மார்ச் 18–24: “இதுவே வழி.” 2 நேபி 31–33,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)
“மார்ச் 18–24. 2 நேபி 31–33,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)
மார்ச் 18–24: “இதுவே வழி.”
2 நேபி 31–33.
நேபியின் பதிவுசெய்யப்பட்ட இறுதி வார்த்தைகளின் மத்தியில், நாம் இந்த பிரகடனத்தைக் காண்கிறோம்: “கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார், நான் கீழ்ப்படிய வேண்டும்” (2 நேபி 33:15). இது நேபியின் வாழ்க்கையின் ஒரு நல்ல சுருக்க உரை. அவன் கர்த்தருடைய சித்தத்தை நாடி துணிவோடு அதற்குக் கீழ்ப்படிய முயற்சித்தான், அது லாபானிடம் இருந்து பித்தளைத் தகடுகளைப் பெற தன் ஜீவனை இக்கட்டில் வைத்ததினாலும் சரி, ஒரு படகைக் கட்டி கடலைக் கடந்ததினாலும் சரி, அல்லது தெளிவோடும் வல்லமையோடும் கிறிஸ்துவின் கொள்கைகளை விசுவாசத்தோடு போதித்ததினாலும் சரி. “நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்லும் நெருக்கமும் இடுக்கமுமான வழியைப்” பின்பற்றி “கிறிஸ்துவில் திடநம்பிக்கையாய் முன்னேற வேண்டிய” தேவையை நேபியால் அழுத்தமாய்ப் பேச முடிந்தது (2 நேபி 31:20, 18), ஏனெனில் அவன் பின்பற்றிய பாதை அதுவே. இந்தப் பாதை, சில வேளைகளில் கடினமானதாக இருந்தாலும், மகிழ்ச்சியானதும் கூட என அனுபவத்தில் அவன் அறிந்திருந்தான், மேலும் “இதைத் தவிர வானத்தின் கீழே தேவனுடைய ராஜ்யத்தில் மனுஷன் இரட்சிக்கப்படும்படிக்கு வேறெந்த வழியோ நாமமோ கொடுக்கப்படவில்லை” (நேபி 31:21).
வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்துவும் அவரது கோட்பாடுமே நித்திய ஜீவனுக்கான ஒரே வழி.
நித்திய ஜீவனுக்கான வழியை ஒரு சில வார்த்தைகளில் சுருக்கி சொல்ல வேண்டியதாக இருந்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? 2 நேபி 31ல் நேபி அதை எப்படி விவரித்தான் என்பதைக் கவனியுங்கள் இந்த அதிகாரங்களில் நீங்கள் காணும் சில கொள்கைகள் அல்லது படிகளை பாதையில் வரைந்து, பாதையில் எழுதவும். ஒவ்வொரு கொள்கையைப் பற்றியும் நேபி கற்பித்தவற்றின் உங்கள் சொந்தச் சுருக்கத்தை உங்கள் வரைபடத்தில் சேர்க்கலாம்.
நீங்கள் 2 நேபி 31:18–20ல் சுவிசேஷப் பாதையில் “முன்னேறிச் செல்லும்” உங்கள் சொந்த முயற்சிகளை மதிப்பிடலாம்.
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்ற போது கீழ்ப்படிதலுக்கு பரிபூரண எடுத்துக்காட்டை அவர் ஏற்படுத்தினார்.
உங்கள் ஞானஸ்நானம் நேற்றோ அல்லது 80 ஆண்டுகளுக்கு முன்னோ நடந்தாலும், அது ஒரு முக்கியமான தருணம். நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற நித்திய உடன்படிக்கை செய்துள்ளீர்கள். இரட்சகரின் ஞானஸ்நானத்தைப்பற்றி 2 நேபி 31:4–13ல், வாசிக்கும்போது உங்கள் ஞானஸ்நானத்தைப்பற்றியும் சிந்தித்துப்பாருங்கள். இதைப் போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்தல் உதவக்கூடும்:
-
கிறிஸ்து ஏன் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்? நான் ஏன் ஞானஸ்நானம் பெறத் தேர்ந்தெடுத்தேன்?
-
நான் ஞானஸ்நானம் பெறும்போது நான் என்ன வாக்குறுதி அளித்தேன்? அதற்கு ஈடாக கர்த்தர் என்ன வாக்குறுதி அளிக்கிறார்? (வசனங்கள் 12–13; மேலும் மோசியா 18:10, 13 பார்க்கவும்).
-
நான் இன்னும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறேன் என்பதை எப்படிக் காட்டுவது?
“முடிவுபரியந்தமும் நிலை நிற்பவனே, இரட்சிக்கப்படுவான்.”
2 நேபி 31: 15–20 ஐ நீங்கள் வாசிக்கும்போது, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், “நான் முடிவுபரியந்தமும் நிலை நிற்கிறேனா” என்று எனக்கு எப்படித் தெரியும்?” இந்த கேள்விக்கு பதிலளிக்க உதவும் நேபியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
மூப்பர் டேல் ஜி. ரென்லெண்ட் போதித்தார்: கிறிஸ்துவின் கோட்பாட்டில் “முடிவு பரியந்தம் நிலைத்திருப்பது தனி படியல்ல-நாம் முதலான நான்கு படிகளை முடித்துவிட்டு பிறகு கீழே பதுங்கி நம் பற்களைக் கடித்துக்கொண்டு இறக்க காத்திருப்பது அல்ல. இல்லை, முடிவு பரியந்தம் நிலைத்திருப்பது படிகளை சுறுசுறுப்பாகவும் நோக்கத்துடனும் திரும்பவும் செயல்படுத்துவதாகும்” (“Lifelong Conversion” [Brigham Young University devotional, Sept. 14, 2021], 2, speeches.byu.edu). கிறிஸ்துவின் (விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியைப் பெறுதல்) கோட்பாட்டின் படிகளை நீங்கள் எவ்வாறு மீண்டும் செய்ய முடியும்?
கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியின் வார்த்தைகள் மூலம், என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எனக்குக் காண்பிப்பார்.
உங்கள் வாழ்க்கையின் அடுத்த படிகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது நிச்சயமற்றதாக உணர்ந்திருக்கிறீர்களா? நேபியின் மக்களுக்கும் இதே போன்ற கவலைகள் இருந்தன (2 நேபி 32:1 பார்க்கவும்). 2 நேபி 32:2–9இல் நேபியின் பதிலைத் தேடுங்கள். நேபி கற்பித்ததை உங்கள் சொந்த வார்த்தைகளில் எவ்வாறு கூறுவீர்கள்? நேபியின் வார்த்தைகள் உண்மை என்று உங்களுக்கு என்ன அனுபவங்கள் கற்பித்தன?
உங்களுக்கு தேவனின் வழிகாட்டுதல் தேவைப்படும் முடிவுகள் அல்லது சூழ்நிலைகளின் (இப்போது மற்றும் எதிர்காலத்தில்) பட்டியலை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும். அவரிடமிருந்து உணர்த்துதல் பெறுவதில் வெற்றிபெற உதவும் 2 நேபி 32லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? “பரிசுத்த ஆவிக்கு எதிராகத் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்த” ஜனங்களை எது வழிநடத்தக் கூடும்? (2 நேபி 33:2).
நேபியின் ஆலோசனையை நீங்கள் சிந்திக்கையில், இரட்சகரின் வார்த்தைகளை நீங்கள் எவ்வாறு படிக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். நீங்கள் அதை சிற்றுண்டி, உண்ணுதல் அல்லது விருந்து என்று விவரிப்பீர்களா? உங்கள் கருத்துப்படி, வித்தியாசம் என்ன? இரட்சகரின் வார்த்தைகளைக் கொண்டு உங்கள் அனுபவத்தை எப்படி ஒரு விருந்து போல் ஆக்க முடியும் என்பதைக் கவனியுங்கள். ஒருவேளை நீங்கள் ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடமிருந்து யோசனைகளைப் பெறலாம்.
எப்போதாவது வருகை தருவதை விட, உங்கள் வாழ்க்கையில் ஒரு நிலையான துணையாக இருக்க பரிசுத்த ஆவியை எப்படி அழைக்கிறீர்கள்? அவருடைய ஆலோசனையை நீங்கள் எவ்வாறு கடைபிடிப்பீர்கள்?
கிறிஸ்துவை நம்புமாறு நம் அனைவரையும் மார்மன் புஸ்தகம் தூண்டுகிறது.
2 நேபி 33 ல் நேபி தன் எழுத்துக்களை முடிக்கும்போது, முதலாவதாக அவன் ஏன் எழுதுகிறான் என்பதை அவன் விவரித்தான். இந்த அதிகாரத்தில் நீங்கள் என்ன காரணங்களைக் காண்கிறீர்கள்? 1 நேபி மற்றும் 2 நேபியில் இதுவரை நீங்கள் வாசித்த கதைகள் மற்றும் போதனைகளைப் பற்றி சிந்தியுங்கள். உங்களையும் கிறிஸ்துவின் மீதான உங்கள் நம்பிக்கையையும் அதிகம் பாதித்தது எது?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
நான் ஞானஸ்நானம் பெறும்போது, நான் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்.
-
இந்த குறிப்பின் முடிவில் இயேசு ஞானஸ்நானம் பெறுவது போன்ற ஒரு படம் உள்ளது. இந்த நிகழ்வைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்ல உங்கள் பிள்ளைகள் இதைப் பயன்படுத்தலாம் (மத்தேயு 3:13–17ஐயும் பார்க்கவும்). இயேசு ஏன் அவரைப் போலவே நாமும் ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்? 2 நேபி 31:4–13-ன் பகுதிகளை நீங்கள் ஒன்றாகப் படிக்கும்போது உங்கள் பிள்ளைகள் காரணங்கள் கேட்கலாம். சமீபத்தில் ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டால் அது உதவியாக இருக்கும்.
பரலோக பிதாவிடம் எப்படித் திரும்புவது என்று இயேசு கிறிஸ்து எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
-
2 நேபி 31ல் உள்ள போதனைகளை உங்கள் பிள்ளைகள் கற்பனை செய்ய உதவ, அவர்கள் இறுதியில் கிறிஸ்துவின் படத்துடன் ஒரு பாதையை வரையலாம். கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரம் மற்றும் இறுதிபரியந்தம் நிலைத்திருப்பது போன்ற அந்தப் பாதையில் படிகளைக் குறிக்கும் படங்களைக் கண்டுபிடிக்க அல்லது வரைய நீங்கள் அவர்களுக்கு உதவலாம். நீங்கள் 2 நேபி 31: 17– 20 ஒன்றாக வாசிக்கும்போது உங்கள் பிள்ளைகள் இந்தப் படத்தை சுட்டிக் காட்டக்கூடும்.
நான் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பார்க்க முடியும்.
-
கிறிஸ்துவின் வார்த்தைகளில் “ருசிப்பது” பற்றி கற்பிக்க, உங்கள் பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த உணவை எப்படி சாப்பிடுவார்கள் என்பதை நடிக்கச் சொல்லுங்கள். 2 நேபி 32:3ல், நாம் எதை விருந்தளிக்க வேண்டும் என்று நேபி கூறினான்? தேவனுடைய வார்த்தையை வாசிப்பதில் இருந்து ருசிப்பது எப்படி வித்தியாசமானது? ஒருவேளை உங்கள் பிள்ளைகள் வேறுபாடுகளை வெளிப்படுத்தலாம். நீங்கள் வேதத்தை ருசித்ததால் நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நான் எப்போதும் ஜெபிக்க வேண்டும் என்று பரலோக பிதா விரும்புகிறார்.
-
2 நேபி 32:8–9ஐ வாசித்த பிறகு, நாம் ஜெபிப்பதை சாத்தான் ஏன் விரும்பவில்லை என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள். நாம் ஏன் “எப்போதும் ஜெபிக்க வேண்டும்” என்று தேவன் விரும்புகிறார்? உங்கள் பிள்ளைகள் அவர்கள் ஜெபிக்கக்கூடிய சூழ்நிலைகளின் பட்டியலை அல்லது படங்களை வரையலாம். இந்தப் பாடலில் உள்ள சில வார்த்தைகளை அவர்களது பட்டியலில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் மாற்றலாம். நாம் எப்போதும் ஜெபிக்கும்போது கர்த்தர் நம்மை எவ்விதம் ஆசீர்வதிக்கிறார்?