“ஜூலை 28–ஆகஸ்டு 3: ‘தேவதன்மையின் வல்லமை’:கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக:: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
ஜூலை 28–ஆகஸ்டு 3: “தேவதன்மையின் வல்லமை”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84
1829ல் ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதிலிருந்து, ஆரம்ப கால பிற்காலப் பரிசுத்தவான்கள் கர்த்தரின் பரிசுத்த வல்லமையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகமாக இன்று நாம் செய்வது போலவே, அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள், திடப்படுத்தப்பட்டார்கள், ஆசாரியத்துவ அதிகாரத்தால் சேவை செய்ய அழைக்கப்பட்டார்கள். ஆனால் ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பெறுவது என்பது அதை முழுமையாகப் புரிந்துகொள்வதைப் போன்றதல்ல, மேலும் குறிப்பாக வரப்போகும் ஆலய நியமங்களை மறுஸ்தாபிதம் செய்தல் போன்ற அதிகமானவற்றை அவருடைய பரிசுத்தவான்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்று தேவன் விரும்பினார். . ஆசாரியத்துவத்தைப்பற்றிய 1832 வெளிப்பாடு, இப்போது கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84ல், ஆசாரியத்துவம் உண்மையில் என்ன என்பதைப்பற்றிய பரிசுத்தவான்களின் பார்வையை விரிவுபடுத்தியது. அது இன்று நமக்கும் அதையே செய்ய முடியும். ஆயினும் “தேவனின் ஞானத்தின் திறவுகோலை,” தரித்திருக்கிற தெய்வீக வல்லமையைப்பற்றி அறிய நிறைய இருக்கிறது “தேவ தன்மையின் வல்லமையையும்,” வெளிக்காட்டுகிற “பிதாவாகிய தேவனின் முகத்தைக் கண்டு பிழைத்திருக்க” நம்மை ஆயத்தப்படுத்துகிறது (வசனங்கள் 19–22).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:17–32
தேவனின் ஆசாரியத்துவ வல்லமை மற்றும் ஆசீர்வாதங்களை நான் பெற முடியும்.
ஆசாரியத்துவம், என்ற வார்த்தையை நீங்கள் நினைக்கும் போது என்ன நினைவுக்கு வருகிறது? தேவனுடைய ஆசாரியத்துவ வல்லமை உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது?
இந்த கேள்விகளை சிந்தித்த பின், கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:17–32 வாசித்து, அவரது ஆசாரியத்துவ வல்லமையைப்பற்றி நீங்கள் என்ன அறிய வேண்டுமென தேவன் விரும்புகிறார் என்பதைத் தேடலாம். ஆசாரியத்துவத்தை ஒருவருக்கு விவரிக்கவும் அதன் நோக்கங்களை விளக்கவும் இந்த வசனங்களை எவ்வாறு நீங்கள் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
நீங்கள் காணக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், ஆசாரியத்துவ நியமங்கள் மூலம் “தேவ தன்மையின் வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது” (வசனங்கள் 19–21ஐப் பார்க்கவும்). ஒருவேளை நீங்கள் பங்குகொண்ட ஆசாரியத்துவ நியமங்களை நீங்கள் பட்டியலிடலாம் (பொது கையேடு, 18.1, 18.2 இல் உள்ள பட்டியல்கள் உதவலாம்). இந்த நியமங்களும் அதனுடன் இணைந்த உடன்படிக்கைகளும் எவ்வாறு தேவனின் வல்லமையை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்துள்ளன? அவை இல்லாமல் உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமாக இருக்கும்?
தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “தேவனோடு உடன்படிக்கைகளைச் செய்து அந்த உடன்படிக்கைகளை கைக்கொள்ளுகிற எல்லா ஆண்களும் பெண்களும், ஆசாரியத்துவ நியமங்களில் தகுதியுள்ளவர்களாக பங்குபெறுகிறவர்கள் தேவனின் வல்லமையை நேரடியாக பெறலாம்.” (“Spiritual Treasures,” Liahona, Nov. 2019, 77). நீங்கள் “இரட்சகரின் வல்லமையை [உங்கள்] வாழ்க்கையில் பெற” வழிகளைத் தேடி, தலைவர் நெல்சனின் செய்தியைப் படிப்பதைக் கருத்தில் கொள்ளவும்.
மேலும் பார்க்கவும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:10, 13, 15; 121:34–37, 41–46; Topics and Questions, “Priesthood,” “Joseph Smith’s Teachings about Priesthood, Temples, and Women,” Gospel Library; General Handbook, 3.6, Gospel Library.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:31–44
ஆசாரியத்துவம் ஒரு வாக்குறுதியுடனும் உடன்படிக்கையுடனும் பெறப்படுகிறது.
ஆசாரியத்துவத்தின் வாக்குறுதியும் உடன்படிக்கையும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:31–44 ஐப் பார்க்கவும்) ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்பட்ட பரலோக பிதாவின் குமாரர்களுக்கு சிறப்புப் பயன்பாடு உள்ளது, ஆனால் இந்த வசனங்களில் வாக்களிக்கப்பட்ட பல ஆசீர்வாதங்கள் தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் கிடைக்கின்றன. இந்த வாக்குறுதிகள் என்ன, அவற்றைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று தேவன் நம்மிடம் கேட்கிறார்?
மூப்பர் பால் பி. பைப்பர் போதித்தார்: “ஆசாரியத்துவத்தின் உறுதிமொழி மற்றும் உடன்படிக்கையில் [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:31–44], கர்த்தர் பெறுதல் மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் போன்ற வினைச்சொற்களைப் பயன்படுத்துவது ரசிக்கத்தக்கது. அவர் நியமி என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவங்களின் ஆசீர்வாதங்களையும் வல்லமையையும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆலயத்தில் பெறுகிறார்கள்” (“Revealed Realities of Mortality,” Ensign, Jan. 2016, 21).
நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84: 31–44 ஐ படிக்கும்போது, ஆசாரியத்துவத்தை “பெறுதல்” மற்றும் “ஏற்றுக்கொள்ளுதல்” ஆகியவற்றின் அர்த்தம் என்ன என சிந்தியுங்கள். ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்படுவதிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டது? இந்த வசனங்களில் வேறு எதைப் பெற்றுக்கொள்ளும்படி கர்த்தர் உங்களை அழைக்கிறார்? அதை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள்?
இரட்சகரையும், பிதாவையும் அவருடைய ஊழியர்களையும் அவருடைய ஆசாரியத்துவ வல்லமையையும் வரவேற்பதில் அதிக உண்மையுள்ளவர்களாக இருக்க உங்களைத் தூண்டுகிறது எதுவென காண்கிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:36–46 ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:43–61
தேவனுடைய வார்த்தையின்படி வாழ்வது என் வாழ்க்கையில் ஒளியும் சத்தியமும் கொண்டுவருகிறது.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84: 43–61ல் நீங்கள் என்ன சத்தியங்களைக் காண்கிறீர்கள், அவை ஏன் தேவனுடைய வார்த்தையை தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகின்றன? இந்த வசனங்களில் ஒளிக்கும் இருட்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள்; உங்கள் “நித்திய ஜீவனுள்ள வார்த்தைகளுக்கு நீங்கள் கருத்தாய் செவிகொடுத்தல்” ஒளி, சத்தியம் மற்றும் “இயேசு கிறிஸ்துவின் ஆவி” ஆகியவற்றை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு கொண்டு வந்தது? ( வசனங்கள் 43, 45).
(2 நேபி 32:3 ஐயும் பார்க்கவும்.)
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:62–91
நான் அவருடைய சேவையில் இருக்கும்போது கர்த்தர் என்னுடன் இருப்பார்.
இந்த வசனங்களை வாசிக்கும்போது, தம்முடைய ஊழியக்காரர்களை ஆதரிப்பதாக கர்த்தர் சொன்ன வழிகளை நீங்கள் அடையாளம் காணலாம். அவர் உங்களிடம் செய்யக் கேட்ட பணிக்கு இந்த வாக்குறுதிகள் எவ்வாறு பொருந்தும்? எடுத்துக்காட்டாக, வசனம் 88ல் உள்ள வாக்குறுதிகள் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:106–110
தேவனின் பணிக்கு ஒவ்வொருவரும் பங்களிக்க முடியும்.
கர்த்தர் தம்முடைய பணியை எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதைப் பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? நீங்கள் என்ன ஆலோசனைகளையும் ஆசீர்வாதங்களையும் காண்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் உட்பட, “ஆவியில் பலமுள்ள” ஒருவருடன் நீங்கள் சேவை செய்ததால், நீங்கள் எவ்வாறு “சகல சாந்தத்தோடும்” தெளிவுபடுத்தப்பட்டீர்கள் என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:4–5
பரலோக பிதாவுடன் மீண்டும் வாழத் தயாராக எனக்கு ஆலய நியமங்கள் உதவுகின்றன.
-
உங்கள் பிள்ளைகள் ஆலயத்துக்குச் செல்வதை எதிர்நோக்குவதற்கு உதவ, ஆலயத்தின் படத்திலிருந்து ஒரு புதிரை உருவாக்கலாம். ஒவ்வொரு துண்டின் பின்புறத்திலும், ஆலயத்தில் நாம் செய்யும் முன்னோர்களுக்காக ஞானஸ்நானம் பெறுதல், நமது குடும்பங்களுடன் முத்திரிக்கப்படுதல், தேவனுடன் உடன்படிக்கை செய்வது போன்றவற்றை நீங்கள் எழுதலாம். உங்கள் பிள்ளைகளுடன் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:4–5 ஐப் படித்து, பரிசுத்தவான்களுக்குக் கட்டியெழுப்பும்படி கர்த்தர் கட்டளையிட்டதைக் கேட்கும்படி அவர்களிடம் கேளுங்கள். நீங்களும் உங்கள் குழந்தைகளும் புதிரை ஒன்றாக இணைக்கும்போது, ஆலயத்துக்குள் பிரவேசிக்க நாம் செய்யக்கூடிய விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–22
ஆசாரியத்துவ நியமங்கள் மூலம் பரலோக பிதாவின் வல்லமையை என்னால் பெற முடியும்.
-
நியமம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, Gospel Art Book, nos. 103–8, அல்லது இந்த வார நிகழ்ச்சி பக்கம் போன்ற பல ஆசாரியத்துவ நியமங்களின் படங்களைப் பார்க்கவும். ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க அவர்களிடம் கேட்பதைக் கருத்தில் கொள்ளவும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–22 ஒன்றாக வாசிக்கவும். பரலோக பிதா நாம் ஏன் இந்த நியமங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்? நீங்கள் பெற்ற நியமங்கள் மற்றும் நீங்கள் செய்த உடன்படிக்கைகளின் காரணமாக தேவனின் வல்லமையை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். (See also “Priesthood Power, Authority, and Keys” in appendix A or appendix B.)
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:77
நான் இயேசுவைப் பின்பற்றும்போது அவருடைய நண்பன்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:77ஐ ஒன்றாக வாசித்த பிறகு, நண்பராக இருப்பதன் அர்த்தம் என்ன என்று உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள். உங்களுக்கு கிடைத்த நல்ல நண்பர்களைப் பற்றி பேசலாம். நாம் அவருடைய நண்பர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை இயேசு எவ்வாறு நமக்குக் காட்டுகிறார்? நமக்கும் அது வேண்டும் என்று எப்படிக் காட்ட முடியும்? “I’m Trying to Be like Jesus” (Children’s Songbook, 78–79) போன்ற பாடல் உரையாடலுக்கு உங்களுக்கு உதவக்கூடும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:88
பரலோக பிதா தம் ஊழியர்களுக்கு உதவுகிறார்.
-
நீங்கள், உங்கள் குடும்பத்தினர் அல்லது உங்கள் முன்னோர்கள் சுவிசேஷத்தைப் பெற ஊழியக்காரர்கள் எவ்வாறு உதவினார்கள் என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகள் கேட்டு மகிழலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:88 இல் ஊழியக்காரர்களுக்கு கர்த்தர் அளித்த ஒரு சிறப்பு வாக்குறுதியைப் பற்றி நீங்கள் வாசிக்கலாம். இந்த வசனத்துடன் பொருந்தும் செயல்களை உங்கள் பிள்ளைகள் நினைக்கலாம். 88 வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நீங்கள் கர்த்தருக்குச் சேவை செய்து கொண்டிருந்த ஒரு நேரத்தில் அவர் உங்களுடன் இருந்ததை நீங்கள் உணர்ந்ததைப் பற்றிப் பகிர்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் இப்போது ஊழியக்காரர்களாக இருப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்கவும் நீங்கள் அவர்களுக்கு உதவலாம். இயேசு கிறிஸ்துவைப்பற்றி மற்றவர்களிடம் பேசும்போது என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிய பரலோக பிதா நமக்கு உதவுகிறார் என்று சாட்சி கூறுங்கள்.