என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
பெப்ருவரி 5–11: “மகத்துவமுள்ள மத்தியஸ்தரானவரின் மூலம் சுதந்திரத்தையும், நித்திய ஜீவனையும் தேர்ந்தெடுக்க சுதந்திரம்.” 2 நேபி 1–2


“பெப்ருவரி 5–11: ‘மகத்துவமுள்ள மத்தியஸ்தரானவரின் மூலம் சுதந்திரத்தையும், நித்திய ஜீவனையும் தேர்ந்தெடுக்க சுதந்திரம்.’ 2 நேபி 1–2,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“பெப்ருவரி 5–11. 2 நேபி 1–2,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: 2024

படம்
ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறுதல்

Adam and Eve (ஆதாமும் ஏவாளும்) – டக்ளஸ் பிரையர்

பெப்ருவரி 5–11: “மகத்துவமுள்ள மத்தியஸ்தரானவரின் மூலம் சுதந்திரத்தையும், நித்திய ஜீவனையும் தேர்ந்தெடுக்க சுதந்திரம்.”

2 நேபி 1–2

உங்கள் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துகொண்டு இருந்தது என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் மிகவும் நேசிக்கிறவர்களிடத்தில் எந்த இறுதி செய்திகளைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்புவீர்கள்? தீர்க்கதரிசி லேகி தனது வாழ்க்கையின் முடிவை நெருங்கிவிட்டதாக உணர்ந்தபோது, அவன் தனது குடும்பத்தை கடைசியாக ஒன்றாகக் கூட்டினான். தேவன் தனக்கு வெளிப்படுத்தியதை அவர்களுடன் அவன் பகிர்ந்து கொண்டான். அவன் மேசியாவைக் குறித்து சாட்சியம் அளித்தான். அவன் நேசித்த மக்களுக்கு அவன் நேசித்த சுவிசேஷ சத்தியங்களைப் போதித்தான். சுதந்திரம், கீழ்ப்படிதல், ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி, இயேசு கிறிஸ்துவின் மூலம் மீட்பு, மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைப்பற்றி அவன் பேசினான். அவனுடைய பிள்ளைகள் அனைவரும் அவன் கற்பித்தவற்றின்படி வாழத் தேர்ந்தெடுக்கவில்லை, நம் அன்புக்குரியவர்களுக்காக நம்மில் எவரும் அத்தகைய தேர்ந்தெடுப்புகளைச் செய்ய முடியாது. ஆனால், “சுதந்திரத்தையும் நித்திய ஜீவனையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்” நமக்கு அளிக்கும் மீட்பரைப்பற்றி நாம் கற்பிக்கவும் சாட்சியமளிக்கவும் முடியும். (2 நேபி 2:26–27).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

2 நேபி 1:13–29

நான்“விழித்தெழவும்! புழுதியிலிருந்து எழும்பவும்” முடியும்

2 நேபி 1:13–29ல், லாமான் மற்றும் லெமுவேலின் ஆவிக்குரிய நிலையை விவரிக்க லேகி பயன்படுத்திய வார்த்தைகளைக் கவனியுங்கள். ஆவிக்குரிய “கன நித்திரையில்” இருந்து எழுவதற்கு உங்களுக்கு எது உதவுகிறது? உங்கள் வாழ்க்கையில் உள்ள ஆவிக்குரிய “சங்கிலிகளை” களைய எது உதவுகிறது? வசனம் 15ல் லேகியின் சாட்சியத்தையும் வசனம் 23ல் அவனது அழைப்பையும்பற்றி சிந்திக்கவும். இந்த வசனங்களில் கர்த்தர் உங்களுக்கு என்ன செய்தி வைத்திருக்கிறார்?

காட்சிகளைப் பயன்படுத்தவும். காட்சிப் பொருட்களைப் பயன்படுத்துவது கற்பவர்களுக்கு சுவிசேஷ சத்தியங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றை நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்கவும் உதவும். இந்த குறிப்பில் இருந்து கற்பிக்க நீங்கள் தயாராகும் போது, நீங்கள் பயன்படுத்தக்கூடிய காட்சி பொருட்களைக் கருத்தில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக, 2 நேபி 1:13 அல்லது 2 நேபி 2:27லுள்ள லேகியின் வார்த்தைகளைப் புரிந்துகொள்பவர்களுக்கு காகிதச் சங்கிலி உதவக்கூடும்

படம்
வேதபாட வகுப்பு சின்னம்

2 நேபி 2

இயேசு கிறிஸ்துவினால், “நான் நித்திய ஜீவனையும் சுதந்திரத்தையும் தேர்ந்தெடுக்க நான் சுதந்திரமாக இருக்கிறேன்.”

லேகியின் குடும்பம் இப்போது புதிய சாத்தியங்கள் நிறைந்த ஒரு புதிய தேசத்தில் இருந்தது. இந்த புதிய இடத்தில் அவர்கள் செய்த தேர்வுகள் அவர்களின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமானதாக இருக்கும். 2 நேபி 2ல் ஒருவேளை இதனால்தான் லேகி தனது மகன் யாக்கோபிற்கு சுயாதீனம் அல்லது தேர்வு செய்யும் திறனைக் கற்றுக் கொடுத்தான். வசனங்கள் 11–30 நீங்கள் படிக்கும்போது, இந்த கேள்விகளுக்கு சாத்தியமான பதில்களை எழுதுங்கள்:

  • சிலர் அதை புண்படுத்தும் வழிகளில் பயன்படுத்தினாலும், பரலோக பிதாவுக்கு சுயாதீனம் ஏன் மிகவும் முக்கியமானது?

  • உங்கள் சுயாதீனத்தை பலவீனப்படுத்த அல்லது அழிக்க எதிரி எப்படி முயற்சி செய்கிறான்?

  • “சுதந்திரத்தையும் நித்திய ஜீவனையும் தேர்ந்தெடுக்க” இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவுகிறார் (வசனம் 27)?

2 நேபி 2ல் சுயாதீனத்தைப் பற்றி அறிய இதோ மற்றொரு வழி: நமக்கு சுயாதீனம் இருக்கவும், நமது தெய்வீக ஆற்றலை அடையவும் அத்தியாவசியமான விஷயங்களைத் தேடுங்கள். உதாரணமாக:

இவற்றில் ஒன்று அல்லது பல இல்லாவிட்டால், நமது சுயாதீனத்திற்கு என்ன நேரிடும்?

இந்தப் பிரிவுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பார்த்து, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவருடைய வழிகாட்டுதலை அடிக்கடி பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த அழைப்பைப் பின்பற்றியதன் மூலம் நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை ஒருவருடன் பகிர்ந்துகொள்வதைக் கருத்தில் கொள்ளவும்.

2 நேபி 2:1–4, 6–25

தேவன் என் சோதனைகளை ஆசீர்வாதங்களாக மாற்ற முடியும்.

அவனுடைய இளைய மகன் யாக்கோபு தனது குழந்தைப் பருவத்தில் “துன்பங்கள்,” “துயரங்கள்” மற்றும் “மிகவும் துக்கம்” அனுபவித்தான் என்பதை லேகி அறிந்தான் (2 நேபி 2:1). 2 நேபி 2:1–3, 6–25ல் லேகியின் சாட்சியம் யாக்கோபுக்கு மதிப்புமிக்கதாக இருந்திருக்கும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அது ஏன் உங்களுக்கு மதிப்புமிக்கது? நீங்கள் குறிப்பாக வல்லமை வாய்ந்ததாகக் கருதும் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களைத் தேடுங்கள். உங்கள் ஆதாயத்திற்காக கர்த்தர் உங்கள் துன்பங்களை எவ்வாறு பரிசுத்தப்படுத்தினார்? (2 நேபி 2:2 பார்க்கவும்.)

ரோமர் 8:28, டேல் ஜி. ரென்லண்ட், கோபமூட்டும் அநீதி, லியஹோனாமே 2021, 41–45ம்ே பார்க்கவும்.

2 நேபி 2:15–29

வீழ்ச்சியும், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியும் பரலோக பிதாவின் திட்டத்தின் அத்தியாவசிய பகுதிகள் ஆகும்.

வீழ்ச்சி ஒரு சோகம் மட்டுமே என்றும், ஏவாளும் ஆதாமும் பழத்தை சாப்பிடத் தேர்ந்தெடுத்தபோது நிரந்தர தவறு செய்தார்கள் என்றும் பலர் நம்புகிறார்கள். 2 நேபி 2:15–28ல், லேகி வீழ்ச்சியைப் பற்றிய கூடுதல் உண்மையைப் போதிக்கிறான்—கிறிஸ்துவின் மூலம் மீட்பைப் பற்றி. இந்த வசனங்களை நீங்கள் தேடும்போது, ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய உண்மைகளின் பட்டியலை உருவாக்கவும். இதைப் போன்ற கேள்விகள் உதவக்கூடும்:

  • இரட்சகரின் பாவநிவர்த்தி ஏன் அவசியமாயிருந்தது?

  • வீழ்ச்சியின் விளைவுகளைச் மேற்கொள்வதில் இயேசு கிறிஸ்து என்ன பங்கு வகித்தார்?

  • வீழ்ச்சியை சரியாகப் புரிந்துகொள்வது, இயேசு கிறிஸ்துவுக்கான நமது தேவையை எவ்வாறு நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது?

படம்
இயேசு கிறிஸ்து

Let Not Your Heart Be Troubled (உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக) – ஹோவார்ட் லையன்

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

2 நேபி 1:13; 15, 23

பாவத்தின் விளைவுகளைச் சமாளிக்க இயேசு கிறிஸ்து எனக்கு உதவுகிறார்.

  • பாவத்தின் “சங்கிலிகளை உதறித்தள்ள” லேகியின் அழைப்பை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவ, காகிதத் துண்டுகளிலிருந்து ஒரு சங்கிலியை உருவாக்க நீங்கள் ஒன்றாக வேலை செய்யலாம். காகிதத் துண்டுகளில், சாத்தான் நம்மை சோதிக்கும் சில விஷயங்களை எழுத உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு உதவலாம். காகிதச் சங்கிலியை அசைப்பது உட்பட இந்த வசனங்களில் உள்ள சில சொற்றொடர்களை அவர்கள் நடிக்கும்போது 2 நேபி 1:13, 15, 23 பிறகு சேர்ந்து வாசிக்கலாம். பாவம் எப்படி சங்கிலி போன்றது? பாவத்தின் “சங்கிலிகளை உதறித்தள்ள” இயேசு எவ்வாறு நமக்கு உதவுகிறார்?

2 நேபி 1:20

நான் தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன்.

  • தேவனின் கட்டளைகளை காலணிகள், தொப்பிகள், கையுறைகள் அல்லது நம்மைப் பாதுகாக்கும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட இது உங்கள் பிள்ளைகளுக்கு உதவுமா? கட்டளைகள் நம்மை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் பேசும்போது சிலவற்றை அவர்கள் அணிவதற்கு நீங்கள் அவர்களை அனுமதிக்கலாம். நாம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் நாம் “விருத்தியடைகிறோம்” (ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதுகாக்கப்படுகிறோம்) என்பதை வலியுறுத்தி பிறகு 2 நேபி 1:20 வாசிக்கலாம் கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • செழிப்பு அடைவதற்கும் தேவனிடமிருந்து துண்டிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குவதற்கு (2 நேபி 1:20 பார்க்கவும்), நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமான செடியையும், செடியிலிருந்து துண்டிக்கப்பட்ட இலை அல்லது கிளையையும் பார்க்கலாம். அப்போது, நேபியும் அவனுடைய சகோதரர்களும் செய்த தேர்வுகளை உங்கள் பிள்ளைகள் மதிப்பாய்வு செய்யலாம் (1 நேபி 2:11–16; 3:5–7; 18:9–11 பார்க்கவும்). இந்தத் தேர்வுகளின் முடிவுகள் என்ன? தேவனோடு இணைந்திருக்க என்ன தேர்வுகள் நமக்கு உதவுகின்றன?

2 நேபி 2:11, 16, 27

தேவன் எனக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கொடுத்தார்.

  • எதிரானவை மற்றும் தேர்வுகள் பற்றி லேகி என்ன கற்றுக் கொடுத்தான் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடலாம், அதில் நீங்கள் (ஒளி போன்ற) ஒரு வார்த்தையைச் சொல்கிறீர்கள், உங்கள் குழந்தைகள் அதற்கு நேர்மாறாக (இருட்டு) என்கிறார்கள். நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, எதிரிடையானவை ஏன் தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன என்பதை அறிய அவர்களுக்கு உதவுங்கள்2 நேபி 2:11, 16. பின்பு தவறான தேர்வு செய்ய ஆசைப்படும் குழந்தையைப் பற்றிய கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். தவறான தேர்வுக்கு எதிரானது என்ன என்பதை உங்கள் குழந்தைகள் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் அதை நடித்துக்காட்டலாம்.

  • “சுதந்திரம்” மற்றும் “சிறையிருப்பு” (2 நேபி 2:27) ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைப் பற்றி அறிய, உங்கள் குழந்தைகள் கூண்டில் உள்ள ஒரு மிருகத்தின் படத்தையும் அதன் இயற்கை சூழலில் ஒரு மிருகத்தின் படத்தையும் வரையலாம். எந்த விலங்கு சுதந்திரமாக இருக்கிறது? 2 நேபி 2:27ல் “சுதந்தரவாளி” என்ற வார்த்தையை நீங்கள் வாசிக்கும்போது சரியான படத்தை சுட்டிக்காட்ட குழந்தைகளை அழைக்கவும். இயேசு கிறிஸ்து நம்மை விடுவிக்கிறார் என்று சாட்சி கூறுங்கள்.

  • தேர்வு செய்வது பற்றி பாடலில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

படம்
லேகியின் குடும்பம் கடற்கரையில் முழங்காலிடுதல்

Lehi and His People Arrive in the New World (லேகியும் அவனுடைய ஜனங்களும் புதிய உலகத்திற்கு வந்தடைகின்றனர்) - கிளார்க் கெல்லி பிரைஸ்

அச்சிடவும்