என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
நவம்பர் 18–24: “பொல்லாப்பு முற்றுப்பெற” ஏத்தேர் 6–11


“நவம்பர் 18–24: ‘பொல்லாப்பு முற்றுப்பெற’ ஏத்தேர் 6–11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“நவம்பர் 18–24. ஏத்தேர் 6–11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)

படம்
கடலில் யாரேதியரின் தோணிகள்

I Will Bring You Up Again out of the Depths (ஆழங்களிலிருந்து நான் உங்களை மீண்டும் மேலே கொண்டு வருவேன்) – ஜோனத்தான் ஆர்தர் க்ளார்க்

நவம்பர் 18–24: “பொல்லாப்பு முற்றுப்பெற”

ஏத்தேர் 6–11

யாரேதியர் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப்பின், அவர்களது பூர்வகால நாகரீகத்தின் இடிபாடுகளை நேபியர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த இடிபாடுகளில் ஒரு மர்மமான பதிவேடு இருந்தது - “முழுவதுமாய் பொறிக்கப்பட்டதும்,” “பசும்பொன்னாலானதுமான” மற்றும் நேபியர்கள் அதை படிக்க “அளவுக்கு அதிகமாக வாஞ்சையுடனிருந்தனர்” (மோசியா 8:9; 28:12). இன்று அது ஏத்தேரின் புஸ்தகம் என்றழைக்கப்படுகிற பதிவேட்டின் சுருக்கமாக உங்களிடமிருக்கிறது. நேபியர்கள் அதைப் படித்தபோது, ​​யாரேதியர்களின் சோகமான வீழ்ச்சியைப் பற்றி அறிந்து “துக்கப்படச் செய்தது”. “இருப்பினும் அது அவர்களுக்கு அதிக ஞானத்தை கொடுத்தது, அதினிமித்தம் அவர்கள் களிகூர்ந்தார்கள்.”(மோசியா 28:12, 18). நீங்களும் இந்த புத்தகத்தில் சோகமான தருணங்களைக் காணலாம். ஆனால் இந்த அறிவின் வரத்தில் நீங்கள் களிகூரலாம். மரோனி எழுதினான், “பொல்லாப்பு முற்றுப்பெறவும், மனுபுத்திரரின் இருதயங்களின் மேல் சாத்தானுக்கு எந்த வல்லமையும் இராத சமயம் வரவும், நான் … இவைகளை எழுதும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறேன்” (ஏத்தேர் 8:23,26).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

ஏத்தேர் 6:1–12

என் அநித்தியப் பயணம் முழுவதும் கர்த்தர் என்னை வழிநடத்துவார்.

உங்கள் வாழ்க்கை பயணத்துடன், கடல் கடந்த யாரேதியரின் பயணத்தை நீங்கள் ஒப்பிட்டால், நீங்கள் ஆவிக்குரிய உள்ளுணர்வுகளைப் பெறுவீர்கள். உதாரணமாக, யாரேதியரின் தோணிகளிலிருந்த கற்களைப் போல உங்கள் பாதைக்கு ஒளிகாட்ட கர்த்தர் என்ன வழங்கியிருக்கிறார்? தோணிகளையும் அல்லது “வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி வீசிய” காற்றையும் எது குறிக்கக்கூடும் (ஏத்தேர் 6:8). பயணத்துக்கு முன்பும், பயணத்தின் போதும், அதன் பின்பும், யாரேதியரின் செயல்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி உங்களை கர்த்தர் எவ்வாறு வழிநடத்துகிறார்?

“கர்த்தருக்கு துதிகளைப் பாடுங்கள்.” யாரேதியர் பாடல் மற்றும் துதி மூலம் தேவன் மீது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினர் (ஏத்தேர் 6:9 ஐப் பார்க்கவும்). வீட்டிலும் சபையிலும் தேவனைப் புகழ்வதற்கு இசை மற்றும் இதயப்பூர்வமான சாட்சியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை நீங்கள் தேடலாம் அல்லது உருவாக்கலாம். “” , .

படம்
அவர்களின் தோணிகளுக்குள்ளே யாரேதியரின் குடும்பம்

Baby on Board (வாகனத்தில் குழந்தை) – கென்டல் ரே ஜான்சன்

ஏத்தேர் 6:5–18, 30; 9:28–35; 10:1–2

“கர்த்தருக்கு முன்பாக தாழ்மையாக நடக்கவும்.”

பெருமையும் துன்மார்க்கமும் யாரேதிய வரலாற்றில் மேலோங்குவதாகத் தோன்றினாலும், இந்த அதிகாரங்களில் தாழ்மையின் எடுத்துக்காட்டுகளும் உள்ளன, குறிப்பாக ஏத்தேர் 6:5–18, 30; 9:28–35; மற்றும் 10:1–2. பின்வரும் கேள்விகளை சிந்திப்பது, இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள உதவ முடியும்: இந்த சூழ்நிலைகளில் இந்த யாரேதியர் தங்களையே ஏன் தாழ்மைப்படுத்தினார்கள்? அவர்கள் தங்கள் தாழ்மையை எப்படி காட்டினார்கள்? இதன் விளைவாக தேவன் அவர்களை எவ்வாறு ஆசீர்வதித்தார்? தாழ்மையாக இருக்க கட்டாயப்படுத்தப்படுவதைவிட, (மோசியா 4:11–12; ஆல்மா 32:14–18 பார்க்கவும்) “கர்த்தருக்கு முன்பாக தாழ்மையாய் நடக்க” (ஏத்தேர் 6:17) விருப்பமாயிருக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

டேல் ஜி. ரென்லன்ட், “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் நட,” லியஹோனா, நவ். 2020, 109–12 ஐயும் பார்க்கவும்.

ஏத்தேர் 7–11

படம்
வேத பாட வகுப்பு சின்னம்
நான் கிறிஸ்துவைப் போன்ற தலைவனாக ஆக முடியும்.

ஏத்தேர் அதிகாரங்கள் 7–11 குறைந்தது 28 தலைமுறைகளை அடக்கியுள்ளது. இவ்வளவு சிறிய இடத்தில் சிறிய விவரங்கள் கொடுக்கப்பட்டாலும், நேர்மையான மற்றும் பொல்லாத தலைமையின் விளைவுகளைப் பற்றி ஒரு மாதிரி விரைவாக வெளிப்படுகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள ராஜாக்களின், எதிர்மறை மற்றும் நேர்மறை, உதாரணங்களிலிருந்து தலைமைத்துவத்தைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

இந்தச் செய்தியைப் படிப்பதைக் கருத்தில் கொள்ளவும்—குறிப்பாக அவன் சொல்லும் கதைகள்—கிறிஸ்துவைப் போன்ற தலைமைத்துவத்தின் கொள்கைகள் அல்லது மாதிரிகளைத் தேடுங்கள். வழிநடத்தும் நபர்களிடம் இந்தக் கொள்கைகள் அல்லது மாதிரிகள் நிரூபித்ததை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்?

நீங்கள் கற்றவற்றை நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் வீட்டிலும், சமுதாயத்திலும், சபை அழைப்பிலும், பிறவற்றிலும் பிறரை வழிநடத்தவும் அல்லது செல்வாக்கு ஏற்படுத்தவும் உங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களைப்பற்றி சிந்திக்கவும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தலைமைப் பொறுப்பு இல்லாவிட்டாலும், கிறிஸ்துவைப் போன்ற தலைமைத்துவ பண்புகளை நீங்கள் எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்?

“,” , (ChurchofJesusChrist.org).

ஏத்தேர் 8:7–26

கர்த்தர் இருளில் வேலை செய்வதில்லை.

ஜனங்கள் தங்கள் துன்மார்க்க செயல்களை இரகசியமாக வைக்க சதிசெய்தால், அவர்கள் இரகசிய சங்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏத்தேர் 8:7–18ல் விவரிக்கப்பட்டுள்ள இரகசிய சங்கங்களோடு கூடுதலாக, ஏலமன் 1:9–12; 2:2–11; 6:16–30; மற்றும் மோசே 5:29–33ல் பிற எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. இந்த வசனங்களை 2 நேபி 26:22–24 உடன் வேறுபடுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள், இதில் கர்த்தர் எவ்வாறு தனது வேலையைச் செய்கிறார் என்பதை நேபி விவரித்தான். ரகசிய சங்கங்கள் பற்றி அவன் செய்ததை எழுதுமாறு மரோனிக்கு ஏன் கட்டளையிடப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஏத்தேர் 8:26ல் விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களைப் பெற நமக்கு உதவ, ஏத்தேரின் புஸ்தகத்திலிருந்து நாம் என்ன கற்றிருக்கிறோம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஏத்தேர் 6:1–12

நான் பயப்படும்போது பரலோக பிதா என்னை ஆறுதல்படுத்துவார் என்று என்னால் நம்ப முடியும்.

  • எல்லோருக்கும் கடினமான நாட்கள் உள்ளன, சிறு குழந்தைகளுக்கும் கூட. சில கடினமான மற்றும் பயமுறுத்தும் நாட்களில் யாரேதியர் எவ்வாறு தேவனை நம்பினார்கள் என்பதைக் காட்டும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் ஏத்தேர் 6:1–12இல் கண்டுபிடிக்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவலாம். உங்கள் வாழ்க்கையில் கடினமான காலங்களில் தேவன் உங்களுக்கு உதவிய சில அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஏத்தேர் 6:9, 12, 30; 7:27; 10:2

கர்த்தர் செய்ததை நினைவுகூருவது நன்றியையும் அமைதியையும் தருகிறது.

  • வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குப் பத்திரமாக வந்து சேர்ந்த பிறகு, யாரேதியர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள், அவர்கள் “ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்” (ஏத்தேர் 6:12). யாரேதியர்கள் எவ்வாறு தேவனுக்கு நன்றி தெரிவித்தனர் என்பதைக் காட்டும் ஏத்தேர் 6:9, 12ல் உள்ள சொற்றொடர்களைக் கண்டறிய உதவுவதன் மூலம், தேவனின் ஆசீர்வாதங்களுக்கு நன்றியுள்ளவர்களாக உணர உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஊக்குவிக்கலாம். உங்கள் பிள்ளைகள் நன்றிபாராட்டும் சில விஷயங்களைப் பற்றி உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.

  • ஒருவேளை உங்கள் பிள்ளைகள் ஏத்தேர் 6:30; 7:27; மற்றும் 10:2 வாசித்து இந்த நீதியுள்ள ராஜாக்கள் நினைவில் வைத்திருக்கப்படும் காரணங்களைக் கண்டறியவும். அவர்கள் தங்கள் மக்களை வழிநடத்திய விதத்தை இது எவ்வாறு பாதித்தது? தேவன் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை நினைவூட்டுவதற்கான வழிகளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் கலந்துரையாடலாம். உதாரணமாக, அவர்கள் அதைப் பற்றி எழுதலாம் அல்லது படங்களை வரையலாம்.

ஏத்தேர் 7:24–27

நான் தேவனின் தீர்க்கதரிசியைப் பின்பற்றும்போது நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன்.

  • ஒருவேளை தீர்க்கதரிசி நமக்குக் கற்றுக் கொடுத்த சில விஷயங்களை நீங்களும் உங்கள் குழந்தைகளும் செய்து மகிழலாம். செயல்கள் எதைக் குறிக்கின்றன என்பதை நீங்கள் யூகிக்கும் விளையாட்டாக கூட நீங்கள் மாற்றலாம். தேவனின் தீர்க்கதரிசியைப் பின்பற்றுவது ஏன் முக்கியம் என்பதைப் பற்றி கலந்துரையாட இது உங்கள் பிள்ளைகளை தயார்படுத்தும். தேவனின் தீர்க்கதரிசிக்கு மக்கள் கீழ்ப்படிந்தபோது என்ன நடந்தது என்பதை அறிய நீங்கள் ஏத்தேர் 7:24–27 வாசிக்கலாம். இன்று தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதன் மூலம் நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்?

ஏத்தேர் 9:28–35; 11:5–8

நான் மனந்திரும்பும்போது கர்த்தர் இரக்கமாயிருக்கிறார்.

  • மாதிரிகளைத் தேடுவது பயனுள்ள வேத ஆய்வுத் திறன். ஏத்தேர் புத்தகத்தில் கர்த்தரின் இரக்கத்தை வலியுறுத்தும் ஒரு மாதிரியைக் கொண்டுள்ளது. இந்த மாதிரியைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, ஏத்தேர் 9:28–35 மற்றும் ஏத்தேர் 11:5–8 ஆகியவற்றைப் படிக்க அவர்களை அழைக்கவும், இரண்டு விவரங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தேடுங்கள். இந்த கதைகளில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?

படம்
கடலில் யாரேதியரின் தோணிகள்

Jaredite Barges (யாரேதிய தோணிகள்) – காரி எர்னஸ்ட் ஸ்மித்

அச்சிடவும்