பாகம் 90
மார்ச் 8, 1833ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தல் பிரதான தலைமையை ஸ்தாபிப்பதின் தொடர் நடவடிக்கையாகும் (பாகம் 81ன் தலைப்பைப் பார்க்கவும்); அதன் விளைவாக குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசகர்கள் மார்ச் 18, 1833ல் நியமனம் செய்யப்பட்டார்கள்.
1–5, ராஜ்யத்தின் திறவுகோல்கள் ஜோசப் ஸ்மித்துக்கும் அவர் மூலமாக சபைக்கும் கொடுக்கப்பட்டன; 6–7, சிட்னி ரிக்டனும், பிரடெரிக் ஜி. வில்லியம்ஸூம் பிரதான தலைமையில் பணியாற்றவேண்டும்; 8–11, இஸ்ரவேல் தேசங்களுக்கும், புறஜாதியாருக்கும், யூதர்களுக்கும், அவனது சொந்த பாஷையில் கேட்கும்படியாக ஒவ்வொரு மனுஷனுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும்; 12–18, ஜோசப் ஸ்மித்தும் அவருடைய ஆலோசகர்களும் சபையை ஒழுங்குபடுத்த வேண்டும்; 19–37, பலர் நீதியாய் நடக்கவும், அவருடைய ராஜ்யத்தில் பணியாற்றவும் கர்த்தரால் ஆலோசனை வழங்கப்பட்டார்கள்.
1 என் மகனே, மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், உன்னுடைய வேண்டுதலின்படி உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன, ஏனெனில் உன்னுடைய ஜெபங்களும் உன்னுடைய சகோதரர்களின் ஜெபங்களும் என்னுடைய செவிகளுக்கு வந்து எட்டின.
2 ஆகவே, உனக்குக் கொடுக்கப்பட்ட ராஜ்யத்தின் திறவுகோல்களை தரித்திருக்கிற நீ, இப்போதிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய், அந்த ராஜ்யம் கடைசி முறையாக வருகிறது.
3 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ இம்மையிலிருக்கும்போதோ, மறுமையிலிருக்கும்போதோ, ராஜ்யத்தின் திறவுகோல்கள் ஒருபோதும் உன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படமாட்டாது;
4 ஆயினும், உத்தரவுகள் உன் மூலமாக மற்றொருவனுக்கு, ஆம், சபைக்குக்கூட கொடுக்கப்படும்.
5 தேவனின் உத்தரவுகளைப் பெற்ற அனைவரும், ஒரு லேசான காரியமாக எடுத்துகொண்டாலோ, அதனால் ஆக்கினையின் கீழ் கொண்டு வரப்பட்டாலோ, பெருங்காற்று இறங்கி வரும்போதும், புயல் அடிக்கும்போதும், மழை பெய்து அவர்களுடைய வீடுகளை மழை மோதும் போதும் இடறி விழாதிருக்கவும், எவ்வாறு அவற்றை அவர்கள் பற்றிக் கொள்ள வேண்டுமென அவர்கள் எச்சரிக்கையாயிருப்பார்களாக.
6 மீண்டும், உன் சகோதரர்களான சிட்னி ரிக்டனுக்கும் பிரடெரிக் ஜி. வில்லியம்ஸூக்கும் மெய்யாகவே நான் சொல்லுகிறேன், அவர்களுடைய பாவங்களும் கூட மன்னிக்கப்பட்டன, இந்த கடைசி ராஜ்யத்தின் திறவுகோல்களையும்;
7 அப்படியே உன்னுடைய நிர்வாகத்தின் மூலமாக, நிர்வகிக்கப்பட வேண்டுமென நான் கட்டளையிட்ட தீர்க்கதரிசிகளின் கூட்டத்தின் திறவுகோல்களையும் தரித்திருப்பதில் அவர்கள் சமமாக கருதப்படுகிறார்கள்;
8 அதன்படி சீயோன், இஸ்ரவேல் மற்றும் புறஜாதியாரின் தேசங்களில் நம்புகிறவர்களின் இரட்சிப்புக்காக அவர்களின் ஊழியங்களில் அவர்கள் பரிபூரணப்படும்படிக்கும்;
9 நீ கொடுப்பதன் மூலமாக வார்த்தையை அவர்கள் பெற்றுக் கொள்ளும்படியாகவும், அவர்கள் கொடுப்பதன் மூலமாக, வார்த்தை பூமியின் கடையாந்தரங்கள்வரை போகும், முதலில் புறஜாதியார்களுக்கும் பின்னர், இதோ, அவை யூதர்களிடத்திற்கும் திரும்பும்.
10 அவர்களின் இரட்சிப்பின் சுவிசேஷத்தைப்பற்றி, தேசங்களையும், புறஜாதிகளின் தேசங்களையும், யோசேப்பின் வீட்டாரையும், திருப்திபடுத்த கர்த்தரின் கரம் வல்லமையில் வெளிப்படும். அந்த நாள் பின்னர் வருகிறது.
11 ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தலுக்காக அவர்கள்மீது அது பொழிந்து, தேற்றரவாளனை அருளுவதால் இந்த வல்லமைக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் மூலம் தன்னுடைய சொந்த பாஷையில், தங்கள் சொந்த மொழியில் ஒவ்வொரு மனுஷனும் சுவிசேஷத்தின் பரிபூரணத்தைக் கேட்கும்படியான, அந்த நாளில் அது நடைபெறும்.
12 இப்பொழுது, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், ஊழியத்திலும் தலைமையிலும் நீ தொடர்ந்திருக்க நான் உனக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.
13 தீர்க்கதரிசிகளின் மொழிபெயர்ப்பை நீ முடித்தபோது, அப்போதிலிருந்து சபை மற்றும் தீர்க்கதரிசிகளின் குழுவின், நடவடிக்கைகளுக்கு நீ தலைமை தாங்குவாயாக;
14 ராஜ்யத்தின் இரகசியங்களை வெளிப்படுத்த தேற்றரவாளனால் வெளிப்படுத்தப்படுகிறபடி வெளிப்படுத்தல்களை அவ்வப்போது பெறுவாய்;
15 சபைகளை ஒழுங்குபடுத்து, ஆராய்ந்து கற்றுக்கொள், சகல நல்ல புஸ்தகங்களையும், மொழிகளையும், பாஷைகளையும், ஜனங்களையும் அறிந்துகொள்.
16 ஆலோசனைக்குழுவுக்கு தலைமை தாங்குவதும், இந்த சபை மற்றும் ராஜ்யத்தின் காரியங்களை ஒழுங்குபடுத்துவதுமே உன் வாழ்நாள் முழுவதற்குமான வேலையும் ஊழியமுமாயிருக்கிறது.
17 வெட்கப்படாதே, குழப்பமடையாதே, ஆனால் உனது எல்லா மேட்டிமையிலும் பெருமையிலும் புத்திமதியைக் கேள், ஏனெனில் அது உன் ஆத்துமாவுக்கு ஒரு கண்ணியைக் கொண்டுவருகிறது.
18 உன் வீடுகளை ஒழுங்குபடுத்து; சோம்பேறித்தனத்தையும் அசுத்தமானவைகளையும் உன்னிடமிருந்து தூரவிலக்கு.
19 இப்பொழுது, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், உனது ஆலோசகரும் எழுத்தருமான பிரடெரிக் ஜி. வில்லியம்ஸினுடைய குடும்பத்திற்காக, கூடிய விரைவில் ஒரு இடம் கொடுக்கப்படுவதாக.
20 என்னுடைய வயது முதிர்ந்த ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் மூத்தவன், இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற இடத்தில் அவனுடைய குடும்பத்தோடு தொடர்ந்து வாழ்வானாக; கர்த்தரின் வாயால் சொல்லப்படும்வரைக்கும் அது விற்கப்படாதிருப்பதாக.
21 என்னுடைய ஆலோசகரான சிட்னி ரிக்டன் இப்பொழுது அவன் வாழ்ந்து கொண்டிருக்கிற இடத்தில் கர்த்தரின் வாயால் சொல்லப்படும்வரைக்கும் இருப்பானாக.
22 ஒரு பிரதிநிதியைப் பெற ஆயர் கருத்தாய் தேடுவாராக, ஐஸ்வர்யம் உடைய, தேவனின் மனுஷனாக, விசுவாசத்தில் பலமுள்ள, ஒரு மனுஷனாக அவன் இருப்பானாக,
23 அதன்படி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக கர்த்தரின் பண்டசாலைக்கு அவப்பெயர் வராதிருக்க எல்லா கடன்களையும் செலுத்த அவனால் சாத்தியமாகும்.
24 கருத்தாய் தேடுங்கள், எப்பொழுதும் ஜெபியுங்கள், நம்பிக்கை வையுங்கள், நீங்கள் நேர்மையாய் நடந்து, ஒருவருக்கொருவர் நீங்கள் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைத்தால், உங்கள் நன்மைக்கு ஏதுவாக சகல காரியங்களும் நடக்கும்.
25 உங்களுடைய குடும்பங்களைச் சேராதவர்கள் சம்பந்தப்பட்டவரை, குறிப்பாக என்னுடைய வயது முதிர்ந்த ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் மூத்தவன், குடும்பம் போல உங்களுடைய குடும்பங்கள் சிறியதாயிருப்பதாக;
26 என்னுடைய பணியை நிறைவேற்ற உனக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிற அந்த காரியங்கள் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு தகுதியில்லாதவர்களிடத்தில் கொடுக்கப்படாதிருப்பதாக,
27 அதினால் நான் உனக்குக் கட்டளையிட்ட அந்த காரியங்களை நிறைவேற்றுவதில் நீ தடங்கல் அடையலாம்.
28 மீண்டும் மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய பணிவிடைப்பெண் வியன்னா ஜேக்ஸ், அவளுடைய செலவுக்காக பணம் பெற வேண்டும், மற்றும் சீயோன் தேசத்திற்குப் போகவேண்டும் என்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது;
29 மீதியான பணம் எனக்காக நேர்ச்சை பண்ணப்பட வேண்டும், என்னுடைய ஏற்ற காலத்தில் அவள் பிரதிபலன் கொடுக்கப்படுவாளாக.
30 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், அவள் சீயோன் தேசத்திற்குப் போய் ஆயரின் கையால் ஒரு சுதந்தரத்தை வாங்கவேண்டுமென்பது என்னுடைய கண்களுக்கு நலமாய்த் தோன்றுகிறது;
31 அவள் உண்மையுள்ளவளாய் இருக்கிற அளவில் அவள் சமாதானத்தில் ஓய்ந்திருப்பாள், இதுமுதற்கொண்டு அவளுடைய நாட்களில் சோம்பலாய் இராதிருப்பாளாக.
32 இதோ, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், இந்த கட்டளையை நீ எழுதி, என்னுடைய சொந்த ஏற்ற காலத்தில் சீயோனுக்கு தலைமை தாங்க நான் உன்னை அழைத்திருக்கிறேன் என அன்பின் வாழ்த்துதலில் சீயோனிலுள்ள உன் சகோதரருக்குச் சொல்வாயாக.
33 ஆகவே, இந்தக் காரியத்தைக் குறித்து என்னைக் களைப்படையச் செய்வதை அவர்கள் நிறுத்துவார்களாக.
34 இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், சீயோனிலுள்ள உன் சகோதரர்கள் மனந்திரும்ப ஆரம்பிக்கிறார்கள், தூதர்கள் அவர்களில் களிகூர்கிறார்கள்.
35 ஆயினும், அநேக காரியங்களில் நான் மகிழ்ச்சியடையவில்லை; அநேக காரியங்களுக்காக மனந்திரும்பவேண்டிய, என்னுடைய ஊழியக்காரனான வில்லியம் இ. மெக்லெலினோடோ அல்லது என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட்டோடோ, ஆயருடனோ கூட, மற்றும் அநேகரிடத்தில் நான் மகிழ்ச்சியடையவில்லை மற்றும் பிறர் மனந்திரும்ப வேண்டிய அநேக காரியங்களுண்டு.
36 ஆனால் மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், கர்த்தராகிய நான் சீயோனோடே போராடுவேன், அவளுடைய பலவான்களோடு வழக்காடுவேன், அவள் மேற்கொண்டு எனக்கு முன்பாக சுத்தமாகும்வரை அவளை கண்டிப்பேன்.
37 ஏனெனில் அவளுடைய இடத்திலிருந்து அவள் அகற்றப்படமாட்டாள். கர்த்தராகிய நான் இதைப் பேசினேன். ஆமென்.