வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 92


பாகம் 92

மார்ச் 15, 1833ல் ஒஹாயோவின், கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஐக்கிய நிறுவனத்தில் அவரது பணியில் ஜோசப் ஸ்மித்துக்கு சமீபத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிரடெரிக் ஜி. வில்லியம்ஸை வெளிப்படுத்தல் அறிவுறுத்துகிறது. (பகுதிகள் 78 மற்றும் 82ன் தலைப்புகளைப் பார்க்கவும்).

1–2, ஒற்றுமை அமைப்பில் சேர்தல் சம்பந்தமான ஒரு கட்டளையை கர்த்தர் கொடுக்கிறார்.

1 மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், முன்னதாக கொடுக்கப்பட்ட கட்டளைக்கு ஏற்புடையதாக அமைக்கப்பட்ட ஒற்றுமை அமைப்புக்கு, அவனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென என்னுடைய ஊழியக்காரனாகிய பிரடெரிக் ஜி. வில்லியம்ஸைக் குறித்து ஒரு வெளிப்படுத்தலும் கட்டளையும் நான் கொடுக்கிறேன். நான் ஒருவனுக்குச் சொல்வது யாவருக்கும் நான் சொல்வதாகும்.

2 மீண்டும், என்னுடைய ஊழியக்காரனாகிய பிரடெரிக் ஜி. வில்லியம்ஸ் உனக்கு நான் சொல்லுகிறேன், இந்த ஒழுங்கில் நீ ஒரு செயல்படும் அங்கத்தினராயிருப்பாய், முந்தைய சகல கட்டளைகளையும் கைக்கொள்வதில் நீ உண்மையுள்ளவனாயிருக்கிற அளவில் நீ பாக்கியவானாயிருப்பாய். ஆமென்.

அச்சிடவும்