“ஏப்ரல் 1–7: ‘கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் தேவனிடத்தில் ஒப்புரவாகுங்கள்.’ யாக்கோபு 1–4,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)
“ஏப்ரல் 1–7. யாக்கோபு 1–4,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)
ஏப்ரல் 1–7: கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் தேவனிடத்தில் ஒப்புரவாகுங்கள்
யாக்கோபு 1–4
நேபியர்கள், நேபியை தங்கள் “சிறந்த காவலனாக” எண்ணினார்கள் (யாக்கோபு 1:10 பார்க்கவும்). ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்தும் அவர்களை அவன் பாதுகாத்தான், பாவத்திற்கு எதிராக அவர்களை எச்சரித்தான் மற்றும் கிறிஸ்துவண்டை வரும்படி அவர்களை வற்புறுத்தினான். இப்போது அந்தப் பணி யாக்கோபிடம் வந்தது, அவனை நேபி ஒரு ஆசாரியனாகவும் ஆசிரியராகவும் அர்ப்பணித்திருந்தான் (யாக்கோபு 1:18 பார்க்கவும்). “பாவத்தில் பிரயாசப்படத் தொடங்குபவர்களை” தைரியமாக எச்சரிக்கும் பொறுப்பை யாக்கோபு உணர்ந்தான், அதே நேரத்தில் மற்றவர்களின் பாவங்களால் காயப்பட்டவர்களின் “காயப்பட்ட ஆத்துமாவை” ஆறுதல்படுத்தினான் (யாக்கோபு 2:5–9 ஐப் பார்க்கவும்). அவன் இரண்டையும் எப்படிச் செய்வான்? அவன் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை சுட்டிக் காட்டுவான்—ஏனென்றால் இரு குழுக்களுக்கும் இரட்சகரின் குணமாக்கல் தேவைப்பட்டது (யாக்கோபு 4ஐப் பார்க்கவும்). அவனுக்கு முன்னிருந்த நேபியின் செய்தியைப் போலவே, “கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் [தேவனிடத்தில்] ஒப்புரவாகுங்கள்” என்ற அழைப்பே யாக்கோபின் சாட்சியுமாக இருந்தது (யாக்கோபு 4:11).
வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்
எனக்கு “கர்த்தரிடம் இருந்து வந்த அழைப்பு” இருக்கிறது.
யாக்கோபுக்கு, தேவனுடைய வார்த்தையை போதிப்பது “கர்த்தரிடம் இருந்து வந்த அழைப்பு,” ஆகவே அவன் “[தன்] பணியை சிறப்பிக்க” கடுமையாக உழைத்தான் (யாக்கோபு 1:17, 19). யாக்கோபு பயன்படுத்திய இந்த சொற்றொடர்கள் உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? ஒரு உருப்பெருக்கும் கண்ணாடி என்ன செய்கிறது என்று சிந்தியுங்கள். இது உங்களுக்கு ஏதேனும் யோசனைகளைத் தருகிறதா? நீங்கள் யாக்கோபு 1: 6– 8, 15–19 மற்றும் 2:1–11ஐ சிந்திக்கும்போது, கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் காரியங்களைப் பற்றி சிந்தியுங்கள். அவைகளை “சிறப்பாக்க” என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் உணர்த்தப்பட்டதாக உணர்கிறீர்கள்?
“உங்களின் இருதயத்தின் பெருமை, உங்கள் ஆத்துமாக்களை அழிக்காதிருப்பதாக!”
நேபியர்களுக்கு பெருமை மற்றும் ஐஸ்வரியத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல் இருந்தது (யாக்கோபு 2:13 ஐப் பார்க்கவும்), மேலும் அந்த பிரச்சனை அவர்களுக்கோ அவர்களது நாளுக்கோ தனித்துவமானதல்ல. இன்று ஐஸ்வர்யத்தின் மீதான அன்பை சத்துரு எவ்வாறு ஊக்குவிக்கிறான்? யாக்கோபு 2:12–21ஐ வாசித்தபிறகு பொருள் செல்வத்தை நீங்கள் எப்படிக் கருத வேண்டும் என்று தேவன் விரும்புவதை உங்கள் சொந்த வார்த்தைகளில் விவரிக்கவும். நீங்கள் கற்றுக் கொண்டிருப்பவைகளினிமித்தம் என்ன செய்ய உணர்த்தப்பட்டதாக உணருகிறீர்கள்?
கற்புடைமையில் தேவன் களிகூர்கிறார்.
நீங்கள் யாக்கோபு 2:22–35; 3:10–12, வாசிக்கும்போது; தேவனுக்கு கற்புடைமை ஏன் மிகவும் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுவது எது? யாக்கோபின் காலத்திலும் நம்முடைய காலத்திலும் ஒழுக்கக்கேட்டின் சில எதிர்மறையான விளைவுகள் யாவை? கற்புடைய வாழ்க்கை வாழ்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன?
நீங்கள் கற்புடைமை நியாயப்பிரமாணத்துக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு எப்படி உதவுவீர்கள்? “Your body is sacred” in For the Strength of Youth: A Guide for Making Choices (பக்கங்கள் 22–29)இல் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம், பாலியல் உணர்வுகள் மற்றும் உறவுகள் பற்றிய தேவனின் தரங்களின் விளக்கமாகும். நீங்கள் கற்புடைமை நியாயப்பிரமாணத்தை ஏன் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதை விளக்க உதவும் அந்த ஆதாரத்தில் நீங்கள் வேறு என்ன காண்கிறீர்கள்?
பாலியல் தூய்மை பற்றிய தேவனின் தரநிலை நீங்கள் கேட்கும் மற்ற செய்திகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? கற்புடைய வாழ்க்கை வாழ்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன?
இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியின் மூலம் நான் தேவனோடு ஒப்புரவாக முடியும்.
“கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியின் மூலம் [தேவனோடு] ஒப்புரவாகும்படி” தம் ஜனங்களிடம் யாக்கோபு வேண்டிக்கொண்டான் (யாக்கோபு 4:11). ஒப்புரவு என்பதன் ஒரு அர்த்தம் நட்பு அல்லது நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதாகும். உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்கள் சிந்திக்கும்போது, பரலோக பிதாவிடமிருந்து நீங்கள் தொலைவில் இருப்பதாக உணர்ந்த ஒரு நேரத்தைப் பற்றி சிந்தியுங்கள். இந்த உறவை மீட்டெடுக்க இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவுகிறார்? தேவனுடன் சமரசம் செய்ய உதவும் எந்த அறிவுரையை இந்த அதிகாரத்தில் நீங்கள் காணலாம்? ( வசனங்கள் 4–14 பார்க்கவும்).
மத்தேயு 5: 23–24லிருந்து என்ன கூடுதல் உள்ளுணர்வுகளைப் பெறுகிறீர்கள்? தேவனுடனும் மற்றவர்களுடனும் சமரசம் செய்ய இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?
2 நேபி 10:24 ஐயும் பார்க்கவும்.
இரட்சகரை நோக்கிப் பார்ப்பதால் ஆவிக்குரிய குருட்டுத்தனத்தை என்னால் தவிர்க்க முடியும்.
யாக்கோபு தன் ஜனங்களை, தேவனிடம் முழுவதுமாக திருப்ப முனைந்தபோது, ஆவிக்குரிய குருடாக இருக்க வேண்டாம் என்றும், சுவிசேஷத்தின் “தெளிவான வார்த்தைகளை” வெறுக்க வேண்டாம் என்றும் அவன் அவர்களிடம் எச்சரித்தான் (யாக்கோபு 4:13–14 பார்க்கவும்). யாக்கோபு 4:8–18 ன் படி, ஆவிக்குரிய குருட்டுத்தனத்தைத் தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
காயப்பட்ட ஆத்துமாவை தேவன் குணப்படுத்துகிறார்.
-
“காயப்பட்ட ஆத்துமா” எவ்வாறு சுகமடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவ, நமது சரீரங்கள் எவ்வாறு காயமடைகின்றன மற்றும் அவை சுகமடைய எவை உதவுகின்றன என்பதை நீங்கள் ஒன்றாக விவாதிக்கலாம். ஒருவேளை குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் காயப்பட்ட நேரங்களையும் மற்றும் சுகமடைய எது அவர்களுக்கு உதவியது என்றும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த உரையாடலின் ஒரு பகுதியாக நீங்கள் அவர்களுக்கு கட்டுகள் அல்லது மருந்தைக் காட்டலாம். உங்கள் ஆவி குணமடைய வேண்டியிருக்கும் போது, இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவினார் என்பதை நீங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது தேவைப்படுகிறவர்களுக்கு உதவ முடியும்.
-
யாக்கோபின் காலத்தில் இருந்த சிலர் பெரும் செல்வந்தர்களாக இருந்தனர், ஆனால் அவர்கள் தங்களிடம் இருந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. யாக்கோபு 2:17–19ல் உள்ள யாக்கோபுவின் போதனைகளை நீங்கள் வாசிக்கும்போது, இந்த வசனங்களில் உள்ள வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களுடன் பொருந்தும் படங்களையோ அல்லது பொருட்களையோ உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நீங்கள் இந்த பொருட்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று விளக்கலாம்; ஒருவேளை நீங்கள் பொருட்களை உங்களுடன் அல்லது ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள அவர்களை அழைக்கலாம். நீங்கள் பகிரும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக உணர உதவுவதற்கு வேறு என்ன பகிர்ந்து கொள்ளலாம்?
-
யாக்கோபு 2:17ஐ ஒன்றாக வாசித்த பிறகு, பரலோக பிதா அவர்களுடன் பகிர்ந்து கொண்ட சில ஆசீர்வாதங்களை உங்கள் பிள்ளைகள் சொல்லலாம். நாம் ஏன் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்?
நான் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை பெலப்படுத்த முடியும்.
-
கிறிஸ்து மீது யாக்கோபின் நம்பிக்கை மிகவும் வலுவாக இருந்தது, அதை அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நம்பிக்கையை எப்படி வளர்ப்பது என்று உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க, நம் உடலை வலுப்படுத்த நாம் செய்யும் விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம். இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்த நாம் என்ன செய்யலாம்? அவர்களின் விசுவாசத்தை “அசையாமல்” செய்ய யாக்கோபும் அவனது ஜனமும் என்ன செய்தார்கள் என்பதைக் கண்டறிய அவர்களுக்கு உதவ யாக்கோபு 4:6ஐ ஒன்றாகப் படியுங்கள்.
-
தங்கள் விசுவாசத்தில் “அசைக்கப்படாமல் இருத்தல்” என்பதன் பொருளை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவி செய்ய, அருகில் இருக்கும் ஒரு பெரிய மரத்தைக் கண்டுபிடித்து அதன் தனித்தனிக் கிளைகளை அசைக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்வது ஒரு வழியாகும். பின்னர் அதன் அடிமரத்தை அவர்கள் அசைக்க முயற்சிக்க விடுங்கள். அடிமரத்தை அசைப்பது ஏன் கடினமாக இருக்கிறது? யாக்கோபு 4:6, 10–11ல் உள்ள எந்த சொற்றொடர்கள் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை அசைக்காமல் செய்ய நாம் என்ன செய்ய முடியும் என்பதை விவரிக்கிறது?
-
(மத்தேயு 7:24–27 பார்க்கவும்).