என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஏப்ரல் 21–27: “நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல.”: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37–40


“ஏப்ரல் 21–27: ‘ நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல,’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37–40” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37–40,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

பரிசுத்தவான்கள் செல்ல ஆயத்தப்படுதல்

பரிசுத்தவான்கள் கர்த்லாந்துக்கு செல்லுதலிலிருந்து விளக்கம்–சாம் லாலர்

ஏப்ரல் 21–27: “ நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37–40

ஆரம்பகால பரிசுத்தவான்களுக்கு, ஞாயிற்றுக்கிழமையில் சில பிரசங்கங்களைக் கேட்கும் இடத்தைவிட சபை மேலானதாக இருந்தது. வெளிப்படுத்தல்கள் நோக்கம், ராஜ்யம், சீயோன், மற்றும், அடிக்கடி, பணி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தின. மக்களை மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு ஈர்த்ததன் ஒரு பகுதியாக அது இருந்திருக்கலாம். அவர்கள் கோட்பாட்டை நேசித்த அளவுக்கு, பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கக்கூடிய புனிதமான ஒன்றை விரும்பினர். அப்படியிருந்தும், ஒஹாயோவில் கூடிவருவதற்கு கர்த்தரின் 1830 கட்டளை எளிதானதாக இருக்கவில்லை. பலருக்கு, இது ஒரு அறிமுகமில்லாத எல்லைக்கு வசதியான வீடுகளை விட்டுச் செல்வதைக் குறிக்கிறது (“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: ஓஹாயோவில் கூடிச் சேர்தல்” பார்க்கவும்). அந்த பரிசுத்தவான்கள் விசுவாசக் கண்ணால் மட்டுமே பார்க்க முடிந்ததை இன்று நாம் தெளிவாகக் காணலாம்: ஒஹாயோவில் அவர்களுக்காக கர்த்தர் பெரும் ஆசீர்வாதங்களை வைத்திருந்தார்.

ஒஹாயோவிற்கு கூடிவருவதற்கான தேவை நீண்ட காலமாகிவிட்டது, ஆனால் பரிசுத்தவான்கள் இன்றும் அதே காரணத்துக்காக ஒன்றுபடுகிறார்கள்: “சீயோனைக் கொண்டுவருவது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39:13). அந்த ஆரம்பகால பரிசுத்தவான்களைப் போலவே, நாம் “உலக அக்கறைகளை” கைவிட அழைக்கப்படுகிறோம், (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 40:2) கர்த்தருடைய வாக்குறுதியை நம்புகிறோம்: “நீ ஒருபோதும் அறிந்திராத ஒரு மகத்தான ஆசீர்வாதத்தையும் பெறுவாய்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39:10).

Saints, 1:109–11ஐயும் பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37–38

தேவன் நம்மை ஆசீர்வதிப்பதற்காக கூட்டிச் சேர்க்கிறார்.

1831 ஆம் ஆண்டு குளிர்காலத்தில், நியூயார்க்கில் உள்ள பயட்டியிலுள்ள சபையின் உறுப்பினர்கள், ஒஹாயோவிற்கு (250 மைல்களுக்கு மேல்) செல்ல கடினமான தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37:3–4 கர்த்தரின் கட்டளையை வாசிக்கும்போது, கர்த்தர் உங்களிடம் கேட்ட தியாகங்கள்பற்றி சிந்தியுங்கள். பின்பு கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:1–33 நீங்கள் படிக்கும்போது, அது அவருடைய ஆலோசனையைப் பின்பற்ற உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிற இரட்சகரைப் பற்றிய உண்மைகளைத் தேடுங்கள். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக கூட்டிச்சேர்த்தலின் ஆசீர்வாதங்களைப்பற்றி வசனங்கள் 11–33லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:22

“என்னுடைய குரலைக் கேட்டு, என்னைப் பின்பற்றி வாருங்கள்”

இயேசு கிறிஸ்துவை எப்படி உங்களுக்கு “நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பவர்” ஆக்கலாம்? அவருடைய நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுவது உங்களை “ஒரு சுதந்தரமான ஜனமாக” ஆக்குவது எப்படி?

2 நேபி 2:26–27 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:30

நான் ஆயத்தமாக இருந்தால், நான் பயப்பட தேவையில்லை.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:30 இல் கர்த்தர் வெளிப்படுத்திய கொள்கையை நீங்கள் எப்போது அனுபவித்தீர்கள்: “நீங்கள் ஆயத்தமாக இருந்தால் நீங்கள் பயப்பட மாட்டீர்கள்”? நீங்கள் பாகம் 38ஐப் படிக்கும்போது, எதிர்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளும் வகையில், கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை எப்படி ஆயத்தப்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் பயப்படத் தேவையில்லாதவாறு, சவால்களுக்கு நீங்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்?

David A. Bednar, “We Will Prove Them Herewith,” Liahona, Nov. 2020, 8–11 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:24–27

வேத பாட வகுப்பு சின்னம்
தேவன் நாம் “ஒன்றாக” இருக்க விரும்புகிறார்.

ஒஹாயோவில் கூடியிருந்த பரிசுத்தவான்கள் பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து வந்தனர். உங்கள் தொகுதியில் உள்ளவர்களுக்கும் இதே நிலைதான். ஆனால் கர்த்தர் தம்முடைய மக்களை “ஒன்றாயிருக்கும்படி” கட்டளையிடுகிறார் (வசனம் 27). இப்படிப்பட்ட ஒற்றுமையை நாம் எப்படி அடைவது? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:24–27 நீங்கள் வாசிக்கும்போது மனதில் என்ன ஆலோசனைகள் வருகிறது? தேவனுடைய மக்களாக இருப்பதற்கு நாம் ஏன் ஒன்றுபட வேண்டும்?

இந்த வசனங்களைப் படிப்பது உங்கள் உறவுகளைப் பற்றி சிந்திக்க உங்களுக்கு உணர்த்தும்—உதாரணமாக, குடும்ப உறுப்பினர்கள், தொகுதி உறுப்பினர்கள் மற்றும் குழு அல்லது வகுப்பு உறுப்பினர்களுடன். கிறிஸ்துவில் ஒன்றுபடுவதிலிருந்து உங்களைத் தடுப்பது எது? இரட்சகர் உங்களுக்கு “ஒன்றாக இருப்பதற்கு” எப்படி உதவ முடியும்? “A Friend to All” அல்லது “Love in Our Hearts” (Gospel Library) காணொலிகள் இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க உங்களுக்கு உதவக்கூடும். மூப்பர் ரென்லண்டின் செய்தி “The Peace of Christ Abolishes Enmity,” Liahona, Nov. 2021, 83–85இல் நீங்கள் ஆலோசனைகளைக் காணலாம்.

4:0

A Friend to All

3:14

Love in Our Hearts

இந்தக் குழுக்களை மேலும் ஒருங்கிணைக்க நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? எடுத்துக்காட்டாக, உங்கள் குழுமம், வகுப்பு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு வகையான குறிப்பை அனுப்புவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது பற்றி பரிசீலிக்கவும். நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?

எபேசியர் 2:14, 18–22; 2 நேபி 26:24–28இல் இரட்சகரின் எடுத்துக்காட்டில் உங்களுக்கு எது உணர்த்துகிறது?

See also Quentin L. Cook, “Hearts Knit in Righteousness and Unity,” Liahona, Nov. 2020, 18–21; “Love One Another,” Hymns, no. 308; Topics and Questions, “Belonging in the Church of Jesus Christ,” Gospel Library.

ஆப்பிரிக்காவில் வாலிபர்கள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:39; 39–40.

பரலோக பிதா எனக்கு நித்தியத்தின் ஐசுவரியத்தைக் கொடுக்க விரும்புகிறார்.

உங்கள் கருத்துப்படி, “பூமியின் ஐஸ்வர்யத்திற்கும்” “நித்தியத்தின் ஐஸ்வர்யத்திற்கும்” என்ன வித்தியாசம்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:39). நித்தியத்தின் ஐஸ்வர்யங்களை மதிப்பிடுவதற்கு என்ன அனுபவங்கள் உங்களுக்குக் கற்பித்தன?

ஜேம்ஸ் கோவலைப் பற்றி பாகம் 39–40 (பாக தலைப்புகளில் உள்ள வரலாற்றுப் பின்னணி உட்பட) படிக்கும்போது இதை மனதில் கொள்ளுங்கள். அவருடைய அனுபவம் உங்களுக்கு எவ்வாறு பொருந்தக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் “இருதயம்… [தேவனுக்கு] முன்பாக சரியாக” இருந்த நேரங்களை நினைத்துப் பாருங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 40:1). உங்கள் விசுவாசத்திற்காக நீங்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்? நீங்கள் எதிர்கொள்ளும் “உலகத்தின் அக்கறைகள்” பற்றியும் சிந்தியுங்கள். தேவனுடைய வார்த்தையை “மகிழ்ச்சியுடன்” பெறுவதிலிருந்து அவை எவ்வாறு உங்களைத் தடுக்கலாம்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39:9; 40:2. இந்த பாகங்களில் தொடர்ந்து கீழ்ப்படிதலுடன் இருக்க உங்களைத் தூண்டுகிற எதை நீங்கள் அடிக்கடி காண்கிறீர்கள்?

மத்தேயு 13:3–23 ஐயும் பார்க்கவும்.

வேதங்களை உங்கள் வாழ்க்கைக்கு ஒப்பிடவும். “’நீங்கள் இப்போது அனுபவிக்கும் விஷயத்திற்கு இது எப்படி உங்களுக்கு உதவும்?’ போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம், கற்பவர்கள் அவர்கள் கண்டறிந்த உண்மைகளின் பொருத்தத்தை(வேதங்களில்) பார்க்க உதவுவது நீங்கள் உதவுவதற்கான ஒரு வழி. “இந்த காரியங்களை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது?” “இந்த அறிவு உங்கள் வாழ்க்கையில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?” (Teaching in the Savior’s Way23). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39–40 பற்றிய இந்த நிகழ்ச்சியில் உள்ள கேள்விகள், இந்த வெளிப்பாடுகளை நம் வாழ்வில் பயன்படுத்த உதவும் கேள்விகளின் பிற எடுத்துக்காட்டுகளாகும்.

கூடுதல் ஆலோசனைகளுக்கு, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிக்கைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 02

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3738:31–33

தேவன் நம்மை ஆசீர்வதிப்பதற்காக கூட்டிச் சேர்க்கிறார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:24–27

தேவன் நாம் “ஒன்றாயிருக்க” விரும்புகிறார்.

  • நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:24–25ஐ ஒன்றாக வாசித்து, “[தேவனின்] மகிமைக்கு ஒரே நோக்கத்தோடு” உங்கள் சகோதரனையோ சகோதரியையோ உங்களைப் போல் மதிப்பது என்றால் என்ன என்பதைப் பற்றி பேசுங்கள் (மத்தேயு 7:12 ஐயும் பார்க்கவும்). “அவரது சகோதரன்” என்ற இடத்தில் ஒருவருக்கொருவர் பெயர்களை சேர்த்து, வேதத்தை மீண்டும் சொல்ல அவர்களுக்கு உதவுங்கள்.

  • “ஒன்றுபட்டிருத்தல்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:27) என்பதன் அர்த்தம் என்ன என்பதை உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க, நீங்கள் அவர்களுக்கு பெரிய எண் 1ஐ வரையவும், உங்கள் குடும்பம் அல்லது வகுப்பில் உள்ள ஒவ்வொருவரின் பெயர்கள் மற்றும் வரைபடங்கள் அல்லது படங்களால் அலங்கரிக்கவும் அவர்களுக்கு உதவலாம். 1 க்கு அடுத்ததாக, இன்னும் ஒற்றுமையாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை எழுதலாம்.

  • ஒரு போர்வை செய்யும் துணித் துண்டுகள் அல்லது ஒரு ரொட்டியை உருவாக்கும் பொருட்கள் போன்ற விஷயங்களை எவ்வாறு ஒன்றிணைக்கலாம் அல்லது சேர்க்கலாம் என்பதை விளக்கும் ஒரு பொருள்சார் பாடத்தைப் பகிர்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். தேவனுடைய மக்களாக ஒன்றாக மாறுவது பற்றி இந்த உதாரணங்கள் நமக்கு என்ன கற்பிக்கின்றன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:30

நான் ஆயத்தமாக இருந்தால், நான் பயப்பட தேவையில்லை.

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:30 நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆயத்தம் தேவைப்படும் சமீபத்திய அனுபவங்களைப் பற்றி பேசலாம். பிறகு, பரலோக பிதா நாம் ஆயத்தப்பட விரும்பும் விஷயங்களைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் கேட்கலாம். நீங்கள் பயப்படாமல் இருக்க தயாராக இருப்பதற்கு உங்களுக்கு உதவிய அனுபவத்தை உங்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். “Men’s Hearts Shall Fail Them” (Gospel Library) நீங்கள் காணொலியையும் ஒன்றாக பார்க்கலாம்.

3:24

Men's Hearts Shall Fail Them

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39:6, 23

நான் திடப்படுத்தப்படும்போது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுகிறேன்.

  • திடப்படுத்தப்பட்ட ஒருவரின் படத்தைக் காட்டுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். படத்தில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39:6, 23இல் (அல்லது “The Holy Ghost,” Children’s Songbook, 105 போன்ற பாடலில்)பரிசுத்த ஆவி எனும் வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் அவர்கள் படத்தை சுட்டிக்காட்ட அழைக்கவும். பரிசுத்த ஆவி உங்களை எவ்வாறு ஆசீர்வதித்தது என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இளம் பெண்  திடப்படுத்தப்படுதல்

கூடுதல் ஆலோசனைகளுக்கு, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.