பிரிந்து, ஆனாலும் ஒன்றாய்
சபையில் நமக்குள் வேறுபாடுகளிருந்தாலும் நாம் ஒன்றாயிருக்க கர்த்தர் எதிர்பார்க்கிறார்!
ஜூன் 1994ல், உலகக்கோப்பை போட்டியில் எங்கள் நாட்டு கால்பந்தாட்டக்குழு விளையாடுவதை பார்க்க வேலையிலிருந்து வீட்டுக்கு ஆர்வமாக காரில் சென்றுகொண்டிருந்தேன். தூரத்தில் நடைபாதையில் ஒரு மனிதன், நான் பார்க்கும்போது பிரேசில் கொடியால் அலங்கரிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் வேகமாக செல்வதை நான் பார்த்தேன். அவனும் விளையாட்டைப் பார்க்க வீட்டுக்குப் போகிறான் என நான் அறிந்தேன்!
எங்கள் பாதைகள் குறுக்கிட்டபோது, எங்கள் கண்கள் ஒரு கணம் சந்தித்தபோது, நான் அந்த மனிதனுடன் ஒன்றிணைவதாக பலமாக உணர்ந்தேன்! நாங்கள் வேறு வேறு திசைகளில் சென்றுகொண்டிருந்தோம், ஒருவரையொருவர் அறியவில்லை, தெளிவான வித்தியாசமான சமூக, சரீர தன்மைகளைக் கொண்டிருந்தோம், ஆனால் கால்பந்தாட்டத்தின்மீது எங்களுக்கிருந்த அதே விருப்பமும், எங்கள் தேசத்தின் மீது இருந்த அன்பும், அந்த கணத்தில் ஒன்றாக உணரச்செய்தது. அப்போதிருந்து அந்த மனுஷனை நான் பார்க்கவில்லை, ஆனால் இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகும், நான் அந்தக் கண்களைப் பார்க்கவும், அம்மனிதனோடு பலமான தொடர்பையும் உணர முடிகிறது. ஆனாலும் அந்த ஆட்டத்தில் நாங்கள் ஜெயித்தோம், அந்த ஆண்டு உலகக் கோப்பையையும்கூட!
சபையில் நமக்குள் வேறுபாடுகளிருந்தாலும் நாம் ஒன்றாயிருக்க கர்த்தர் எதிர்பார்க்கிறார்! கோட்பாடும் உடன்படிக்கைகளுமில்ல் அவர் சொன்னார், “ஒன்றாயிருங்கள்; நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல.” 1
ஒரு குழுவாக ஆராதிக்க, நாம் அனைவரும் கூடுமிடத்துக்குள் அல்லது ஆலயத்துக்குள் நுழையும்போது, இனம், சமூக அந்தஸ்து, அரசியல் விருப்பங்கள், கல்வி மற்றும் தொழில் சாதனைகள் உள்ளிட்ட, நமது வித்தியாசங்களை விட்டுவிட்டு, மாறாக நமது பொதுவான ஆவிக்குரிய நோக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒன்றாக பாடல்கள் பாடுகிறோம், திருவிருந்தின்போது ஒரே உடன்படிக்கைகளைப்பற்றி சிந்திக்கிறோம், செய்திகள், பாடங்கள் மற்றும் ஜெபங்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் கேட்கும் விதமாக கூறப்பட்டதை இணைந்து ஒப்புக் கொள்கிறோம் என்ற அர்த்தத்தில் “ஆமென்” சொல்லுகிறோம்.
நாம் சேர்ந்து செய்கிற இக்காரியங்கள், கூட்டத்தினரிடையே ஒரு பலமான ஒற்றுமை உணர்ச்சியை உருவாக்க உதவுகிறது.
எனினும், நமது ஒற்றுமையை உண்மையாகவே தீர்மானித்து, பலப்படுத்தி அல்லது அழிப்பது எதுவெனில், நமது சபையாரிடத்திலிருந்து நாம் பிரிந்திருக்கும்போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே. நாம் அனைவரும் அறிந்தபடியே, நாம் வழக்கமாக ஒருவரைப்பற்றி ஒருவர் பேசுவது தவிர்க்க முடியாதது மற்றும் வழக்கமானதுதான்.
ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லத் தெரிந்துகொள்வதன் அடிப்படையில், நமது வார்த்தைகள் ஆல்மா மார்மன் தண்ணீர்கள் அண்டையில் அவன் ஞானஸ்நானம் கொடுத்தவர்களுக்கு போதித்தபடி, ஒன்று, நமது வார்த்தைகள் “நமது உள்ளங்களை ஒன்றாய் இணைக்க, ” 2 வேண்டும், இல்லாவிடில் அவை நம்மிடையே இருக்க வேண்டிய அன்பையும், நம்பிக்கையையும், நற்பெயரையும் அழித்து விடும்.
“ஆம், அவர் ஒரு நல்ல ஆயர்; ஆனால் அவர் இளைஞனாக இருந்தபோது நீங்கள் பார்த்திருக்க வேண்டும்!” போன்ற ஒற்றுமையை தந்திரமாய் அழிக்கக்கூடிய பேச்சுக்களும் இருக்கின்றன.
“ஆயர் மிகவும் நல்லவர், பல வருடங்களாக முதிர்ச்சியிலும் ஞானத்திலும் அவர் மிகவும் வளர்ந்துள்ளார்,” என்பது அதிக ஆக்கபூர்வமான முறையாக இருக்கும்.
“நமது ஒத்தாசைச் சங்க தலைவர் சரியில்லை, அவர் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்!” என்று சொல்லி நாம் அடிக்கடி ஜனங்கள் மீது நிரந்தரமான முத்திரை குத்தி விடுகிறோம். மாறாக நாம் இப்படிச் சொல்லலாம், “ஒத்தாசைச் சங்கத் தலைவர் இப்போது நெளிவு சுளிவு குறைவாயிருக்கிறார்; அவர் கஷ்டமான சூழலில் இருக்கிறார். நாம் அவருக்கு உதவி செய்து ஆதரிக்க வேண்டும்!”
சகோதர சகோதரிகளே, யாரையும், விசேஷமாக நமது சபையைச் சேர்ந்தோரையும், ஒரு மோசமாக செய்த சரக்காக சித்தரிக்க நமக்கு உரிமையில்லை! மாறாக, நமது சக மனுஷர்களைப்பற்றிய நமது வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவநிவர்த்தியிலும் நமது நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும், மேலும் அவரிலும் அவர் மூலமும் நாம் எப்போதும் நன்மைக்கு ஏதுவாக மாற முடியும்!
சிலர் எளிய காரியங்களுக்காக, சபைத் தலைவர்களையும், அங்கத்தினர்களையும் விமர்சித்து, பிரிந்திருக்கிறார்கள்.
1831ல் சபை அங்கத்தினரான சைமண்டஸ் ரைடர் என்பவரின் காரியமும் அதைப்போன்றதே. அவரைச் சார்ந்த ஒரு வெளிப்பாட்டை படித்த பின்பு, i என்ற எழுத்துக்குப் பதிலாக y என்ற எழுத்துடன் ரைடர் என்ற அவரது பெயர் தவறாக எழுத்துக்கூட்டப்படிருப்பதைக் கண்டு அவர் கலவரமடைந்தார். இந்த நிகழ்ச்சிக்கான அவருடைய பிரதிக்கிரியை தீர்க்கதரிசியை கேள்வி கேட்க வைத்து, இறுதியாக ஜோசப் ஸ்மித்தை துன்புறுத்தவும், சபையிலிருந்து வீழ்ந்துபோகவும் நடத்தியது. 3
நமது மதத்தலைவர்களிடமிருந்து நாம் சில திருத்தங்களை அனுபவிக்கவும் வேண்டியதிருக்கலாம், நாம் அவர்களுடன் எவ்வாறு இணைந்திருக்கிறோம் என்பதற்கான சோதனையாக அது இருக்கலாம்.
நான் 11 வயதாயிருந்தபோது, 44 வருடங்களுக்கு முன்பு ஆராதிக்க எங்கள் குடும்பம் சென்ற கட்டிடம் பெரிய புதுப்பித்தல் செய்யப்பட வேண்டியிருந்ததை நினைவு கூர்கிறேன். அந்த வேலையைத் தொடங்குமுன் அந்த முயற்சியின் வேலையில் அங்கத்தினர்கள் எப்படி பங்கேற்பது என உள்ளூர் தலைவர்கள் மற்றும் பகுதித் தலைவர்கள் கலந்துரையாடிய கூட்டம் நடந்தது. அந்த கிளையில் முன்பு பல ஆண்டுகளாக தலைவராக இருந்த என் அப்பா, இந்த வேலை ஒரு குத்தகைதாரரால் செய்யப்பட வேண்டும் சாதாரணமானவர்களால் அல்ல என தனது பலமான அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்.
அவரது அபிப்பிராயம் மறுக்கப்பட்டது மட்டுமின்றி, அவர் கடுமையாகவும் வெளிப்படையாகவும் அக்கூட்டத்தில் கண்டிக்கப்பட்டார், என நாங்கள் அறிந்தோம். இந்த மனுஷன் சபையில் மிகவும் அர்ப்பணிப்புடையவர், மற்றும் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் வீரர், தான் நம்பியதற்காக எதிர்க்கவும் போரிடவும் பழக்கப்பட்டவர். இந்த சம்பவத்துக்குப் பின் அவரது பதில் எப்படியிருக்கும் என வியந்தனர். தனது அபிப்பிராயத்தோடு பிடிவாதமாய் இருந்து, ஏற்கனவே செய்யப்பட்டுவிட்ட தீர்மானத்தை எதிர்ப்பாரா?
தலைமையில் இருந்தவர்களோடு ஒன்றாக இருக்க முடியாததால் சுவிசேஷத்தில் பலவீனர்களாகி, கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திவிட்டவர்களை நமது தொகுதிகளில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆரம்ப வகுப்பு காலத்திலிருந்தே, நமது அநேக நண்பர்கள் வாலிபத்தில், சபையிலுள்ளோருடன் அவர்களது பெற்றோர் குறைகண்டுபிடித்ததால் விசுவாசமின்றி இருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
எனினும், எனது அப்பா சக பரிசுத்தவான்களுடன் இருக்க முடிவு செய்தார். சில நாட்களுக்குப் பின் கட்டுமானத்தில் உதவ தொகுதி அங்கத்தினர்கள் கூடிவந்தபோது, எந்த விதத்திலாவது உதவ நாங்கள் தயாராயிருக்க, கூடுமிடத்துக்கு அவரைத் தொடர்ந்து செல்ல எங்கள் குடும்பத்தை அவர் அழைத்தார்.
நான் மிகக் கோபமாயிருந்தேன். “அப்பா, அங்கத்தினர்கள் அதைச் செய்வதற்கு நீங்கள் எதிராக இருந்தால், கட்டுமானத்துக்கு உதவ நாம் ஏன் போகிறோம்?” என்று நான் அவரைக் கேட்க நினைத்தேன். ஆனால் அப்படிச் செய்ய அவரது முகபாவம் என்னை அதைரியமடையச் செய்தது. நான் மறுபிரதிஷ்டைக்கு நலமாயிருக்கவும் விரும்பியதால் அதிர்ஷ்டவசமாக நான் அமைதியாயிருக்கவும் கட்டுவதற்கு சென்று உதவவும் முடிவு செய்தேன்.
இந்த வேலை முடிவதற்குள் அவர் மரித்து விட்டபடியால், புதிய கூடுமிடம் கட்டிமுடிக்கப்பட்டதைப் பார்க்க முடியவில்லை. ஆனால் நாங்கள் குடும்பமாக அம்மாவின் தலைமையில் அது முடியும்வரை எங்கள் பங்கைச் செய்தோம். அது எங்களை அவருடனும், சபை அங்கத்தினர்களுடனும், எங்கள் தலைவர்களுடனும், மிக முக்கியமாக கர்த்தருடனும் ஐக்கியமாயிருக்க வைத்தது.
அவரது கெத்சமனேயின் சித்திரவதையின் அனுபவங்களுக்கு சிறிது முன்பு, தனது அப்போஸ்தலர்களுக்காகவும், அனைத்து பரிசுத்தவான்களுக்காகவும், பிதாவிடம் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தபோது, அவர் சொன்னார், அவர்களெல்லாம் ஒன்றாயிருக்கவும், பிதாவே... நீர் என்னிலும், நான் உம்மிலும் ஒன்றாயிருப்பதுபோல. 4
சகோதர சகோதரிகளே, நாம் ஒன்றாகக் கூடியிருக்கும்போதும், ஆனால் விசேஷமாக பிரிந்திருக்கும்போதும், சபையின் அங்கத்தினர்களுடனும் தலைவர்களுடனும் ஒன்றாயிருக்க நாம் தீர்மானிக்கும்போதும், நாம் நமது பரலோக பிதாவுடனும் இரட்சகருடனும் பரிபூரணமாக ஒன்றாயிருப்பதையும் உணர்வோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.