என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஜனுவரி 29–பெப்ருவரி 4: “நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்.” 1 நேபி 16–22.


ஜனுவரி 29–பெப்ருவரி 4: “நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்.” 1 நேபி 16–22,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“ஜனுவரி 29–பெப்ருவரி 4. 1 நேபி 16–22,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: 2024(2024)

லியஹோனாவை மக்கள் சோதித்தல்

ஜனுவரி 29–பெப்ருவரி 4. “நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்”

1 நேபி 16–22.

லேகியின் குடும்பம் வாக்குத்தத்த தேசத்தை நோக்கி பயணம் சென்றபோது, கர்த்தர் இந்த வாக்குறுதியை அவர்களுக்கு அளித்தார்: “நீங்கள் என் கற்பனைகளைக் கைக்கொள்வீர்களெனில், நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்” (1 நேபி 17:13). தெளிவாக, அந்த வாக்குறுதியினால் அவர்களுடைய பயணம் எளிதாக இருக்கும் என்பது பொருள் அல்ல, குடும்ப உறுப்பினர்கள் இன்னும் சம்மதிக்கவில்லை, விற்கள் உடைந்தன, மேலும் மக்கள் போராடி மரித்தனர், மற்றும் இன்னும் மூலப் பொருட்களிலிருந்து அவர்கள் ஒரு கப்பலைக் கட்ட வேண்டியிருந்தது. இருப்பினும், குடும்பம் உபத்திரவங்களை அல்லது சாத்தியமற்றதாகத் தோன்றும் பணிகளை எதிர்கொண்டபோது, கர்த்தர் ஒருபோதும் தூரத்தில் இல்லை என்பதை நேபி அறிந்தான். தேவன் “[விசுவாசிகளை] போஷித்து, அவர்களை பெலப்படுத்தி, தாம் அவர்களுக்கு கட்டளையிட்ட காரியத்தை அவர்கள் நிறைவேற்றும்படியான வழியை அவர்களுக்கு அளிப்பார்” என்பதை அவன் அறிந்தான். (1 நேபி 17:3). நேபியும் அவனது குடும்பமும் போன்ற நல்ல மனிதர்களுக்கு ஏன் மோசமான காரியங்கள் நடக்கின்றன என்று எப்போதாவது நீங்கள் ஆச்சரியப்பட்டதுண்டானால், நீங்கள் இந்த அதிகாரத்தில் உள்ளுணர்வுகளைக் காண முடியும். ஆனால் ஒருவேளை மோசமான காரியங்கள் நடக்கும்போது நல்ல மக்கள் என்ன செய்வார்கள் என்பதை உங்களால் காணமுடியுமென்பது மிக முக்கியமானது.

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

வேதபாட வகுப்பு சின்னம்

1 நேபி 16–18

வாழ்க்கை சவால்களை சந்திக்க இரட்சகர் எனக்கு உதவிசெய்வார்.

நேபியின் குடும்பம் சில கடினமான சவால்களை எதிர்கொண்டது—நம் எல்லோரையும் போலவே. இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் துன்பங்களை எதிர்கொள்வது பற்றி நேபியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? 1 நேபி 16:17–32; 16:34–39; 17:7–16; 18:1–4; மற்றும்18:9–22இல் அவனது அனுபவங்கள் பற்றி வாசிக்கவும். “சவால்,” “நேபி எப்படி பதிலளித்தான்,” மற்றும் “கர்த்தர் எப்படி உதவினார்” போன்ற தலைப்புகளின் கீழ் நீங்கள் கண்டறிவதைப் பதிவுசெய்வதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நீங்கள் பிரயோகிக்கலாம் என்று நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

நேபி மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து கற்றுக்கொண்ட பிறகு, பின்வரும் தலைப்புகளின் கீழ் கூடுதல் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யலாம்: “எனது சவால்கள்,” “நான் எப்படி பதிலளிப்பேன்,” மற்றும் “கர்த்தர் எனக்கு எப்படி உதவ முடியும்.” நீங்கள் அதைச் செய்யும்போது இதுபோன்ற வசனங்களை ஒத்துப்பார்க்கலாம்: மத்தேயு 11:28–30; யோவான் 14:26–27; மோசியா 24:13–15.

அந்தோனி டி. பெர்க்கின்ஸ், “எங்களுடைய தேவனே, உம்முடைய துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற பரிசுத்தவான்களை நினைவுகூரும்,” லியஹோனா, நவ. 2021, 103–5 பார்க்கவும்.

1 நேபி 16:10–16, 23–31; 18:11–22

தேவன் சிறியதும் எளியதுமான வழிகள் மூலம் என்னை வழிநடத்துகிறார்.

லேகியின் குடும்பத்தைத் தேவன் வனாந்தரத்தில் வழிநடத்தியபோது, பிரயாணத்துக்கு அவர்களுக்கு ஒரு விவரமான பயணத்திட்டத்தை அவர் வழங்கவில்லை. மாறாக, தினமும் அவர்களை வழிநடத்த லியாஹோனாவைக் கொடுத்தார். நீங்கள் 1 நேபி 16:10–16, 23–31 மற்றும் 18:10–22 வாசிக்கும்போது, தேவன் தம் பிள்ளைகளை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை விளக்கும் சத்தியங்களின் பட்டியலை உருவாக்குவதை கருத்தில் கொள்ளுங்கள் (உதாரணமாக, தேவன் சிலவேளைகளில் நம்மை எதிர்பாராத வழிகளில் வழிநடத்துகிறார் என்பதை 1 நேபி 16:10 போதிக்கலாம்). லியாஹோனாவிற்கும் பரிசுத்த ஆவிக்கும் இடையே என்ன ஒற்றுமையை நீங்கள் காண்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் அவர் “பெரிய காரியங்களை” கொண்டு வந்த “சிறிய வழிகள்” என்ன?

ஆல்மா 37:7, 38–47; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33–34 ஐயும் பார்க்கவும்.

லேகி லியஹோனாவைப் பயன்படுத்துதல்

If Ye Are Prepared Ye Shall Not Fear (நீங்கள் ஆயத்தமாயிருந்தால் பயப்படமாட்டீர்கள்) - கிளார்க் கெல்லி பிரைஸ்

1 நேபி 17:1–6, 17–22

எனது பாடுகள் ஆசீர்வாதங்களாக முடியக்கூடும்.

நேபிக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் வனாந்தரத்தில் ஒரே மாதிரியான சவால்கள் இருந்தபோதிலும், அவர்களுடைய அனுபவங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. ஒருவேளை வனாந்தரத்தில் பயணம் செய்த நேபியின் விவரத்திலிருந்து (1 நேபி 17:1–6 பார்க்கவும்) அவனுடைய சகோதரர்கள் எழுதிய விவரத்தை முரணாக நீங்கள் ஆக்கலாம் (1 நேபி 17: 17–22 பார்க்கவும்). உண்மையுள்ள கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க அவனுக்கு உதவிய எது நேபிக்கு தெரியும் அல்லது செய்தான்? விசுவாசம் மற்றும் நன்றியின் கண்ணோட்டத்தில் சமீபத்திய அல்லது தற்போதைய சோதனையைப் பற்றி எழுதுவதைக் கருத்தில் கொள்ளவும். இதிலிருந்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள் அல்லது கற்றுக்கொள்கிறீர்கள்?

எமி ஏ. ரைட்நொறுங்கியதை கிறிஸ்து குணப்படுத்துகிறார்லியஹோனா மே, 2022, 81–84, பார்க்கவும்.

அமைதியான நினைக்கும் நேரம் நினைக்கவும், சிந்திக்கவும், பிரதிபலிக்கவும் அல்லது எழுதவும் நேரம் ஒதுக்குவது உணர்த்துதலுக்கு வழிநடத்தும். சுவிசேஷத்தின் கோட்பாடுகள் அல்லது கொள்கைகள் நம் வாழ்வோடு எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதைப் பார்க்க இது நமக்கு உதவும். நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போது, அவர்களின் பதிவுகளைப் பிரதிபலிக்கவும் எழுதவும் அவர்களுக்கு நேரம் கொடுங்கள். இது அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான அவர்களின் விருப்பத்தையும் அதிகரிக்கும்.

1 நேபி 19:22–24; 20–22

என்னால் என்னோடு. “எல்லா வேதங்களையும் ஒப்பிடமுடியும்”.

வேதங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்பட்டவை என்பதால், அவை இன்று நமக்குப் பொருந்தாது என்று தோன்றலாம். ஆனால் நேபி சொன்னான், “எங்களுடைய ஆதாயத்திற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும் அவைகள் இருக்க வேண்டுமென நான் எல்லா வேத வாக்கியங்களையும் எங்களுக்கு ஒப்பிட்டேன்” (1 நேபி 19:23). இந்த ஒரு காரணத்திற்காகவும் நேபி மிகுந்த ஆவிக்குரிய வல்லமையை வேதங்களில் கண்டான்.

நீங்கள் வாசிக்கும்போது பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொள்ளவும்1 நேபி 20–22:

1 நேபி 20:1–9.ஏசாயாவின் காலத்தில் இருந்த மக்களைப்பற்றி இந்த வசனங்கள் என்ன கற்பிக்கின்றன? உங்களுக்கு எது பொருந்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

1 நேபி 20:17–22.ஏசாயாவின் காலத்து மக்களை தேவன் எப்படி வழிநடத்தினார் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன கற்பிக்கின்றன? அவரைப் பின்பற்ற அவர் உங்களை எவ்வாறு அழைக்கிறார்?

1 நேபி 20–22 ல், உங்களோடு நீங்கள் ஒப்பிடக்கூடிய வேறு எதை நீங்கள் காண்கிறீர்கள்?

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

1 நேபி 16:10, 28–29; 18:8–13, 20–22

நான் கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது, கர்த்தர் என்னை வழிநடத்துவார்.

  • உங்களிடம் திசைகாட்டி, வரைபடம் அல்லது நமது வழியைக் கண்டறிய உதவும் வேறு ஏதாவது இருந்தால், அதை உங்கள் குழந்தைகளுக்குக் காட்டலாம். லியாஹோனாவைப் பற்றிய கலந்துரையாடலைத் தொடங்க இது ஒரு சிறந்த வழியாகும், அதைப் பற்றி நீங்கள் 1 நேபி 16:10, 28–29ல் வாசிக்கலாம். திசைகாட்டி அல்லது வரைபடம் வேலை செய்யாத சில காரணங்கள் என்ன? லியாஹோனா ஏன் சில சமயங்களில் லேகியின் குடும்பத்திற்காக வேலை செய்யவில்லை? (1 நேபி 18:9–12, 20–22 பார்க்கவும்). அவரிடத்தில் திரும்ப செல்ல நம்மை வழிநடத்த பரலோக பிதா இன்று நமக்கு என்ன கொடுத்திருக்கிறார்?

  • 1 நேபி 16:10, 26–31; 18:8–22இல் உங்கள் பிள்ளைகள் லியாஹோனாவைப் பற்றி கற்றுக்கொள்வதைப் பயன்படுத்த உதவ, ஒரு முக்கியமான அல்லது கடினமான முடிவைப் பற்றி சிந்திக்க நீங்கள் அவர்களை அழைக்கலாம். இன்று நம்மை வழிநடத்த லியாஹோனாவைப் போல செயல்படும் எதை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்? (உதாரணமாக ஆல்மா 37:38–44 பார்க்கவும்.) பரலோக பிதா உங்களை வழிநடத்திய தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதைக் கருத்தில் கொள்ளவும்.

1 நேபி 16:21–32

நான் என் குடும்பத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க முடியும்.

  • 1 நேபி 16:21–32 ஒன்றாக நீங்கள் வாசிக்கும்போது, நேபியின் உதாரணம் அவருடைய குடும்பத்தை எப்படி ஆசீர்வதித்தது என்பதைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.(see also the video “The Lord Guides Lehi’s Journey” [Gospel Library]). நாம் எப்படி நேபியைப் போல இருக்க முடியும் என்பது பற்றிய விவாதத்திற்கு இது வழிவகுக்கும். மற்ற குடும்ப உறுப்பினர்கள் மீது நல்ல செல்வாக்கு செலுத்த அவர்கள் செய்யக்கூடிய ஒரு விஷயத்தைத் திட்டமிட உங்கள் குழந்தைகளை அழைக்கவும்.

1 நேபி 17:7–9; 18:1–4

பரலோக பிதா எனக்கு கடினமான காரியங்களையும் செய்ய உதவ முடியும்.

  • குழந்தைகள் கதை சொல்வதை விரும்புகிறார்கள். நேபி படகைக் கட்டுவதற்காக கட்டளையிடப்பட்ட கதையை நீங்கள் சொல்வதற்கு உதவ அவர்களை அழைக்கலாம் (1 நேபி 17:7–19; 18:1–4 பார்க்கவும்; ). படகைக் கட்ட முயன்றதற்காக நேபியை அவனுடைய சகோதரர்கள் கேலி செய்தபோது தைரியமாக இருக்க உதவியது எது?

  • நேபிக்கு ஒரு படகைக் கட்டத் தெரியாது, எனவே அவன் கர்த்தருடைய அறிவுறுத்தலை நம்பியிருந்தான். 1 நேபி 18:1 உங்களுடன் வாசித்த பிறகு, இந்தவார நிகழ்ச்சி பக்கத்தை உங்கள் பிள்ளைகள் முடிக்கலாம். அவர்கள் செய்யும்போது, பரலோக பிதா நேபிக்கு உதவியது போல், கடினமான காரியங்களைச் செய்ய நமக்கு எப்படி உதவ முடியும் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்.

படகில் நேபியும் அவனது குடும்பமும்

They Did Treat Me with Much Harshness (அவர்கள் என்னை மிகக் கடுமையாக நடத்தினர்) - வால்ட்டர் ரானே