வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 83


பாகம் 83

ஏப்ரல் 30, 1832ல் மிசௌரியின் இன்டிபென்டன்ஸில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். தீர்க்கதரிசி அவருடைய சகோதரர்களுடன் ஆலோசனையில் அமர்ந்திருக்கும்போது இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்டது.

1–4, ஸ்திரீகளும் பிள்ளைகளும் அவர்களுடைய ஆதரவுக்காக அவர்களுடைய கணவன்மார்களிடத்திலும் தகப்பன்மார்களிடத்திலும் உரிமை பெற்றிருக்கிறார்கள்; 5–6, விதவைகளும் அனாதைகளும் அவர்களுடைய ஆதரவுக்கு சபையின்மேல் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

1 மெய்யாகவே, சபையைச் சேர்ந்த, தங்களுடைய கணவன்மார்களை அல்லது தகப்பன்மார்களை இழந்திருக்கிற ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் குறித்து சபையின் சட்டங்களுக்கு கூடுதலாக, இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்

2 தங்களுடைய கணவன்மார்கள் எடுத்துக்கொள்ளப்படும்வரை ஸ்திரீகளின் பராமரிப்புக்காக அவர்களின் கணவன்மார்களிடத்தில் அவர்களுக்கு உரிமையிருக்கிறது; அவர்கள் மீறுபவர்களாக காணப்படாவிட்டால் அவர்கள் சபையில் ஐக்கியமுள்ளவர்களாயிருப்பார்கள்.

3 அவர்கள் உண்மையில்லாதவர்களாயிருந்தால் சபையில் அவர்களுக்கு ஐக்கியமிருக்காது; இருந்தும் தேசத்தின் சட்டங்களின்படி அவர்களின் சுதந்தரங்களால் தங்களைப் பராமரித்துக் கொள்ளலாம்.

4 எல்லா பிள்ளைகளும் குறிப்பிட்ட வயதடையும் வரை அவர்களின் பராமரிப்புக்காக தங்கள் பெற்றோரிடத்தில் அவர்களுக்கு உரிமையுண்டு.

5 அதன் பின்னர் அவர்களுடைய பெற்றோர் சுதந்தரங்களைக் கொடாதிருந்தால், அவர்களுக்கு சபையில், வேறு வார்த்தைகளில் எனில் கர்த்தரின் பண்டசாலையில் உரிமையுண்டு.

6 சபையின் நேர்ச்சைகளால் பண்டசாலைகள் பராமரிக்கப்படவேண்டும்; விதவைகளுக்கும் அனாதைகளுக்கும், தரித்திரர்களுக்கும் கூட வழங்கப்படவேண்டும். ஆமென்.