“ஆகஸ்ட் 18–24: ‘வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கை’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89– 92,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89–92,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
ஆகஸ்ட் 18–24: “வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கை”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89–92
தீர்க்கதரிசிகளின் கூட்டத்தில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தேவ ராஜ்யத்தை பூமியில் கட்டுவதைப்பற்றி கற்பித்தார். அவர்கள் ஆவிக்குரிய சத்தியங்களைப்பற்றி கலந்துரையாடினார்கள், ஒன்றாக ஜெபித்தார்கள், உபவாசம் இருந்தார்கள், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தயாரானார்கள். ஆனால் சூழ்நிலைபற்றிய, இன்று நமக்கு வித்தியாசமாகத் தோன்றுகிற ஏதோ ஒன்று இருந்தது, அது எம்மா ஸ்மித்துக்கு சரியானதாகத் தோன்றவில்லை. கூட்டங்களின் போது, ஆண்கள் புகைபிடித்து, புகையிலையை மென்று கொண்டிருந்தார்கள், அது அந்த நேரத்தில் அசாதாரணமானது அல்ல, ஆனால் அது மரத் தளங்களை கறுப்பாகக் கறைபடுத்தி காற்றில் ஒரு துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. எம்மா தனது அக்கறைகளை ஜோசப்புடன் பகிர்ந்து கொண்டார், ஜோசப் கர்த்தரிடம் கேட்டார். இதன் விளைவாக புகை மற்றும் புகையிலை கறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வெளிப்பாடு அவரது பதிலாக இருந்தது. இது பரிசுத்தவான்களுக்கு, வரவிருக்கும் தலைமுறைகளுக்கு, “வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கையான” உடல்நலம், “ஞானம்” மற்றும் “அறிவின் பெரும் பொக்கிஷங்களைப்பற்றிய” வாக்குத்தத்தங்கள் கொடுத்தது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:3, 19).
Saints, 1:166–68ஐயும் பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89
உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க கர்த்தர் எனக்கு ஞான வார்த்தை கொடுத்தார்.
ஜோசப் ஸ்மித் ஞான வார்த்தையை வாசித்ததை தீர்க்கதரிசிகளின் கூட்டத்திலிருந்த மூப்பர்கள் முதலில் கேட்டபோது, அவர்கள் உடனடியாக “தங்கள் குழாய்களையும், மெல்லும் புகையிலை செருகிகளையும் நெருப்பில் தூக்கி எறிந்தனர்” (Saints, 1:168). கர்த்தருக்குக் கீழ்ப்படியத் தங்கள் விருப்பத்தைக் காட்ட விரும்பினார்கள். ஞான வார்த்தை எச்சரிக்கும் பொருட்களை, ஒருவேளை நீங்கள் ஏற்கனவே உங்கள் வாழ்க்கையிலிருந்து “தூக்கி எறிந்திருக்கலாம்” ஆனால் இந்த வெளிப்பாட்டிலிருந்து நீங்கள் வேறு என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்த ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவும்:
-
ஒரு வெளிப்பாட்டை “வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கை” (வசனம் 3) என்று நினைத்துப் பாருங்கள், முடிவெடுக்க வழிநடத்தும் நீடித்த சத்தியங்கள். உங்கள் முடிவுகளை வழிநடத்தும் எந்தக் கொள்கைகளை நீங்கள் காண்கிறீர்கள்? கர்த்தர் என்ன ஆசீர்வாதங்களை வாக்களிக்கிறார்? (வசனம் 18– 21). உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்தங்களை அவர் எப்படி நிறைவேற்றியிருக்கிறார்?
-
“சதி செய்கிற மனிதர்களின் இருதயங்களில் உள்ள … தீமைகள் மற்றும் திட்டங்களில்” ஞான வார்த்தை சம்மந்தப்பட்ட என்ன உதாரணங்களை நீங்கள் கண்டீர்கள்? (வசனம் 4). இந்த வெளிப்பாட்டைத் தவிர, இந்தத் தீமைகளைத் தவிர்க்க அல்லது வெல்ல உங்களுக்கு உதவ கர்த்தர் என்ன கொடுத்திருக்கிறார்?
-
இந்த வெளிப்பாடு கர்த்தரைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29: 34–35 ஞான வார்த்தையுடன் எவ்வாறு தொடர்புடையது?
-
உங்கள் உடலை நன்கு கவனிக்க நீங்கள் என்ன செய்யத் தூண்டப்படுகிறீர்கள்?
நீங்கள் ஞான வார்த்தையின்படி ஏன் வாழ்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு விளக்க உங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம்—மேலும் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கலாம். இரட்சகரைப் பற்றி, நமது உடலின் பரிசுத்தம் மற்றும் பிற ஆவிக்குரிய சத்தியங்களைப் பற்றி சாட்சியமளிக்க இந்த வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். யோசனைகளுக்கு, “Your body is sacred,” For the Strength of Youth: A Guide for Making Choices, 22–29 பார்க்கவும்.
1 கொரிந்தியர் 6:19–20; Thomas S. Monson, “Principles and Promises,” Liahona, Nov. 2016, 78–79; Topics and Questions, “Word of Wisdom,” Gospel Library; “The Word of Wisdom,” in Revelations in Context, 183–91; “Addiction,” “Physical Health,” Life Help, Gospel Library பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:1–17
பிரதான தலைமை “ராஜ்யத்தின் திறவுகோல்களை” தரித்திருக்கின்றனர்.
பாகம் 90ல், கர்த்தர் (வசனம் 12) நாம் இப்போது பிரதான தலைமை என அழைக்கிற அங்கத்தினர்களாகிய ஜோசப் ஸ்மித், சிட்னி ரிக்டன் மற்றும் ப்ரெடரிக் ஜி.வில்லியம்ஸ் “ஊழியம் மற்றும் தலைமையைப்பற்றி” அறிவுரைகள் கொடுத்தார். வசனங்கள் 1–17லிருந்து பிரதான தலைமை பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? பிரதான தலைமை உறுப்பினர்களின் சமீபத்திய செய்திகளை மதிப்பாய்வு செய்வதைக் கருத்தில் கொள்ளவும். அவர்கள் “இந்த சபை மற்றும் ராஜ்யத்தின் அனைத்து விவகாரங்களையும் ஒழுங்குபடுத்த” அவர்கள் என்ன செய்கிறார்கள்? (வசனம் 16). அவை நமக்கு “ஒரு லேசான காரியம்” அல்ல என்பதை நாம் எவ்வாறு காட்ட முடியும்? (வசனம் 5).
“Come, Listen to a Prophet’s Voice” (Hymns, no. 21) வார்த்தைகளைப் பாடுவது அல்லது அல்லது இந்த வசனங்களில் கற்பிப்பது தொடர்பான தீர்க்கதரிசிகளைப் பற்றிய மற்றொரு பாடல் பாடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் தெரிந்துகொள்ள பிரதான தலைமையின் சேவை உங்களுக்கு எப்படி உதவியது?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:24
“[என்] நன்மைக்கு ஏதுவாக சகல காரியங்களும் நடக்கும்.”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:24 ல் கர்த்தருடைய வாக்குறுதியின் சாட்சியத்தை நீங்கள் பெற்ற எந்த அனுபவங்களையும் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் அனுபவங்களைப் பதிவுசெய்து, ஒரு குடும்ப அங்கத்தினர் அல்லது ஒருவேளை உறுதியளிப்பு அல்லது ஊக்கம் தேவைப்படும் அன்பானவருடன் பகிர்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் சில குறிப்பிட்ட ஆசீர்வாதங்களுக்காக காத்திருந்தால், “உங்கள் நன்மைக்கு ஏதுவாக சகல காரியங்களும் நடக்கும்” என்பதைக் காண நீங்கள் காத்திருக்கும்போது உண்மையுள்ளவர்களாக இருக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:28–31
வியன்னா ஜாக்ஸ் யார்?
வியன்னா ஜாக்ஸ் 1787 ஜூன் 10 அன்று மாசசூசெட்ஸில் பிறந்தார். கணிசமான நிதி வசதிகளைக் கொண்டிருந்த விசுவாசமுள்ள ஒரு பெண், வியன்னா முதன்முதலில் ஊழியக்காரர்களை 1831ல் சந்தித்தார். அவர்களின் செய்தி உண்மை என்று ஆவிக்குரிய சாட்சியம் பெற்ற பிறகு, ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசியைச் சந்திக்க அவர் பயணம் செய்தார், அங்கு அவர் ஞானஸ்நானம் பெற்றார்.
வியன்னா கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90: 28–31லிலுள்ள கர்த்தரின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தார். கர்த்லாந்தில் அவர் முன்னர் கொடுத்த நன்கொடைகள் உட்பட கர்த்தருக்கான அவரது அர்ப்பணிப்பு தலைவர்கள் கர்த்லாந்து ஆலயம் கட்டப்படும் நிலத்தை வாங்க முயற்சித்தபோது, சபைக்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்தது. வியன்னா தனது வாழ்நாள் முழுவதும் “விசுவாசத்துடன் சோம்பலாயில்லாமல்”, இறுதியில் சால்ட் லேக் பள்ளத்தாக்கில் “சமாதானமாய் ஓய்ந்திருக்க” (வசனம் 31) முடிந்தது, அங்கு அவர் 96 வயதில் மரித்தார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 91.
“ஆவியானவர் உண்மையை வெளிப்படுத்துகிறார்.”
“அநேக காரியங்கள் … உண்மையானவை” மற்றும் “அநேக காரியங்கள் … உண்மையானவை இல்லை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 91:1-2) ஆகியவற்றைக் கொண்ட செய்திகளை நாம் அனைவரும் சந்திக்கிறோம். நீங்கள் சந்திக்கும் செய்திகளில் உண்மையைக் கண்டறிய உதவும் பாகம் 91-ல் என்ன ஆலோசனையைக் காண்கிறீர்கள்? பிழையிலிருந்து உண்மையைப் பகுத்தறிய ஆவியானவர் உங்களுக்கு எவ்வாறு உதவினார்?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89
ஞான வார்த்தை உடலிலும் ஆவியிலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
-
பாகம் 89 ஐ அறிமுகப்படுத்த, ஒருவேளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒரு ஆலயத்தின் படத்தைப் பார்க்கலாம் அல்லது நமது உடல்கள் நமது ஆவிகளுக்கான ஆலயங்கள் என்று கற்பிக்க, உடல் ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு பாடலைப் பாடலாம்.“The Lord Gave Me a Temple” (Children’s Songbook, 153). உங்கள் பிள்ளைகள் தங்கள் உடலைப் பராமரிக்கும் விதத்தில் செயல்பட உதவுங்கள்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:10–17 இல் உள்ள கர்த்தரின் கட்டளைகளைப் பற்றி அறிய, நீங்களும் உங்கள் குழந்தைகளும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் சாப்பிடக்கூடிய அல்லது செய்யக்கூடிய நல்ல விஷயங்களை வரையலாம் அல்லது பார்க்கலாம் (இந்த குறிப்பின் முடிவில் உள்ள படம் மற்றும் நிகழ்ச்சி பக்கத்தைப் பார்க்கவும்). எதைப் பயன்படுத்தக்கூடாது என்று கர்த்தர் எச்சரித்திருக்கிறார்? நம் உடலை நாம் ஏன் பராமரிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்?
-
மூப்பர் கேரி ஈ. ஸ்டீவன்சன், மது அல்லது போதைப்பொருளுக்கு ஆசைப்படும்போது என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுமாறு இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் போதித்தார்: “சோதனை உங்கள் மீது குறைவான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள், என்ன செய்வீர்கள் என்பதை நீங்கள் ஏற்கனவே முடிவு செய்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை” (“Your Priesthood Playbook,” Liahona, May 2019, 48). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:4 மற்றும் மூப்பர் ஸ்டீவன்சனின் அறிக்கையை ஒன்றாக வாசித்த பிறகு, உங்கள் பிள்ளைகள் இப்போது, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஞான வார்த்தையின்படி வாழ எப்படி முடிவு செய்யலாம் என்பதைப் பற்றி ஆலோசனை செய்யுங்கள். யாராவது, ஒரு நண்பர் கூட, ஞான வார்த்தைக்கு எதிரான ஒன்றை அவர்களுக்கு வழங்கினால், அவர்கள் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பதை நீங்கள் நடித்துக் காட்டலாம். நாம் ஞான வார்த்தைக்கு கீழ்ப்படிவதால் கர்த்தர் நம்மை எவ்வாறு ஆசீர்வதிப்பார்? (18–21 வசனங்களைப் பார்க்கவும்).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:5
என்னை வழிநடத்தவும் பாதுகாக்கவும் தேவன் எனக்கு தீர்க்கதரிசிகளை வழங்குகிறார்.
-
நீங்கள் பூர்வகால தீர்க்கதரிசிகளின் படங்களைப் பார்க்கலாம், அல்லது“Follow the Prophet” (Children’s Songbook, 110–11) போன்ற ஒரு பாடலைப் பாடலாம். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் தம் பிள்ளைகளை எவ்வாறு ஆசீர்வதித்தார்? தேவனின் தீர்க்கதரிசிகளுக்கு நாம் ஏன் செவிசாய்க்க வேண்டும்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:5 பார்க்கவும்). பின்னர் நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஜீவிக்கும் தீர்க்கதரிசியின் படத்தைப் பார்த்து, அவர் மூலம் கர்த்தர் நமக்குக் கற்பித்த அல்லது எச்சரித்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நாம் எப்படி தீர்க்கதரிசியைப் பின்பற்றலாம்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 91.
உண்மை என்ன என்பதை அறிய ஆவியானவர் எனக்கு உதவ முடியும்.
-
இந்த வெளிப்பாடு ஏன் கொடுக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 91 பாகத் தலைப்பை நீங்கள் சுருக்கமாகக் கூறலாம். “பல விஷயங்கள் … உண்மை” மற்றும் “பல விஷயங்கள் … உண்மையல்லாதவை” (வசனங்கள் 1–2) போன்ற ஊடகங்கள் போன்ற இடங்களைப் பற்றி அவர்கள் பின்னர் சிந்திக்க முடியும். 4–6 வசனங்கள் பரிசுத்த ஆவியைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கின்றன? எது சரியானது என்பதை அறிய பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு நமக்கு உதவுகிறார்?