“மார்ச் 4–10: ‘நாங்கள் கிறிஸ்துவில் களிகூருகிறோம்.’ 2 நேபி 20–25,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)
“மார்ச் 4–10. 2 நேபி 20–25,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)
மார்ச் 4–10: “நாங்கள் கிறிஸ்துவில் களிகூருகிறோம்”
2 நேபி 20–25
ஏசாயாவின் எழுத்துக்களில் வலுவான எச்சரிக்கைகள் உள்ளன, ஆனால் அவை நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. நேபி அவைகளை தனது பதிவில் சேர்த்ததற்கு இது ஒரு காரணம்: “ஏசாயாவின் சில வார்த்தைகளை நான் எழுதுகிறேன்,” “இந்த வார்த்தைகளைப் பார்க்கிற என் ஜனம் தங்கள் இருதயங்களை உயர்த்தி களிகூருவார்கள்” (2 நேபி 11:8) என்று அவன் கூறினான். ஒரு விதத்தில், ஏசாயாவின் எழுத்துக்களைப் படிப்பதற்கான அழைப்பு என்பது களிகூருவதற்கான ஓர் அழைப்பே. இஸ்ரவேலர்கள் கூட்டிச் சேர்க்கப்படுதல், மேசியாவின் வருகை, மற்றும் நீதிமான்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட சமாதானம் ஆகியவற்றைப்பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களால், நேபியைப் போலவே நீங்களும் களிகூரலாம். கர்த்தர் “தேசங்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலின் துரத்துண்டவர்களைக் கூட்டிச்சேர்க்கும்போது” (2 நேபி 21:12) தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட நாளில் வாழ்வதற்கு நீங்கள் களிகூரலாம். நீங்கள் நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்களாயிருக்கும்போது “இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் எடுக்க” முடியும் (2 நேபி 22:3). வேறு வார்த்தைகளிலெனில், உங்களால் “கிறிஸ்துவில் களிகூர” முடியும் (2 நேபி 25:26).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
நான் இயேசு கிறிஸ்துவில் சமாதானம் காண முடியும்.
லேகியின் பிள்ளைகளுக்கு பிணக்கில் சிக்கல் இருந்தது. எதிர்கால சந்ததியினரில் அந்தப் பிரச்சனை மோசமாகி, பிரிவு, சிறைபிடிப்பு, துக்கம் மற்றும் அழிவுக்கு இட்டுச் சென்றது. மற்றும் பிணக்கு இன்றும் ஒரு பிரச்சனையாக தொடர்கிறது.
இவை அனைத்தையும் மனதில் கொண்டு, 2 நேபி 21–22ல் உள்ள தீர்க்கதரிசனங்களை சிந்தியுங்கள். இந்த தீர்க்கதரிசனங்களை இரட்சகர் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதைக் கருத்தில் கொள்ளவும். ஓநாய் “ஆட்டுக்குட்டியுடன் தங்கும்” என்ற தீர்க்கதரிசனம் உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? (2 நேபி 21:6). அமைதியை உண்டாக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள்.
டேல் ஜி. ரென்லண்ட், “கிறிஸ்துவின் சமாதானம் பகையை ஒழிக்கிறது,” லியஹோனா, நவ. 2021, 83–85.
கர்த்தர் தம் ஜனத்தைக் கூட்டிச்சேர்க்கிறார்.
இஸ்ரவேலின் சிதறலுக்கு நேபியும் அவனுடைய குடும்பத்தினரும் சாட்சிகளாக இருந்தனர் 2 நேபி 25: 10 பார்க்கவும் ). இப்போது நீங்கள் இஸ்ரவேலின் கூடுகையில் பங்கேற்கலாம் (2 நேபி 21:12 பார்க்கவும்). நீங்கள் 2 நேபி 21:9–12ஐ வாசிக்கும்போது, இந்த வசனங்கள் விவரிக்கும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதற்கு நீங்கள் எவ்வாறு உதவலாம் என்று சிந்தியுங்கள்.
உதாரணமாக, தேவனின் மக்களைச் கூட்டிச்சேர்க்க எழுப்பப்படும் “கொடி”(தரநிலை அல்லது பேனர்) பற்றி நீங்கள் படிக்கும்போது, தேவன் தம் மக்களை உடல் ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் கூட்டிச்சேர்ப்பதை நீங்கள் எவ்வாறு பார்த்தீர்கள் என்று சிந்தியுங்கள். கர்த்தரிடமும் அவருடைய சபையிடமும் மக்களை ஈர்ப்பது எது?
தேவனுடைய ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பதில் உதவிசெய்ய நீங்கள் என்ன செய்வதற்கு உணர்த்தப்பட்டதாக உணர்கிறீர்கள்?
பாபிலோனின் உலகத்தன்மை வீழ்ச்சியடையும்.
பாபிலோன் இராஜ்ஜியம் பண்டைய இஸ்ரவேலுக்கு ஒரு வலிமையான அரசியல் மற்றும் இராணுவ அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் நேபியின் ஜனங்களுக்கும், இன்று நமக்கும், பாபிலோன் பிரதிநிதித்துவம் செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்: உலகத்தன்மை மற்றும் பாவம். 2 நேபி 23–24எச்சரிக்கைகள் எவ்வாறு பாபிலோனின் செல்வமும் அதிகாரமும், அஞ்சும் அல்லது போற்றும் மற்றும் நம்பும் மக்களை பாதித்திருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (உதாரணமாக 23:6–9, 11, 19–22; 24:10–19 பார்க்கவும்). இன்று நாம் பயப்படக்கூடிய அல்லது போற்றக்கூடிய அல்லது நம்பக்கூடிய சில அதுபோன்ற காரியங்கள் யாவை? இந்த அதிகாரங்களில் உங்களுக்கான கர்த்தருடைய செய்தி என்னவாக இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? “[கர்த்தரின்] மேன்மையில் மகிழ்ச்சி அடைகிறீர்கள்” என்பதை எப்படிக் காட்டலாம் என்று சிந்தியுங்கள் (2 நேபி 23:3).
“நாங்கள் கிறிஸ்துவைப் பற்றி பேசுகிறோம் … நாங்கள் கிறிஸ்துவில் களிகூருகிறோம்.”
நேபி தனது நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்வதில் வெளிப்படையாக இருந்தான்—குறிப்பாக இயேசு கிறிஸ்து குறித்த சாட்சியம். 2 நேபி 25ஐப்பற்றிய உங்கள் படிப்பு முழுவதும், “[அவனது] பிள்ளைகளை நம்பச் செய்யவும் … கிறிஸ்துவை நம்பவும், தேவனுடன் ஒப்புரவாகவும்” நேபியின் விருப்பங்களைப்பற்றி சிந்தியுங்கள் (வசனம் 23). இரட்சகரைப் பற்றி மக்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று நேபி விரும்பினான்? (வசனங்கள் 12–13, 16 பார்க்கவும்). நேபி எப்படி மக்களை நம்பும்படி ஊக்குவிக்க முயன்றான்? (வசனங்கள் 19–29 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவை நம்பவும் பின்பற்றவும் உங்களை நம்பச் செய்யும் இந்த அதிகாரங்களில் உள்ள பகுதிகளைக் கவனியுங்கள்.
நேபி கிறிஸ்துவைப் பற்றி பேசுவது போல் நம்மில் சிலர் தைரியமாக உணராமல் இருக்கலாம். ஆனால் 2 நேபி 25:23–26ல் நேபியின் போதனைகளில் அவரைப் பற்றி மற்றவர்களிடம் மிகவும் வெளிப்படையாகப் பேச உங்களைத் தூண்டுகிற ஏதாவது ஒன்றை நீங்கள் காணலாம். உதாரணமாக, “நாங்கள் கிறிஸ்துவில் களிகூருகிறோம்” என்ற நேபியின் அறிவிப்பு, இரட்சகர் உங்களுக்கு எவ்வாறு மகிழ்ச்சியைத் தருகிறார்—மற்றும் அந்த மகிழ்ச்சியை நீங்கள் எவ்வாறு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதைப் பற்றி சிந்திக்க உங்களைத் தூண்டலாம்.
“நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம்” (லியகோனா, நவ. 2020, 88–91)ல் மூப்பர் நீல் எல். ஆன்டர்சன் நாம் பல்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு கிறிஸ்துவைப்பற்றிப் வெளியரங்கமாகப் பேசலாம் என்று பரிந்துரைக்கிறார். அவருடைய பரிந்துரைகளில் எது உங்களுக்கு தனித்து நிற்கிறது? கிறிஸ்துவைப்பற்றி பேச, உங்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
இயேசு கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன உணர்த்தப்பட்டதாக உணர்கிறீர்கள்?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்து நீதியில் நியாயந்தீர்ப்பார்.
-
இந்த வசனங்களை உங்கள் பிள்ளைகள் கற்பனை செய்ய உதவ, வெட்டப்பட்ட மரத்தையோ அல்லது மரத்திலிருந்து வளரும் கிளையையோ உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கவும் (அல்லது கீழே உள்ள ஒரு படத்தை பயன்படுத்தவும்). 2 நேபிi 21:1ல் உள்ள “கிளை” இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது, வசனங்கள் 2–5 அவரைப்பற்றி நமக்கு என்ன போதிக்கின்றன?
இயேசு கிறிஸ்து சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறார்.
-
ஒவ்வொருவரும் இரட்சகரைப் பின்பற்றும்போது என்ன நடக்கும் என்பதைப்பற்றி 2 நேபி 21:6–9 என்ன கற்பிக்கின்றது? (4 நேபி 1:15–18) ஐயும் பார்க்கவும். நமது வீட்டை இதைப் போன்று நம்மால் எவ்வாறு மாற்ற முடியும்? உங்கள் பிள்ளைகள் வசனங்கள் 6–7-ல் குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகளின் படங்களைப் பார்த்து மகிழ்வார்கள்—வழக்கமாக எதிரிகளான விலங்குகள், ஆனால் இயேசு மீண்டும் வரும்போது ஒன்றையொன்று காயப்படுத்தமாட்டார்கள் (இந்த வார நிகழ்ச்சி பக்கத்தைப் பார்க்கவும்). உங்கள் பிள்ளைகள் தாங்களும் இந்த விலங்குகளும் இயேசுவுடன் அமைதியாக வாழும் படங்களையும் வரையலாம்.
கர்த்தர் தம் ஜனத்தைக் கூட்டிச்சேர்க்கிறார்.
-
ஜனங்கள் தம்மிடம் கூடிச்சேர உதவுவதற்காக கர்த்தர் “தேசங்களுக்கு ஒரு கொடியை” அமைப்பார் என்று ஏசாயா கூறினான் (2 நேபி 21:11–12 பார்க்கவும்). ஒரு சின்னம் கொடி போன்றது என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரிந்துகொள்ள உதவுங்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் சொந்தக் கொடியை வரைந்து மகிழ்வார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சபைக்கு வருவதற்கான காரணங்களைக் குறிக்கும் படங்கள் அல்லது வார்த்தைகளை உள்ளடக்கியிருக்கலாம். அவர்கள் தங்கள் கொடிகளைப் பற்றி பேசட்டும், மேலும் இயேசு கிறிஸ்துவிடம் “கூடிச்சேர” மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்று சிந்திக்க உதவுங்கள்.
-
2 நேபி 22:4–5 ஒன்றாக வாசித்த பிறகு, கர்த்தர் செய்த சில “மகத்துவமான கிரியைகளை” பற்றி உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் பேசலாம். நாம் அறிவிக்கக்கூடிய கர்த்தருடைய சில “[நம்]” மத்தியிலுள்ள கிரியைகள் என்னென்ன? குடும்ப உறுப்பினர்கள் இது போன்ற ஒரு வாக்கியத்தை முடிக்க முறை எடுக்கலாம்: “நான் கிறிஸ்துவை நம்புகிறேன், அவர்.” இரட்சகர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள நாம் எப்படி உதவலாம்?
“நாங்கள் கிறிஸ்துவில் களிகூருகிறோம்”
-
“கிறிஸ்துவில் களிகூர” உங்கள் பிள்ளைகளுக்கு எவ்விதம் நீங்கள் உதவலாம்? இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கொண்டுவருகிற ஒரு கதையை நீங்கள் சொல்லலாம். உங்கள் குழந்தைகள் கதையில்அல்லது காணொலியில் உள்ள மகிழ்ச்சியான தருணங்களை சுட்டிக்காட்டலாம். நீங்கள் 2 நேபி 25:26 ஒன்றாக வாசிக்கும்போது, அவர்கள் ஏன் “கிறிஸ்துவில் களிகூருகிறார்கள்” என்பதைப் பற்றி பேசலாம்.