2010–2019
தேவனோடிருந்து விரிசலைச் சரிசெய்தல்
அக்டோபர் 2017


2:3

தேவனோடிருந்து விரிசலைச் சரிசெய்தல்

பிதாவுடனும் ஒருவருக்கொருவருடனும் அன்பின் ஐக்கியத்திற்குள் நம்மைக் கொண்டுவர கிறிஸ்துவுக்கு வல்லமையிருக்கிறது.

பரலோக பிதா பற்றிய நமது அறிவு மற்றும் அவருக்குக் கீழ்ப்படிதலை நாம் தொடர்ந்து ஆழமாக்கவேண்டும். அவருடன் நமது உறவு நித்தியமானது. இது பரலோக பிதாவுடன் நமது நித்திய, மாறாத உறவு. நாம் அவரது நேசமுள்ள பிள்ளைகள், அது மாறாதது. அவரண்டை வரவும், அப்படியாக இந்த வாழ்க்கையிலும் வரவிருக்கிற உலகத்திலும் அவர் நமக்குக் கொடுக்க காத்திருக்கிற ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கும்படிக்கும் அவரது அழைப்பை நாம் எவ்வாறு முழுஇருதயத்தோடு ஏற்றுக்கொள்வோம்?

கர்த்தர் அக்கால இஸ்ரவேலுக்குச் சொன்னார், நமக்கும் சொல்லுகிறார், “ஆம், அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் காருண்யத்தால் உன்னை இழுத்துக் கொள்கிறேன்.” 1 தேவனைப்போலப் பேசி அவரும் நமக்குச் சொல்லுகிறார், “நீ என்னில் வாசம் பண்ணுவாய். நான் உன்னில் வாசம் பண்ணுவேன், ஆகவே என்னோடு நட ,” 2 என பிதா நமக்குச் சொல்லுகிறார். அவரில் வாசமாயிருக்கவும் அவரோடு நடக்கவும் போதுமானபடி அவரை நாம் நம்புவோமா?

நாம் கற்கவும் வளரவும் இந்தப் பூமியில் இருக்கிறோம், மிக முக்கிய கற்றலும் வளர்ச்சியும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடனான உடன்படிக்கை தொடர்பிலிருந்து வரும். அவர்களோடு நமது விசுவாசமிக்க உறவிலிருந்து தெய்வீக அறிவும், அன்பும், வல்லமையும், சேவை செய்ய திறமையும் வருகிறது.

“தேவன் தம்மைப்பற்றி வெளிப்படுத்தியுள்ள அனைத்தையும் கற்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.” 3 பிதாவாகிய தேவன், தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமது வளர்ச்சிக்காக பூமியை சிருஷ்டிக்க அனுப்பினார், நமது இரட்சிப்புக்காக நீதியின் நிபந்தனைகளுக்காக கிரயம் செலுத்த பரலோக பிதா தன் குமாரனைக் கொடுத்தார், நமது ஆசீர்வாதங்களுக்காக பிதாவின் ஆசாரியத்துவ வல்லமையும்குமாரனின் உண்மையான சபையும் தேவையான நியமங்களுடன் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டன என நாம் அறிய வேண்டும். நமது சந்தோஷத்துக்காகவும் வளர்ச்சிக்காகவும் அவர்களின் ஆயத்தங்களின் ஊடே இருக்கிற அன்பின் ஆழத்தை உங்களால் உணர முடிகிறதா? நாம் சுவிசேஷ நியாயப்பிரமாணங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிந்து நித்திய ஜீவனைப் பெற்று அப்படியாக தேவன் இருப்பது போல ஆவது, பரலோக பிதாவின் இரட்சிப்பின் திட்டம் என நாம் அறிய வேண்டும். 4 அதுவே பரலோக பிதா நமக்குக் கொடுக்கிற உண்மையான நீடித்த மகிழ்ச்சியாகும். வேறு எந்த உண்மையான நீடித்த மகிழ்ச்சியும் இல்லை.

மகிழ்ச்சியின் இந்த வழியிலிருந்து நமது சவால்கள் நம்மை புறம்பே இழுக்கலாம். சோதனைகள் நம்மை முழங்காலில் நிற்கச் செய்வதற்கு மாறாக, பாதை மாறத் துரத்தினால் நாம் தேவனோடு நமது நம்பிக்கையான தொடர்பை இழக்கக் கூடும்.

இந்த எளிய ஈரடி கொஞ்சம் முன்னுரிமையை ஆய்வு செய்ய நம்மைக் கெஞ்சுகிறது:

சில முக்கியம்; சில முக்கியமில்லை.

ஒரு சில நீடிக்கின்றன, ஆனால் அநேகக் காரியங்கள் நீடிக்காது. 5

சகோதரிகளே, உங்களுக்கு எது பொருட்டாகிறது? உங்களுக்கு எது நீடித்ததாயிருக்கிறது? பிதாவுக்கு நீடித்த மதிப்பு மிக்க காரியம் நாம் அவரைப்பற்றி கற்று நம்மைத் தாழ்த்தி, பூலோக அனுபவங்கள் மூலமாக அவருக்கு கீழ்ப்படிவதில் விருத்தியடைய வேண்டும் என்பதுதான். அவர் நமது சுயநலத்தை சேவையாகவும், நமது பயத்தை விசுவாசமாகவும் நாம் மாற்ற விரும்புகிறார். இந்த நீடித்த காரியங்கள் நம்மை ஆழமாக சோதிக்க முடியும்.

அப்போதுதான் நமது அநித்திய தடங்கல்களுடன், நேசிப்பது கடினமாக இருக்கும்போது நேசிக்கவும், சேவை செய்வது அசௌரியமாக இருக்கும்போது சேவை செய்யவும், மன்னித்தல் கடினமாக இருக்கும்போது மன்னிக்கவும் பிதா நம்மைக் கேட்கிறார். எப்படி? நாம் இதை எப்படிச் செய்வோம்? நமது சொந்த சித்தத்தை பெருமையுடன் உறுதிசெய்வதற்கு பதிலாக, நாம் அவரது குமாரனின் நாமத்தினாலே, நேர்மையாக பரலோக பிதாவின் உதவியைக் கேட்கிறோம், அவரது வழியில் காரியங்களைச் செய்கிறோம்.

தண்ணீர் பாத்திரம்

உள் பாத்திரத்தை சுத்திகரிப்பதைப்பற்றி தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் பேசும்போது நான் என் பெருமையை அடையாளம் கண்டேன். 6 நான் என்னை ஒரு பாத்திரமாக கற்பனை செய்தேன். என் பாத்திரத்திலிருந்து பெருமையின் படிமங்களை நான் எப்படி வெளியேற்றுவது? தாழ்மையாயிருக்க நம்மை நாமே நிரப்பந்திப்பது, பிறரை நேசிக்க நமக்கு நாமே முயற்சிப்பது மனப்பூர்வமானதல்ல, வெறுமையானது, பயன்படாதது. நமது பாவங்களும் பெருமையும், நாம் மற்றும் அன்பின் ஞானஸ்நானத் தொட்டியாகிய பரலோக பிதாவுக்கிடையில் ஒரு விரிசல் அல்லது இடைவெளியை உண்டாக்கும்.

நமது இரட்சகரின் பாவநிவர்த்தி மட்டுமே நமது பாவங்களைக் கழுவி இடைவெளியை அல்லது விரிசலை மூடும்.

நமது பரலோக பிதாவின் அன்பின், வழிநடத்துதலின் கரங்களால் தழுவப்பட வேண்டும் என விரும்புகிறோம், ஆகவே நாம் அவரது சித்தத்தை முதலில் வைத்து, நொறுங்குண்ட இருதயத்தோடு நமது பாத்திரத்தில் சுத்திகரிக்கும் ஆற்றுநீரை கிறிஸ்து ஊற்ற வேண்டும் என மன்றாடுகிறோம். முதலில் அது சொட்டு சொட்டாக வரலாம், நாம் தேடி, கேட்டு, கீழ்ப்படியும்போது அது ஏராளமாய் வரும். இந்த ஜீவ தண்ணீர் நம்மை நிரப்பத் தொடங்கும், அவரது அன்பால் நிரப்பும், நாம் நமது ஆத்துமாவின் பாத்திரத்தை சாய்த்து, குணமாக்குதலையும், நம்பிக்கையையும், சார்ந்திருந்து, தாகத்தோடு இருக்கிற பிறருக்கு அதிலுள்ளவற்றைப் பகிரலாம். நமது உள் பாத்திரம் சுத்தமாகும்போது, நமது பூலோக உறவுகள் குணமடையத் தொடங்கும்.

தேவனின் நித்திய திட்டத்துக்கு இடம் கொடுக்க, நமது தனிப்பட்ட திட்டங்களைத் தியாகம் செய்ய வேண்டும். பிதாவுக்காகப் பேசுகிற இரட்சகர், “என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களிடத்தில் வருவேன்,” என கெஞ்சுகிறார். 7 தேவனுக்கு அருகில் வருவது என்பது வேதங்கள் மூலமாக அவரது சத்தியத்தைக் கற்றல், தீர்க்கதரிசன ஆலோசனைகளைப் பின்பற்றுதல், அதிக முழுமையாக அவருடைய சித்தத்தை செய்ய முயற்சித்தல் ஆகும்.

பிதாவுடனும் ஒருவருக்கொருவருடனும் நம்மை அன்பான ஐக்கியத்துக்குக் கொண்டுவரும் வல்லமை கிறிஸ்துவுக்கு உண்டு என நாம் புரிந்து கொள்கிறோமா? அவர் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் உறவுகளுக்குள்ளே தேவையான உள்ளுணர்வைக் கொடுக்க முடியும்.

11 வயது பையன்கள் உள்ள அவரது வகுப்பு அனுபவத்தைப்பற்றிய ஒரு வல்லமை மிக்க அனுபவத்தை ஒரு ஆரம்ப வகுப்பு ஆசிரியர் என்னிடம் சொன்னார். அவர்களில் ஜிம்மி என நான் அழைக்கிற ஒரு பையன் வகுப்பில் ஒத்துழைக்காமல் தனிமையிலிருப்பவன். ஒரு ஞாயிற்றுக் கிழமை ஆசிரியர் தன் பாடத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, தான் ஏன் ஜிம்மியை நேசிக்கிறேன் என சொல்ல உணர்த்தப்பட்டார். அவர் தன் நன்றியுணர்வு மற்றும் இந்த இளைஞன் மீது தனது நம்பிக்கையைப்பற்றி சொன்னார். பின்பு ஆசிரியர் அவனிடம் அவர்கள் பாராட்டுகிற ஏதாவதொன்றை சொல்ல வகுப்பை கேட்டார். வகுப்பிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக அவர்களுக்கு ஜிம்மி ஏன் விசேஷித்தவன் என சொன்னபோது அச்சிறுவன் தன் தலையைக் குனிந்தான், அவன் முகத்தில் கண்ணீர் வழிந்தது. இந்த ஆசிரியரும் வகுப்பும், ஜிம்மியின் தனித்திருந்த இருதயத்துக்கு ஒரு பாலம் கட்டினர். நேர்மையுடன் தெரிவிக்கப்படுகிற எளிய அன்பு பிறருக்கு நம்பிக்கையையும் மதிப்பையும் கொடுக்கிறது. இதை நான் “விரிசல் அல்லது இடைவெளியை சரிசெய்வது” என கூறுகிறேன்.

ஒருவேளைஅன்பான அநித்தியத்துக்கு முந்தய உலகில் நமது ஜீவியம், இங்கு உலகில் உண்மையான நீடித்த அன்புக்கு ஏங்க வைக்கலாம். நேசிக்கவும் நேசிக்கப்படவும், நாம் தெய்வீகமாக வடிவமைக்கப்பட்டுள்ளோம், ஆழமான அன்பு நாம் தேவனோடு ஒன்றாக இருக்கும்போது வருகிறது. “கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தி மூலம் அவரில் ஒப்புரவாகுங்கள்” என மார்மன் புஸ்தகம் நம்மை அழைக்கிறது. 8

உபவாச நியாயப்பிரமாணத்தை விசுவாசத்தோடு பின்பற்றுபவர்கள், தங்கள் சொந்த தலைமுறைக்கு “திறப்பானதை அடைக்கிறவன்” ஆகிறார்கள் என ஏசாயா பேசினான். அவர்கள்தான் “பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்” என ஏசாயா வாக்குத்தத்தம் செய்கிறான். 9 அது போலவே இரட்சகர் நமக்கும் பரலோக பிதாவுக்கும் இடையிலுள்ள விரிசலை அல்லது தூரத்தைச் சரிசெய்கிறார். அவர் தனது மாபெரும் பாவநிவாரண பலி மூலம், தேவனின் அன்பின் வல்லமையில் பஙகுபெறவும், அதன் பின்னர் நமது சொந்த வாழ்க்கையில் “பாழான ஸ்தலங்களை” செப்பனிடவும் நமக்கு சாத்தியமாக்குகிறது. ஒருவருக்கொருவரிடையேயான உணர்வுபூர்வமான தொலைவைக் குணமாக்க, தேவனின் அன்புக்கான நமது ஏற்றுக்கொள்ளுதலும், நமது சுபாவ சுயநலத்தை தியாகம் செய்வதுவும், பயமிக்க மனப்பான்மையும், ஒருசேர தேவைப்படும்.

ஒரு நினைவுகூரத்தக்க இரவில் ஒரு உறவினரும் நானும் ஒரு அரசியல் பிரச்சினையில் ஒத்துப்போகவில்லை. அவள் வேகமாக எனது கருத்தை எதிர்த்து, குடும்பத்தார் கேட்கிற அளவுக்கு நான் சொல்வது தவறு என்றாள். நான் முட்டாளாகவும் படிக்காதவளாகவும் உணர்ந்தேன், ஒருவேளை அப்படியிருக்கலாம். அன்றிரவு ஜெபிக்க முழங்காலில் நிற்கும்போது, பரலோக பிதாவிடம் அந்த உறவினர் எவ்வளவு கடுமையானவர் என விளக்க வேகமாக முயன்றேன்! நான் தொடர்ந்து பேசினேன். நான் முறையிடும்போது நிறுத்தினேன், என் கவனத்தை ஈர்க்க பரிசுத்த ஆவியானவர் ஒரு சந்தர்ப்பம் பெற்றார். ஏனெனில் நான் ஆச்சரியப்படும் வகையில் நான் சொல்வதை நானே கேட்டேன், “ஒருவேளை நான் அவளை நேசிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா.” அவளை நேசிப்பதா? இப்படியாகச் சொல்லி நான் ஜெபித்தேன், “நான் எப்படி அவளை நேசிக்க முடியும்? நான் அவளை விரும்புவதாகக் கூட நினைக்கவில்லை. எனது இருதயம் கடினமாக இருக்கிறது. நான் காயப்படுத்தப்பட்டதாக நினைக்கிறேன். என்னால் அதைச் செய்ய முடியாது.”

பின்பு கண்டிப்பாக பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன், எனக்கு புதிய சிந்தனை வந்து, நான் சொன்னேன், “ஆனால் அவளை நீங்கள் நேசிக்கிறீர்கள், பரலோக பிதாவே. அவள் மீது உங்கள் அன்பின் பகுதியையாவது கொடுப்பீர்களா, அதனால் நானும் அவளை நேசிக்க முடியுமா?” எனது கடினமான எண்ணம் மென்மையானது, எனது இருதயம் மாறத் தொடங்கியது, அவளை நான் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினேன், பரலோக பிதா பார்த்த அவளது உண்மையான மதிப்பையும் நன்மையையும் உணர நான் ஆரம்பித்தேன். ஏசாயா எழுதுகிறான், “கர்த்தர் தன் ஜனத்தின் முறிவைக் கட்டி, அதன் அடிக்காயத்தைக் குணமாக்குகிறார்.” 10

காலப்போக்கில் எஙகளுக்கிடையே இடைவெளி மறைந்தது, ஆனால் எனது மாறிய இருதயத்தை அவள் ஏற்காவிட்டாலும், நாம் அவரது உதவிக்காக வேண்டினால், பரலோக பிதா நாம் நேசிக்க முடியாதவர்கள் என நினைப்பவர்களையும் நேசிக்க நமக்குதவுவார் என நான் கற்றுக் கொண்டேன். நமது பரலோக பிதாவிடமிருந்து தயாளத்தின் தொடர்ந்த பாய்ச்சலுக்கு இரட்சகரின் பாவ நிவர்த்தி ஒரு கால்வாய். எல்லாரிடத்திலும் தயாளமாயிருக்க அவரது அன்பில் தரித்திருக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிதாவுக்கும் குமாரனுக்கும் நாம் நமது இருதயத்தைக் கொடுக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மாறாவிட்டாலும் கூட நாம் உலகத்தை மாற்றுகிறோம். நாம் பரலோக பிதாவை நெருங்கிச் சென்று, கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக நமது முயற்சிகளுக்கு அவரது மென்மையான ஏற்றுக்கொள்ளுதலை உணரலாம். நமது பகுத்தறிவும், தன்னம்பிக்கையும், விசுவாசமும் அதிகரிக்கிறது.

இந்த அன்புக்காக இருதயத்தின் முழு திறனோடு ஜெபிக்கவும், அதன் ஆதாரமாகிய பரலோக பிதாவிடமிருந்து அது அருளப்படும் எனவும் மார்மன் நமக்குச் சொல்லுகிறான். 11 அப்போதுதான் நாம் பூலோக உறவுகளின் விரிசல்களை செப்பனிடுபவர்களாக ஆக முடியும்.

நமது பரலோக பிதாவின் எல்லையற்ற அன்பு, அவரது மகிமைக்கும், சந்தோஷத்துக்கும் நம்மைத் திரும்பக் கொண்டுவர நம்மிடம் வரும். நமக்கும் அவருக்கும் இடையே உள்ள அகலமான விரிசலை செப்பனிட தனது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொடுத்தார். பரலோக பிதாவுடன் திரும்பவும் சேர்வது, நீடித்த அன்பு மற்றும் நித்திய நோக்கத்தின் சாராம்சமாகும். எது உண்மையாகவே பொருட்டானது எனக் கற்கவும் அவர் நேசிப்பது போல நேசிக்கவும், அவரைப் போல வளரவும் அவரோடு நாம் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும். பரலோக பிதாவுடனும் இரட்சகருடனும் நமது விசுவாசமிக்க உறவு அவர்களுக்கும் நமக்கும் நித்தியத்துக்கும் பொருட்டாகும் என நான் சாட்சியளிக்கிறேன்.