது மீட்பர், நமது இராஜா, நமது சகலமுமானவர்.

இந்த அத்தியாவசிய சத்தியங்கள் மற்றும் அறிவின்படி செயல்படவும், தேவனிடமும் அவரது நேச குமாரனிடமும் நமது கீழ்ப்படிதலைக் கொடுக்கவும் நாம் தொடருவோமாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.