வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 129


பாகம் 129

தூதர்கள் மற்றும் ஆவிகளின் பணிவிடைகளின் சரியான தன்மையை பிரித்தரியும்படிக்கு மூன்று மகத்தான திறவுகோல்களை தெரியப்படுத்துவதில் பிப்ருவரி 9, 1843ல் இலினாயின் நாவூவில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் கொடுக்கப்பட்ட அறிவுரைகள்.

1–3, பரலோகத்தில் உயிர்த்தெழுந்த மற்றும் ஆவி சரீரங்கள் இரண்டுமிருக்கின்றன; 4–9, திரைக்கு அப்பாலிலிருக்கும் தூதுவர்களை அடையாளம் காணும்படியாக திறவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1 பரலோகத்தில் இரண்டு வகையான ஜீவன்களிருக்கின்றன: மாம்ச சரீரங்களையும் எலும்புகளையும் கொண்ட உயிர்த்தெழுந்தவர்களான தூதர்கள்,

2 உதாரணமாக இயேசு சொன்னார்: என்னைத் தொட்டுப்பாருங்கள், நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே.

3 இரண்டாவதாக உயிர்த்தெழாத பரிபூரணமாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள், ஆனால் அதே மகிமையை சுதந்தரிக்கிறார்கள்.

4 தேவனிடமிருந்து ஒரு செய்தியை அவன் வைத்திருக்கிறான் என ஒரு தூதன் வந்து சொல்லும்போது அவனுக்கு உன்னுடைய கையைக் கொடுத்து உன்னோடு கைகுலுக்கும்படி வேண்டிக்கொள்.

5 அவன் ஒரு தூதனாயிருந்தால் அவன் அப்படிச் செய்வான், அவனுடைய கரத்தை நீ உணருவாய்.

6 பரிபூரணமாக்கப்பட்ட ஒரு நீதியான மனுஷனின் ஆவியாய் அவனிருந்தால் அவனுடைய மகிமையில் அவன் வருவான்; ஏனெனில் அந்த ஒரே வழியில் மட்டுமே அவன் தோற்றமளிக்க முடியும்,

7 உன்னோடு கைகளைக் குலுக்கும்படி அவனைக் கேள், அவன் நகரமாட்டான். ஏமாற்றுவது ஒரு நீதியான மனுஷனுக்கு, பரலோகத்தின் முறைமைக்கு மாறானது. ஆனால் இருப்பினும் அவனுடைய செய்தியை அவன் அறிவிப்பான்.

8 ஒளியின் தூதன் போன்ற அது பிசாசானவனாக இருந்தால், கைகளைக் குலுக்க நீ அவனைக் கேட்கும்போது அவன் அவனுடைய கைகளை உனக்குக் கொடுப்பான், நீ எதையும் உணரமாட்டாய்; ஆகவே நீ அவனைக் கண்டுபிடிப்பாய்.

9 எந்த நிர்வகித்தலும் தேவனிடமிருந்து வந்ததாவென நீ அறிந்துகொள்ளும்படிக்கு இந்த மூன்று திறவுகோல்களுமிருக்கின்றன.