வேதங்கள்
அதிகாரப்பூர்வ பிரகடனம் 1


அதிகாரப்பூர்வ பிரகடனம் 1

தேவன் வேறு விதமாக அறிவிக்காதவரை திருமணத்திற்கு ஒரு தார திருமணம் அவரது தரமென வேதாகமும் மார்மன் புஸ்தகமும் போதிக்கிறது (சாமுவேல் 12:7–8 மற்றும் யாக்கோபு 2:27, 30 பார்க்கவும்). ஜோசப் ஸ்மித்துக்கு ஒரு வெளிப்படுத்தலைத் தொடர்ந்து பலதார திருமணத்தின் பழக்கம் 1840 வருஷத்தின் ஆரம்பத்தில் சபை அங்கத்தினர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டது (பாகம் 132 பார்க்கவும்). 1860லிருந்து 1880வரை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கம் இந்த மத பழக்கத்தை சட்ட விரோதம் என சட்டங்களை பிறப்பித்தது. இறுதியாக இந்த சட்டங்களை அ.ஐ.நாடுகளின் உயர்நீதிமன்றம் ஆதரித்தது. வெளிப்படுத்தலைப் பெற்ற பின்பு அக்டோபர் 6, 1890ல் அதிகாரமாகவும் கட்டுப்பாடாகவும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்வரும் கொள்கையை தலைவர் வில்பர்ட் உட்ரப் வழங்கினார். சபையில் பலதார திருமண பழக்கத்தின் முடிவிற்கு இது நடத்தியது.

இது சம்மந்தப்பட்டவர்களுக்கு

பலதார திருமணங்கள் இன்னமும் நடத்தப்படுகின்றன என்றும், கடந்த ஜூன் மாதத்திலிருந்து அல்லது கடந்த வருஷத்தின்போது யூட்டாவில் நாற்பது அல்லது அதிகமான அத்தகைய திருமண ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும், சபைத்தலைவர்கள் பலதாரத் திருமண பழக்கத்தை தொடர்ந்து போதித்து, ஊக்குவித்து, பொது பிரசங்கங்களில் வற்புறுத்துகிறார்கள் என்றும் பெருமளவில் பிரசுரிக்கப்பட்ட சால்ட் லாக் சிட்டியில், அரசியல் நோக்கத்திற்காக அனுப்பப்பட்ட பத்திரிக்கைச் செய்திகள், யூட்டா ஆணையம் தங்களுடைய உள்விவகார செயலாளருக்கு கொடுத்த சமீபித்திய அறிக்கையில், குற்றஞ்சாட்டுகின்றன,

ஆகவே, இதன்மூலம், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானதென பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராக நான் மிக பயபக்தியான முறையில் அறிவிக்கிறேன். பலதார திருமணங்களையோ அல்லது பல மனைவி திருமணத்தையோ நாங்கள் போதிக்கவில்லை, இந்தப் பழக்கத்துக்குட்பட எந்த நபரையும் நாங்கள் அனுமதிப்பதில்லை, நாற்பதோ அல்லது வேறு எண்ணிக்கையிலோ எங்களுடைய ஆலயங்களில் அல்லது அதன் எல்லையில் வேறு எந்த இடத்திலோ பல மனைவி திருமணங்கள் நடைபெற்றதென்பதை நான் மறுக்கிறேன்.

1889ன் வசந்தத்தில், சால்ட் லேக் சிட்டியின் தரிப்பித்தல் அறையில் அந்த திருமணம் நடைபெற்றதாக ஒரு பிரிவினர் குற்றம் சுமத்திய ஒரு சம்பவம் தெரிவிக்கப்பட்டது, ஆனால் சடங்கை யார் நடத்தினார்களென என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை, இந்தக் காரியத்தில் என்ன செய்யப்பட்டிருந்தாலும் எனக்குத் தெரியாமல் நடந்திருக்கிறது. இந்த குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தின் விளைவாக என்னுடைய அறிவுரைகளால் தரிப்பித்தல் அறை தாமதமில்லாமல் இடிக்கப்பட்டுவிட்டது.

பல மனைவி திருமணங்களை தடைசெய்து காங்கிரசால் இயற்றப்பட்டுள்ள சட்டங்களான கடைசி வழியான நீதிமன்றத்தால் அரசியலமைப்புச் சட்டமாக அறிவிக்கப்பட்ட சட்டங்களைப் பொறுத்தளவில், அந்த சட்டங்களுக்கு கட்டுப்படவும் அப்படியே அவர்கள் செய்யவும் நான் தலைமை தாங்குகிற சபையின் அங்கத்தினர்களிடம் என்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த இதன்மூலமாக என்னுடைய எண்ணத்தை நான் பிரகடனம் செய்கிறேன்.

குறிப்பிடப்பட்ட அந்த சமயத்தில் என்னுடைய அல்லது என்னுடைய உடன்தோழர்களின் போதனைகளில் பலதார திருமணத்தை கருத்தில் கொள்ளவோ ஊக்குவிக்கவோ காரணமாக எடுத்துக்கொள்ளப்படும் வகையில் எதுவுமில்லை; அத்தகைய போதனையை தெரிவிப்பதாகத் தோன்றுகிற பேச்சை சபையின் எந்த மூப்பராவது பயன்படுத்தும்போது அவர் உடனடியாக கண்டிக்கப்பட்டிருக்கிறார். தேசத்தின் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்த திருமணத்தையும் ஒப்பந்தம் செய்வதிலிருந்து விலகியிருப்பது பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு என்னுடைய அறிவுரையாகும் என இப்பொழுது பகிங்கரமாக நான் பிரகடனம் செய்கிறேன்.

வில்பர்ட் உட்ரப்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து
சபையின் தலைவர்.

பின்வருபவற்றை தலைவர் லோரென்சோ ஸ்நோ வழங்கினார்:

“பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராக வில்பர்ட் உட்ரப்பை அங்கீகரித்து, பூமியில் தற்போதைய நேரத்தில் முத்திரிக்கும் நியமங்களின் திறவுகோல்களைத் தரித்திருக்கிற ஒரே மனுஷனாயிருக்கிறார் எனவும், நாம் கேட்கும்படியாக வாசிக்கப்பட்ட, 24, செப்டம்பர் 1890 தேதியிட்ட கொள்கை அறிவிப்பை வழங்க அவருடைய ஸ்தானத்தின் அதிகாரத்தினால் முற்றிலும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறாரென நாம் அவரை கருதி, பொது மாநாட்டில் கூடியிருக்கிற ஒரு சபையாக பலதார திருமணங்களைக் குறித்த அவருடைய பிரகடனத்தை அதிகாரப்பூர்வமாகவும் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் நாம் ஏற்றுக்கொண்டதாக நான் முன்மொழிகிறேன்.”

சால்ட் லேக் சிட்டி, யூட்டா, அக்டோபர் 6, 1890.

கொள்கை அறிக்கையைப்பற்றி
தலைவர் வில்பர்ட் உட்ரப்பால்
கொடுக்கப்பட்ட மூன்று உரைகளிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்ட சாரம்

வழிதவறிப்போகுமாறு உங்களை நடத்த இந்த சபையின் தலைவராக இருக்கிற என்னையோ அல்லது வேறு எந்த மனுஷனையோ கர்த்தர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அது அந்த திட்டத்திலில்லை. அது தேவனின் மனதிலில்லை. அதை நான் முயற்சி செய்வதாயிருந்தால், என்னுடைய இடத்திலிருந்து கர்த்தர் என்னை நீக்குவார், தேவனுடைய வார்த்தைகளிலிருந்தும் அவர்களுடைய கடமைகளிலிருந்தும் மனுபுத்திரர்களை வழிதவறிப்போகுமாறு நடத்த முயற்சிக்கும் வேறு எந்த மனுஷனுக்கும் அப்படியே அவர் செய்வார். (சபையின் அறுபத்தி ஒன்றாவது அரையாண்டு பொது மாநாடு, திங்கட்கிழமை, அக்டோபர் 6, 1890, சால்ட் லேக் சிட்டி, யூட்டா. Deseret Evening News, அக்டோபர் 11, 1890, பக்கம் 2ல், அறிவிக்கப்பட்டிருந்தது.)

யார் ஜீவிக்கிறார்கள், யார் மரிக்கிறார்கள் அல்லது இந்த சபையை நடத்த யார் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல, சர்வவல்லமையுள்ள தேவனின் உணர்த்துதலால் அதை அவர்கள் நடத்தவேண்டும். அந்த வழியில் அவர்கள் அதைச் செய்யவில்லையென்றால், அதை அவர்களால் ஒருபோதும் செய்யமுடியாது.

அண்மையில் சில வெளிப்படுத்தல்களை, எனக்கு மிக முக்கியமானவற்றை நான் பெற்றேன், கர்த்தர் எனக்குக் கூறியவற்றை நான் உங்களுக்குக் கூறுவேன். கொள்கை அறிக்கை என பெயரிடப்பட்டிருப்பதற்கு நான் உங்களின் மனங்களைக் கொண்டு வருகிறேன்.

பிற்காலப் பரிசுத்தவான்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க கர்த்தர் என்னிடம் கூறினார், அவர்களுக்கு நான் சொன்னவைகளுக்கு அவர்கள் செவிகொடுத்து, அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேவனின் ஆவியாலும் வல்லமையாலும் பதிலளித்தால், அவர்கள் யாவரும் ஒன்றுபோல பதிலளிப்பார்கள், இந்தக் காரியத்தைப் பொருத்தவரை அவர்கள் யாவரும் ஒன்றுபோல நம்புவார்கள் எனவும் என்னிடம் சொன்னார்.

இதுதான் கேள்வி: அதற்கு எதிரான தேசத்தின் சட்டங்களுடனும், அறுபது மில்லியன் ஜனங்களின் எதிர்ப்புடனும், எல்லா ஆலயங்களின் பறிமுதல் மற்றும் நஷ்டங்கள் என்ற விலைக்கிரயம் கொடுத்து, ஜீவிப்பர்களுக்கும் மரித்தவர்களுக்கும் அங்கு நடைபெறும் சகல நியமங்களை நிறுத்தி, பிரதான தலைமை, பன்னிருவர் மற்றும் சபைக் குடும்பங்களின் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஜனங்களின் தனிப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து பலதார திருமணங்களை செயல்படுத்த முயற்சிப்பதா (இவை யாவுமே தாமாக அவ்வழக்கத்தை நிறுத்தும்); அல்லது, இந்த கொள்கையைப் பின்பற்றுவதனிமித்தம், இம்மட்டும் நாம் அனுபவித்துள்ள உபத்திரவங்களுக்குப்பின், இவ்வழக்கத்தை நிறுத்தி சட்டத்திற்கு தலைவணங்கி, அப்படிச்செய்வதன் மூலமாக ஜனங்களுக்கு அறிவுரை கூறவும், சபையின் கடமைகளைச் செய்யவும், தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் தகப்பன்மார்களையும் வீட்டில் இருக்க விட்டு, ஜீவிப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்குமான, சுவிசேஷத்தின் நியமங்களில் அவர்கள் பங்கேற்கும்படியாக பரிசுத்தவான்களின் கைகளில் ஆலயங்களை கொடுத்து விடுவது, பிற்காலப் பரிசுத்தவான்கள் தொடர்ந்து செல்ல வேண்டிய ஞானமான பாதை எது?

இந்த பழக்கத்தை நாம் நிறுத்தவில்லையென்றால் சரியாக என்ன நடக்குமென தரிசனத்திலும் வெளிப்படுத்தலிலும் கர்த்தர் எனக்குக் காட்டினார். அதை நாம் நிறுத்தியிருக்கவில்லையெனில் லோகனிலுள்ள இந்த ஆலயத்தில் எந்த மனுஷனாலும் உங்களுக்கு எந்த பயனுமிருந்திருக்காது. ஏனெனில் சீயோன் தேசம் முழுவதிலும் எல்லா நியமங்களும் நிறுத்தப்படும். இஸ்ரவேல் முழுவதும் குழப்பம் ஆளுகை செய்து அநேகர் கைதிகளாக்கப்பட்டிருப்பார்கள். இந்த தொந்திரவு சபை முழுவதன் மீதும் வந்திருந்து இப்பழக்கத்தை விட்டுவிட நாம் கட்டாயப்படுத்தப்பட்டிருப்போம். இப்போதைய கேள்வி இந்த வகையில் இது நிறுத்தப்பட வேண்டுமா அல்லது கர்த்தர் நமக்கு வெளிப்படுத்திய வழியில் நிறுத்தப்பட்டு, நம்முடைய தீர்க்கதரிசிகளையும், அப்போஸ்தலர்களையும், தகப்பன்மார்களையும் சுதந்திர மனுஷர்களாக விட்டு மரித்தவர்கள் மீட்கப்படும்படியாக, ஆலயங்களை மனுஷர்களின் கைகளில் விட வேண்டுமா என்பதேயாகும். இந்த ஜனங்களால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஆவி உலகத்தின் சிறைவீட்டிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டார்கள், இப்பணி தொடரவேண்டுமா அல்லது நிறுத்தப்பட வேண்டுமா. இந்தக் கேள்வியை பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு முன்பு நான் வைக்கிறேன். நீங்களே உங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும். இதற்கு நீங்களே பதிலளிக்க நான் விரும்புகிறேன். அதற்கு நான் பதிலளிக்கமாட்டேன், ஆனால் நாம் அந்த பாதையை தேர்ந்தெடுக்காது இருந்திருப்போமானால், ஒரு ஜனமாக நாம் சரியாக அந்த நிலைமையில்தான் இருந்திருப்போம் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எதாவது செய்யப்படாதிருந்தால் சரியாக என்ன நடந்திருக்குமென நான் கண்டேன். நீண்ட நேரமாக இந்த ஆவி என்மீதிருந்தது. ஆனால் இதை நான் சொல்ல விரும்புகிறேன்: நான் எல்லா ஆலயங்களும் நம்முடைய கைகளிலிருந்து போக விட்டிருப்பேன்; நான் செய்ததை பரலோகத்தின் தேவன் எனக்கு கட்டளையிடாது இருந்திருந்தால் நானும் பிற ஒவ்வொரு மனுஷனும் சிறைச்சாலைக்கு போக விட்டிருந்திருப்பேன்; அதைச் செய்ய எனக்கு கட்டளையிடப்பட்ட நேரம் வந்தபோது எனக்கு எல்லாமுமே தெளிவாயிருந்தது. நான் கர்த்தருக்கு முன்பாகப் போய் எழுதவேண்டுமென கர்த்தர் எனக்குக் கூறியவற்றை நான் எழுதினேன்.

உங்களுடைய சிந்தனைக்கும் ஆலோசனைக்கும் இதை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன். கர்த்தர் நம்மிடையே கிரியை செய்துகொண்டிருக்கிறார். (கேச் பிணைய மாநாடு, லோகன், யூட்டா, ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1, 1891. Deseret Weekly, நவம்பர் 14, 1891, ல் அறிவிக்கப்பட்டிருந்தது.)

எனக்கு என்ன வெளிப்படுத்தப்பட்டதென்றும் இந்தக் காரியத்தில் தேவகுமாரன் என்ன நிறைவேற்றினார் என்றும் இப்பொழுது நான் உங்களுக்குக் கூறுவேன். அந்த கொள்கை அறிவிப்பு கொடுக்கப்படவில்லையெனில் தேவன் ஜீவித்திருப்பதைப்போல இந்தக் காரியங்கள் யாவும் நடந்திருக்கும். ஆகவே, அவருடைய மனதிலேயிருந்த நோக்கங்களுக்காக அந்தக் காரியம் சபைக்கும் உலகத்திற்கும் சமர்ப்பிக்கப்பட தேவகுமாரன் உணர்ந்தார். சீயோனின் ஸ்தாபிதத்தை கர்த்தர் கட்டளையிட்டார். இந்த ஆலயத்தை முடிப்பதற்கு அவர் கட்டளையிட்டார். மலைகளின் பள்ளத்தாக்குதல்களில் ஜீவிப்பவர்கள் மற்றும், மரித்தவர்களுக்கு இரட்சிப்பு கொடுக்கப்பட வேண்டுமென அவர் கட்டளையிட்டார். பிசாசானவன் அதைத் தடுக்கக்கூடாது என சர்வவல்லமையுள்ள தேவன் கட்டளையிட்டார். நீங்கள் அதைப் புரியக்கூடுமானால் அதற்கு அதுவே திறவுகோல். (ஏப்ரல் 1893ல் சால்ட் லேக் ஆலயத்தின் பிரதிஷ்டையின் ஆறாவது கூட்டத்தின் ஒரு சொற்பொழிவிலிருந்து. பிரதிஷ்டை ஆராதனைகளின் எழுத்தாக்கம், ஆவணங்கள், சபை வரலாற்று இலாகா, சால்ட் லேக் சிட்டி, யூட்டா.)