என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஜூன் 16–22: “இருதயத்தையும் உற்சாகமான மனதையும் கர்த்தர் கேட்கிறார்”: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64–66


“ஜூன் 16–22: ‘இருதயத்தையும் உற்சாகமான மனதையும் கர்த்தர் கேட்கிறார்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64–66” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64–66,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

டேவிஸ் கவுண்டி, மிசௌரி

டேவிஸ் கவுண்டி, மிசௌரி

ஜூன் 16–22: “இருதயத்தையும் உற்சாகமான மனதையும் கர்த்தர் கேட்கிறார்”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64–66

ஆகஸ்ட் 1831 வருத்தும் வெப்பத்தில், பல மூப்பர்கள்மிசௌரியிலுள்ள சீயோன் தேசத்திலிருந்து மீண்டும் கர்த்லாந்துக்கு திரும்ப பயணம் செய்தனர். பயணிகள் சூடாகவும் களைப்பாகவும் இருந்தனர், பதட்டங்கள் விரைவில் சண்டைகளாக மாறியது. அன்பு, ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றின் பட்டணமான சீயோனைக் கட்டுவது நீண்ட காலம் எடுக்கப் போவது போல் தோன்றியிருக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக, 1831 ஆம் ஆண்டில் மிசௌரியில் அல்லது இன்று நம் இருதயங்களிலும், குடும்பங்களிலும் தொகுதிகளிலும் சீயோனைக் கட்டியெழுப்புவதற்கு நாம் பூரணமானவர்களாக இருக்க தேவையில்லை. அதற்கு பதிலாக, “நீங்கள் மன்னிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது” என்று கர்த்தர் சொன்னார் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:10). அவருக்கு “இருதயமும் விருப்பமுள்ள மனமும்” தேவை ( வசனம் 34). அவருக்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை, ஏனென்றால் சீயோன் “சிறிய காரியங்களின்” அஸ்திபாரத்தில் கட்டப்பட்டிருக்கிறது, “நன்மை செய்வதில் சோர்ந்து போகிறவர்களால்” அல்ல. ( வசனம் 33).

Saints, 1:133–34, 136–37ஐயும் பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:1–11

வேத பாட வகுப்பு சின்னம்
“ஒருவரையொருவர் மன்னியுங்கள்.”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:1–11 படிக்கும்போது பின்வருவதை கருத்தில் கொள்ளுங்கள்:

  • கர்த்தர் உங்களை மன்னித்த காலத்தை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?”

  • நீங்கள் மன்னிக்க வேண்டிய ஒருவர் இருக்கிறாரா? மற்றவர்களை மன்னிப்பது ஏன் மிகவும் கடினமாக இருக்கலாம்? இந்த சிரமங்களை சமாளிக்க எது உதவுகிறது?

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:1–11 ல் மன்னித்தல் பற்றிய எந்த சத்தியங்கள் உங்களுக்கு முக்கிமானதாகத் தோன்றுகிறது? “அனைவரையும் மன்னிக்க” கர்த்தர் நமக்கு கட்டளையிடுகிறார் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? (வசனம் 10).

நீங்கள் மன்னிக்க சிரமப்பட்டால், மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்டின் செய்தியைப் படிக்கவும்“ The Ministry of Reconciliation” (Liahona, Nov. 2018, 77–79) or Kristin M. Yee’s message “Beauty for Ashes: The Healing Path of Forgiveness” (Liahona, Nov. 2022, 36–38). மன்னிக்க கிறிஸ்து உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

குடும்ப உறவுகள் மன்னிக்க பல வாய்ப்புகளை வழங்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் யாரை மன்னிக்க வேண்டும்? மற்றவர்களை மன்னிக்காதபோது நாம் எவ்வாறு “துன்பப்படுகிறோம்” ( வசனம் 8)? மன்னிப்பு உங்கள் குடும்ப உறவுகளை எவ்வாறு பாதிக்கும்?

See also Topics and Questions, “Forgiveness,” Gospel Library; “Forgiveness: My Burden Was Made Light” (video), Gospel Library.

8:24

Forgiveness: My Burden Was Made Light

தகப்பனும் மகனும் தழுவிக் கொள்ளுதல்

“நீங்கள் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டு்ம்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:9).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:31–34

தேவன் என் “இருதயத்தையும் விருப்பமான மனதையும்” கேட்கிறார்.

நீங்கள் சாதிக்க முயற்சிக்கும் எல்லா “நன்மை செய்வதிலும்” நீங்கள் எப்போதாவது “சோர்வாக” உணர்ந்திருக்கிறீர்களா? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:31–34ல் உங்களுக்கான கர்த்தருடைய செய்தியைத் தேடுங்கள். அவருடைய “மகத்தான பணியை” கொண்டுவர உங்கள் குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்?

வசனம் 33-ஐ விளக்கும் ஒரு பொருள்சார் பாடத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள்—மொசைக் அல்லது செங்கல் கட்டிடம் போன்ற சிறிய விஷயங்களால் ஆன பெரிய ஒன்று. தேவனின் மகத்தான பணியின் “அஸ்திவாரம் [இடுவதற்கு]” நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன “சிறிய விஷயங்களை” செய்யலாம்? கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற “மகத்தான பணியின்,” உதாரணங்கள் சில யாவை?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:31–34

“இருதயமும் விருப்பமுள்ள மனமும்”

மூப்பர் டொனால்ட் எல். ஹால்ஸ்ட்ரோம் “இருதயம் மற்றும் விருப்பமுள்ள மனம்” என்ற சொற்றொடருக்கு இந்த சாத்தியமான அர்த்தத்தைப் பரிந்துரைத்தார்:

“இருதயம் அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம். வேறு எந்த காரணத்திற்காகவும் தாங்க மாட்டோம் என்பதால், நாம் நேசிப்பவர்களுக்காக நாம் தியாகங்களைச் செய்கிறோம். அன்பு இல்லாவிட்டால், நமது அர்ப்பணிப்பு குறைகிறது. …

“ஒரு விருப்பமான மனதைக் கொண்டிருப்பது நமது சிறந்த முயற்சியையும் சிறந்த சிந்தனையையும் தேவனின் ஞானத்தைத் தேடுவதையும் குறிக்கிறது. நமது மிகவும் அர்ப்பணிப்பான வாழ்நாள் படிப்பு இயல்பில் நித்தியமான விஷயங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது. தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கும் அதைக் கடைப்பிடிப்பதற்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத உறவு இருக்க வேண்டும் என்று அர்த்தம்.” (“The Heart and a Willing Mind,” Ensign, June 2011, 31–32).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:41–43

சீயோன் “ஜனங்களுக்கு ஒரு கொடியாக” இருக்கும்.

ஒரு சின்னம் என்பது “ஒரு கொடி அல்லது சின்னத்தை சுற்றி மக்கள் ஒற்றுமை நோக்கம் அல்லது அடையாளத்துக்காக கூடுவதாகும்” (Guide to the Scriptures, “Ensign,” Gospel Library). சீயோன், அல்லது கர்த்தரின் சபை உங்களுக்கு ஒரு அடையாளமாக எப்படி இருந்திருக்கிறது? ஜனங்களை ஆசீர்வதிப்பதற்காக, ஒரு அடையாளத்தைப் போல நடத்தப்படும் இந்த மற்ற உதாரணங்களைக் கருத்தில் கொள்ளுங்கள்: எண்ணாகமம் 21: 6–9; மத்தேயு 5:14–16; ஆல்மா 46:11–20 கர்த்தர் சீயோனை கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:41–43ல் விவரிக்கிற வேறு விதங்களைத் தேடவும்.

See also “Let Zion in Her Beauty Rise,” Hymns, no. 41.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 65

பூமியிலுள்ள தேவனுடைய ராஜ்யம் இரட்சகரின் வருகைக்காக உலகை தயார்படுத்துகிறது.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 65 கடைசி நாட்களில் கர்த்தரின் சபையின் பணியைப் பற்றிய ஒரு ஊக்கமளிக்கும் விளக்கத்தை அளிக்கிறது. இந்தப் பாகத்தைத் தேடுவதைக் கவனியுங்கள், இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடுங்கள்: பூமியில் அவருடைய ராஜ்யம் எதைச் சாதிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்? நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்?

See also “Prepare Today for the Second Coming” (video), ChurchofJesusChrist.org.

2:3

Prepare Today for the Second Coming

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 66

என் இருதயத்தின் எண்ணங்களை கர்த்தர் அறிவார்.

சபையில் சேர்ந்த சிறிது காலத்திலேயே, வில்லியம் இ. மெக்லெலின் அவரைப்பற்றிய தேவனின் விருப்பத்தை வெளிப்படுத்துமாறு ஜோசப் ஸ்மித்திடம் கேட்டார். ஜோசப் அதை அறிந்திருக்கவில்லை, ஆனால் வில்லியமுக்கு ஐந்து தனிப்பட்ட கேள்விகள் இருந்தன, கர்த்தர் தனது தீர்க்கதரிசி மூலம் பதிலளிப்பார் என்று நம்பினார். வில்லியமின் கேள்விகள் என்னவென்று நமக்குத் தெரியாது, ஆனால் அவருக்கு சொல்லப்பட்ட வெளிப்பாடு, இப்போது கோட்பாடும் உடன்படிக்கைகளும் 66, ஒவ்வொரு கேள்விக்கும் வில்லியமின் “முழு திருப்திக்கும்” பதிலளித்தது (“William McLellin’s Five Questions,” Revelations in Context, 138).

நீங்கள் பாகம் 66 வாசிக்கும்போது, வில்லியம் மெக்லெலினைப்பற்றி கர்த்தர் அறிந்ததைப்பற்றியும் அவருடைய இருதயத்தின் கவலைகள் மற்றும் நோக்கங்களைப்பற்றியும் சிந்தியுங்கள். கர்த்தர் உங்களை அறிந்திருக்கிறார் என்பதை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்? உங்களுக்கு கோத்திர பிதா ஆசீர்வாதம் இருந்தால், அதைப் படிப்பதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் செய்யும்போது, உங்களுக்கான தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன உதவி செய்கிறார்?

கூடுதல் ஆலோசனைகளுக்கு, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிக்கைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்

பிள்ளைகள் பாகம் சின்னம் 03

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:7–10

நான் அனைவரையும் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.

குறிப்பு: “அனைவரையும் மன்னியுங்கள்” என்ற கர்த்தரின் கட்டளையைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்பிக்கும்போது, மன்னிப்பது என்பது மக்கள் நம்மை காயப்படுத்த அனுமதிப்பது அல்ல என்பதை நீங்கள் தெளிவுபடுத்த விரும்பலாம். யாராவது அவர்களை காயப்படுத்தினால் அல்லது தகாத முறையில் தொட்டால், நம்பகமான பெரியவர்களிடம் சொல்ல அவர்களை ஊக்குவிக்கவும்.

  • உங்கள் குழந்தைகளுடன் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:10ஐ வாசித்த பிறகு, ஒருவரை மன்னிப்பது என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். நீங்கள் சில எளிய உதாரணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒருவேளை அவர்கள் மன்னிப்பதைப் பயிற்சி செய்ய இந்த உதாரணங்களை நடித்துக் காட்டலாம்.

  • மற்றவர்களை மன்னிப்பதைப் பற்றி ஒரு இளம் உடன்பிறப்பு போன்ற ஒருவருக்கு எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதைத் திட்டமிடும்படி உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் கேட்கலாம். அவர்கள் போதிக்கும் போது அவர்கள் பயன்படுத்தக்கூடிய கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64: 7–10 இல் உள்ள சொற்றொடர்களைக் கண்டறிய உதவுங்கள்.

  • மன்னிப்பைப்பற்றி, “Help Me, Dear Father” (Children’s Songbook, 99) போன்ற ஒரு பாடலைப் பாடுவதைக் கருத்தில்கொள்ளவும். அனைவரையும் மன்னிப்பதைப்பற்றி இந்தப் பாடல் உங்களுக்கு என்ன போதிக்கிறது?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33

தேவனின் “மகத்தான பணி” “சிறிய விஷயங்களில்” கட்டப்பட்டுள்ளது.

  • ஒரு புதிர் அல்லது விரிப்பு போன்ற சிறிய பகுதிகளால் ஆன சில விஷயங்களை உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டலாம். பின்னர் நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33 ஒன்றாக வாசிக்கலாம். தேவனின் “மகத்தான பணி” என்றால் என்ன? நாம் செய்யக்கூடிய “சிறிய விஷயங்கள்” என்ன உதவும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:34

நான் என் இருதயத்தாலும் மனதாலும் இயேசுவைப் பின்பற்ற முடியும்.

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:34 லிருந்து உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் “இருதயம்” மற்றும் “மனம்” ஆகியவற்றைப் படிக்கும்போது உங்கள் இருதயத்தையும் தலையையும் சுட்டிக்காட்டலாம் மற்றும் உங்களுடன் அதைச் செய்ய குழந்தைகளை அழைக்கலாம். இரட்சகருக்கு நாம் எப்படி நம் இருதயங்களையும் (ஆசைகளையும்) மனதையும் (எண்ணங்களை) கொடுக்க முடியும்?

இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டை வலியுறுத்துங்கள் நீங்கள் படிக்கும்போது அல்லது கற்பிக்கும்போது இரட்சகரின் முன்மாதிரியை எப்படி வலியுறுத்தலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:34 பற்றி கற்பிக்கும்போது, இரட்சகர் தம்முடைய இருதயத்தையும் (ஆசைகளையும்) மனதையும் (எண்ணங்களை) பரலோகத்திலுள்ள தம் பிதாவுக்கு எவ்வாறு கொடுத்தார் என்பதைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் பேசலாம். (Teaching in the Savior’s Way6 பார்க்கவும்.)

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 66

கர்த்தர் நான் யார் என்பதை அறிந்திருக்கிறார், என்னை நேசிக்கிறார்.

  • வில்லியம் இ. மெக்லெலின் கர்த்தருக்காக ஐந்து கேள்விகளை வைத்திருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். வில்லியமின் கேள்விகள் என்னவென்று தெரியாவிட்டாலும் ஜோசப் ஸ்மித் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் உங்களுக்குக் காட்டிய காலத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள், அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றியதால் கிடைத்த ஆசீர்வாதங்களைப் பற்றி பேசுங்கள். நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 66:4 ஒன்றாகப் படித்து, உங்கள் பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்புகளைத் தேட அவர்களை அழைக்கலாம்.

    இரட்சகரின் இரண்டாம் வருகை

    இரண்டாம் வருகைவிளக்கம்–கெவின் கீல்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 65

இயேசு கிறிஸ்துவை வரவேற்க உலகை தயார்படுத்த நான் உதவ முடியும்.

  • உங்கள் பிள்ளைகள் இரட்சகரின் இரண்டாம் வருகையின் படத்தைப் பார்க்கும்போது, அவர்கள் என்ன பார்க்கிறார்கள் அல்லது இந்த நிகழ்வைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்பதை விவரிக்கும்படி அவர்களிடம் கேளுங்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 65ல் உள்ள இரண்டாவது வருகையைப் பற்றிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் உங்கள் குழந்தைகளுக்கு வழங்கலாம். இந்த வார்த்தைகளும் சொற்றொடர்களும் நமக்கு என்ன கற்பிக்கின்றன? இரட்சகரின் வருகைக்கு நாம் எவ்வாறு தயாராகலாம்?

கூடுதல் ஆலோசனைகளுக்கு, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

இரட்சகர் ஒரு பெண்ணை மன்னித்தல்

மன்னிக்கப்பட்டாய் – கிரெக் ஆல்சன்

பிள்ளைகளுக்கான நிகழ்ச்சிகள் பக்கம்