என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
பெப்ருவரி 26–மார்ச் 3: “அவர் நாமம் … சமாதானப்பிரபு எனப்படும்” 2 நேபி 11–19


“பெப்ருவரி 26–மார்ச் 3: ‘அவர் நாமம் … சமாதானப்பிரபு எனப்படும்.’ 2 நேபி 11–19,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“பெப்ருவரி 26–மார்ச் 3. 2 நேபி 11–19,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)

ஏசாயா தோல் சுருள்களில் எழுதுதல்

பெப்ருவரி 26–மார்ச் 3: “அவர் நாமம் … சமாதானப்பிரபு எனப்படும்”

2 நேபி 11–19

உலோகத் தகட்டில் பொறிப்பது எளிதானது அல்ல, மேலும் நேபியின் சிறு தகடுகளில் இடமும் குறைவாக இருந்தது. ஆகவே அதிக அளவிலான ஏசாயாவின் எழுத்துக்களைத் தன்னுடைய பதிவில் நகலெடுக்க நேபி ஏன் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்? இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதற்காக அவன் அதைச் செய்தான். “கிறிஸ்துவின் வருகையின் உண்மையை என் ஜனத்திற்கு நிரூபிப்பதில் என் ஆத்துமா களிகூருகிறது” என்று அவன் எழுதினான் (2 நேபி 11:4). எதிர்கால சந்ததிகளில் தனது ஜனங்களுக்கு என்ன நடக்கும் என்பதை நேபி பார்த்திருந்தான். பெரும் ஆசீர்வாதங்கள் இருந்தபோதிலும், அவர்கள் பெருமைக்குரியவர்களாகவும், சர்ச்சைக்குரியவர்களாகவும், உலகப்பிரகாரமானவர்களாகவும் மாறுவார்கள் என்பதை அவன் கண்டான் (1 நேபி 12; 15:4–6 பார்க்கவும்). நம் நாளில் இதே போன்ற பிரச்சனைகளை அவன் முன்னறிந்தான் (1 நேபி 14 பார்க்கவும்). ஏசாயாவின் எழுத்துக்கள் இத்தகைய அக்கிரமத்திற்கு எதிராக எச்சரித்தன. ஆனால் அவை நேபிக்கு ஒரு மகிமையான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அளித்தன, துன்மார்க்கத்தின் முடிவு, விசுவாசிகளின் கூடிச் சேர்கை மற்றும் “இருளில் நடந்தவர்களுக்கு” “பெரிய ஒளி” (2 நேபி 19:2). இவை அனைத்தும் நடக்கும், ஏனென்றால் “ஒரு பாலகன் பிறந்தார்” எல்லா சண்டைகளையும் முடிவுக்குக் கொண்டுவர இயலுகிற – “சமாதானப்பிரபு” (2 நேபி 19:6).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

நான் எவ்வாறு ஏசாயாவின் போதனைகளை சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடியும்?

சிலருக்கு “ஏசாயாவின் வார்த்தைகள் தெளிவற்றதாக இருக்கும்” என்பதை நேபி ஒப்புக்கொண்டான் (2 நேபி 25:4). ஆனால் ஏசாயாவின் எழுத்துக்களின் அர்த்தத்தை நாம் காண உதவ அவன் ஆலோசனை அளித்தான்:

  • உங்களோடு “அவருடைய வார்த்தைகளை ஒப்பிட்டுப்பாருங்கள்” (2 நேபி 11:2). ஏசாயாவின் பல போதனைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியமான அர்த்தங்களும் பிரயோகங்களும் இருக்கின்றன. உதாரணமாக 2 நேபி 14:5–6 நீங்கள் வசிக்கும் இடங்களைப் பற்றி படிக்கும் போது, இந்த வசனங்கள் உங்கள் வீட்டிற்கு எப்படிப் பொருந்துகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்களையே கேளுங்கள், “நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று பரலோக பிதா விரும்புகிறார்?”

  • இயேசு கிறிஸ்துவின் அடையாளங்களைத் தேடுங்கள் (2 நேபி 11:4 பார்க்கவும்). இரட்சகரைப்பற்றிய ஏசாயாவின் பல போதனைகள் அடையாளங்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2 நேபி 19:2ல் இரட்சகர் எவ்வாறு குறிப்பிடப்படுகிறார்? இந்த அடையாளம் அவரைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?

  • “தீர்க்கதரிசன ஆவியால் நிரப்பப்படுவதை நாடுங்கள்” (2 நேபி 25:4). நீங்கள் படிக்கும்போது, ஆவிக்குரிய வழிகாட்டுதலுக்காக ஜெபிக்கவும். உடனடியாக நீங்கள் அனைத்தையுமே ஒரே நேரத்தில் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவற்றை கற்றுக்கொள்வதற்கு ஆவியானவர் உங்களுக்குதவ முடியும்.

அடிக்குறிப்புகள், அதிகாரத் தலைப்புகள், வேத வழிகாட்டி போன்ற வேதங்களிலுள்ள படிப்பு உதவிகளை பார்ப்பது உதவிகரமாக இருப்பதை நீங்கள், காணலாம். ஏசாயாவின் போதனைகளின் வரலாற்றுச் சூழலைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் கூடுதல் தகவல்கள் மார்மன் புஸ்தகம் மற்றும் பழைய ஏற்பாட்டு முதிர் வேத பாட வகுப்பு கையேடுகளில் உள்ளது.

2 நேபி 11–19

ஏசாயா இயேசு கிறிஸ்துவைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தான்.

ஏசாயா அடையாளப்பூர்வ மொழியைப் பயன்படுத்தியதால், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அவருடைய வல்லமை வாய்ந்த சாட்சியை கவனிக்காமல் விடுவது எளிது. 2 நேபி 13:13; 14:4–6; 15:1–7; 16:1–7; 17:14; 18:14–15; 22:2ல் இரட்சகரைத் தேடவும். அவரைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன?

2 நேபி 19:6லுள்ள தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் பல பட்டங்களை பட்டியலிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் இந்த பாத்திரங்களை பரிசுத்த ஆவியானவர் எப்படி நிறைவேற்றியிருக்கிறார்?

உலிசஸ் சோயர்ஸ், “இயேசு கிறிஸ்து: நமது ஆத்துமாவைப் பராமரிப்பவர்,” லியஹோனா, மே 2021, 82–84.

2 நேபி 12–13; 15

மேட்டிமையானவர்களும் உலகப்பிரகாரமானவர்களும் தாழ்மையாக்கப்படுவார்கள்.

பெருமை தன் ஜனங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நேபி முன்னறிந்தான் (1 நேபி 12:19 பார்க்கவும் ). ஆகவே, பெருமைக்கு எதிரான ஏசாயாவின் தொடர் எச்சரிக்கைகளை நேபி தன் ஜனங்களுக்கு பகிர்ந்துகொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேட்டிமை மற்றும் அகந்தை, போன்ற பெருமையை விவரிக்க ஏசாயா பயன்படுத்திய வார்த்தைகளை அதிகாரம் 12 மற்றும் 13 ல், தேடவும் 2 நேபி 15:1–24ல், பெருமையின் விளைவுகளை விவரிக்கும் குறியீட்டு மொழியைத் தேடுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் சொந்த வார்த்தைகளைக் கொண்டு சுருக்கமாக எழுத முயற்சி செய்யவும். தாழ்மையாக இருக்க நீங்கள் என்ன தேர்ந்தெடுப்பதென்பதைப்பற்றி சிந்தியுங்கள்.

வேதபாட வகுப்பு சின்னம்

2 நேபி 12:2–3

ஆலயம் கர்த்தரின் வீடு.

ஆலயத்தை “கர்த்தருடைய பர்வதத்தின் ஆலயம்” என ஏசாயா அழைத்தான் (2 நேபி 12:2). பர்வதம் ஏன் ஆலயத்துக்கு நல்ல அடையாளமாக இருக்கிறது?

நமக்கு ஏன் ஆலயங்கள் தேவை என்று ஒருவருக்கு எப்படி விளக்குவீர்கள்? 2 நேபி 12:2–3லும், தலைவர் ரசல் எம். நெல்சனின் செய்தி “ஆலயமும் உங்கள் ஆவிக்குரிய அஸ்திபாரமும்” (லியஹோனா, நவ. 2021, 93–96)லும் சாத்தியமான பதில்களை நீங்கள் காணலாம். நீங்கள் வாசித்தவற்றின் அடிப்படையில், அவருடைய பரிசுத்த இல்லத்தில் நீங்கள் எதைக் கற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் கர்த்தர் விரும்புகிறார்? அங்கு நீங்கள் என்ன அனுபவங்கள் பெற்றீர்கள்?

ஒவ்வொன்றையும் வாசித்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்வதைக் கருத்தில் கொள்ளுங்கள், இந்த கேள்வி கர்த்தருடைய வழிகளைப் பற்றி எனக்கு என்ன கற்பிக்கிறது? “அவரது வழிகளில் நடக்க” அது நமக்கு எவ்வாறு உதவுகிறது?

2 நேபி 12–19

இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனங்களை மீட்பார்.

ஏசாயா துன்மார்க்கத்தை கவனித்த போதிலும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கண்டான். பின்வரும் ஒவ்வொரு பாகத்தையும் படிப்பதைக் கருத்தில் கொல்ளவும். நம் நாளைப் பற்றி ஒவ்வொரு பாகமும் கற்பிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சத்தியங்களை எழுதுங்கள்: 2 நேபி 12:1–5; 14:2–6; 15:20–26; 19:2–8. இந்த பாகங்களை நாம் புரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

மாதிரிகளைத் தேடுங்கள். கர்த்தர் எவ்வாறு கிரியை செய்கிறார் என நமக்குக் காட்டும் மாதிரிகளை வேதங்களில் நாம் பார்க்க முடியும். 2 நேபி 11–19ல், கர்த்தர் எவ்விதம் பாவம் குறித்து எச்சரிக்கிறார் மற்றும் மனந்திரும்புவோரை மன்னிக்கிறார் என்று காட்டும் மாதிரிகளை நீங்கள் பார்க்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

2 நேபி 12:2–3

ஆலயம் கர்த்தரின் வீடு.

  • ஆலயத்தை “கர்த்தருடைய பர்வதத்தின் ஆலயம்” என்று ஏசாயா விவரித்தான். 2 நேபி 12:2–3 நீங்கள் வாசிக்கும்போது உங்கள் பிள்ளைகள் மலை ஏறுவது போல் பாசாங்கு செய்து மகிழ்வார்கள். நமக்கு ஏன் ஆலயங்கள் உள்ளன என்பதை விவரிக்கும் இந்த வசனங்களில் உள்ள சொற்றொடர்களைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்.

  • 2 நேபி 12:3 “அவருடைய பாதைகளிலே நடப்போம்” என்ற சொற்றொடரை விளக்குவதற்கு, நீங்கள் தரையில் ஒரு பாதையை உருவாக்கலாம், இது ஒரு ஆலயத்தின் படத்திற்கு வழிகாட்டும். உங்கள் பிள்ளைகள் பாதையில் நடக்கும்போது, கர்த்தருடைய பாதைகளில் நடக்க அவர்கள் செய்யக்கூடிய காரியங்களுக்கு அவர்கள் பெயரிடலாம்.

  • ஒருவேளை உங்கள் பிள்ளைகள் ஆலயம் செல்வதைப் போன்ற ஒரு படத்தை வரையலாம். ஆலயம் என்றால் என்ன, அங்கு என்ன செய்கிறோம் என்று பாடலில் உள்ள சொற்றொடர்களைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்.

2 நேபி 11:4–7; 17:14; 19:6

இயேசு கிறிஸ்து என் இரட்சகர்.

  • 2 நேபி 11:4–7; 17:14; 19:6ல் இயேசு கிறிஸ்துவுக்கு பல பெயர்கள் உள்ளன உங்கள் பிள்ளைகள் அவைகளைக் கண்டுபிடித்து அவைகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி பேச உதவுங்கள். உதாரணமாக, “கிறிஸ்து” என்பது “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” மற்றும் “இம்மானுவேல்” அதாவது “தேவன் நம்மோடு.” இயேசுவைப்பற்றி இந்த பெயர்கள் நமக்கு என்ன போதிக்கின்றன?

  • இந்தச் சித்தரிப்புகளின் போது காணொலியை இடைநிறுத்தி, அவர்கள் என்ன உணர்ந்திருப்பார்கள் என்று உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள். நாம் அங்கே இருந்தால் என்ன உணர்வோம்? நாம் மீண்டும் அவரைப் பார்க்கும்போது, நாம் எவ்வாறு உணர்கிறோம்?

2 நேபி 15:20

சாத்தான் நன்மை தீமை பற்றி என்னை குழப்ப முயற்சிக்கிறான்.

  • மிட்டாய் கவருக்குள் எலுமிச்சைத் துண்டு போன்ற கசப்பு அல்லது புளிப்பு ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். 2 நேபி 15:20 ஒன்றாக வாசிக்கவும். சாத்தான் எப்படி தீய காரியங்களை நல்லதாக காட்ட முயற்சிக்கிறான்? மீனவர் ஏன் தனது கொக்கியை மறைக்கிறார்? சாத்தான் ஏன் பாவத்தை மறைக்கிறான்? சாத்தானால் வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்க இயேசு கிறிஸ்து எவ்வாறு நமக்கு உதவுகிறார்?

பனாமா சிட்டி பனாமா ஆலயம்

பனாமா சிட்டி பனாமா ஆலயம். “பர்வதங்களின் கொடுமுடியிலே, கர்த்தருடைய ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு, … எல்லா தேசங்களும் அதற்குள் ஓடிவருவார்கள்.” (2 நேபி 12:2).