வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94


பாகம் 94

ஆகஸ்டு 2, 1833ல் ஒஹாயோவின், கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். சபை கட்டும் குழுவாக ஹைரம் ஸ்மித், ரேனால்ட்ஸ் ககூன் மற்றும் ஜேரட் கார்ட்டர் நியமிக்கப்பட்டார்கள்.

1–9, தலைமையின் பணிக்காக ஒரு கட்டிடம் கட்டி எழுப்புவது தொடர்பான ஒரு கட்டளையை கர்த்தர் கொடுக்கிறார்; 10–12, ஒரு அச்சடிப்பு நிலையம் கட்டப்படவேண்டும்; 13–17, குறிப்பிட்ட சுதந்தரங்கள் ஒதுக்கப்பட்டன.

1 என்னுடைய சிநேகிதரே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஆலயத்தில் ஆரம்பித்து இங்கே கர்த்லாந்து தேசத்தில் சீயோன் பிணையத்தின் பட்டணத்தின் ஆரம்பத்தையும் அஸ்திபாரத்தையும் அமைப்பின் ஆயத்தம் செய்ய தரை வடிவமைப்பின் வேலையை நீங்கள் ஆரம்பிக்கும்படியாக ஒரு கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

2 இதோ, நான் உங்களுக்குக் கொடுத்த மாதிரியின்படி அது செய்யப்படவேண்டும்.

3 தலைமைக்காக ஒரு வீடு கட்டப்பட, வெளிப்படுதல்களைப் பெற, தலைமையின் பணிக்காக, சபைக்கும் ராஜ்யத்திற்கும் சம்பந்தமான சகல காரியங்களிலும் தலைமையின் ஊழியத்தின் பணிக்காக, தெற்கிலுள்ள முதல் பாகம் எனக்காக நேர்ச்சையளிக்கப்படுவதாக.

4 உட்பிரகாரத்தில் ஐம்பத்தைந்துக்கு அறுபத்தைந்து அடியாக அகலத்திலும் நீளத்திலும் அது கட்டப்படுவதாக என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5 இப்போதிலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்படப்போகிற மாதிரியின்படி ஒரு கீழ் பிரகாரமும் மேல் பிரகாரமும் இருக்கும்.

6 ஆசாரியத்துவத்தின் ஒழுங்கின்படியும், இப்போதிலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்படப்போகிற மாதிரியின்படியும் அஸ்திபாரத்திலிருந்தே கர்த்தருக்கு அது பிரதிஷ்டை செய்யப்படுவதாக.

7 தலைமையின் பணிக்காக அது முழுமையாக கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்யப்படும்.

8 அசுத்தமான காரியங்கள் எதுவும் உள்ளே வர நீங்கள் விடவேண்டாம்; என்னுடைய மகிமை அங்கேயிருக்கும், என்னுடைய பிரசன்னம் அங்கேயிருக்கும்.

9 ஆனால் எந்த அசுத்தமான காரியமும் அதனுள் வந்தால் என்னுடைய மகிமை அங்கேயிராது, என்னுடைய பிரசன்னம் அதனுள் வராது.

10 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனக்கு ஒரு கட்டிடம் கட்டப்படுவதற்காக, என்னுடைய வேதங்களின் மொழிபெயர்ப்பை அச்சடிக்கும் பணிக்காகவும், நான் உங்களுக்கு கட்டளையிடுகிற சகல காரியங்களுக்காகவும் தெற்கிலுள்ள இரண்டாவது பாகம் எனக்கு பிரதிஷ்டை செய்யப்படுவதாக.

11 உட்பிரகாரத்தில் ஐம்பத்தைந்துக்கு அறுபத்தைந்து அடியாக அகலத்திலும் நீளத்திலும் அது இருக்கும்; ஒரு கீழ் பிரகாரமும் மேல் பிரகாரமும் இருக்கும்.

12 உங்களுக்குக் கொடுக்கப்பட்டபடி சகல காரியங்களிலும் பரிசுத்தமாயிருக்கவும், உத்தமமாயிருக்கவும் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட சகல காரியங்களிலும், அச்சடிக்கும் பணிக்காக, எல்லாக் காரியங்களிலும் இப்போதிலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்படப்போகிற மாதிரியின்படியும் அஸ்திவாரத்திலிருந்து இந்த வீடு முற்றிலுமாக கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்யப்படும்.

13 மூன்றாவது பாகத்தில் என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரம் ஸ்மித் அவனுடைய சுதந்தரத்தைப் பெறுவான்.

14 வடக்கிலுள்ள முதல் மற்றும் இரண்டாவது பாகங்களில் என்னுடைய ஊழியக்காரர்களாகிய ரெய்னால்ட்ஸ் ககூன் மற்றும் ஜேரட் கார்ட்டர் அவர்களுடைய சுதந்தரத்தைப் பெறுவார்கள்.

15 கர்த்தராகிய தேவனாகிய நான் உனக்குக் கொடுத்த கட்டளையின்படி என்னுடைய ஜெப வீடுகளைக் கட்ட ஒரு குழுவாயிருந்து நான் அவர்களுக்கு நியமித்த பணியை அவர்கள் செய்வார்களாக.

16 அவைகளைக் குறித்து நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கும்வரை, இந்த இரண்டு ஜெப வீடுகளும் கட்டப்படவேண்டாம்.

17 இந்த நேரத்தில் இப்பொழுது நான் வேறு எதையும் அறிவிப்பதில்லை, ஆமென்.