“ஏப்ரல் 28–மே 4: ‘எனது சபையை நிர்வகிக்க பிரமாணம்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41– 44,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41–44,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
ஏப்ரல் 28–மே 4: “எனது சபையை நிர்வகிக்க பிரமாணம்”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41–44
1830 மற்றும் 1831 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக ஒஹாயோவின் கர்த்லாந்தில் புதிய உறுப்பினர்களின் வருகையுடன் சபை வேகமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சி பரிசுத்தவான்களுக்கு உற்சாகமாகவும் ஊக்கமாகவும் இருந்தது, ஆனால் இது சில சவால்களையும் அளித்தது. விரைவாக விரிவடையும் விசுவாசிகளின் குழுவை நீங்கள் எவ்வாறு ஒன்றிணைப்பீர்கள்? குறிப்பாக, அவர்கள் தங்கள் முந்தைய நம்பிக்கைகளிலிருந்து கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் கொண்டு வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எடுத்துக்காட்டாக, பெப்ருவரி 1831 ஆரம்பத்தில் ஜோசப் ஸ்மித் கர்த்லாந்துக்கு வந்தபோது, புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவதற்கான உண்மையான முயற்சியில் புதிய உறுப்பினர்கள் பொதுவாக சொத்துக்களைப் பகிர்ந்துகொள்வதைக் கண்டார் ( அப்போஸ்தலர் 4:32–37 பார்க்கவும்). கர்த்தர் இது மற்றும் பிற தலைப்புகளில் சில முக்கியமான திருத்தங்களையும் தெளிவுகளையும் செய்தார். “எனது சபையை நிர்வகிக்க பிரமாணம்” (வசனம் 59) என்று அவர் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42 இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு வெளிப்பாட்டின் மூலம் இதை பெரும்பாலும் செய்தார். இந்த வெளிப்பாட்டில், கடைசி நாட்களில் கர்த்தருடைய சபையை ஸ்தாபிப்பதில் அடிப்படை சத்தியங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். மேலும் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்: நீ கேட்டால், கர்த்தர் வாக்குறுதி அளித்தார், “வெளிப்பாட்டின் மேல் வெளிப்பாடும், புத்திக்கு மேல் புத்தியும் பெறுவீர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:61).
Saints, 1:114–19ஐயும் பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41
“என் நியாயப்பிரமாணத்தைப் பெற்று அதைச் செய்கிறவன் என் சீஷனும் கூட.”
1831 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பரிசுத்தவான்கள் ஒஹாயோவில் கூடிவரத் தொடங்கினர். தேவன் அங்கு வெளிப்படுத்துவதாக வாக்களித்த பிரமாணத்தைப் பெற அவர்கள் ஆர்வமாக இருந்தனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:32 பார்க்கவும்) ஆனால் முதலில், கர்த்தர் தம்முடைய சீஷர்கள் எப்படி தம்முடைய நியாயப்பிரமாணத்தைப் பெற ஆயத்தம் செய்ய வேண்டும் என்று கற்பித்தார். தேவனின் பிரமாணத்தைப் பெற பரிசுத்தவான்களுக்கு உதவியிருக்கும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41:1–6ல் நீங்கள் என்ன கொள்கைகளைக் காண்கிறீர்கள்? அவரிடமிருந்து அறிவுறுத்தலைப் பெற இந்த கொள்கைகள் உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும்?
See also “A Bishop unto the Church,” in Revelations in Context, 77–83.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42
கர்த்தர் என்னை நேசிப்பதால் எனக்குக் கட்டளைகளைக் கொடுக்கிறார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42: 1–72ல் காணப்பட்ட வெளிப்பாட்டை தீர்க்கதரிசி பெற்ற மிக முக்கியமான ஒன்றாக பரிசுத்தவான்கள் கருதினர். வெளியிடப்பட்ட முதல் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, பரிசுத்தவான்கள் அதை வெறுமனே “நியாயப்பிரமாணம்” என்று அழைத்தனர். இந்த பாகம் கர்த்தரின் அனைத்து கட்டளைகள் அல்லது பிரமாணங்கள் இல்லை என்றாலும், புதிதாக மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு இந்த கோட்பாடுகள் ஏன் முக்கியமானவை என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம். இன்று நமக்கு ஏன் அவைகள் முக்கியமானதாயிருக்கிறது?
பாகம் 42 ஒப்பீட்டளவில் நீளமாக இருப்பதால், பின்வருவனவற்றைப் போன்ற சிறிய பகுதிகளாகப் படிப்பதைக் கருத்தில் கொள்ளவும். ஒவ்வொன்றிலும் கற்பிக்கப்பட்ட கொள்கைகளைக் கண்டறிந்து, இந்தப் பிரமாணங்கள் எவ்வாறு கர்த்தருக்கு மக்கள் மீதுள்ள அன்பின் அடையாளமாக உள்ளன என்பதைக் கவனியுங்கள்.
தேவன் ஏன் சட்டங்களையும் கட்டளைகளையும் நமக்குக் கொடுக்கிறார்? கட்டளைகளை அறிந்து பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த வழிகளில் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:30–42
“தரித்திரரை நினைவுகூருங்கள்”
பாகம் 42 இல் வெளிப்படுத்தப்பட்ட பிரமாணத்தின் ஒரு பகுதியாக, கிறிஸ்துவின் பழங்கால சீஷர்களைப் போலவே, “எல்லாவற்றையும் பொதுவானதாக” ( அப்போஸ்தலர் 2:44; 4 நேபி 1:3 ), “அவர்களில் ஏழைகள் யாரும் இல்லை”( மோசே 7:18) என்பதுடன் கர்த்தர் தம் பரிசுத்தவான்களுக்கு அவர்களால் எப்படி முடியும் என்று கற்பித்தார் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:30–42லிருந்து பரிசுத்தவான்கள் அர்ப்பணிப்பு சட்டத்தின்படி எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (அர்ப்பணிப்பு என்பது புனிதமான நோக்கத்திற்காக எதையாவது ஒதுக்கி வைப்பதாகும்.)
இன்று நம்மிடம் “எல்லா விஷயங்களும் பொதுவானவை” இல்லை என்றாலும், ஆலயங்களில் பிற்காலப் பரிசுத்தவான்கள் அர்ப்பணிப்பு நியாயப்பிரமாணப்படி வாழ உடன்படிக்கை செய்கிறார்கள். தேவைப்படும் மக்களை ஆசீர்வதிப்பதற்காக தேவன் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எவ்வாறு அர்ப்பணிக்கலாம் ? ஒருவேளை “Because I Have Been Given Much” (Hymns, no. 219) போன்ற பாடலைப் பாடுதல் உங்களுக்கு ஆலோசனைகளைக் கொடுக்க முடியும்.
See also Sharon Eubank, “I Pray He’ll Use Us,” Liahona, Nov. 2021, 53–56; “The Law,” in Revelations in Context, 93–95.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:61, 65–68; 43:1–16
தேவன் தம்முடைய சபையை வழிநடத்தவும், என்னை வழிநடத்தவும் வெளிப்பாட்டைக் கொடுக்கிறார்.
சபை வெளிப்பாட்டின் மூலம் வழிநடத்தப்படுகிறது என்பதை அறிந்து உற்சாகமாக இருக்கும் சபையின் புதிய உறுப்பினருடன் நீங்கள் உரையாடுகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். தீர்க்கதரிசி மூலம் அவருடைய சபையை வழிநடத்துவதற்கான கர்த்தரின் மாதிரியை அவருக்கு அல்லது அவளுக்கு விளக்க கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:1–16ஐ எவ்வாறு நீங்கள் பயன்படுத்தலாம்? தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுவதைப்பற்றி கற்பிக்க கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:61, 65–68ஐ எவ்வாறு நீங்கள் பயன்படுத்தலாம்?
கர்த்தருடைய ஆவியின் மூலம் நீங்கள் பெற்ற சில “சமாதானத்துக்குரிய காரியங்கள்” மற்றும் மகிழ்ச்சியான விஷயங்கள் யாவை?
சபையின் தலைவர்கள் எவ்வாறு கர்த்தரின் குரலைக் கேட்டனர் என்பதை அறிய, சுவிசேஷ நூலகத்தில் உள்ள “Hear Him” தொகுப்பில் உள்ள காணொலிகளில் ஒன்றை நீங்கள் பார்க்கலாம். உங்கள் சொந்த காணொலியை உருவாக்கி, கர்த்தர் உங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்பதை விளக்கவும்.
See also Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 93–96; “All Things Must Be Done in Order,” in Revelations in Context, 50–53.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41:5
சீடர் என்பவர் தேவனின் நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிபவர்.
-
இயேசு கிறிஸ்துவின் சீடராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்த, சீடர் என்ற வார்த்தை இருக்க வேண்டிய இடத்தில் வெற்றிடங்களை விட்டு, ஒரு காகிதத்தில் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41:5 ஐ எழுதலாம். அவர்கள் பின்பு வசனம் 5ல் விடுபட்ட வார்த்தையைத் தேடலாம். இந்த வசனத்தின்படி, இயேசு கிறிஸ்துவின் சீடராக இருப்பதன் அர்த்தம் என்ன? கிறிஸ்துவின் சிறந்த சீடர்களாக இருக்க நாம் எப்படி முயற்சி செய்கிறோம்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:2
நான் கர்த்தருக்குக் கீழ்ப்படியும்போது சந்தோஷமாக இருக்கிறேன்.
-
உங்கள் பிள்ளைகள் அவர்கள் கவனமாகக் கேட்டு மற்றும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய.ஒரு விளையாட்டை விளையாடி மகிழலாம், கர்த்தருக்குச் செவிகொடுப்பதும், கேட்பதும், கீழ்ப்படிவதும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:2) என்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி பேச இந்த விளையாட்டைப் பயன்படுத்தலாம். அவர் நமக்கு என்ன அறிவுரைகள் கொடுத்திருக்கிறார்? அவருடைய பிரமாணங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதன் மூலம் நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்?
-
இந்த வார நிகழ்ச்சி பக்கத்தில் உங்கள் குழந்தைகளுடன் பக்கத்தை நீங்கள் முடிக்கலாம். “I Want to Live the Gospel” (Children’s Songbook, 148) போன்ற தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி நீங்கள் ஒரு பாடலைப் பாடலாம். தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவது உங்களுக்கு எப்படி மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:38
நான் மற்றவர்களுக்கு சேவை செய்யும் போது இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறேன்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:38 ஒன்றாக வாசித்த பிறகு, மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இயேசுவுக்குச் சேவை செய்யக்கூடிய வழிகளைப் பற்றி உங்கள் பிள்ளைகள் சிந்திக்க உதவுங்கள். அவர்கள் “Pass It On” (ChurchofJesusChrist.org) காணொலியிலிருந்து சில யோசனைகளைக் காணலாம். இரட்சகர் மற்றவர்களுக்கு உதவுவது, நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது அல்லது குழந்தைகளிடம் கருணை காட்டுவது போன்ற படங்களையும் அவர்கள் பார்க்கலாம். (Gospel Art Book, nos. 42,47 பார்க்கவும்).
-
உங்கள் பிள்ளைகளுக்கு தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகள் சீட்டைக் காட்டி, மற்றவர்களுக்கு நாம் ஆசீர்வதிக்க வேண்டியதைக் கொடுக்க அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி பேசலாம்.(மேலும் “Tithing and Donations Online” பார்க்கவும்).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:1–7
தீர்க்கதரிசி மட்டுமே முழு சபைக்கும் வெளிப்பாட்டைப் பெற முடியும்.
-
சாட்சிக் கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்று, சபை முழுவதற்கும் ஒரு வெளிப்பாட்டைப் பெற்றதாக தொகுதிக்குச் சொல்வதாக கற்பனை செய்ய உங்கள் குழந்தைகளை அழைக்கவும் (உதாரணமாக, நாம் இனி கேரட் சாப்பிடக்கூடாது அல்லது தண்ணீருக்கு பதிலாக பாலில் கைகளை கழுவ வேண்டும் என்ற வெளிப்பாடு.) தீர்க்கதரிசிக்கு பதிலாக அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்கிறார். அதில் என்ன தவறு இருக்கும்? கர்த்தர் தனது சபைக்கு எவ்வாறு கட்டளைகளை வழங்குகிறார் என்பதை அறிய, நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:1–7 ஆகியவற்றை ஒன்றாகப் படிக்கலாம்.
-
நீங்கள் ஜீவிக்கும் தீர்க்கதரிசியின் படத்தைக் காட்டலாம் மற்றும் அவர் சமீபத்தில் கற்பித்த ஒன்றைப் பகிர்ந்து கொள்ள உங்கள் குழந்தைகளை அழைக்கலாம். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், சமீபத்திய பொது மாநாட்டுச் செய்தியிலிருந்து காணொலி காட்சி அல்லது பத்தியைப் பகிரவும். இன்று ஜீவிக்கும் தீர்க்கதரிசி பெற்றிருப்பது ஏன் ஆசீர்வாதம்?