பாகம் 80
மார்ச் 7, 1832ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக ஸ்டீபன் பர்னட்டுக்கு கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.
1–5, ஸ்டீபென் பர்னட்டும், ஏடென் ஸ்மித்தும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் பிரசங்கிக்க அழைக்கப்படுகிறார்கள்.
1 மெய்யாகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஸ்டீபன் பர்னட்டுக்கு இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்: நீ போ, நீ உலகத்திற்குள் போய், உன்னுடைய சத்தம் கேட்கும் இடம் வரை ஒவ்வொரு ஜந்துக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கி.
2 நீ ஒரு கூட்டாளியை, விரும்புகிறபடியே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஏடென் ஸ்மித்தை நான் உனக்குக் கொடுப்பேன்.
3 ஆகவே, வடக்கோ, தெற்கோ, கிழக்கோ, மேற்கோ, அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் போய் என்னுடைய சுவிசேஷத்தை அறிவியுங்கள், ஏனெனில் நீங்கள் வழிதவறிப்போக முடியாது.
4 ஆகவே, நீங்கள் கேட்ட, மெய்யாகவே நீங்கள் நம்புகிற, சத்தியமென அறிந்த காரியங்களை அறிவியுங்கள்.
5 இதோ, இதுவே, உங்களை அழைத்தவரும், உங்கள் மீட்பருமான, இயேசு கிறிஸ்துவின் சித்தமாயிருக்கிறது. ஆமென்.