என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: ஒஹாயோவில் கூடிச்சேர்தல்


“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: ஒஹாயோவில் கூடிச்சேர்தல் ,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

“ஒஹாயோவில் கூடிச்சேர்தல்,“என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

மறுஸ்தாபிதத்தின் குரல்கள் சின்னம்

மறுஸ்தாபிதத்தின் குரல்கள்

ஒஹாயோவில் கூடிச்சேருதல்

1830ல் கர்த்லாந்து

கர்த்லாந்து ஊர்–அல் ரவுண்ஸ்

பெபே கார்ட்டர்

Picture of Phoebe Carter Woodruff, wife of Wilford Woodruff, circa 1840.

1830 களில் ஒஹாயோவில் கூடிச்சேர்ந்த பல பரிசுத்தவான்களில் பெபே கார்ட்டரும் ஒருவர். அவள் தனது இருபதுகளின் நடுப்பகுதியில் வடகிழக்கு அமெரிக்காவில் சபையில் சேர்ந்தாள், ஆனால் அவளது பெற்றோர் சேரவில்லை. பரிசுத்தவான்களுடன் ஒன்றிணைவதற்காக ஒஹாயோவுக்குச் செல்வதற்கான தனது முடிவைப்பற்றி அவள் பின்னர் எழுதினாள்:

“என்னைப்போல் என் நண்பர்கள் என் போக்கைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள், ஆனால் உள்ளிருந்து ஏதோ ஒன்று என்னைத் தூண்டியது. நான் வீட்டை விட்டு வெளியேறியதில் என் தாயின் வருத்தம் என்னால் தாங்க முடியாததை விட அதிகமாக இருந்தது; ஆவி எனக்குள் இல்லாதிருந்தால், கடைசியாக நான் தடுமாறியிருக்க வேண்டும். இருதயமில்லாத உலகிற்கு தனியாக வெளியே செல்வதை விட என்னை அடக்கம் செய்வதைப் பார்ப்பேன் என்று என் அம்மா சொன்னார்.

“‘ [பெபே], ’அவர் ஆர்வத்துடன்,‘ மார்மனிசம் பொய்யானது எனக் கண்டால் நீ என்னிடம் திரும்பி வருவாயா?’என்றார்.

“நான் பதிலளித்தேன், ‘ஆம், அம்மா; நான் வருவேன்l.’ … என் பதில் அவள் கஷ்டத்தை நீக்கியது; ஆனால் பிரிவது எங்கள் அனைவருக்கும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. நான் புறப்படுவதற்கான நேரம் வந்தபோது, விடைபெறுவதற்கு என்னை நம்பத் துணியவில்லை; எனவே நான் ஒவ்வொருவருக்கும் எழுதினேன், அவற்றை என் மேஜையில் விட்டுவிட்டு, கீழே ஓடி வண்டிக்குள் குதித்தேன். இவ்வாறு என் வாழ்க்கையை தேவனின் பரிசுத்தவான்களுடன் இணைக்க என் குழந்தை பருவத்தின் அன்பான வீட்டை விட்டு வெளியேறினேன்.”

அந்த பிரியாவிடை செய்திகளில் ஒன்றில், பெபே எழுதினாள்:

“அன்பான பெற்றோர்களே, நான் இப்போது எனது தந்தையின் கூரையை விட்டு கொஞ்சகாலத்திற்கு வெளியேறப் போகிறேன் … எவ்வளவு காலம் எனக்குத் தெரியாது, ஆனால் என் குழந்தை பருவத்திலிருந்தே தற்போது வரை நான் பெற்ற தயவுக்கு நன்றியுள்ள உணர்வுகள் இல்லாமல் இல்லை, ஆனால் தேவசித்தம் அதை வேறுவிதமாக கட்டளையிடுவதாகத் தெரிகிறது இப்போது முன்பு இருந்ததை விட. இந்த எல்லாவற்றையும் தேவசித்தத்துக்கு ஒப்படைப்போம், தேவனைப் பெரிதும் நேசித்தால் எல்லாமே நம்முடைய நன்மைக்காக செயல்படும் என்று நம்புகிறோம், நம்மைப் போன்ற சாதகமான சூழ்நிலைகளில் இவ்வளவு காலம் ஒன்றாக வாழ அனுமதிக்கப்பட்டதற்கு நன்றி. அவருடைய எல்லா சிருஷ்டிப்புகளின் நேர்மையான ஜெபங்களைக் கேட்டு, நமக்குச் சிறந்ததைக் கொடுக்கும் ஒரு தேவனிடம் நாம் ஜெபிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம். …

“அம்மா, நான் மேற்கு நோக்கிச் செல்வது தேவசித்தம் என்று நான் நம்புகிறேன், அது நீண்ட காலமாக உள்ளது என்று நான் நம்புகிறேன். இப்போது வழி திறக்கப்பட்டுள்ளது… ; கர்த்தருடைய ஆவிதான் அதைச் செய்திருப்பது எல்லாவற்றிற்கும் போதுமானது என்று நான் நம்புகிறேன். உங்கள் பிள்ளைக்காக கவலைப்பட வேண்டாம்; கர்த்தர் என்னை ஆறுதல்படுத்துவார். கர்த்தர் என்னைக் கவனித்து, சிறந்ததை எனக்குக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். … என் எஜமானர் அழைப்பதால் நான் செல்கிறேன், அவர் என் கடமையை தெளிவுபடுத்தியுள்ளார்.”

குறிப்புகள்

  1. In Edward W. Tullidge, The Women of Mormondom (1877), 412.

  2. பெபே கார்ட்டர் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதம், தேதி இல்லை, சபை வரலாற்று நூலகம், சால்ட் லேக் சிட்டி; நிறுத்தற்குறி நவீனமயமாக்கப்பட்டது. பெபே 1834ல் சபையில் சேர்ந்தாள், 1835ல் ஒஹாயோவுக்குச் சென்றாள், 1837ல் வில்போர்ட் உட்ரப்பை மணந்தாள்.