பாகம் 128
மரித்தவர்களுக்கான ஞானஸ்நானத்திற்கான கூடுதலான வழிகாட்டுதல்களைக் குறித்து இலினாயின் நாவூவில் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடமிருந்து செப்டம்பர் 6, 1842 தேதியிட்ட கடிதம்.
1–5, உள்ளூர் மற்றும் பொது பதிவு செய்பவர்கள் மரித்தவர்களுக்கான ஞானஸ்நானங்களின் உண்மையை சான்றழிக்கவேண்டும்; 6–9, அவர்களுடைய பதிவேடுகள் கட்டுண்டு பூமியிலும் வானத்திலும் பதிவு செய்யப்படுகிறது; 10–14, ஞானஸ்நானத் தொட்டி கல்லறைக்கு ஒப்பானது; 15–17, மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் சம்பந்தப்பட்ட வல்லமையை எலியா புதுப்பித்தான்; 18–21, கடந்த ஊழியக்காலங்களின் சகல திறவுகோல்களும், வல்லமைகளும், அதிகாரங்களும் புதுப்பிக்கப்பட்டன; 22–25, ஜீவித்திருப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்குமான சந்தோஷமான மகிமையான நற்செய்திகள் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டன.
1 என்னுடைய இடத்தை விட்டுப் போவதற்கு முன்பு என்னுடைய கடிதத்தில் உங்களுக்குச் சொன்னதைப்போல அவ்வப்போது உங்களுக்கு நான் எழுதுவேன், அநேக விஷயங்கள் தொடர்புள்ள தகவலை உங்களுக்குக் கொடுப்பேன், என்னுடைய சத்துருக்களால் நான் தேடப்பட்டதிலிருந்து அந்த காரியம் என் மனதை ஆக்கிரமித்தும், என்னுடைய உணர்ச்சிகளின் மீது பெலமாக அழுத்துவதாலும் மரித்தவர்களுக்கான ஞானஸ்நான விஷயத்தை நான் இப்பொழுது திரும்பவும் ஆரம்பிக்கிறேன்.
2 ஒரு பதிவுசெய்பவரைக் குறித்து வெளிப்படுத்தலின் ஒரு சில வார்த்தைகளை உங்களுக்கு நான் எழுதினேன். இப்பொழுது நான் சான்றழிக்கிற இந்தக் காரியத்திற்கு சம்பந்தப்பட்ட ஒரு சில கூடுதலான கண்ணோட்டங்கள் எனக்கிருக்கிறது. அதாவது கர்த்தருக்கு முன்பாக சத்தியமான பதிவை அவன் செய்யத்தக்கதாக கண்கண்ட சாட்சியாகவும், அவனுடைய காதுகளால் கேட்கவும் கூடிய ஒரு பதிவு செய்பவர் இருக்கவேண்டுமென என்னுடைய முந்தய கடிதத்தில் அது அறிவிக்கப்பட்டிருந்தது.
3 இப்பொழுது, இந்தக் காரியத்திற்கு சம்பந்தப்பட்ட, எல்லா விவகாரங்களையும் செய்ய ஒரு பதிவு செய்பவர் எல்லா சமயங்களிலும் அங்கிருப்பது மிகக் கடினமாயிருக்கும். இந்த தடையை அகற்ற பட்டணத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் துல்லியமாக நிகழ்ச்சிக் குறிப்புகளை எடுக்கும் மிகத் தகுதியான ஒரு பதிவு செய்பவர் நியமிக்கப்படலாம். நிகழ்வன முழுவதின் சரித்திரத்தையும், தேதிகள் பெயர்கள் போன்றவற்றையும் கொடுத்து, அவருடைய கண்களால் கண்டதாகவும், அவருடைய காதுகளால் கேட்டதாகவும் அவருடைய பதிவேட்டில் சான்றளிப்பாராக, முழு நிகழ்வுகளையும் அவர் மிகக் குறிப்பாகவும் துல்லியமாகவும் எடுப்பாராக. இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்படும்படியாக எந்த சமயத்திலும் அழைக்கப்படும்போது சான்றளிக்க யாராவது அங்கிருந்தால், அங்கிருக்கும் மூன்று பேரின் பெயர்களையும் கொடுப்பாராக.
4 பின்னர், அவர்கள் பதிவு செய்த பதிவேடு உண்மையென்று தங்களுடைய சொந்த கையெழுத்துக்களில் சான்றளித்த சான்றிதழ்களுடன் இந்த பிற பதிவேடுகள் கையளிக்கப்படுகிற ஒரு பொது பதிவு செய்பவர் இருப்பாராக. பின்னர் சான்றிதழ்களுடனும், கலந்துகொண்ட சாட்சிகளுடனும் மற்றும் அவருடைய சபையால் நியமிக்கப்பட்ட அந்த மனுஷர்களின் பொது நடத்தைபற்றி தன் அறிவுப்படியும் மேலேயுள்ள வாசகத்தை அவர் மெய்யாகவே நம்புகிறார் என்ற அவருடைய சொந்த வாசகத்துடனும் சபையின் பொது பதிவு செய்பவர் சபையின் பொது பதிவேட்டில் பதிவு செய்யலாம். அவருடைய கண்களால் கண்டதையும் அவருடைய காதுகளால் கேட்டதையும் போலவே நியமத்திற்கு பதிலளித்து சபையின் பொது புஸ்தகத்தில் இது செய்யப்படும்போது, பதிவேடு சரியானதாயும் பரிசுத்தமாயுமிருக்கும்
5 இந்த காரியங்களின் ஒழுங்கு மிக முக்கியமானதாக நீங்கள் நினைக்கலாம்; ஆனால் சுவிசேஷ அறிவில்லாமல் மரித்த, மரித்தவர்களுக்கான இரட்சிப்புக்காக உலகத்தோற்றத்திற்கு முன்பாக கர்த்தர் நியமனம் செய்த, ஆயத்தப்படுத்திய நியமத்தையும் ஆயத்தத்தையும் உறுதிசெய்வதில் தேவனின் சித்தத்திற்கு பதிலளிக்க மட்டுமே என, நான் உங்களுக்குக் கூறுவேனாக.
6 கூடுதலாக, மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள என வெளிப்படுத்தல் 20:12ல் பதிவு செய்யப்பட்டுள்ளதை நீங்கள் காண்பதைப்போல அவன் அறிவித்தபோது மரித்தவர்களுக்கான இதே பொருளைப்பற்றி வெளிப்படுத்துபவனான யோவான் சிந்திக்கிறான் என உங்களுக்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன்.
7 புஸ்தகங்கள் திறக்கப்பட்டன என்பதை இந்த மேற்கோளில் நீங்கள் காண்பீர்கள்; ஜீவபுஸ்தகமான மற்றொரு புஸ்தகம் திறக்கப்பட்டது, ஆனால் மரித்தவர்கள் அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக புஸ்தகங்களில் எழுதப்பட்ட அந்த காரியங்களினால் நியாயந் தீர்க்கப்பட்டார்கள்; விளைவாக, பேசப்பட்ட புஸ்தகங்கள் அவர்களுடைய கிரியைகளின் பதிப்பு அடங்கிய புஸ்தகங்களாகவும் பூமியில் பாதுகாத்து வைத்திருக்கப்பட்ட பதிவேடுகளைக் குறிப்பிடுபவையாக இருக்கவேண்டும். அந்த புஸ்தகம் பரலோகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற ஜீவபுஸ்தகமான பதிவேடு ஆகும்; உங்களுடைய பதிவேடுகள் எல்லாவற்றிலும் அது பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும்படியாக என்னுடைய இடத்தைவிட்டுப் போவதற்கு முன்பாக உங்களுக்கு நான் எழுதிய கடிதத்தில் அடங்கியிருக்கிற வெளிப்படுத்தலில் உங்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிற கோட்பாட்டுடன் துல்லியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிற கொள்கையாகும்.
8 இப்பொழுது இந்த நியமத்தின் தன்மை இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தலால், ஆசாரியத்துவத்தின் வல்லமையில் அடங்கியிருக்கிறது. அதிலே பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுகிறீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்படியாகவும், பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்படியாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறதஅ எ ல்லது வேறு வார்த்தைகளிலெனில், மொழிபெயர்ப்பின் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை எடுத்தால் பூலோகத்திலே நீங்கள் எவைகளைப் பதிவு செய்கிறீர்களோ, அவைகள் பரலோகத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீங்கள் எவைகளைப் பதிவு செய்யாமலிருக்கிறீர்களோ, அவைகள் பரலோகத்திலும் பதிவு செய்யப்படாமலிருக்கும்; ஏனெனில் புஸ்தகங்களுக்கு அப்பால், தங்களுடைய சொந்த தனிப்பட்ட நியமங்களில் கவனம் செலுத்தியோ அல்லது தங்களுடைய சொந்த சுயாதீனர்களின் வழியிலோ அல்லது அவர்களுடைய முகவர்கள் வழியாகவோ, அவர்களுடைய கிரியைகளுக்குத்தக்கதாக, உலகத்தோற்றத்திற்கு முன்பே அவர்களுடைய இரட்சிப்புக்காக தேவன் ஆயத்தப்படுத்தியிருந்த நியமத்தின்படி, அவர்களுடைய மரித்தவர்களைக் குறித்து அவர்கள் பாதுகாத்து வைத்திருந்த பதிவேடுகளின்படி, உங்களுடைய மரித்தவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
9 பூலோகத்திலே பதிவு செய்யப்படுகிற அல்லது கட்டப்படுகிற மற்றும் பரலோகத்திலே கட்டப்படுகிற வல்லமை மிகத்துணிச்சலான கோட்பாடாயிருக்கிறதென சிலருக்குத் தோன்றலாம். ஆயினும், உண்மையான வெளிப்படுத்தலால் எந்த மனுஷனுக்காவது அல்லது எந்த மனுஷர்களின் குழுக்காவது உலகத்தின் சகல காலங்களிலும், ஆசாரியத்துவத்தின் ஊழியக்காலத்தை கர்த்தர் கொடுக்கும்போதெல்லாம் எப்போதுமே இந்த வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அதிகாரத்தில் அந்த மனுஷர்கள் கர்த்தரின் நாமத்தில் எதைச் செய்தாலும், அதை மெய்யாகவும் உண்மையாகவும் செய்து, அதைப்பற்றிய ஒரு சரியான உண்மையுள்ள பதிவேட்டை வைத்திருந்தால், அது பூலோகத்திலும் பரலோகத்திலும் ஒரு நியாயப்பிரமாணமாக மாறி மகா யேகோவாவின் கட்டளைகளின்படி ரத்துசெய்யப்பட முடியாது. இது விசுவாசமிக்க சொல். அதைக் கேட்பவன் யார்?
10 மீண்டும் முன்மாதிரிக்காக, மத்தேயு 16:18, 19: மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
11 இப்பொழுது முழு காரியத்தின் பெரிதும் மகத்துவமுமான இரகசியமும் நமக்கு முன்னால் விழுந்திருக்கிற மிகப்பெரிதான முழு பொருளும் பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வல்லமைகளைப் பெறுவதில் அடங்கியிருக்கிறது. மரித்தவர்கள் மற்றும் ஜீவிப்பவர்களான மனுபுத்திரர்களின் இரட்சிப்புக்கு சம்பந்தப்பட்ட உண்மைகளின் ஒரு அறிவைப் பெற்றுக்கொள்வதில் இந்த திறவுகோல்கள் கொடுக்கப்பட்டவனுக்கு எந்த பிரச்சினையுமிருக்காது.
12 இதிலே மகிமையும் கனமும் அழிவில்லாமையும் நித்திய ஜீவனும் விளங்கும். ஒரு கொள்கை மற்றொன்றுடன் ஒத்திருக்கும்படியாக மரித்தவர்களைப் போலிருக்கும்படியாக மூழ்கியிருக்க, தண்ணீரில் ஞானஸ்நானத்தின் நியமத்தில் தண்ணீரில் மூழ்கியிருந்து, தண்ணீரிலிருந்து வெளியே வருவது, தங்களுடைய கல்லறையிலிருந்து வெளியே வருகிற மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலைப்போன்றது, ஆகவே, மரணத்தைப்போலிருப்பதில் மரித்தவர்களுக்கான ஞானஸ்நான நியமத்துடன் ஒரு உறவை உண்டாக்க இந்த நியமம் ஏற்படுத்தப்பட்டது.
13 அதன் விளைவாக, கல்லறையின் ஒரு உவமையாக ஞானஸ்நானத் தொட்டி அமைக்கப்பட்டது, சகல காரியங்களும் அவைகளின் சாயலிலிருக்கவும், 1 கொரிந்தியர் 15:46, 47 மற்றும் 48ல் பவுல் அறிவித்ததைப்போல பூலோகத்திற்குரியவை, பரலோகத்திற்குரியவை என உறுதிப்படுத்தி அவைகள் ஒன்றுக்கொன்று ஒத்திருக்கிறதென ஜீவிப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் காட்ட, ஜீவிப்பவர்கள் கூடிவர, பழக்கப்பட்ட ஒரு இடத்தில் கீழே வைக்க கட்டளையிடப்பட்டது.
14 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்ம சரீரமே முந்தினது, ஆவிக்குரிய சரீரம் அதற்குப் பிந்தினது. முதல் மனுஷன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன், இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ பூமியிலுள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களே, வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, பரலோகத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. உண்மையிலேயே உண்டாக்கப்பட்ட பூமியில் உங்களுடைய மரித்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட பதிவேடுகளிருப்பதைப்போல, அப்படியே பதிவேடுகள் பரலோகத்திலுமிருக்கின்றன. ஆகவே இது முத்திரிக்கும் மற்றும் கட்டப்படும் வல்லமையாயிருக்கிறது, ஒரே வார்த்தையில் சொன்னால் ராஜ்யத்தின் திறவுகோல், அறிவின் திறவுகோலில் அடங்கியிருக்கிறது.
15 இப்பொழுது, எனக்கு மிக அன்பான சகோதர சகோதரிகளே, நமது இரட்சிப்புக்கு சம்பந்தமான மரித்தவர்களுக்கும் ஜீவிப்பவர்களுக்கும் சம்பந்தப்பட்ட, இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாத, கொள்கைகள் இவைகளே எனவும் உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். ஏனெனில் அவர்களுடைய இரட்சிப்பு நமது இரட்சிப்புக்கு தேவையாகவும் அவசியமாகவும் இருக்கிறது, பிதாக்களைப்பற்றி பவுல் சொல்கிறதைப் போல நாமில்லாமல் அவர்கள் பரிபூரணமடைய முடியாது, நமது மரித்தவர்களில்லாமல் நாமும் பரிபூரணமடைய முடியாது.
16 இப்பொழுது, மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் சம்பந்தப்பட்ட 1 கொரிந்தியர் 15:29ல் உள்ள பவுலின் மற்றொரு மேற்கோளை நான் கொடுக்கிறேன்: மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
17 மீண்டும் இந்த மேற்கோளுக்கு சம்பந்தப்பட்ட, கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்படவிருக்கிற மகிமைகளும், மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் என்ற நித்திய சுவிசேஷத்திற்கு சொந்தமான சகல காரியங்களிலும் மிகுந்த மகிமையானவை, ஒரு விசேஷித்த விதத்திலும், ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதத்தில் கவனமாயிருந்த தீர்க்கதரிசிகளில் ஒருவரின் மேற்கோளிலிருந்து ஒன்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன், ஏனெனில் கடைசி அதிகாரத்தில் 5வது 6வது வசனங்களில் மல்கியா சொல்லுகிறான்: இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்: நான் வந்து பூமியை சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
18 இதற்கு ஒரு வெளிப்படையான மொழிபெயர்ப்பை நான் கொடுத்திருக்கலாம், ஆனால் என்னுடைய நோக்கத்திற்கு பொருத்தமாக அது போதுமானபடி வெளிப்படையாக இருக்கிறது. இந்த காரியத்தில், பிதாக்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையில் சில அல்லது பிற வகையில் அங்கே ஒரு பிரிக்கமுடியாத இணைப்பு இல்லாதவரை பூலோகம் அடிக்கப்படுமென அறிந்துகொள்ள இது போதுமானதாயிருக்கும், இதோ, அந்த பொருள் என்ன? அது மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம். ஏனெனில் அவர்களில்லாமல் நாம் பரிபூரணமாக்கப்பட முடியாது, நாமில்லாமல் அவர்களும் பரிபூரணமாக்கப்பட முடியாது. சுவிசேஷத்தில் மரித்தவர்களில்லாமல் அவர்களோ நாமோ பரிபூரணமாக்கப்பட முடியாது ஏனெனில் ஒரு முழுமையான மற்றும் நிறைவான ஊழியக்காலங்களையும், திறவுகோல்களையும், வல்லமைகளையும், மகிமைகளையும் ஒன்றாக இணைப்பது நடைபெற வேண்டும், மற்றும் ஆதாமின் நாட்களிலிருந்து தற்காலம்வரை வெளிப்படுத்தப்பட வேண்டும்படியாகவும் இப்பொழுது வர ஆரம்பத்திருக்கிற ஊழியக்காலமான காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலம் வருவது அவசியமாயிருக்கிறது. இது மாத்திரமல்ல, ஆனால் உலகத்தோற்றத்திலிருந்து ஒருபோதும் வெளிப்படுத்தப்படாத அந்த காரியங்களும் ஆனால் ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைக்கப்பட்டிருந்தவை, காலங்களின் நிறைவேறுதலின் இந்த ஊழியக்காலத்தில் குழந்தைகளுக்கும் பாலகர்களுக்கும் வெளிப்படுத்தப்படும்.
19 இப்பொழுது, நாம் பெற்ற சுவிசேஷத்தில் நாம் எதைக் கேட்கிறோம்? சந்தோஷத்தின் குரலை! வானத்திலிருந்து இரக்கத்தின் குரலை, பூமியிலிருந்து சத்தியத்தின் குரலை; மரித்தவர்களுக்காக நற்செய்தியின் குரலை; ஜீவிப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் சந்தோஷத்தின் குரலை; மகா சந்தோஷத்தின் நற்செய்திகளை. நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்து சீயோனுக்குச் சொல்லுகிறவர்களின் பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன; இதோ, உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறார், கர்மேலின் பனிகளைப் போல! தேவனின் ஞானம் அவர்கள் மேல் இறங்கும்!
20 மீண்டும், நாம் எதைக் கேட்கிறோம்? குமோராவிலிருந்து நற்செய்திகள்! தீர்க்கதரிசிகளின் நிறைவேறுதலான, புஸ்தகம் வெளிப்படுத்தப்படுகிறது என வானத்திலிருந்து ஒரு தூதனான மரோனி அறிவிக்கிறான். செனேக்கா மாகாணத்தின் பயெட்டியின் வனாந்தரத்தில் புஸ்தகத்தின் சாட்சியைக் கொடுக்க மூன்று சாட்சிகளுக்கு கர்த்தரின் சத்தம் அறிவிக்கிறது! சஸ்கொயினா கரையில் ஒளியின் தூதனாக பிசாசானவன் அவனுக்குத் தோன்றியபோது அவனைக் கண்டுபிடித்தது மிகாவேலின் சத்தம்! வனாந்தரத்தில் சஸ்கொயினா மாகாணத்தின் ஹார்மனிக்கும் புரூம் மாகாணத்தின் கோல்ஸ்வில்லுக்கும் இடையில் சஸ்கொயினா நதியில் ராஜ்யத்தின் திறவுகோல்களையும், காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தையும் தாங்கள் தரித்திருப்பதாக பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவானின் சத்தம் அறிவித்தது.
21 பூர்வ காலங்களிலும் இந்த பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் சகல பயணங்களின் உபத்திரவங்களினூடே அவ்வப்போது பல இடங்களிலும் செனேக்கா மாகாணத்தின் பயெட்டியில் தகப்பன் விட்மரின் பழைய அறைக்குள் மீண்டும் தேவனின் சத்தம்! பிரதான தூதனாகிய மிகாவேலின் சத்தம், அவர்களெல்லாரும் கட்டளையின்மேல் கட்டளையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாகக் கொடுத்துக்கொண்டு வரப்போகிறதற்காக நம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறதை பிடித்துக்கொண்டு நமக்கு ஆறுதலைக் கொடுத்துக்கொண்டு, தங்களுடைய ஊழியக்காலத்தையும், தங்களுடைய உரிமைகளையும், தங்களுடைய திறவுகோல்களையும், தங்களுடைய கனங்களையும், தங்களுடைய மகத்துவத்தையும் மகிமையையும், தங்களுடைய ஆசாரியத்துவத்தின் வல்லமையையும் அறிவித்து காபிரியேல், ராபேலின் சத்தம், தற்போதுவரையில் மிகாவேல் அல்லது ஆதாமிலிருந்து பல தூதர்களின் சத்தம்!
22 சகோதரரே, ஒரு மகத்தான காரணத்திற்காக நாம் போகக்கூடாதோ. முன்னோக்கிச் செல்ல, பின்னோக்கியல்ல. துணிவு கொள்ளுங்கள் சகோதரரே, முன்னேறுங்கள் ஜெயத்தை நோக்கி! உங்கள் இருதயங்கள் களிகூர்வதாக, மிகுந்த சந்தோஷப்படுவீர்களாக. பூமி கெம்பீரமாய் பாடுவதாக. அவர்களுடைய சிறைச்சாலையிலிருந்து அவர்களை விடுவிக்க எங்களால் கூடும்படிக்கு உலகத்தோற்றத்திற்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட இம்மானுவேல் ராஜாவுக்கு மரித்தவர்கள் நித்திய துதியின் பாடல்களைப் பாடுவார்களாக. ஏனெனில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் சுதந்தரமாய்ப் போவார்கள்.
23 பர்வதங்கள் ஆனந்தத்தால் கெம்பீரிப்பதாக, சகல பள்ளத்தாக்குகளே நீங்கள் உரக்க சத்தமிடுங்கள்; சமுத்திரங்களே, உலர்ந்த தரைகளே, உங்களுடைய நித்திய ராஜாவின் அற்புதங்களைக் கூறுங்கள், நதிகளே, நீருற்றுக்களே, சிறு ஓடைகளே, சந்தோஷத்தோடே வழிந்தோடுங்கள். காடுகளும், சகல வெளியின் மரங்களும் தேவனைத் துதிப்பார்களாக! கற்பாறைகளே நீங்கள் சந்தோஷத்தில் அழுங்கள்! சூரியனும், சந்திரனும், விடிவெள்ளிகளும் ஒன்று சேர்ந்து பாடுவார்களாக, தேவகுமாரர்கள் யாவரும் சந்தோஷத்தில் சத்தமிடுவார்களாக! நித்திய சிருஷ்டிகள் அவருடைய நாமத்தை என்றென்றைக்கும் அறிவிப்பார்களாக! மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நமது காதுகளில் அறிவிக்கிற, மகிமையையும், இரட்சிப்பையும், கனத்தையும், அழியாமையையும், நித்திய ஜீவனையும், ராஜ்யங்களையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும் பிரகடனப்படுத்தும் பரலோகத்திலிருந்து நாம் கேட்கும் சத்தம் எவ்வளவு மகிமையுள்ளதாயிருக்கிறது!
24 இதோ, கர்த்தரின் மகத்தான நாள் சமீபித்திருக்கிறது; அவருடைய வருகையின் நாளில், நீங்காதிருப்பவன் யார், அவர் தோன்றும்போது நிலைநிற்பவன் யார்? ஏனெனில், அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலவும், வண்ணானுடைய சவுக்காரம் போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார், அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து அவர்கள் கர்த்தருடையவர்களாய் இருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கைகளைச் செலுத்தும்படிக்கும் அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார். ஆகவே, ஒரு சபையாக, ஒரு ஜனமாக, பிற்காலப் பரிசுத்தவான்களாக நீதியில் காணிக்கையை கர்த்தருக்கு நாம் செலுத்துவோமாக, அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அது முடிந்தபின்பு சகல ஏற்றுக்கொள்ளுதலுக்கும் தகுதியான நம்முடைய மரித்தோரின் பதிவேடுகள் அடங்கிய ஒரு புஸ்தகத்தை தருவோமாக.
25 சகோதரரே, இந்த பொருளைப்பற்றி உங்களுக்குச் சொல்ல அநேக காரியங்கள் என்னிடமிருக்கிறது; ஆனால் தற்போதைக்கு முடிக்கிறேன், மற்றொரு நேரத்தில் அதைத் தொடருகிறேன். நான் எப்போதும்போல உங்களுடைய தாழ்மையுள்ள ஊழியக்காரன், மற்றும் ஒருபோதும் விலகாத நண்பன்,
ஜோசப் ஸ்மித்.