“மே 19–25: ‘தேவனிடமிருந்து வருகிறவை ஒளியாயிருக்கிறது’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49–50” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49– 50,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மே 19–25: “தேவனிடமிருந்து வருகிறவை ஒளியாயிருக்கிறது”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49–50
இரட்சகர் நம்முடைய “நல்ல மேய்ப்பர்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:44). சில நேரங்களில் ஆடுகள் அலைகின்றன என்பதையும், வனாந்தரத்தில் பல அழிவுகள் இருப்பதையும் அவர் அறிவார். எனவே அவர் தனது கோட்பாட்டின் பாதுகாப்பிற்கு நம்மை அன்புடன் வழிநடத்துகிறார். ஆகவே, “உலகத்தை வஞ்சித்து பூமியின்மேல் போன பொய்யான ஆவிகள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:2) போன்ற ஆபத்துகளிலிருந்து நம்மை விலக்கி வழிநடத்துகிறார். அவரைப் பின்தொடர்வது என்பது தவறான கருத்துக்கள் அல்லது மரபுகளை விட்டுவிடுவதாகும். இது லீமன் கோப்லிக்கும் மற்றும் ஒஹாயோவிலிருந்த பிறருக்கும் உண்மையானதாகும். மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் சரியில்லாத சில நம்பிக்கைகளை இன்னும் வைத்திருந்தார்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49ல், திருமணம் மற்றும் இரட்சகரின் இரண்டாவது வருகை போன்ற தலைப்புகளைப்பற்றிய லீமனின் முந்தைய நம்பிக்கைகளை சரிசெய்யும் சத்தியங்களை கர்த்தர் அறிவித்தார். ஒஹாயோவின் மனமாறியவர்கள் “அவர்கள் புரிந்துகொள்ள முடியாத ஆவிகளைப் பெற்றபோது” ஆவியின் உண்மையான வெளிப்பாடுகளை எவ்வாறு பிரித்தறிவது என்பதை கர்த்தர் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:15). நல்ல மேய்ப்பன் நம்மிடம் பொறுமையாக இருக்கிறார்; அவரது “சிறு பிள்ளைகள்” அவர்கள் “கிருபையிலும் சத்திய அறிவிலும் வளர வேண்டும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:40).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49; 50:24
நான் அவரது சுவிசேஷ சத்தியங்களை தழுவிக்கொள்ள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.
சபையில் சேருவதற்கு முன்பு, லீமன் கோப்லி கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் நம்பும் யுனைடெட் சொசைட்டி என்று அழைக்கப்படும் ஒரு மதக் குழுவில் இருந்தார், இது ஷேக்கர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. லீமனுடனான உரையாடலுக்குப் பிறகு, ஜோசப் ஸ்மித் ஷேக்கர்களின் சில போதனைகள் குறித்து கர்த்தரிடமிருந்து தெளிவுபெற முயன்றார். பாகம் 49இல் வெளிப்படுத்தலுடன் கர்த்தர் பதிலளித்தார். ஷேக்கர்களின் சில நம்பிக்கைகள் பாகத் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
பாகம் 49இல் ஷேக்கர்களின் நம்பிக்கைகளை சரிசெய்ய கர்த்தர் என்ன போதித்தார். அவருடைய சத்தியத்தின் முழுமையைக் கொண்டிருக்காத மக்கள் மீதுள்ள அவருடைய அன்பும் அக்கறையும் பற்றி இந்த வெளிப்பாட்டில் என்ன ஆதாரத்தை நீங்கள் காண்கிறீர்கள்? அன்புடனும் அக்கறையுடனும் அவர்களை எப்படி அணுகுவது?
வசனம் 2லுள்ள கர்த்தரின் பதில்களில் எது உங்களைக் கவர்கிறது? நீங்கள் ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியை மட்டும் பார்த்தால், ஒரு புதிரின் ஒரு பகுதியைப் பார்த்தால் அல்லது ஒரு வாதத்தின் ஒரு பக்கத்தைக் கேட்டால் என்ன நடக்கும் என்பதற்கு நீங்கள் ஒப்பிடலாம். கர்த்தரின் எச்சரிக்கை எவ்வாறு கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:24 உடன் தொடர்புடையது? கர்த்தரிடமிருந்து அதிக வெளிச்சத்தைப் பெற நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
See also “Leman Copley and the Shakers,” in Revelations in Context, 117–21.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:15–17
தேவனின் திட்டத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் அவசியம்.
பரலோக பிதாவின் திட்டத்தை குறைத்து மதிப்பிடும் முயற்சியில், சாத்தான் திருமணத்தைப் பற்றி குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறான். மறுபுறம், கர்த்தர் தனது தீர்க்கதரிசிகள் மூலம் திருமணத்தைப் பற்றிய சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். இந்த உண்மையை நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:15–17 ; ஆதியாகமம் 2:20-24; 1 கொரிந்தியர் 11:11; மற்றும் “குடும்பம்: உலகிற்கு ஒரு பிரகடனத்திலும் காணலாம்.” நீங்கள் காண்கிற சத்தியங்களின் ஒரு பட்டியலையும் நீங்கள் எழுதலாம். தேவனின் திட்டத்திற்கு திருமணம் ஏன் மிகவும் முக்கியமானது?
“இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம், பூலோக வாழ்விலும் நித்தியங்களிலும், பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான முழு பங்குதாரர் கொள்கையை அறிவிக்கிறது” என்று மூப்பர் உலிசஸ் சோயர்ஸ் போதித்தார். (“In Partnership with the Lord,” Liahona, Nov. 2022, 42). நீங்கள் அவருடைய செய்தியைப் படிக்கலாம், “ஆண் மற்றும் பெண் இடையேயான பங்கை வலுப்படுத்தும்” கொள்கைகளைத் தேடலாம். இதே கொள்கைகளை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்தலாம்? திருமணம் ஏன் முக்கியம் என்று வேறொரு விசுவாசத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களிடம் கேட்டால், நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? இந்தப் புரிதலுக்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
See also Topics and Questions, “Marriage,” “Family,” Gospel Library; David A. Bednar, “Marriage Is Essential to His Eternal Plan,” Ensign, June 2006, 83–84; “Renaissance of Marriage” (video), Gospel Library.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50
கர்த்தருடைய போதனைகள் சாத்தானின் ஏமாற்றுகளிலிருந்து என்னைப் பாதுகாக்க முடியும்.
ஒஹாயோவில் புதிய உறுப்பினர்கள் வேதத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆவிக்குரிய வெளிப்பாடுகளைப் பெற ஆர்வமாக இருந்தனர். எனினும் சாத்தானும் அவர்களை ஏமாற்ற ஆர்வமாக இருந்தான் பரிசுத்த ஆவியின் உண்மையான வெளிப்பாடுகளை எவ்வாறு அங்கீகரிப்பது என்பதைப் புரிந்துகொள்ள இந்த உறுப்பினர்களுக்கு உதவுமாறு உங்களிடம் கேட்கப்பட்டால், கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50 இல் உள்ள என்ன கொள்கைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள்? (குறிப்பாக வசனங்கள் 22–25, 29–34, 40–46 பார்க்கவும்). உண்மைக்கும் பிழைக்கும் உள்ள வேறுபாட்டை அறிய இரட்சகர் உங்களுக்கு எவ்வாறு உதவினார்?
மற்றும் 1 கொரிந்தியர் 14:1–28; 2 தீமோத்தேயு 3:13-17 பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:13–24
ஆசிரியர்களும் கற்பவர்களும் ஆவியால் தெளிவுபடுத்தப்படுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வது வீட்டிலும் சபையிலும் ஆசிரியர்களாகவும் கற்பவர்களாகவும் பல வாய்ப்புகளை வழங்குகிறது. நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:13-24 ஐப் படிக்கும் ஒரு வழி, ஆசிரியர் மற்றும் கற்பவரின் படத்தை வரைவதாகும். ஒவ்வொன்றிற்கும் அடுத்ததாக, இந்த வசனங்களிலிருந்து உங்களுக்கு சுவிசேஷம் கற்றல் மற்றும் கற்பித்தல் பற்றி ஏதாவது கற்பிக்கும் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களின் பட்டியலை உருவாக்கவும். கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றில் ஆவியின் முக்கியத்துவத்தை உங்களுக்குக் கற்பித்த அனுபவங்கள் எப்போது பெற்றிருக்கிறீர்கள்? ஒரு சுவிசேஷம் கற்பவர் மற்றும் ஆசிரியராக உங்கள் முயற்சிகளை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:23–25
“தேவனிடமிருந்து வருகிறவை ஒளியாயிருக்கிறது”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:23–25 இல் உள்ள இரட்சகரின் வார்த்தைகளை நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் தேவனின் ஒளியை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள் மற்றும் எப்படி “இருளை விரட்டுகிறீர்கள்” என்பதை சிந்தியுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்த உங்கள் தேர்வுகளுக்கு இந்த வசனங்கள் எவ்வாறு வழிகாட்டுகின்றன? என்ன பொழுதுபோக்கு அல்லது ஊடகத்தை தேடுவது? எந்த உரையாடல்களில் ஈடுபட வேண்டும்? இந்த வசனங்கள் வேறு என்ன முடிவுகளுக்கு உங்களுக்கு உதவும்? “The Lord Is My Light” (Hymns, no. 89) போன்ற பாடல் கூடுதல் எண்ணங்களை உணர்த்தலாம்.
See also “Walk in God’s light,” For the Strength of Youth: A Guide for Making Choices, 16–21.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:12–14
என்னால் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடியும்.
-
இந்த வசனங்களில் உள்ள கொள்கைகளை உங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியைப் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கும் நான்கு காகித கால்தடங்கள் மற்றும் நான்கு படங்களை நீங்கள் தயார் செய்யலாம் (இந்த வார நிகழ்ச்சி பக்கத்தில் உள்ள படங்களைப் பார்க்கவும்). உங்கள் பிள்ளைகள் கீழே படங்களுடன் கால்தடங்களை தரையில் வைக்கலாம். பின்னர் நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:12–14 வாசிக்கும்போது, கால் தடங்களின் மேல் நடக்க அவர்கள் முறை எடுக்கலாம். இந்தப் படங்களில் உள்ள விஷயங்களைச் செய்யும்போது, நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:12–14, அப்போஸ்தலர் 2:38டனும் நான்காம் விசுவாசப் பிரமாணத்துடனும் ஒப்பிட உங்கள் பிள்ளைகளை அழைக்கலாம். என்ன ஒற்றுமைகளை அவர்கள் காண்கிறார்கள்? இந்த சத்தியங்கள் ஏன் முக்கியமானவையாய் இருக்கின்றன?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:15–17
தேவனின் திட்டத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் அவசியம்.
-
இந்த வசனங்களை அறிமுகப்படுத்த, ஷேக்கர்ஸ், மக்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நம்பும் ஒரு மதக் குழு என்று நீங்கள் விளக்கலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49 என்ற பாகத் தலைப்பைப் பார்க்கவும்). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:15–17 இல் திருமணத்தைப் பற்றி கர்த்தர் கற்பித்த விஷயங்களைக் கண்டறிய உங்கள் குழந்தைகளை அழைக்கவும். “திருமணம் தேவனால் நிச்சயிக்கப்பட்டது” என்றால் என்ன? “குடும்பம்: உலகத்திற்கு ஒரு பிரகடனம்” என்பதன் முதல் மூன்று பத்திகளை நீங்கள் ஒன்றாகப் படிக்கலாம். பரலோக பிதாவுக்கு திருமணமும் குடும்பமும் ஏன் முக்கியம் என்பதைப் பற்றி பேசுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:23–25
“தேவனிடமிருந்து வருகிறவை ஒளியாயிருக்கிறது”
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:23–25 ஐ அறிமுகப்படுத்த, ஒளிக்கும் இருளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள். நமக்கு ஏன் ஒளி தேவையாயிருக்கிறது? “Walk in God’s light” in For the Strength of Youth: A Guide for Making Choices (page 17) முதல் பத்தியையும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:23–25ஐயும் நீங்கள் ஒன்றாகப் படிக்கலாம். தேவனின் ஒளியைப் பெறும் வழிகள் மற்றும் இருளை விரட்டும் வழிகளைப் பற்றி பேசுங்கள். “Shine On” (Children’s Songbook, 144) போன்ற அவர்களின் ஆவிக்குரிய ஒளியைப் பற்றிய ஒரு பாடலை நீங்கள் ஒன்றாகப் பாடலாம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:40–46
இயேசு கிறிஸ்துதான் என்னுடைய நல்ல மேய்ப்பன்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:40–46 ஒன்றாக வாசித்த பிறகு, இந்த குறிப்பின் முடிவில் வரும் இரட்சகரின் படத்தைக் காட்டலாம், இது போன்ற கேள்விகளைக் கேட்கலாம்: மேய்ப்பன் தன் ஆடுகளைப் பற்றி எப்படி உணர்கிறார் ? இரட்சகர் நமக்கு ஒரு மேய்ப்பனைப் போல எப்படி இருக்கிறார்?