“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: ஆரம்ப கால மனமாறியவர்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“ஆரம்ப கால மனமாறியவர்கள்,“என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
ஆரம்ப கால மனமாறியவர்கள்
1830 ஏப்ரலில்,சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பே “வயல் இப்போதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது” என்று கர்த்தர் அறிவித்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:4) இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையைக் கண்டுபிடிப்பதற்காக சத்தியத்தைத் தேடுபவர்கள் தேவ ஆவியால் வழிநடத்தப்பட்டதால், பின்வந்த மாதங்களில் இந்த அறிக்கை உண்மை என்பதை நிரூபித்தது.
இந்த ஆரம்பகால மனமாறியவர்களில் பலர் மறுஸ்தாபிதத்தின் அடித்தளத்தை அமைப்பதில் கருவியாக இருந்தனர், மேலும் அவர்களின் மனமாற்றத்தின் கதைகள் இன்று நமக்கு மதிப்புமிக்கவை. அவர்கள் காட்டிய விசுவாசம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு மனமாற வேண்டிய அதே நம்பிக்கைதான் நமக்குத் தேவை.
அபிகாயில் கால்கின்ஸ் லியோனார்ட்
அபிகாயில் கால்கின்ஸ் லியோனார்ட் தனது நடு முப்பதுகளில் இருந்தபோது, அவள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவள் எப்போதாவது வேதாகமம் வாசித்தாள், கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள் அவளுடைய வீட்டிற்குச் சென்றார்கள், ஆனால் ஒரு சபையை இன்னொரு சபையிலிருந்து வேறுபடுத்துவது குறித்து அவள் குழப்பமடைந்தாள். அவள் சொன்னாள், “ஒரு நாள் காலையில், நான் என் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றேன், நான் முழங்காலில் விழுந்தேன்.” அவள் கர்த்தரிடம் உருக்கமாக ஜெபித்தாள். அவள் சொன்னாள், “உடனே ஒரு தரிசனம் என் கண் முன்னே சென்றது, வெவ்வேறு பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக என்னைக் கடந்து சென்றன, ஒரு குரல் என்னை அழைத்தது: ‘இவை ஆதாயத்திற்காக கட்டப்பட்டுள்ளன.’ பின்னர், அதற்கு அப்பால், நான் ஒரு பெரிய ஒளியைக் காண முடிந்தது, மேலே இருந்து ஒரு குரல் கூப்பிட்டது: ‘நான் ஒரு ஜனத்தை எழுப்புவேன், அவர்களை நான் சொந்தமாகக் கொண்டு ஆசீர்வதித்து மகிழ்வேன்.’” சிறிது நேரத்திற்குப் பிறகு, அபிகாயில் மார்மன் புஸ்தகத்தைப்பற்றி கேள்விப்பட்டாள். அவளிடம் இன்னும் ஒரு பிரதி இல்லை என்றாலும், “பரிசுத்த ஆவியின் வரம் மற்றும் வல்லமையால் இந்த புஸ்தகத்தின் உண்மையை அறிய” முயன்றாள், அவள் “உடனடியாக அது இருப்பதை உணர்ந்தாள்.” கடைசியாக மார்மன் புஸ்தகத்தை அவளால் படிக்க முடிந்தபோது, அவள் “அதைப் பெறத் தயாராக இருந்தாள்.” அவளும் அவளது கணவர் லைமனும் 1831ல் ஞானஸ்நானம் பெற்றனர்.
தாமஸ் பி. மார்ஷ்
தாமஸ் பி. மார்ஷ் இளம் வயதில், அவர் வேதாகமம் படித்து ஒரு கிறிஸ்தவ சபையில் சேர்ந்தார். ஆனால் அவர் திருப்தியடையவில்லை, இறுதியாக அனைத்து சபைகளிலிருந்தும் விலகினார். “தீர்க்கதரிசன ஆவியை ஒரு அளவில் நான் கொண்டிருந்தேன், [ஒரு மதத் தலைவரிடம்] ஒரு புதிய சபை உருவாகும் என்று நான் எதிர்பார்த்தேன், அது அதன் தூய்மையில் சத்தியத்தைக் கொண்டிருக்கும்” என்று அவர் கூறினார். இதற்குப் பிறகு, மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டன் நகரில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி மேற்கு நோக்கி பயணிக்க தாமஸுக்கு ஆவிக்குரிய தூண்டுதல் இருந்தது. மேற்கு நியூயார்க்கில் அவர் தேடுவதைக் கண்டுபிடிக்காமல் மூன்று மாதங்கள் கழித்த பின்னர், அவர் வீட்டிற்கு திரும்பத் தொடங்கினார். வழியில், ஒரு பெண் தாமஸிடம் “ஜோசப் ஸ்மித் என்ற இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் புஸ்தகத்தைப்பற்றி” கேள்விப்பட்டாரா என்று கேட்டாள். இந்த எண்ணத்தால் ஈர்க்கப்பட்ட தாமஸ் உடனடியாக பால்மைராவுக்குச் சென்று மார்மன் புஸ்தகத்தின் முதல் 16 பக்கங்கள் அச்சில் இருந்து வந்த போது மார்ட்டின் ஹாரிஸை அச்சிடும் இடத்தில் சந்தித்தார். அந்த 16 பக்கங்களின் பிரதியை எடுத்துப்போக தாமஸ் அனுமதிக்கப்பட்டார், மேலும் அவர் அவற்றை தனது மனைவி எலிசபெத்திடம் வீட்டிற்கு கொண்டு வந்தார். புஸ்தகத்தைக் குறித்து “அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்”, “இது தேவ செயல் என்று நம்பியதாக” அவர் நினைவு கூர்ந்தார். தாமஸ் மற்றும் எலிசபெத் பின்னர் தங்கள் குழந்தைகளுடன் நியூயார்க்கிற்குச் சென்று ஞானஸ்நானம் பெற்றனர். (தாமஸ் பி. மார்ஷைப்பற்றிய கூடுதல் தகவலுக்கு, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 31 பார்க்கவும்.)
பார்லி மற்றும் தாங்க்புல் பிராட்
தாமஸ் மார்ஷைப் போலவே, பார்லியும், தாங்க்புல் பிராட்டும் ஆவிக்குரிய உணர்ச்சிகளுக்கு உட்பட்டு ஒஹாயோவில் தங்கள் வளமான பண்ணையை விட்டு வேதாகமத்திலிருந்து தங்களுக்கு புரிந்த வரை சுவிசேஷத்தை போதிப்பதன் நோக்கத்துடன் வெளியேறினர். பார்லி தனது சகோதரரிடம் கூறியது போல், “இவற்றின் ஆவி அண்மைக்காலத்தில் என் மனதில் மிகவும் வல்லமை வாய்ந்ததாக இருந்ததால் என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை.” அவர்கள் கிழக்கு நியூயார்க்கை அடைந்தபோது, பார்லி இப்பகுதியில் சிறிது நேரம் இருக்கும்படி தூண்டுதல் பெற்றார். தாங்க்புல், அவர் இல்லாமல் தொடர்வார் என்று அவர்கள் முடிவு செய்தனர். பார்லி அவரிடம் சொன்னார், “நாட்டின் இந்த பிராந்தியத்தில் எனக்கு ஒரு வேலை இருக்கிறது, அது என்ன, அல்லது அதைச் செய்ய எவ்வளவு காலம் ஆகும், என்று எனக்குத் தெரியாது; ஆனால் அது நிகழும்போது நான் வருவேன்.” அங்குதான் மார்மன் புஸ்தகத்தைப்பற்றி பார்லி முதன்முதலில் கேள்விப்பட்டார். “நான் புஸ்தகத்தில் ஒரு விசித்திரமான ஆர்வத்தை உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார். அவர் ஒரு பிரதி கேட்டு இரவு முழுவதும் வாசித்தார். காலையில், புஸ்தகம் உண்மை என்று அவர் அறிந்திருந்தார், அதை “உலகின் எல்லா செல்வங்களையும் விட அதிகமானதாக” மதிப்பிட்டார். சில நாட்களில் பார்லி ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் அவர் தாங்க்புல்லிடம் திரும்பினார், அவரும் ஞானஸ்நானம் பெற்றார். (பார்லி பி. பிராட்டைப்பற்றிய கூடுதல் தகவலுக்கு, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 32 பார்க்கவும்.)
சிட்னி மற்றும் பெபே ரிக்டன்
நியூயார்க்கில் இருந்து மிசௌரியில் ஒரு பணிக்குச் செல்லும் வழியில், பார்லி பிராட் மற்றும் அவரது சக ஊழியர்கள் ஒஹாயோவின் மென்டரில் சிட்னி மற்றும் பெபே ரிக்டனின் வீட்டில் தங்கினர், பழைய நண்பர்களை, ஒஹாயோவில் இருந்த நாட்களில் இருந்தே பார்லி அறிந்திருந்தார். சிட்னி ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக இருந்தார், பார்லி ஒரு காலத்தில் அவருடைய சபையில் உறுப்பினராக இருந்தார், அவரை ஆவிக்குரிய வழிகாட்டியாக கருதினார். மார்மன் புஸ்தகம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித்தைப்பற்றி பார்லி ஆர்வத்துடன் தனது நண்பர்களிடம் கூறினார். முதலில் மார்மன் புஸ்தகத்தைப்பற்றி அவருக்கு சந்தேகம் இருந்தாலும், சிட்னி புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள உண்மையான சபையின் மறுஸ்தாபிதத்தைத் தேடிக்கொண்டிருந்தார், “ஆனால் நான் உங்கள் புஸ்தகத்தைப் படிப்பேன், அது தேவனிடமிருந்து வந்ததா இல்லையா என்பதைக் கண்டறிய முயற்சிப்பேன்” என்று அவர் தனது நண்பர் பார்லியிடம் கூறினார். இரண்டு வார படிப்பு மற்றும் ஜெபத்துக்குப் பிறகு, அவரும் பெபேவும் புஸ்தகம் உண்மை என்று உறுதியாக நம்பினர். ஆனால் சிட்னி சேருவது அவரது குடும்பத்திற்கு ஒரு பெரிய தியாகமாக இருக்கும் என்பதையும் சிட்னி அறிந்திருந்தார். அவர் சமூகத்தில் தனது சமூக அந்தஸ்துடன் சேர்ந்து ஒரு பாதிரியாராக தனது வேலையை இழக்க நேரிடும். அவரும் பெபேவும் இந்த சாத்தியத்தைப்பற்றி விவாதித்தபோது, பெபே அறிவித்தார், “நான் செலவைக் கணக்கிட்டுள்ளேன், மேலும்… தேவனுடைய சித்தத்தைச் செய்ய வேண்டும், வாழ்வானாலும் சாவானாலும் .”