என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
மார்ச் 25–31: “அவருடைய செட்டைகளில் குணமாக்குதலுடன்… அவர் எழுவார்” ஈஸ்டர்


“மார்ச் 25–31: ‘அவருடைய செட்டைகளில் குணமாக்குதலுடன்… அவர் எழுவார்’ ஈஸ்டர்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“மார்ச் 25–31. ஈஸ்டர்”, என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)

படம்
உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவருடைய அப்போஸ்தலர்களுடன்

Christ and the Apostles (கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும்) – டெல் பார்சன்

மார்ச் 25–31: “அவருடைய செட்டைகளில் குணமாக்குதலுடன்… அவர் எழுவார்”

ஈஸ்டர்

இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய தங்களுடைய சாட்சிகளில் பூர்வகால அப்போஸ்தலர்கள் தைரியமாயிருந்தனர்(அப்போஸ்தலர் 4:33 பார்க்கவும்). மில்லியன் கணக்கானோர் இயேசு கிறிஸ்துவை நம்பினார்கள், வேதாகமத்தில் அவர்களுடைய வார்த்தைகள் பதிக்கப்பட்டிருந்ததால் அவரைப் பின்பற்ற முயற்சித்தார்கள். இருந்தும், இயேசு கிறிஸ்து உலகமுழுவதற்கும் இரட்சகராயிருந்தால், பின்னர் ஏன் அவரை நேரில் கண்ட சாட்சிகள் ஒரு சிறிய பகுதியிலிருந்த ஒரு சில மக்களிடம் மட்டும் மட்டுப்படுத்தப்படவேண்டுமென ஒரு சிலர் வியப்படைவார்கள்?

எல்லா தேசங்களுக்கும் “தன்னை வெளியரங்கமாய்க் காட்டுகிற” இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகராயிருக்கிறார் (மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்) அவரண்டை வருகிறவர்கள் அனைவருக்கும் இரட்சிப்பை வழங்குகிறார் என்ற ஒரு கூடுதலான உறுதியான சாட்சியாக மார்மன் புஸ்தகம் நிற்கிறது. அதற்கும் மேலாக, இரட்சிப்பு என்றால் என்னவென இந்த இரண்டாவது சாட்சி தெளிவுபடுத்துகிறது. இதனால்தான் நேபியும், யாக்கோபுவும், மார்மனும், அனைத்து தீர்க்கதரிசிகளும் “தகடுகளின்மேல் இந்த வார்த்தைகளை பொறிக்கவும்,” அவர்களும் “கிறிஸ்துவை அறிந்திருந்தார்களென்றும் … அவருடைய மகிமையிலே நம்பிக்கை வைத்திருந்தார்களென்றும்” (யாக்கோபு 4:3–4) வருங்கால தலைமுறைகளுக்கு அறிவிக்கவும் சிரத்தையுடன் பிரயாசப்பட்டார்கள். கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை, முழுஉலகத்தையும் மீட்டு, உங்களையும் மீட்டு, உலகளாவியதாகவும் தனிப்பட்டதாகவுமிருக்கிறதென மார்மன் புஸ்தகத்திலுள்ள சாட்சிகளை இந்த ஈஸ்டர் காலம் பிரதிபலிக்கிறது.

வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்

படம்
வேத பாட வகுப்பு சின்னம்
இயேசு கிறிஸ்துவின் நிமித்தம், நான் உயிர்த்தெழுப்பப்படுவேன்.

ஈஸ்டரில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை தியானிப்பது பாரம்பரியம், ஆனால் உயிர்த்தெழுப்பப்படுவது என்றால் சரியான அர்த்தம் என்ன? உயிர்த்தெழுதலைப்பற்றி மார்மன் புஸ்தகம் என்ன உள்ளுணர்வுகளை வழங்குகிறது? ஒருவேளை, 2 நேபி 9:6–15, 22; ஆல்மா 11:42–45; 40:21–25; மற்றும் 3 நேபி 26:4–5ல் நீங்கள் காண்கிற உயிர்த்தெழுதலைப்பற்றிய சத்தியங்களை இந்த ஈஸ்டர் சமயத்தில் நீங்கள் பட்டியலிடலாம்.

இந்த சத்தியங்கள் உங்கள் செயல்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் நீங்கள் பதிவு செய்யலாம். எடுத்துக்காட்டாக, இந்த வாக்கியங்களை நீங்கள் எவ்வாறு முடிப்பீர்கள் என்பதைக் கவனியுங்கள்: இவை எனக்குத் தெரியாவிட்டால் … மேலும் இவை எனக்குத் தெரியும் என்பதால் …

பாடலைப் பாடும்போது, கேட்கும்போது அல்லது படிக்கும்போது, “இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட்டதால் என் வாழ்க்கை எப்படி வேறுபட்டது?” என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.

உங்கள் குடும்பத்தின் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் அர்த்தமுள்ள பகுதியாக இருக்கும் ஈஸ்டர் காணொலிகளின் தொகுப்பு சுவிசேஷ நூலகத்தில் உள்ளது. ஒருவேளை நீங்கள் இந்த வீடியோக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பார்த்து, இரட்சகரின் உயிர்த்தெழுதலைப் பற்றிய உங்கள் புரிதல் அல்லது போற்றுதலுக்கு அவை என்ன சேர்க்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

லூக்கா 24:36–43; அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:15; 1 கொரிந்தியர் 15:12–23.ரெய்னா ஐ. அபுர்ட்டோ, “கல்லறைக்கு ஜெயம் இல்லை,” லியஹோனா, மே 2021, 85–86.Gospel Topics, “Resurrection,” Gospel Library; “Death, Grieving, and Loss” in the “Life Help” collection in Gospel Library.s

என்னுடைய பாவங்களையும், வேதனைகளையும், பெலவீனங்களையும் இயேசு கிறிஸ்து தம்மீது எடுத்துக்கொண்டார்.

நமது பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து பாவநிவர்த்தி செய்தாரென வேதாகமம் தெளிவாக போதிக்கிறது. எப்படியாயினும், கிறிஸ்துவின் தியாகத்தையும், பாடுகளையும் பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை முக்கியமான விதங்களில் மார்மன் புஸ்தகம் விரிவாக்குகிறது. மோசியா 3:7; 15:5–9; மற்றும் ஆல்மா 7:11–13ல் இந்த போதனைகள் சிலவற்றை நீங்கள் காணலாம். இந்த பாகங்களை நீங்கள் வாசித்த பின்பு, பின்வருவதைப்போல ஒரு விளக்கப்படத்தில் நீங்கள் கண்டுபிடித்ததை பதிவுசெய்வதை கருத்தில் கொள்ளுங்கள்:

இரட்சகர் என்ன பாடுபட்டார்?

அவர் ஏன் பாடுபட்டார்?

எனக்கு இது என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?

இந்தப் பத்திகளைப் படிப்பதற்கான மற்றொரு வழி இங்கே உள்ளது: அவர்கள் கற்பிக்கும் செய்திகளுடன் பொருந்துவதாக நீங்கள் நினைக்கும் பாடல்களைத் தேடுங்கள். இரட்சகரின் தியாகத்தை இன்னும் ஆழமாகப் பாராட்ட இந்தப் பாடல்கள் மற்றும் வேதங்களிலிருந்து என்ன சொற்றொடர்கள் உங்களுக்கு உதவுகின்றன?

ஏசாயா 53; எபிரெயர் 4:14–16; ஜெரால்ட் காசே, “ஜீவிக்கும் கிறிஸ்துவின் ஜீவிக்கும் சாட்சி,” லியஹோனா, மே 2020, 38–40.

இயேசு கிறிஸ்து என்னைச் சுத்திகரித்து, பூரணப்படுத்த உதவுவார்.

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் மாறிய ஜனங்களைப்பற்றிய ஒரு அதிக விவரம் மார்மன் புஸ்தகத்திலிருக்கிறதென சொல்லப்படலாம். மோசியா 5:1–2; 27:8–28; ஆல்மா 15:3–12; 24:7–19இல் இந்த அனுபவங்களில் சிலவற்றை நீங்கள் வாசிக்கலாம். படிப்பதற்கு மற்ற உதாரணங்களையும் நீங்கள் நினைக்கலாம். இந்த அனுபவங்களில் பொதுவானது என்ன என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்? என்ன வேறுபாடுகளை நீங்கள் கவனிக்கிறீர்கள்? எவ்வாறு இரட்சகர் உங்களை மாற்றமுடியுமென்பதைப்பற்றி இந்த அனுபவங்கள் உங்களுக்கு என்ன போதிக்கிறது?

மேலும் ஆல்மா 5:6–14; 13:11–12; 19:1–16; 22:1–26; 36:16–21; ஏத்தேர் 12:27; மரோனி 10:32–33 பார்க்கவும்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

இந்த ஞாயிற்றுக்கிழமை மாதத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் “பிற்சேர்க்கை B: தேவனின் உடன்படிக்கைப் பாதையில் வாழ்நாள் முழுவதற்குமாக குழந்தைகளைத் தயார்படுத்துதல்” இல் கற்றல் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததால் நானும் உயிர்த்தெழுப்பப்படுவேன்.

  • அல்லது அந்த அதிகாரங்களில் உள்ள படங்களைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கதை சொல்லட்டும்.

  • உயிர்த்த இரட்சகரின் அமெரிக்கப் பயணம் அவரது உயிர்த்தெழுதலின் வல்லமை வாய்ந்த சாட்சியாகும். 3 நேபி 1117 பயன்படுத்தி இதுகுறித்து உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்வதைக் கருத்தில் கொள்ளவும். இயேசுவின் காயங்களை உணருவது எப்படியிருந்திருக்கும் என (3 நேபி 11:14–15 பார்க்கவும்) அல்லது அவர் ஆசீர்வதித்த பிள்ளைகளில் ஒருவராயிருக்க (3 நேபி 17:21 பார்க்கவும்) உங்கள் பிள்ளைகள் கற்பனை செய்ய ஊக்குவிக்கவும். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது உயிர்த்தெழுதல் பற்றிய உங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • உயிர்த்தெழுதலைப் பற்றி மார்மன் புஸ்தகம் என்ன கற்பிக்கிறது என்பதைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, அதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று பாசாங்கு செய்ய அவர்களை அழைக்கவும், அதை உங்களுக்கு விளக்குமாறு அவர்களிடம் கேட்கவும். உயிர்த்தெழுதல் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களுக்கு அவர்களுக்கு உதவ 2 நேபி 9:10–15; ஆல்மா 11:41-45; மற்றும் ஆல்மா 40:21-23பார்க்கவும். யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? அவர்களின் பதிலின் ஒரு பகுதியாக இரட்சகரின் உயிர்த்தெழுதலின் சாட்சியத்தை வழங்க அவர்களை அழைக்கவும்.

இயேசு கிறிஸ்து என்னை எப்படி ஆறுதல்படுத்துவது என்று அறிந்திருக்கிறார்.

  • மோசியா 3:7 மற்றும் ஆல்மா 7:11 இரட்சகர் தனது பாவநிவாரணத்தின் ஒரு பகுதியாக கடந்து சென்ற சிலவற்றை விவரிக்கிறது. இந்த வசனங்களில் ஒன்றை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குப் படித்து, இயேசு நமக்காக என்ன பாடுபட்டார் என்பதைச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்கும்படி அவர்களிடம் கேட்கலாம். அவர் ஏன் அதை அனுபவித்தார் என்பதை அறிய நீங்கள் ஆல்மா 7:12 ஐ வாசிக்கலாம். இயேசு கிறிஸ்து நம் வேதனைகள் மற்றும் சுகவீனங்கள் அனைத்தையும் உணர்ந்தார் என்று சாட்சியமளிக்கவும்.

  • இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பாவநிவர்த்தியைப்பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்தமான பாடல் அல்லது பாட்டு உள்ளதா? நீங்கள் ஒன்றாகப் பாடலாம் அல்லது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். இரட்சகர் நமக்கு அளிக்கும் ஆறுதல் மற்றும் சமாதானம் பற்றி உங்களுக்குக் கற்பிக்கும் பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களைப் பற்றி பேசுங்கள்.

படம்
கெத்செமனே தோட்டத்தில் கிறிஸ்து ஜெபித்தல்

Gethsemane (கெத்செமனே) – மைக்கேல் டி. மால்ம்

இயேசு கிறிஸ்து என்னை சுத்திகரித்து, மாற்ற உதவுவார்.

  • இரட்சகரின் பாவநிவிர்த்தியின் காரணமாக மாற்றப்பட்டவர்களின் பல உதாரணங்களை மார்மன் புஸ்தகம் தருகிறது. ஏனோஸ் (ஏனோஸ் 1:2–8 பார்க்கவும்), இளைய ஆல்மா (மோசியா 27:8–24 பார்க்கவும்), அல்லது அந்தி-லேகி-நேபியர் (ஆல்மா 24:7–19பார்க்கவும்) போன்றோர்பற்றி அறிய உங்கள் பிள்ளைகள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் காரணமாக இந்த நபர் அல்லது குழு எவ்வாறு மாறியது? நாம் எவ்வாறு அவர்களது எடுத்துக்காட்டைப் பின்பற்றலாம்?

  • நீங்களும் உங்கள் குழந்தைகளும் தூய்மையான மற்றும் அழுக்கான ஒன்றை ஒப்பிட்டு, அழுக்குப் பொருட்களை எவ்வாறு சுத்தமாக்குகிறார்கள் என்பதைப் பற்றி பேசலாம். ஆல்மா 13:11–13 ஒன்று சேர்ந்து வாசிக்கலாம். நம்முடைய பாவங்களிலிருந்து நாம் சுத்திகரிக்கப்படுவதற்கு இயேசு என்ன செய்தார்? இது பாவத்தைப் பற்றி நம்மை எப்படி உணர வைக்கிறது? இரட்சகரைப் பற்றி அது நம்மை எப்படி உணர வைக்கிறது?

ஆவியின் வழிகாட்டுதலுக்கு தகுதியானவர்களாக வாழுங்கள். ஆவியானவர் உண்மையான ஆசிரியர். நீங்கள் அவருடைய வழிகாட்டுதலைத் தேடி, தகுதியுடன் வாழும்போது, நீங்கள் கற்பிக்கும் மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது பற்றிய எண்ணங்களையும் பதிவுகளையும் அவர் உங்களுக்குத் தருவார்.

படம்
நேபியர்களை கிறிஸ்து வாழ்த்துதல்

நேபியர்களுடன் கிறிஸ்து, விளக்கப்படம் – பென் சோவார்ட்ஸ்

அச்சிடவும்