வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 79


பாகம் 79

மார்ச் 12, 1832ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–4, தேற்றரவாளனால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஜேரட் கார்ட்டர் அழைக்கப்பட்டார்.

1 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜேரட் கார்ட்டர், அவன் நியமனம் செய்யப்பட்ட நியமனத்தின் அதிகாரத்தில் மகா சந்தோஷத்தின் நற்செய்தியையும், நித்திய சுவிசேஷத்தையும் அறிவித்துக்கொண்டு இடம் இடமாக, பட்டணம் பட்டணமாக கிழக்கு தேசங்களுக்கு மீண்டும் போகவேண்டும் என்பது எனது சித்தமாகும்.

2 தேற்றரவாளனை நான் அவன் மீது அனுப்புவேன்; சத்தியத்தையும் வழியையும், அவன் எங்கே போகவேண்டுமென்பதையும் அவனுக்கு அது போதிக்கும்.

3 அவன் உண்மையுள்ளவனாயிருக்கிற அளவில் நான் அவனை அரிக்கட்டுகளோடு கிரீடம் சூட்டுவேன்.

4 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜேரட் கார்ட்டர், உன்னுடைய இருதயம் மகிழுவதாக, பயப்படாதே என உன்னுடைய கர்த்தரான இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். ஆமென்.