“மே 13–19: ‘ஒருபோதும் அந்தகாரமடையாத … ஒளி’ மோசியா 11–17,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)
“மே 13–19. மோசியா 11–17,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)
மே 13–19: “ஒருபோதும் அந்தகாரமடையாத … ஒளி”
மோசியா 11–17
ஒரு தீப்பொறியிலிருந்து பெரும் நெருப்பு தொடங்க முடியும். ஒரு வல்லமைமிக்க இராஜா மற்றும் அவனது அவைக்கு எதிராக சாட்சியளித்த ஒரே மனுஷன் அபிநாதி. அவனுடைய மிகுதியான வார்த்தைகள், புறக்கணிக்கப்பட்டு அவன் மரண தண்டனையளிக்கப்பட்டான். இருப்பினும் “ஒருபோதும் அந்தகாரமடையாத … ஒளியாகிய” இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அவனது சாட்சி (மோசியா 16:9), இளம் ஆசாரியனாகிய ஆல்மாவுக்குள் ஏதோவொன்றை பொறிதட்டச் செய்தது. ஆல்மா அநேகரை மனந்திரும்புதலுக்குள்ளாகவும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்திற்குள்ளும் கொண்டுவந்தபோது, அந்த மனமாற்றப் பொறி மெதுவாக வளர்ந்தது. அபிநாதியைக் கொன்ற தீப்பிழம்புகள் முடிவாக அணைந்தன, ஆனால் அவனது வார்த்தைகள் உருவாக்கிய விசுவாச நெருப்பு, நேபியர்கள் மீதும், இன்று அவனுடைய வார்த்தைகளை வாசிப்பவர்கள் மீதும் நீடித்த செல்வாக்கைப் பெற்றிருக்கும். நமது சாட்சிகளினிமித்தம் நம்மில் அதிகமானோர் அபிநாதி போல் ஒருபோதும் எதிர்கொள்ள மாட்டோம், ஆனால் நாமனைவருக்கும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது வரும் நமது தைரியம் மற்றும் விசுவாசத்தின் சோதனைத் தருணங்கள் வரும். ஒருவேளை அபிநாதியின் சாட்சியைப் படிப்பது, சாட்சியின் தீப்பிழம்புகளையும் அப்படியே உங்கள் இருதயத்தின் தைரியத்தையும் கூட மூட்டும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்
நான் தனிமையில் நிற்கும்போது கூட நான் இயேசு கிறிஸ்துவுக்காக நிற்க முடியும்.
நீங்கள் மோசியா 11-13 17, படிக்கும் போது, இந்த குறிப்பில் உள்ள அபிநாதியின் படங்களைப் பாருங்கள். கிறிஸ்துவுக்கு சாட்சியாக நிற்பதைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? குறிப்பாக, இது போன்ற பத்திகளிலும் கேள்விகளிலும் உங்கள் படிப்பில் நீங்கள் கவனம் செலுத்தலாம்:
-
நோவாவையும் அவனுடைய மக்களையும் எப்படி விவரிப்பீர்கள்? தேவனின் செய்தியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள அபிநாதிக்கு ஏன் தைரியம் தேவை? (மோசியா 11:1–19, 27–29; 12:9–15 பார்க்கவும்).
-
அபிநாதியை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? அவனது சாட்சியத்தில் தைரியமாக இருக்க உதவியது அபிநாதிக்கு என்ன புரிந்தது? (மோசியா 13:2–9, 28, 33–35; 17:8–10, 20 பார்க்கவும்).
இரட்சகரையும் அவருடைய சுவிசேஷத்தையும் பாதுகாப்பதில் நீங்கள் தனித்து நிற்பதாக எப்போது உணர்ந்தீர்கள்? அவர் உங்களுடன் இருப்பதை உணர்ந்தது எப்படி உங்களுக்கு உதவியது? இதை நீங்கள் சிந்திக்கும்போது, 2 ராஜாக்கள் 6:14-17ல் உள்ள எலிசா மற்றும் அவனுடைய இளம் வேலைக்காரன் பற்றிய பதிவை நீங்கள் படிக்கலாம். இந்த விவரம்பற்றி உங்களுக்கு உணரத்தியது எது?
அபிநாதியிடம் நீங்கள் கற்றுக்கொண்டதை எப்படிப் பயன்படுத்துவீர்கள்? வேறு என்ன உதாரணங்களைப்பற்றி நீங்கள் சிந்திக்க முடியும்?
தேவ வார்த்தையைப் புரிந்துகொள்ள நான் என் இருதயத்தைப் பயன்படுத்த வேண்டும்.
நோவா ராஜாவின் ஆசாரியர்கள் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்திருந்தனர். கட்டளைகளை கற்பிக்க அவர்கள் வேதப் பகுதிகளை மேற்கோள் காட்டக்கூடும். இருப்பினும், இரட்சகரின் சுவிசேஷத்தால் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அது ஏன்?
மோசியா 12:19–37 நீங்கள் வாசிக்கும்போது இதைப் பற்றி சிந்தியுங்கள். தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் இதயத்தைப் பயன்படுத்துவதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள அணுகும் விதத்தில் எந்த மாற்றங்களும் செய்ய எந்த வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் உங்களுக்கு உணர்த்துகின்றன?
தேவனின் கட்டளைகள் என் இதயத்தில் எழுதப்பட வேண்டும்.
ஆசாரியர்களின் “[இருதயங்களில்] கட்டளைகள் எழுதப்படவில்லை” என்ற அபிநாதியின் அவதானிப்புகளைப்பற்றி சிந்தியுங்கள்.(மோசியா 13:11) இந்த சொற்றொடரின் அர்த்தம் என்ன? மோசியா 13:11–26ஐ நீங்கள் வாசிக்கும்போது, இந்தக் கட்டளைகள் உங்கள் இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
எரேமியா 31:31–34; 2 கொரிந்தியர் 3:3ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்து எனக்காக பாடனுபவித்தார்.
மோசியா 14–15ல், இரட்சகரையும் உங்களுக்காக அவர் என்ன பாடனுபவித்தார் என்பதையும் விவரிக்கிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கவனியுங்கள். அவர் மீதுள்ள உங்கள் அன்பையும் நன்றியுணர்வையும் ஆழப்படுத்த எந்த வசனங்கள் உதவுகின்றன?
இயேசு கிறிஸ்து எப்படி பிதாவாகவும் குமாரனாகவும் இருக்கிறார்?
குமாரனாகிய தேவனாகிய இயேசு கிறிஸ்து, மீட்பராக இருப்பார் (மோசியா 15:1 பார்க்கவும்), மாம்சத்தில் வாசம்பண்ணுபவராகவும், மனிதனாகவும் தேவனாகவும் மாறுவார் என்று அபிநாதி கற்பித்தான். (வசனங்கள் 2–3). அவன் முற்றிலும் பிதாவாகிய தேவனின் சித்தத்துக்கு தன்னை அர்ப்பணித்தான்.( வசனங்கள் 5–9). இதினிமித்தம் இயேசு கிறிஸ்து தேவ குமாரனாகவும், பிதாவாகிய தேவனின் பூலோக பரிபூரண பிரதிநிதியாகவும் இருக்கிறார் (யோவான் 14:6–10 பார்க்கவும்).
நாம் அவரது மீட்பை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் “அவரது சந்ததியாகிறோம்” மற்றும் “தேவனுடைய ராஜ்யத்தின் சுதந்தரவாளிகள்” (மோசியா 15:11–12) என்னும் அர்த்தத்தில் இயேசு கிறிஸ்து பிதாவாகவும் இருக்கிறார். பிற வார்த்தைகளிலெனில், நாம் அவர் மூலம் ஆவிக்குரிய விதமாக மறுபடியும் பிறந்தவர்களாகிறோம் (மோசியா 5:7 பார்க்கவும்).
பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய சத்தியங்களை அறிந்துகொள்வது முக்கியமானதென ஏன் உணருகிறீர்கள்? அபிநாதியின் சாட்சியம் அவர்கள் மீதான உங்கள் சாட்சியை எவ்வாறு பலப்படுத்துகிறது?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
நான் தனிமையில் நிற்கும்போது கூட நான் இயேசு கிறிஸ்துவுக்காக நிற்க முடியும்.
-
நம் வாழ்வில் சில சமயங்களில், இயேசு கிறிஸ்துவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்துக்கு எதிரான தேர்வுகளைச் செய்ய நாம் அனைவரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறோம். அது பிரசித்தமற்றதாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் சாட்சியாக நிற்பதைப் பற்றி அபிநாதியிடம் இருந்து உங்கள் பிள்ளைகள் என்ன கற்றுக் கொள்ள முடியும்? அபிநாதிபற்றி அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேளுங்கள்.
-
உங்கள் குழந்தைகள் அபிநாதியின் கதையின் சில பகுதிகளை நடித்து ரசிக்கக்கூடும். மற்றவர்கள் ஏதாவது தவறு செய்ய விரும்பினால் அவர்கள் என்ன செய்யலாம் என்பதைப் பயிற்சி செய்ய அவர்கள் நிஜ வாழ்க்கை காட்சிகளை நடிக்கலாம். அல்லது அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் தைரியமாக இருந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அபிநாதி இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றினான்? (மோசியா 13:2–9; 17:7–10 பார்க்கவும்). நோவா ராஜா தனக்கு சரியென்று தெரிந்ததை ஏன் செய்யவில்லை? (மோசியா 17:11–12 பார்க்கவும்).
நான் பத்துக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
-
நோவா ராஜாவின் ஆசாரியர்கள் கட்டளைகளை அறிந்திருந்தார்கள் ஆனால் அவைகளை “[தங்கள்] இருதயங்களில் எழுதவில்லை” (மோசியா 13:11). உங்கள் பிள்ளைகள் கட்டளைகளை அறிந்து அவற்றை நேசிக்க எப்படி உதவுவீர்கள்? ஒருவேளை அவர்கள் மோசியா 12:33–36 மற்றும் 13:11–24லிருந்து கட்டளைகளை இருதய வடிவ காகிதத்தில் எழுதலாம். அவர்கள் செய்யும்போது, இந்தக் கட்டளைகளின் அர்த்தம் என்ன, அவற்றைப் பின்பற்றுவது எப்படி என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். இந்தக் கட்டளைகளை எப்படி நம் இருதயத்தில் எழுதுகிறோம்?
-
கட்டளைகளைக் கடைபிடிப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் யாவை?
பரலோக பிதா அவரிடம் என்னை திரும்ப வழிநடத்த இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.
-
இது ஒரு சிறிய அதிகாரம் என்றாலும், மோசியா 14இல் இயேசு கிறிஸ்துவை விவரிக்கும் பல வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் உள்ளன. ஒருவேளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் அந்த அதிகாரத்தை ஒன்றாகப் படிக்கும்போது அவற்றைப் பட்டியலிடலாம். இந்த வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நீங்கள் படிக்கும்போது இரட்சகரைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம்.
-
இயேசு கிறிஸ்துவைப் பற்றி கற்பிக்க, அபிநாதி தீர்க்கதரிசி ஏசாயாவை மேற்கோள் காட்டினான், அவன் நம்மை காணாமல் போன ஆடுகளுடன் ஒப்பிட்டான். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் எதையாவது இழந்தபோது அல்லது தங்களைத் தாங்களே இழந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? அவர்கள் என்ன செய்தார்கள்? பின்னர் அவர்கள் ஒன்றாக மோசியா 14:6 மற்றும் 16:4–9 வாசிக்கலாம். தேவனிடமிருந்து அலைந்து திரியும் ஆடுகளைப் போல் நாம் எப்படி இருக்கிறோம்? திரும்பி வர இயேசு கிறிஸ்து எவ்வாறு உதவுகிறார்?