பாகம் 134
ஆகஸ்டு 17, 1835ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்தில் நடைபெற்ற சபையின் ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருமனதான வாக்கால் நிறைவேற்றப்பட்ட, அரசாங்கங்களையும், பொதுவான சட்டங்களையும் குறித்த நம்பிக்கையின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் முதல் பதிப்பின் முன்மொழியப்பட்ட தொகுப்புகளை கருத்தில் கொள்ள அநேக பரிசுத்தவான்கள் ஒன்றுகூடிய இந்த சம்பவமிருந்தது. அந்த நேரத்தில் பின்வரும் முன்னுரையை இந்த அறிக்கை கொடுத்தது: “பூலோகத்தின் அரசாங்கங்களுக்கும், பொதுவான சட்டங்களுக்கும் சம்பந்தப்பட்டவற்றில் எங்களுக்குள்ள நம்பிக்கை திரிக்கப்படாதிருக்கவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படாதிருக்கவும் அதைக்குறித்த எங்களுடைய கருத்தை இந்த தொகுப்பின் முடிவில் சமர்ப்பிப்பது சரியாயிருக்குமென நாங்கள் நினைத்தோம்.”
1–4, மனசாட்சி மற்றும் தொழுகையின் சுதந்திரத்தை அரசாங்கங்கள் பாதுகாக்க வேண்டும்; 5–8, சகல மனுஷர்களும் அரசாங்கங்களை ஆதரித்து சட்டத்திற்கு மதிப்பளித்து அடங்கிப்போக வேண்டும்; 9–10, மதச் சமுதாயங்கள் உள்ளூர் அதிகாரங்களை செயல்படுத்தக்கூடாது; 11–12, தங்களையும் தங்களுடைய சொத்துக்களையும் பாதுகாப்பதில் மனுஷர்கள் நியாயப்படுத்தப்படுகிறார்கள்.
1 மனுஷனின் நன்மைக்காக அரசாங்கங்கள் தேவனால் அமைக்கப்பட்டது என நாங்கள் நம்புகிறோம்; சமுதாயத்தின் நன்மைக்காகவும், பாதுகாப்புக்காகவும், சட்டங்களை அமைப்பதிலும், அவைகளை நிர்வகிப்பதிலும், அவைகளுக்கு சம்பந்தப்பட்ட மனுஷர்களின் செயல்களுக்காக அவர் அவர்களை பொறுப்பேற்க வைக்கிறார்.
2 மனசாட்சியின்படி நடக்க சுதந்திரத்தையும், சொத்தின் உரிமையையும் கட்டுப்பாட்டையும், உயிரின் பாதுகாப்பையும் ஒவ்வொரு தனிப்பட்டவரும் அடைய அமைக்கப்பட்டு மீறப்படாத அத்தகைய சட்டங்களைத் தவிர எந்த அரசாங்கமும் சமாதானத்தில் இயங்காதென நாங்கள் நம்புகிறோம்.
3 அந்த சட்டங்களை அமல்படுத்த உள்ளூர் அதிகாரிகளும் நீதிபதிகளும் தேவையாயிருப்பது எல்லா அரசாங்கங்களுக்கும் அவசியமாயிருக்கிறதெனவும்; நீதியுடனும் சரிசமமாகவும் நிர்வகிக்கும் அத்தகையவர்கள் ஒரு குடியரசாயிருந்தால் ஜனங்களின் குரலால் அல்லது முடியாட்சியின் விருப்பத்தின்படி நிலைநாட்டப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.
4 மதம் தேவனால் அமைக்கப்படுகிறதெனவும், மற்றவர்களின் உரிமைகளின் மீதும் சுதந்திரங்களின் மீதும் மீறி நடக்க அவர்களுடைய மதக் கருத்துக்கள் அவர்களை உணர்த்தாதவரை அதை செயல்படுத்த அவருக்கு, மட்டுமே மனுஷர்கள் இசைந்திருக்க வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்; ஆனால் மனுஷர்களின் மனசாட்சியைக் கட்ட ஆராதனை விதிகளை ஆணையிட, அல்லது பொது அல்லது தனிப்பட்ட தொழுகையின் மாதிரிகளை கட்டளையிட மனுக்குல சட்டத்திற்கு உரிமையுண்டென நாங்கள் நம்புவதில்லை; அதாவது உள்ளூர் நீதிபதி குற்றத்தைத் தடுக்கவேண்டும்; ஆனால் மனசாட்சியை ஒரு போதும் கட்டுப்படுத்தக் கூடாது; குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும், ஆனால் ஆத்துமாவின் சுதந்திரத்தை ஒரு போதும் ஒடுக்கக்கூடாது.
5 அத்தகைய அரசாங்கங்களின் சட்டங்களால் தங்களுடைய பிறப்புரிமை மற்றும் விட்டுக் கொடுக்கமுடியாத உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் அவர்கள் வாழ்கிற அவரவர் அரசாங்கங்களை ஆதரிக்கவும் தாங்கவும் எல்லா மனுஷர்களும் கட்டுப்பட்டிருக்கிறார்களென நாங்கள் நம்புகிறோம்; அதாவது அப்படியாக ஒவ்வொரு குடிமகனும் பாதுகாக்கப்படும்போது எதிர்ப்புத் தெரிவித்தலும் கலகமும் நாகரிகமற்றதாகிறது, அதன்படி தண்டிக்கப்பட வேண்டும்; அதாவது தங்களுடைய சொந்த நியாயங்களில் அத்தகைய சட்டங்களை அமுலாக்க எல்லா அரசாங்கங்களுக்கும் இருக்கிற ஒரு உரிமை பொது நன்மையைப் பாதுகாக்க சிறப்பாக கணக்கிடப்படுகிறது; ஆயினும் அதே நேரத்தில் மனசாட்சியின் சுதந்திரத்தை பரிசுத்தமாக வைத்திருப்பதை நாங்கள் நம்புகிறோம்.
6 குற்றமில்லாதவர்களின் பாதுகாப்புக்கும், குற்றவாளிகளின் தண்டனைக்கும், அரசாளுபவர்களும் நீதிபதிகளும் ஏற்படுத்தப்பட்டு, அவனுடைய அந்தஸ்த்தில் ஒவ்வொரு மனுஷனும் கனம் பண்ணப்பட வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்; அவைகளில்லாமல் சீர்கெட்ட நிலைமையாலும் பயங்கரவாதத்தாலும் சமாதானமும் இணக்கமும் கைப்பற்றப்படுமென்பதால் எல்லா மனுஷர்களும் சட்டங்களுக்கு மரியாதையையும் பணிவையும் கொடுக்கவேண்டும்; தனிப்பட்டவர்களாக, தேசங்களாக, மனுஷனுக்கும் மனுஷனுக்கும் இடையில் நமது ஆர்வங்களை ஒழுங்கு படுத்துபவதின் ஒரே நோக்கத்திற்காக மனுக்குல சட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது; ஆவிக்குரிய காரியங்களுக்கும் விசுவாசத்திற்கும் தொழுகைக்கும் விதிகளை கட்டளையிட்டு பரலோகத்திலிருந்து தெய்வீக சட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டுமே மனுஷனால் அவனுடைய சிருஷ்டிகருக்கு பதிலளிக்கப்படவேண்டும்.
7 தங்களுடைய மத நம்பிக்கையை சுதந்திரமாக பயிற்சி செய்வதில் எல்லா குடிமக்களின் பாதுகாப்புக்கும் அரசாளுபவர்கள், மாநிலங்கள், அரசாங்கங்களுக்கு உரிமையிருக்கிறது, அதற்கான சட்டங்களை இயற்ற கட்டுப்பட்டவர்களென நாங்கள் நம்புகிறோம்; ஆனால் சட்டங்களுக்கு ஒரு மரியாதையும் பயபக்தியும் காட்டப்பட்டு, அத்தகைய மதக் கருத்துக்கள் சதித்திட்டதிற்கோ கிளர்ச்சிக்கோ நியாயப்படுத்தப்படாதவரை, அவர்களுடைய கருத்துக்களை தடைசெய்வதற்கோ குடிமக்களின் சிலாக்கியத்தை நியாயமாக மறுக்கவோ அவர்களுக்கு உரிமையுண்டு, என நாங்கள் நம்புவதில்லை.
8 குற்றத்தின் தன்மையின்படி குற்றச்செயல் தண்டிக்கப்பட வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்; அதாவது எந்த அரசாங்கம் இருந்தபோது குற்றம் செய்யப்பட்டதோ, அந்த சட்டங்களால் அவர்களுடைய சட்டவிரோதமான செயலின்படியும், மனுஷர்களுக்கு மத்தியில் தீங்கு செய்ய அவர்களுடைய எண்ணங்களின்படியும், எல்லா வகையிலும் கொலை, நம்பிக்கைத் துரோகம், கொள்ளை, களவு, சமாதானத்தை கெடுத்தல், தண்டிக்கப்படவேண்டும்; ஜனங்களின் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் எல்லா மனுஷர்களும் தங்களுடைய திறமையைப் பயன்படுத்தி, நல்ல சட்டங்களுக்கு விரோதமானவர்களை தண்டனைக்குக் கொண்டுவர முன்வரவேண்டும்.
9 அதனுடைய ஆவிக்குரிய சிலாக்கியங்களில் ஒரு மதச் சமுதாயம் ஆதரவுகாட்டப்பட்டு, மற்றொன்று தள்ளிவைக்கப்பட்டு, குடிமகன்களாக அதன் அங்கத்தினர்களின் தனிப்பட்ட உரிமைகள் மறுக்கப்படுவதில் மத செல்வாக்கை உள்ளூர் அரசாங்கத்துடன் இணைப்பதை நாங்கள் நம்புவதில்லை.
10 அத்தகைய விவகாரங்கள் ஐக்கியத்திற்காகவும் நன்னடத்தைக்காகவும் இருக்குமானால், அத்தகைய சமுதாயங்களின் விதிகளின் கட்டுப்பாடுகளின்படி ஒழுக்கமற்ற நடத்தைகளுக்காக, தங்களுடைய அங்கத்தினர்களுடன் விவகாரம் வைத்துக்கொள்ள, எல்லா மதச் சமுதாயங்களுக்கும் ஒரு உரிமையுண்டென நாங்கள் நம்புகிறோம்; ஆனால் இந்த உலகத்தின் பொருட்களை அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளவோ அல்லது அவர்களுடைய உடல் உறுப்புகளை ஆபத்தில் வைக்குமாறு அல்லது அவர்கள்மீது எந்த சரீர தண்டனையின் துன்பத்தைக் கொடுத்து சொத்து மற்றும் உயிரின் உரிமைக்காக, எந்த மனுஷனும் வழக்காட எந்த மதச் சமுதாயத்திற்கும் அதிகாரமிருக்கிறதென நாங்கள் நம்பவில்லை. அவர்களுடைய சமுதாயத்திலிருந்து அவர்களை வெளியேற்றவும், தங்களுடைய ஐக்கியத்திலிருந்து அவர்களை எடுத்துவிடவும் மட்டுமே அவர்களால் முடியும்.
11 தனிப்பட்ட நிந்தையாலும் அல்லது சொத்துரிமை அல்லது நடத்தை மீறப்பட்டாலும் அத்தகைய சட்டங்கள் அமுலிலிருந்து அதை பாதுகாக்கிற இடத்தில் எல்லா தவறுகளையும் மனக்குறைகளையும் சீர்படுத்துவதற்காக மனுஷர்கள் குடியியல் சட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்; ஆனால் சட்டங்களிடம் உடனடியாக விண்ணப்பிக்க முடியாத, நிவாரணமளிக்க முடியாத நிலையில், சட்டவிரோதமான தாக்குதல்களுக்கும் எல்லா மனுஷர்களின் நெருக்கடியான சமயத்தில், எல்லா மனுஷர்களின் தலையீட்டிலிருந்தும் தங்களையும், தங்களுடைய நண்பர்களையும், சொத்தையும், அரசாங்கத்தையும் பாதுகாப்பதில் எல்லா மனுஷர்களும் நியாயப்படுத்தப்படுகிறார்களென நாங்கள் நம்புகிறோம்.
12 பூமியின் தேசங்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதையும் உலகத்தின் கேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீதியாயுள்ளவர்களை எச்சரிப்பதையும் நாங்கள் நம்புகிறோம்; ஆனால் அடிமையான வேலைக்காரர்களிடம் தலையிடவோ, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவோ, அவர்களுடைய எஜமான்களின் விருப்பத்திற்கும் இணக்கத்திற்கும் விரோதமாக ஞானஸ்நானம் கொடுப்பதையோ, அல்லது குறைந்த பட்சம் இந்த வாழ்க்கையில் அவர்களுடைய சூழ்நிலைகளில் திருப்தியில்லாதிருப்பதாக அவர்களை உணர வைத்து அதனால் மனுஷர்களின் வாழ்க்கையை அபாயத்தில் வைக்க அவர்களுடன் குறுக்கிடுவதையோ, நாங்கள் நம்புவதில்லை; அத்தகைய குறுக்கீடு சட்ட விரோதமானதெனவும், நியாயமில்லாததெனவும், மனுஷர்களை அடிமைத்தனத்தில் வைப்பதை அனுமதிக்கிற ஒவ்வொரு அரசாங்கத்தின் சமாதானத்திற்கும் அபாயமெனவும் நாங்கள் நம்புகிறோம்.