பாகம் 131
மே 16 மற்றும் 17, 1843ல் இலினாயின் ராமஸில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தினால் கொடுக்கப்பட்ட அறிவுரைகள்.
1–4, பரலோகத்தின் உயரிய மேன்மைக்கு சிலஸ்டியல் திருமணம் அத்தியாவசியம்; 5–6, நித்திய ஜீவனுக்கு மனுஷர்கள் எவ்வாறு முத்திரிக்கப்படுகிறார்களென விவரிக்கப்பட்டிருக்கிறது; 7–8, சகல ஆவியும் பொருளாகும்.
1 சிலஸ்டியல் மகிமையில் மூன்று பரலோகங்கள் அல்லது நிலைகளிருக்கின்றன;
2 உன்னதத்தை அடையும் பொருட்டாக ஒரு மனுஷன் இந்த ஆசாரியத்துவ முறைமையில் பிரவேசிக்கவேண்டும் [புதிய மற்றும் நித்திய திருமண உடன்படிக்கை என அர்த்தம்];
3 அவன் செய்யவில்லையானால், அவனால் அதை அடையமுடியாது.
4 வேறொன்றுக்குள் அவன் பிரவேசிக்கலாம் ஆனால் அது அவனது ராஜ்யத்தின் முடிவாயிருக்கும்; அவன் முன்னேற்றம் பெற முடியாது.
5 (மே 17, 1843).தீர்க்கதரிசனத்தின் மிக நிச்சய வார்த்தை என்பது பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வல்லமையின் மூலமாக வெளிப்படுத்தலாலும் தீர்க்கதரிசன ஆவியாலும் நித்திய ஜீவனுக்கு அவன் முத்திரிக்கப்பட்டிருக்கிறான் என்பதை ஒரு மனுஷன் அறிவதாகும்.
6 அறியாமையில் இரட்சிக்கப்படுவது ஒரு மனுஷனுக்குக் கூடாததாயிருக்கிறது.
7 மதிப்பில்லாதது என்று ஒன்றுமே இல்லை. சகல ஆவியும் பொருளாகும், ஆனால் அது அதிக மெல்லியதும் அல்லது தூய்மையானதாயுமிருந்து, மிக சுத்தக் கண்களால் மாத்திரமே பிரித்தறிய முடிவதாயிருக்கிறது;
8 அதை நாம் காணமுடியாது; ஆனால் நமது சரீரங்கள் சுத்திகரிக்கப்படும்போது அவை யாவும் பொருட்களென்பதை நாம் காண்போம்.