என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
நவம்பர் 11–17: “அவிசுவாசமென்னும் அந்த திரையைக் கிழி” ஏத்தேர் 1–5


“நவம்பர் 11–17: ‘அவிசுவாசமென்னும் அந்த திரையைக் கிழி’ ஏத்தேர்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“நவம்பர் 11–17. ஏத்தேர் 1–5,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)

வனாந்தரத்தின் வழியே யாரேதியர் பயணித்தல்.

The Jaredites Leaving Babel (யாரேதியர் பாபேலை விட்டுப் போகுதல்) – ஆல்பின் வெசல்கா

நவம்பர் 11–17: “அவிசுவாசமென்னும் அந்த திரையைக் கிழி”

ஏத்தேர் 1–5

நம்முடைய வழிகளைவிட தேவனுடைய வழிகள் மேலானவை என்பது உண்மையாயிருக்கும்போது, நாம் எப்போதும் அவருடைய சித்தத்திற்கு அடிபணியவேண்டும்.நாமாக சிந்திக்கவும் செயல்படவும் அவர் நம்மை ஊக்குவிக்கிறார், அந்த ஒரு பாடத்தை யாரேதும் அவனுடைய சகோதரனும் கற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, “பூமியின் மேலுள்ள சகல தேசங்களிலும் சிறந்த” ஒரு புதிய தேசத்திற்கு பயணமாகும் எண்ணம் யாரேதின் மனதில் தொடங்கியதாகத் தோன்றுகிறது, “நீ என்னிடத்தில் இதுவரைக்கும் நீண்ட நேரம் கூக்குரலிட்டதினிமித்தம், இதை நான் உனக்குச் செய்வேன்” என யாரேதின் சகோதரனிடத்தில் சொல்லி கோரிக்கையை வழங்குவதாக வாக்களித்தார் (ஏத்தேர் 1:38–43 பார்க்கவும்). தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அவர்களை எடுத்துச் செல்கிற தோணிகளில் வெளிச்சம் தேவைப்பட்டபோது, யாரேதின் சகோதரன் “நான் என்ன செய்யவேண்டுமென நீ வாஞ்சிக்கிறாய்?” என்ற நாம் கேட்கிற வழக்கமான கேள்வியைக் கேட்டு ஒரு தீர்வை வழங்க கர்த்தர் அவனை கேட்டார். (ஏத்தேர் 2:23). அவர் நம் எண்ணங்களையும் யோசனைகளையும் கேட்க விரும்புகிறார், மேலும் அவர் செவிசாய்த்து அவருடைய உறுதிப்படுத்தலை வழங்குவார் அல்லது இல்லையெனில் நமக்கு அறிவுரை வழங்குவார். சில நேரங்களில் நாம் நாடுகிற ஆசீர்வாதங்களிலிருந்து நம்மை பிரிக்கிற ஒரே காரியம் நம்முடைய “அவநம்பிக்கையின் திரையே” மற்றும் “அந்த திரையை நாம் கிழிக்க” முடியுமானால், (ஏத்தேர் 4:15) கர்த்தர் நமக்காக என்ன செய்ய வாஞ்சையாயிருக்கிறார் என்பதைப்பற்றி நாம் ஆச்சரியப்படலாம்.

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஏத்தேர் 1:33–43

நான் கர்த்தரை நோக்கி கூக்குரலிடும்போது அவர் என்மீது மனதுருக்கமாயிருப்பார்.

ஏத்தேர் 1:33–43 யாரேதின் சகோதரனின் மூன்று ஜெபங்களைப்பற்றி கூறுகிறது. இந்த ஜெபங்கள் ஒவ்வொன்றுக்கும் கர்த்தருடைய பதிலிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஜெபத்தில் நீங்கள் அவரிடத்தில் கூக்குரலிட்டபோது, கர்த்தருடைய மனதுருக்கத்தை அனுபவித்த ஒரு நேரத்தைப்பற்றி சிந்தியுங்கள். இந்த அனுபவத்தை நீங்கள் பதிவுசெய்து, உங்கள் சாட்சியைக் கேட்க விரும்புகிற ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்பலாம்.

ஏத்தேர் 2; 3:1–6; 4:7–15

வேத பாட வகுப்பு சின்னம்
என்னுடைய வாழ்க்கைக்கான வெளிப்படுத்தலை என்னால் பெறமுடியும்.

தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்: “வெளிப்படுத்தலைப் பெறுவதற்கு உங்களுடைய ஆவிக்குரிய திறனை அதிகரிக்க நான் உங்களிடம் வேண்டுகிறேன். … பரிசுத்த ஆவியின் வரத்தை அனுபவிக்கவும், பரிசுத்த ஆவியின் குரலை மிக அடிக்கடியும் மிக தெளிவாகவும் கேட்கவும் தேவையான ஆவிக்குரிய பணியைச் செய்வதைத் தேர்ந்தெடுக்கவும்” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 96).

நீங்கள் ஏத்தேர் 2; 3:1–6; 4:7–15, படிக்கும்போது, தலைவர் நெல்சன் பேசிய “ஆவிக்குரிய பணியைப்பற்றி” நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? யாரேதின் சகோதரனுக்கிருந்த கேள்விகள் அல்லது அக்கறைகளையும், மற்றும் அவற்றைப்பற்றி அவன் என்ன செய்தான் என்பதை நீங்கள் ஒரு வண்ணத்தில் குறிக்கலாம், மேலும் கர்த்தர் அவனுக்கு எவ்வாறு உதவினார் மற்றும் அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தினார் என்பதை மற்றொரு வண்ணத்தில் நீங்கள் குறிக்கலாம்.

நீங்கள் படிக்கும்போது சிந்திப்பதற்கான சில கேள்விகள் இதோ:

  • ஏத்தேர் 2:18–25 இல் யாரேது கேட்ட கேள்விகளுக்கு கர்த்தர் பதிலளித்த விதத்தில் உங்களை கவர்ந்தது எது?

  • ஜெபிக்கக் கற்றுக்கொண்ட ஒருவருக்கு உதவ ஏத்தேர் 3:1–5ஐ எவ்வாறு பயன்படுத்தலாம்?

  • கர்த்தரிடமிருந்து வெளிப்பாட்டை பெறுவதிலிருந்து உங்களை எது தடுக்கலாம்? ( ஏத்தேர் 4:8-10 பார்க்கவும்). அவரிடமிருந்து எப்படி அடிக்கடி வெளிப்பாட்டை பெற முடியும்? (ஏத்தேர் 4:7, 11–15 பார்க்கவும்).

  • உங்கள் வாழ்க்கையில் “அவிசுவாசத்தின் திரையைக் கிழித்தல்” (ஏத்தேர் 4:15) என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

தனிப்பட்ட வெளிப்பாடு பற்றி யாரேதின் சகோதரனிடமிருந்து நீங்கள் வேறு என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் “தனிப்பட்ட வெளிப்பாட்டிற்கான ஒரு கட்டமைப்பு” பற்றிக் கற்பித்தார்.(லியஹோனா, நவ். 2022, 16–19). ஒரு படச்சட்டத்தை வரைந்து ஒவ்வொரு பக்கத்திலும் கட்டமைப்பின் நான்கு கூறுகளை எழுதவும். இந்த கட்டமைப்பானது “வெளிப்பாட்டைப் பெறுவதற்கான உங்கள் திறனை அதிகரிக்க” எவ்வாறு உதவும்?

ஏத்தேர் 2:14–15; 3:1–20

தம்முடைய சிட்சை மூலம், மனந்திரும்பி தன்னிடம் வரும்படி கர்த்தர் என்னை அழைக்கிறார்.

யாரேதின் சகோதரனைப் போன்ற பெரிய தீர்க்கதரிசி கூட கர்த்தரால் சிட்சிக்கப்பட வேண்டியதாயிற்று. கர்த்தரின் சிட்சை பற்றி ஏத்தேர் 2:14–15 இலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஏத்தேர் 3:1-20 இல் உள்ள அவனது அனுபவங்களுக்கு கர்த்தரின் சிட்சையும், யாரேதின் சகோதரனின் பதிலும் அவனை எவ்வாறு தயார்படுத்தியிருக்கலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

ஏத்தேர் 2:16–25

என்னுடைய “பெரும் ஆழத்தைக்” கடக்க கர்த்தர் என்னை ஆயத்தப்படுத்துவார்.

சில சமயங்களில், “பெரிய ஆழத்தை” கடப்பதே தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரே வழி. ஏத்தேர் 2:16–25ல் உங்கள் வாழ்க்கையின் ஒற்றுமைகளை நீங்கள் காண்கிறீர்களா? உங்கள் சவால்களுக்காக கர்த்தர் எவ்வாறு உங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்? வருங்காலத்தில் நீங்கள் செய்யவேண்டுமென அவர் விரும்புகிறதற்காக ஆயத்தப்படுத்த இப்போது நீங்கள் என்ன செய்யவேண்டுமென உங்களை அவர் கேட்கக்கூடும்?

எல். டாட் பட்ஜ், “நிலையான மற்றும் மீளும் நம்பிக்கை,” லியஹோனா, நவ். 2019, 47–49 ஐயும் பார்க்கவும்.

 நீங்கள் கற்பதை பயன்படுத்துங்கள். சுவிசேஷ படிப்பு நம் வாழ்க்கையை மாற்றுவதற்கு நமக்கு உணர்த்த வேண்டும். ஏத்தேர் 4:11–12 வாசித்த பின்பு, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில தாக்கங்களை நீங்கள் பட்டியலிடலாம் மற்றும் அவை உங்களை நல்லதைச் செய்யும்படி வற்புறுத்துகின்றனவா என்பதைக் கருத்தில் கொள்ளலாம். என்ன மாற்றங்களை நீங்கள் செய்யவேண்டுமென நீங்கள் உணருகிறீர்கள்?

ஏத்தேர் 5

மார்மன் புஸ்தகத்தின் உண்மைத்தன்மைக்கு சாட்சிகள் சாட்சியமளிக்கின்றனர்.

ஏத்தேர் 5ல் உள்ள மரோனியின் தீர்க்கதரிசனத்தை நீங்கள் படிக்கும்போது, மார்மன் புத்தகத்தின் பல சாட்சிகளை தயார் செய்வதில் கரத்தரின் நோக்கத்தைப் பற்றி சிந்தியுங்கள். மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தை என்று நம்புவதற்கு எந்த சாட்சிகள் உங்களுக்கு உணர்த்தின? மார்மன் புஸ்தகம் உங்களுக்கு எப்படி “தேவனின் வல்லமையையும் அவருடைய வார்த்தையையும்” காட்டியுள்ளது? (ஏத்தேர் 5:4).

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஏத்தேர் 1:33–37; 2:16–25; 3:1–6

பரலோக பிதா என் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார்.

  • உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியாத மொழி உங்களுக்குத் தெரிந்தால், அந்த மொழியில் சில எளிய வழிமுறைகளைக் கொடுங்கள் (அல்லது வேறொரு மொழியின் பதிவை இயக்கவும்). ஏத்தேர் 1:33–37 இல் யாரேதின் சகோதரன் ஏன் உதவிக்காக ஜெபித்தான் என்பதை விளக்க இதைப் பயன்படுத்தலாம்.

  • நீங்கள் ஏத்தேர் 2:16–17 ஐப் படிக்கும்போது உங்கள் பிள்ளைகள் ஒரு தோணி கட்டுவது போல் நடிக்கலாம். யாரேதியர்கள் தங்கள் தோணிகளில் கொண்டிருந்த பிரச்சனைகளையும் (ஏத்தேர் 2:19 பார்க்கவும்) மற்றும் யாரேதின் சகோதரனின் ஜெபங்களுக்கு கர்த்தர் பதிலளித்த வெவ்வேறு வழிகளையும் நீங்களும் உங்கள் குழந்தைகளும் வாசிக்கலாம் (ஏத்தேர் 2:19–25; 3:1–6 பார்க்கவும்) . இந்த குறிப்பின் முடிவில் உள்ள படம் மற்றும் நிகழ்ச்சி பக்கம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் கதை சொல்ல உதவும். ஜெபத்தைப் பற்றி யாரேதின் சகோதரனிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நீங்கள் உதவிக்காக ஜெபித்து, பரலோக பிதா உங்களுக்கு உதவிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்,

ஏத்தேர் 3:6–16

நான் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டேன்.

  • அவர்கள் வளரும்போது, உங்கள் பிள்ளைகள் தேவனைப் பற்றியும், தங்களைப் பற்றியும், தங்கள் உடல்களைப் பற்றியும் பல தவறான செய்திகளை எதிர்கொள்வார்கள். ஏத்தேர் 3:6–16ல் இந்தத் தலைப்புகள் பற்றிய சத்தியங்களைக் கண்டறிய உங்களுக்கு உதவுமாறு அவர்களிடம் நீங்கள் கேட்கலாம். ஏத்தேர் 3:13, 15-ல் கற்பிக்கப்பட்ட சத்தியத்தை வலியுறுத்த, நீங்கள் இரட்சகரின் படத்தை ஒன்றாகப் பார்த்து, அவருடைய உடலின் பல்வேறு பாகங்களைச் சுட்டிக்காட்ட உங்கள் பிள்ளைகளை அழைக்கலாம். பின்னர் அவர்கள் தங்கள் சொந்த உடலின் அதே பகுதியை சுட்டிக்காட்ட முடியும். நீங்களும் உங்கள் குழந்தைகளும் உங்கள் சரீரங்களுக்கு ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி பேசலாம்.

வயலில் ஓடும் குழந்தை

தேவனின் சாயலில் நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.

ஏத்தேர் 5

மூன்று சாட்சிகள் மார்மன் புஸ்தகத்தைப் பற்றி சாட்சியமளித்தனர்.

  • மார்மன் புஸ்தகத்தின் உண்மையை நிறுவ மூன்று சாட்சிகள் உதவுவார்கள் என்று மரோனி தீர்க்கதரிசனம் கூறினான். சாட்சி என்றால் என்ன என்பதைக் கற்பிக்க, உங்கள் பிள்ளைகள் அவர்கள் பார்த்த அல்லது மற்றவர்கள் பார்க்காத ஒரு அனுபவத்தை விவரிக்கச் சொல்லலாம். நீங்கள் ஏத்தேர் 5 ஒன்றாக வாசிக்கும்போது, தேவன் ஏன் சாட்சிகளை தம்முடைய வேலையில் பயன்படுத்துகிறார் என்பதைப் பற்றி பேசலாம். மார்மன் புஸ்தகம் உண்மை என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள் மற்றும் உங்கள் சாட்சியை மற்றவர்களுடன் எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

யாரேதின் சகோதரனுக்கு முன்பாக இயேசு 16 கற்களைத் தொடுதல்

Sowest Thou More Than This? (இதற்கும் அதிகமாய் நீ விதைப்பாயோ?) – மார்கஸ் ஆலன் வின்சென்ட்