என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
பெப்ருவரி 19–25: “நம் தேவனின் திட்டம் எவ்வளவு மகத்தானது!” 2 நேபி 6–10.


“பெப்ருவரி 19–25: ‘நம் தேவனின் திட்டம் எவ்வளவு மகத்தானது!’ 2 நேபி 6–10,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“பெப்ருவரி 19–25. 2 நேபி 6–10,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: 2024(2024)

படம்
கெத்செமனேயில் இயேசு ஜெபித்தல்

என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக – ஹேரி ஆன்டர்சன்

பெப்ருவரி 19–25: “நம் தேவனின் திட்டம் எவ்வளவு மகத்தானது!”

2 நேபி 6–10.

லேகியின் குடும்பம் எருசலேமை விட்டுச் சென்று குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் ஆகியிருந்தன. எருசலேமிலிருந்து பாதி உலகைத் தாண்டி அவர்கள் ஓர் அந்நியமான புதிய தேசத்தில் இருந்தார்கள். லேகி மரித்துப்போனான், மேலும் அவனது சந்ததியார் “தேவனுடைய எச்சரிக்கைகளையும், வெளிப்படுத்தல்களையும் நம்பிய” நேபியர்களுக்கும், நம்பாத லாமானியர்களுக்குமிடையில் ஒரு நூற்றாண்டு நீளக்கூடிய பிணக்கை, ஏற்கனவே தொடங்கியிருந்தனர். (2 நேபி 5:6). நேபியின் இளைய சகோதரனும், தற்போது நேபியர்களுக்கு ஒரு போதகராக நியமிக்கப்பட்டவனுமான யாக்கோபு, தேவன் ஒருபோதும் அவர்களை மறக்கமாட்டார், ஆகையால் அவர்கள் அவரை ஒருபோதும் மறக்கக்கூடாது என உடன்படிக்கையின் ஜனங்கள் அறியவேண்டும் என்று விரும்பினான். இன்றும் கண்டிப்பாக நமக்கு தேவையான செய்தி இதுவே (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:15–16பார்ககவும்). “அவரை நாம் நினைவுகூருவோமாக, … நாம் தூர தள்ளிவிடப்படாததனிமித்தம். … கர்த்தரின் வாக்குத்தத்தங்கள் மகத்துவமானதாய் இருக்கின்றன” என யாக்கோபு பிரகடனம் செய்தான் (2 நேபி 10:20–21). அந்த வாக்குத்தத்தங்களுக்கு மத்தியில், மரணத்தையும் பாதாளத்தையும் வெற்றிகொள்ள “முடிவற்ற பாவநிவர்த்தியை” விட பெரிதானது வேறொன்றில்லை (2 நேபி 9:7). “ஆகவே,” “உங்கள் இருதயங்களில் திடன்கொள்ளுங்கள்” எனச் சொல்லி யாக்கோபு முடித்தான், (2 நேபி 10:23).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

2 நேபி 6–8

கர்த்தர் தமது ஜனத்திடம் இரக்கம் உள்ளவர், தம்முடைய வாக்குத்தத்தத்தை அவர் நிறைவேற்றுவார்.

அவர்கள் இஸ்ரவேல் வீட்டாரின் பகுதி என்றும் தேவனையும் அவரது வாக்குத்தத்தங்களையும் நம்பலாம் என்றும் தன்னுடைய ஜனங்கள் புரிந்துகொள்ள உதவும்படியாக, 2 நேபி 6–8ல் பதிவுசெய்யப்பட்ட ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை யாக்கோபு மேற்கோள் காட்டினான். அந்தச் செய்தி உங்களுக்கும் உள்ளது, ஏனென்றால் பிற்காலப் பரிசுத்தவான்களும் தேவனின் உடன்படிக்கை மக்களில் ஒரு பகுதியாக உள்ளனர். நீங்கள் இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது, பின்வருவதைப் போன்ற கேள்விகளை சிந்திக்கவும்:

  • என் மீது இரட்சகரின் மீட்கும் அன்பைப்பற்றி நான் என்ன கற்றுக்கொள்கிறேன்? எந்த வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் இந்த அன்பை விசேஷமாக நன்கு விவரிக்கின்றன?

  • அவரைத் தேடுபவர்களுக்கு இரட்சகர் என்ன ஆறுதலை அளிக்கிறார்?

  • இரட்சகருக்காகவும் அவருடைய வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களுக்காகவும் அதிக விசுவாசத்தோடு “காத்திருக்க” நான் என்ன செய்ய முடியும்?

படம்
வேதபாட வகுப்பு சின்னம்

2 நேபி 9:1–26

இயேசு கிறிஸ்து என்னை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றினார்

இயேசு கிறிஸ்து இல்லாவிட்டால் நமக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி சிந்திப்பதே இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் பாராட்டை ஆழமாக்குவதற்கான ஒரு வழியாகும். நீங்கள் 2 நேபி 9:1–26 வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு என்ன நடக்கும் என்பதை பட்டியலிட்டு அல்லது ஒரு வண்ணம் கொண்டு அடையாளப்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். பின்னர், இன்னொரு பட்டியல் அல்லது வண்ணத்தில், இரட்சகரின் பாவநிவிர்த்தியின் மூலம் நாம் என்ன பெறலாம் என்பதையும் நீங்கள் அடையாளம் காணலாம். நீங்கள் வாசித்தவற்றின் அடிப்படையில், நமக்கு ஏன் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி தேவை என்பதை எப்படி விளக்குவீர்கள்? உங்களை “தேவனுடைய ஞானம், இரக்கம் மற்றும் கிருபையை” புகழும்படி உங்களுக்கு உணர்த்தும் எதை நீங்கள் காண்கிறீர்கள். (2 நேபி 9:8).

இயேசு கிறிஸ்து எதிலிருந்து நம்மைக் காப்பாற்றினார் என்பதைக் கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் அதை எவ்வாறு செய்தார் என்பது பற்றிய உள்ளுணர்வையும் யாக்கோபு வழங்கினான். 2 நேபி 9:11–15, 20–24ல் நீங்கள் கண்டதை பதிவு செய்வதைக் கருத்தில் கொள்ளவும்.

யாக்கோபு தேவனின் மீட்பின் திட்டத்தால் மிகவும் வியப்படைந்தான், அவன் கூச்சலிட்டான், “நம் தேவனின் திட்டம் எவ்வளவு மகத்தானது.” 2 நேபி 9ல் அவனது வியப்புகளைத் தேடுங்கள் (அவற்றில் அதிகமானவை வசனங்கள் 8–20ல் காணப்படுகின்றன). தேவனின் திட்டத்தைப் பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? யாக்கோபு உணர்ந்தவற்றில் சிலவற்றை நீங்கள் உணர என்ன அனுபவங்கள் உதவின? உங்களின் ஆராதனை மற்றும் படிப்பின் பகுதியாக நீங்கள் அவரைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தக்கூடும் ஒரு சங்கீதத்தை பார்ப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

2 நேபி 9:7

இரட்சகரின் பாவநிவிர்த்தி எல்லையற்றதாக இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் “முடிவற்ற பாவநிவர்த்தியை” நன்கு புரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? (2 நேபி 9:7). ஒருவேளை வயலில் உள்ள புற்கள், கடற்கரையில் மணல் துகள்கள் அல்லது வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் போன்ற எண்ணற்ற காரியங்களை நீங்கள் பார்க்கலாம். இரட்சகரின் பாவநிவிர்த்தி எவ்வாறு முடிவற்றதாக இருக்கிறது? அது எப்படி தனிப்பட்டது? 2 நேபி 9ல் எந்த சொற்றொடர்கள் இரட்சகர் நமக்காக செய்தவற்றுக்காக நமது நன்றியை உணர வைக்கிறது?

2 நேபி 9:27–54

நான் கிறிஸ்துவிடம் வந்து தேவனின் திட்டத்தை பின்பற்ற முடியும்.

2 நேபி 9ல், யாக்கோபு இரண்டு வல்லமை வாய்ந்த மற்றும் மாறுபட்ட சொற்றொடர்களைப் பயன்படுத்தினான் “மாபெரும் சிருஷ்டிகரின் இரக்கத்தின் திட்டம்” மற்றும் “அந்தத் தீயவனுடைய வஞ்சனையான திட்டம்” (2 நேபி 9:6, 28). ஒருவேளை நீங்கள் ஒரு பாதையை வரைந்து அதை பரலோக பிதாவின் திட்டம் என்று பெயரிடலாம். பின்பு 2 நேபி 9:27–52 ஐ தேடவும். இந்தத் திட்டத்தைப் பின்பற்ற நமக்கு உதவ யாக்கோபு கொடுத்த எச்சரிக்கைகள் மற்றும் அழைப்புகளைத் தேடுங்கள். பாதைக்கு அருகில் நீங்கள் கண்டதை எழுதுங்கள். சாத்தான் எவ்வாறு தேவனின் திட்டத்திலிருந்து நம்மை வழிநடத்த முயற்சிக்கிறான்? இந்த எச்சரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்கு பதிலாக என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் உணர்த்தப்படுவதாக உணர்கிறீர்கள்?

2 நேபி 10:20, 23–25

இயேசு கிறிஸ்துவின் தியாகம் எனக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.

யாக்கோபின் செய்தி மகிழ்ச்சி தரும் ஒன்று. அவன் கூறினான், “நீங்கள் களிகூரும்படிக்கும், உங்கள் தலைகளை எப்போதும் உயர்த்தும்படிக்கும் நான் இவைகளை உங்களிடம் பேசுகிறேன்.” (2 நேபி 9:3). நீங்கள் 2 நேபி 10:20, 23–25 ஐ வாசிக்கும்போது, உங்கள் இருதயத்துக்கு எது மகிழ்ச்சியை அளிப்பதாகக் காண்கிறீர்கள்? நீங்கள் அதைரியமடைந்தவராக உணரும்போது இந்த காரியங்களை நினைவில் வைத்திருக்க என்ன செய்வீர்கள்?

யோவான் 16:33; டி. டாட். கிறிஸ்டாபர்சன், “பரிசுத்தவான்களின் மகிழ்ச்சி,” லியஹோனா, நவ. 2019, 15–18.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

2 நேபி 9:6–10, 19–24

இயேசு கிறிஸ்து என் இரட்சகர்.

  • உங்கள் பிள்ளைகளுக்கு இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தேவை என்பதைப் புரிந்துகொள்ளவும் உணரவும் நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள்? இந்த வார நிகழ்ச்சி பக்கம் உதவக்கூடும். இது ஒரு குழி மற்றும் ஒரு ஏணியின் எளிய ஒப்புமையைப் பயன்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவுக்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கு 2 நேபி 9:21–22 பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்

  • நமக்கு ஏன் இரட்சகர் தேவை என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரிந்துகொள்ள உதவும் ஒரு வழி, வீழ்ச்சியைப் பற்றி அவர்களுக்குக் கற்பிப்பதாகும். நீங்கள் ஆதாம் ஏவாளின் படத்தைக் காட்டலாம், அதாவது Leaving the Garden of Eden[ஏதேன் தோட்டத்தை விட்டுச்செல்லும்] (சுவிசேஷ நூலகம்), மற்றும் சிலுவையிலுள்ள இயேசு கிறிஸ்துவின் படம். ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க அவர்களிடம் கேட்பதைக் கருத்தில் கொள்ளவும். நாம் எப்படி ஆதாம் ஏவாளைப் போல் இருக்கிறோம்? ஒருவேளை 2 நேபி 9:6–10 இயேசு கிறிஸ்து நமக்காக என்ன செய்கிறார் என்பதைப் பார்க்க அவர்களுக்கு உதவ முடியும். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள குழந்தைகளை அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

கதைகள் மற்றும் உதாரணங்களுடன் சத்தியத்தைக் கற்பிக்கவும். நீங்கள் பயன்படுத்தும் கதைகளும் எடுத்துக்காட்டுகளும் சத்தியத்தைக் கற்பிக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, இந்த வார நிகழ்ச்சிப் பக்கத்தைப் பயன்படுத்தும் போது, நாம் வெளியே ஏறும் ஒவ்வொரு படியிலும் நமக்கு உதவுவதற்காக, இயேசு கிறிஸ்து “குழிக்குள்” வந்ததைக் கற்பிக்கவும்.

2 நேபி 9:20, 28–29, 42–43, 49

“என் இருதயம் நீதியில் களிகூருகிறது”

  • “நீதியில் [களிகூர]” அல்லது மகிழ்ச்சியுடன் கர்த்தருக்குக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க (2 நேபி 9:49), ஒருவேளை ஒரு குழந்தை ஒரு நல்ல தேர்வு அல்லது தவறான தேர்வை எடுக்கும் உதாரணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். தேர்வு மகிழ்ச்சியைத் தரும்போது குழந்தைகளை எழுந்து நிற்கவும், தேர்வு சோகத்தைத் தரும்போது உட்காரவும் அழைக்கவும். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குத் தெரிந்துகொண்டதால் நாம் எப்போது மகிழ்ச்சியாக இருந்தோம்?

  • கர்த்தரின் கட்டளைகள் முட்டாள்தனமானவை அல்லது காலாவதியானவை என்று நினைக்கும் மக்களுடன் (ஏற்கனவே இல்லையென்றால்) உங்கள் பிள்ளைகள் தொடர்புகொள்ளலாம். கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் நாம் ஏன் மகிழ்ச்சியடைகிறோம் என்பதை எப்படி விளக்குவது என்பதைப் பற்றி நீங்களும் உங்கள் குழந்தைகளும் பேசலாம். தேவனுடைய அறிவுரையை நாம் முழுமையாக புரிந்து கொள்ளாவிட்டாலும் அதை நம்புவது ஏன் முக்கியம்? இந்தக் கேள்விகளைப் பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும் உதவ, 2 நேபி 9:20, 28–29, 42–43 பார்க்க, நீங்கள் அவர்களை ஊக்குவிக்க முடியும்

படம்
இயேசு ஜனங்களை குணமாக்குதல்

He Healed Many of Diverse Diseases (அநேக பலவிதமான நோயாளிகளை அவர் குணமாக்கினார்) - ஜே. கிர்க் ரிச்சர்ட்ஸ்

அச்சிடவும்