வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 127


பாகம் 127

இலினாயின் நாவூவிலிருந்த பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடமிருந்து நாவூவில் செப்டம்பர் 1, 1842 தேதியிட்ட மரித்தவர்களுக்கான ஞானஸ்நானத்திற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதம்.

1–4, துன்புறுத்தலிலும் உபத்திரவத்திலும் ஜோசப் ஸ்மித் மகிமைப்படுகிறார்; 5–12, மரித்தவர்களுக்கான ஞானஸ்நானங்கள் சம்பந்தப்பட்ட பதிவேடுகள் பாதுகாக்கப்படவேண்டும்.

1 மிசௌரியிலும் இந்த மாநிலத்திலும் என்னுடைய சத்துருக்கள் மீண்டும் என்னைப் பிடிக்கத் தேடுகிறார்கள் என்றும்; எனக்கு விரோதமாக அவர்களுடைய துன்புறுத்தல்களை எழுப்புவதில் குறைந்தது நீதியின் நிழலோ நிறமோ இல்லாமல் அல்லது அவர்கள் பக்கம் நியாயமுமில்லாது ஒரு காரணமில்லாமல் என்னைப் பிடிக்கத் தேடுகிற அளவிலும், அவர்களுடைய பாசாங்குகள் மிகக் கருமையான சாயத்தின் நேர்மையின்மையின் அடிப்படையில், கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துகிற அளவில் என்னுடைய பாதுகாப்புக்காகவும் இந்த ஜனங்களின் பாதுகாப்புக்காகவும் ஒரு சிறிது காலத்திற்கு இந்த இடத்தை விட்டுப்போவது அவசியமாயிருக்கிறதென்றும் என்னில் ஞானமாயிருக்கிறதென்றும் நான் நினைத்தேன். ஒரு நேரம் தவறாத, சரியான விதத்தில் வியாபாரம் செய்தும், சொத்துக்களை விற்பதால் அல்லது இல்லையென்றால் சூழ்நிலைக்கேற்றார்போல அல்லது சூழ்நிலை அனுமதிக்கிறதைப்போல ஏற்ற காலத்தில் என்னுடைய கடன்கள் யாவும் தீர்க்கப்படுவதை உறுதிசெய்தும், பிரதிநிதிகளிடமும் எழுத்தர்களிடமும் நான் என்னுடைய விவகாரங்களை விட்டுவிட்டேன் என நான் வர்த்தகம் வைத்திருந்த அனைவருக்கும் நான் சொல்லுவேன். புயல் முழுவதுமாக அடித்து ஓய்ந்ததென்பதை நான் அறிகிறபோது, பின்னர் மீண்டும் நான் உங்களிடத்திற்கு திரும்புவேன்.

2 மனுஷனின் பொறாமையும் கோபமும் என்னுடைய வாழ்நாள் முழுவதற்கும் எனக்கு பொதுவானவைகளாயிருப்பதால் நான் கடந்துபோகுமாறு அழைத்த மோசங்கள் எனக்கு சிறியனவாகத் தோன்றுகிறது, அதை நீங்கள் அழைக்க தீர்மானிக்கிறபடி சில நல்ல முடிவிற்கோ அல்லது கெட்ட முடிவிற்கோ உலகத்தோற்றத்திற்கு முன்பிருந்து நான் நியமனம் செய்யப்படாதவரை என்ன காரணத்திற்காக அது அதிசயமாகத் தோன்றுகிறது. நீங்களே தீர்மானியுங்கள். அது நல்லதா அல்லது கெட்டதாவென இந்த காரியங்கள் யாவற்றையும் தேவன் அறிகிறார். ஆயினும் ஆழத்தண்ணீர்களில் நான் நீந்தி பழக்கப்பட்டவனாய் இருக்கிறேன். அவை யாவும் எனக்கு இரண்டாவது இயல்பாயிற்று; மேலும் பவுலைப்போல உபத்திரவத்தில் மகிமையாக நான் உணர்கிறேன்; ஏனெனில் இந்த நாள்வரை என்னுடைய பிதாக்களின் தேவன் என்னை இவை யாவற்றிலுமிருந்தும் விடுவித்தார் -, இப்போதிலிருந்தும் என்னை விடுவிப்பார்; ஏனெனில் இதோ, என்னுடைய சத்துருக்கள் யாவர் மேலும் நான் ஜெயங்கொள்ளுவேன், ஏனெனில் தேவன் இதைப் பேசினார்.

3 ஆகவே, சகல பரிசுத்தவான்களும் களிகூர்ந்து அதிகமாய் மகிழ்ந்திருப்பார்களாக; ஏனெனில் இஸ்ரவேலின் தேவன் அவர்களுடைய தேவன், அவர்களை ஒடுக்குகிறவர்கள் யாவருடைய தலைகளின் மேலும் அவர் ஒரு நீதியின் பிரதிபலனை திரும்பச் செலுத்த கட்டளையிடுவார்.

4 மீண்டும் மெய்யாகவே கர்த்தர் இப்படியாகச் சொல்லுகிறார்: என்னுடைய ஆலயத்தின் பணியும், நான் உனக்கு நியமித்த சகல பணிகளும் தொடர்ந்து நடைபெறுவதாக, நிறுத்தப்படாதிருப்பதாக; உங்களுடைய சிரத்தையும் உங்களுடைய மன உறுதியும், பொறுமையும், உங்களுடைய பணிகளும் இரட்டிப்படைவதாக, நீங்கள் எவ்விதத்திலும் உங்கள் பலனை இழந்து போகமாட்டீர்களென சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் உங்களை துன்புறுத்தினால் உங்களுக்கு முன்பே, அவர்கள் தீர்க்கதரிசிகளையும் நீதிமான்களையும் துன்புறுத்தியிருக்கிறார்கள். இந்த சகலவற்றிற்கும் பரலோகத்தில் ஒரு பிரதிபலன் உண்டாயிருக்கும்.

5 மீண்டும், உங்களுடைய மரித்தவர்களின் ஞானஸ்நானத்திற்கு சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

6 உங்களுடைய மரித்தவர்களைக் குறித்து மெய்யாகவே இப்படியாக கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்: உங்களுடைய மரித்தவர்களுக்காக உங்களில் யாராவது ஞானஸ்நானம் பெறும்போது அங்கே ஒரு பதிவு செய்பவர் இருப்பாராக, உங்களுடைய ஞானஸ்நானங்களுக்கு அவர் ஒரு கண்கண்ட சாட்சியாயிருப்பாராக; ஒரு சத்தியத்தை சாட்சி கொடுக்கும்படியாக அவருடைய காதுகளால் அவர் கேட்பாராக என கர்த்தர் சொல்லுகிறார்;

7 அதாவது உங்களுடைய பதிவேடுகள் எல்லாவற்றிலும் பரலோகத்தில் அது பதிவு செய்யப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுகிறீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்;

8 ஏனெனில் ஆசாரியத்துவத்திற்கு சம்பந்தப்பட்ட அநேக காரியங்களை பூமியில் நான் மறுஸ்தாபிதம் செய்யவிருக்கிறேன் என சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

9 மீண்டும், தலைமுறை தலைமுறையாக நினைவில் வைத்திருக்கப்பட என்னுடைய பரிசுத்த ஆலயத்தின் ஆவணக் காப்பகங்களில் அவைகள் வைக்கப்பட சகல பதிவேடுகளும் ஒழுங்குபடுத்தப்படுவதாக என சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

10 வரப்போகும் ஓய்வுநாளில் மரித்தோருக்கான ஞானஸ்நானத்திற்கான பொருளில் மேடையில் அவற்றை உரையாற்ற அளவுக்கதிகமாக நான் விரும்பினேன் என சகல பரிசுத்தவான்களுக்கும் நான் சொல்லுவேன். ஆனால் அப்படிச் செய்ய என்னுடைய வல்லமைக்கு வெளியே அது இருக்குமளவில், அந்த பொருளைப்பற்றி கர்த்தரின் வார்த்தையை அவ்வப்போது நான் எழுதி, அப்படியே அநேக பிற காரியங்களைக் குறித்தும் எழுதி உனக்கு தபாலில் அனுப்புவேன்.

11 அதிக நேரம் தேவையிருப்பதாலும், சத்துரு விழிப்பாயிருப்பதாலும், உலகத்தின் பிரபு வருகிறான், ஆனால் என்னில் அவனுக்கு ஒன்றுமில்லை என இரட்சகர் சொன்னதைப்போல தற்போதைக்கு என்னுடைய கடிதத்தை இப்பொழுது முடிக்கிறேன்.

12 இதோ, நீங்கள் யாவரும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தேவனிடம் என்னுடைய ஜெபமாயிருக்கிறது. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தீர்க்கதரிசியாக ஞானதிருஷ்டிக்காரனாக கர்த்தரில் உங்களுடைய ஊழியக்காரனாக நான் என்னையே சமர்ப்பிக்கிறேன்.

ஜோசப் ஸ்மித்.