என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஆகஸ்ட் 4–10: “பரிசுத்த ஸ்தலங்களில் நின்று கொண்டிருங்கள்”: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85–87


“ஆகஸ்டு 4–10: ‘பரிசுத்த ஸ்தலங்களில் நின்று கொண்டிருங்கள்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85– 87,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85–87,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

குடும்பம் ஆலயத்தை அணுகுதல்

ஆகஸ்ட் 4–10: “பரிசுத்த ஸ்தலங்களில் நின்று கொண்டிருங்கள்”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85–87

கிறிஸ்துமஸ் தினம் பொதுவாக “பூமியில் சமாதானம்” போன்ற செய்திகளை சிந்திப்பதற்கான நேரம் ஆகும் (லூக்கா 2:14 பார்க்கவும்). ஆனால் டிசம்பர் 25, 1832ல், ஜோசப் ஸ்மித்தின் மனம் போர் அச்சுறுத்தலால் நிறைந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென் கரோலினா மாகாணம் அரசாங்கத்தை மீறி போருக்கு தயாராகி வந்தது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று கர்த்தர் வெளிப்படுத்தினார்: “போர்,” அவர் அறிவித்தார், “எல்லா தேசங்களின் மீதும் ஊற்றப்படும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 87:2). இந்த தீர்க்கதரிசனம் மிக விரைவில் நிறைவேறும் என்று தோன்றியது.

ஆனால் அப்போது நடக்கவில்லை. சில வாரங்களுக்குள், தென் கரோலினாவும் அமெரிக்க அரசாங்கமும் ஒரு சமரசத்தை எட்டின, போர் தவிர்க்கப்பட்டது. தீர்க்கதரிசனம், எனினும், எப்போதுமே அந்த நேரத்தில் அல்லது நாம் எதிர்பார்க்கும் விதத்தில் நிறைவேறாது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோசப் ஸ்மித் கொல்லப்பட்ட பிறகு, தென் கரோலினா கலகம் செய்து, உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. இன்று, உலகம் முழுவதும் போர் தொடர்ந்து “பூமியை துக்கிக்க” செய்துள்ளது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 87:6). பேரழிவு எப்போது வரும் என்று கணிப்பதில் இந்த வெளிப்பாட்டின் மதிப்பு குறைவாகவும், அதுவரும்போது என்ன செய்ய வேண்டும் என்று கற்பிப்பதில் அதிகமாகவும் இருக்கிறது. 1831, 1861, மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் இந்த ஆலோசனையும் ஒன்றுதான்: “நீங்கள் பரிசுத்த ஸ்தலங்களில் நின்று கொண்டிருங்கள், … அசையாதீர்கள்” ( வசனம் 8).

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85:1–2

கர்த்தர் நான் “ஒரு வரலாற்றை வைத்திருக்க” விரும்புகிறார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85: 1–2லிலுள்ள விவரிக்கப்பட்டுள்ள “வரலாற்றில்” கர்த்தர் எதைச் சேர்க்க விரும்பினார் என்பதைக் கவனியுங்கள். அவருடைய பரிசுத்தவான்கள் ஒரு வரலாற்றை வைத்திருக்க வேண்டும் என்று அவர் ஏன் விரும்புகிறார்? உங்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் “வாழ்க்கை முறை, [உங்கள்] விசுவாசம் மற்றும் செயல்களைப்பற்றி” நீங்கள் என்ன பதிவு செய்ய முடியும்? தனிப்பட்ட வரலாற்றை வைத்திருப்பது கிறிஸ்துவிடம் வர உங்களுக்கு எப்படி உதவும்?

See also “Journals: ‘Of Far More Worth than Gold,’” Teachings of Presidents of the Church: Wilford Woodruff (2011), 125–33; “Turning Hearts” (video), ChurchofJesusChrist.org.

3:5

Turning Hearts

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85:6

ஆவியானவர் “அமர்ந்த மெல்லிய சத்தத்தில்” பேசுகிறார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85:6ல் ஜோசப் ஸ்மித் ஆவியை விவரிக்க பயன்படுத்திய வார்த்தைகளை சிந்தியுங்கள். எந்த அர்த்தத்தில் ஆவியின் குரல் “அமர்ந்த” மற்றும் “மெல்லியதாக” இருக்கிறது? ஜோசப் ஸ்மித் மூலம் கொடுக்கப்பட்ட இந்த அதிக விளக்கங்களைக் கருத்தில் கொள்ளுங்கள்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:22–24; 8:2–3; 9:7–9; 11:12–13; 128:1. பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் எவ்வாறு பேசுகிறார்?

லூக்கா 24:32; மோசியா 5:2; ஆல்மா 32:28; ஏலமன் 5:30; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:22–23; 11:12–13 ஐயும் பார்க்கவும்.

பொருள்சார் பாடங்களைப் பயன்படுத்தவும். மக்கள் தாங்கள் கற்றுக்கொண்டது தொடர்பான பொருள்சார் பாடத்தைப் பார்க்கும்போது அல்லது அதில் பங்கேற்கும்போது ஒரு சுவிசேஷப் பாடத்தை நன்றாக நினைவில் வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக, ஆவியின் அமர்ந்த, மெல்லிய குரலைப் பற்றிக் கற்பிக்கும்போது, மென்மையான, பரிசுத்தமான இசையை நீங்கள் இசைக்கலாம், மேலும் அந்த இசை அவர்களுக்கு எப்படி உணர்வைத் தருகிறது மற்றும் கவனத்தை சிதறடிக்கும் சத்தங்களாக இருந்தால், கேட்பது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதைப் பற்றி கற்பவர்கள் பேசலாம். இது நம் வாழ்வில் ஏற்படும் அமைதியான, சிறிய குரலைக் கேட்பதைத் தடுக்கிற, கவனச்சிதறல்கள் பற்றிய கலந்துரையாடலுக்கு வழிவகுக்கும்.

இளம் பெண் வேதம் வாசித்தல்

ஆவியின் குரலை அமர்ந்த, மெல்லிய குரல் என்று வேதங்கள் விவரிக்கின்றன.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 86

நீதிமான்கள் கடைசி நாட்களில் கிறிஸ்துவிடம் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 86 மத்தேயு 13:24–30, 37–43 இல் காணப்படும் கோதுமை மற்றும் களைகளின் உவமையின் விளக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த உவமையின் பொருளைப் பற்றி நீங்கள் அறியும்போது, இது போன்ற ஒரு அட்டவணையை நிரப்பவும்:

அடையாளங்கள்

சாத்தியமான அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

அடையாளங்கள்

விதை விதைப்பவர்கள்

சாத்தியமான அர்த்தங்கள்

தீர்க்கதரிசிகளும்அப்போஸ்தலர்களும்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் என்ன வகையான “விதைகளை” நடுகிறார்கள்?

அடையாளங்கள்

சத்துரு

சாத்தியமான அர்த்தங்கள்

சாத்தான்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

கர்த்தருடைய வேலையை எப்படி எதிரி தடுக்க முயற்சி செய்கிறான்?

அடையாளங்கள்

சாத்தியமான அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

அடையாளங்கள்

சாத்தியமான அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

கருத்தில் கொள்ள வேண்டிய சில கூடுதல் கேள்விகள் இதோ:

  • உவமையை விளக்கிய பிறகு, கர்த்தர் ஆசாரியத்துவம், மறுஸ்தாபிதம் மற்றும் அவரது மக்களின் இரட்சிப்பைப் பற்றி பேசினார் (வசனங்கள் 8–11 ஐப் பார்க்கவும்). இந்த வசனங்களுக்கும் கோதுமை மற்றும் களைகளின் உவமைக்கும் இடையே என்ன தொடர்புகளைக் காண்கிறீர்கள்?

  • “புற ஜாதியாருக்கு ஒளியாக” மற்றும் “[கர்த்தருடைய] ஜனங்களுக்கு இரட்சகராக” உங்கள் பங்கு என்ன? ( வசனம் 11).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 87

வேத பாட வகுப்பு சின்னம்
“பரிசுத்த ஸ்தலங்களில்” சமாதானம் காணப்படுகிறது.

பாகம் 87 இல் உள்ள தீர்க்கதரிசனம் கடைசி நாட்களில் போருடன் தொடர்புடைய உலக ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கிறது. ஆனால் இந்த வெளிப்பாட்டிலுள்ள அறிவுரை ஆவிக்குரிய ஆபத்துகளுக்கும் பொருந்தும். பின்வருபவை போன்ற கேள்விகளை சிந்தியுங்கள்:

  • ஒரு தீர்க்கதரிசனம் என்பது தேவனிடமிருந்து ஒரு தீர்க்கதரிசிக்கு, பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றிய வெளிப்பாடு ஆகும். பண்டைய மற்றும் தற்கால தீர்க்கதரிசிகள் வழங்கிய சில தீர்க்கதரிசனங்கள் என்ன? (யோவான் 3:14; மோசியா 3:5; ஏலமன் 14:2–6 பார்க்கவும்). அவை எவ்வாறு நிறைவேறின? (லூக்கா 23:33; மத்தேயு 15:30–31; 3 நேபி 1:15–21 பார்க்கவும்).

  • தேவனின் தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொள்வதன் ஆசீர்வாதங்கள் என்ன?

அந்த எண்ணங்களை மனதில் கொண்டு, பாகம் 87ஐ வாசியுங்கள். (சில வரலாற்றுச் சூழலுக்கு, இந்த குறிப்புக்கான அறிமுகத்தையும் நீங்கள் படிக்க விரும்பலாம்.) இந்த வெளிப்பாட்டிலிருந்தும் அது நிறைவேறிய விதத்திலிருந்தும் தீர்க்கதரிசனத்தைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஒரு தீர்க்கதரிசனம் உடனடியாக நிறைவேறாததால் அதை சந்தேகிக்கும் ஒருவருக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

வசனம் 8ல் கர்த்தர் என்ன அறிவுரை கூறுகிறார்? நீங்கள் அமைதியையும் பாதுகாப்பையும் காணும் உங்கள் “பரிசுத்த ஸ்தலங்கள் யாவை”? ஒரு இடத்தை பரிசுத்தமாக்குவது எது? உலகப்பிரகார இருப்பிடங்களுக்கு கூடுதலாக, பரிசுத்த நேரங்கள், பரிசுத்த நடைமுறைகள் அல்லது பரிசுத்த எண்ணங்கள் சமாதானத்தை அளிக்கக்கூடும். உதாரணமாக, தேவனுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் உங்களுக்கு எப்படி பரிசுத்தமான இடமாக இருக்கும்? இந்த இடங்களில் “நிற்றல்” மற்றும் “அசையாமலிருப்பது” என்பதன் அர்த்தம் என்ன?

See also “Where Love Is,” Children’s Songbook, 138–39; Saints, 1:163–64; “Peace and War,” in Revelations in Context, 158–64.

கூடுதல் ஆலோசனைகளுக்கு, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிக்கைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பாகம் சின்னம் 03

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85:6

ஆவியானவர் “அமர்ந்த மெல்லிய குரலில்” பேசுகிறார்.

  • பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் பேசுவது அவர்களுக்கு எப்படி தெரியும் என்று யாராவது கேட்டால் உங்கள் பிள்ளைகள் என்ன சொல்வார்கள்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 85:6ல் ஜோசப் ஸ்மித் ஆவியின் குரலை விவரித்த ஒரு வழியைப் பற்றி வாசிக்க அவர்களை அழைக்கவும் அவர்கள் சிறிய குரலில் கேட்பதையும் பேசுவதையும் பயிற்சி செய்யலாம். ஆவியானவர் உங்களுடன் அமர்ந்த, மெல்லிய குரலில் பேசிய அனுபவங்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

  • The Holy Ghost” (Children’s Songbook, 105) போன்ற “அமர்ந்த மெல்லிய சத்தம்” என்ற சொற்றொடரை உங்கள் குழந்தைகளுக்குப் புரிந்துகொள்ள உதவ, நீங்கள் குழந்தைகளுக்கான பாடலை அமைதியாக இசைக்கலாம். மற்ற குழந்தைகள் கவனத்தை சிதறடிக்கும் சத்தங்களை எழுப்பும்போது, அது என்ன பாடல் என்று யூகிக்க குழந்தைகளில் ஒருவரிடம் கேளுங்கள். பிறகு கவனச்சிதறல் இல்லாமல் பாடலை மீண்டும் இசைக்கலாம். ஆவியானவரை அடிக்கடி உணர நம் வாழ்விலிருந்து என்ன கவனச்சிதறல்களை நீக்கலாம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 86

தேவனுடைய மக்களை கூட்டிச் சேர்க்க என்னால் உதவ முடியும்.

  • பாகம் 86ல் விவரிக்கப்பட்டுள்ள உவமையைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, நீங்கள் கோதுமையின் பல சிறிய படங்கள் அல்லது வரைபடங்களைத் தயாரித்து அறையைச் சுற்றி மறைக்கலாம். கோதுமை மற்றும் களைகளின் உவமையை உங்கள் பிள்ளைகளுக்கு விளக்கவும் (மத்தேயு 13:24–30 பார்க்கவும்), மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 86:1–7 இல் உள்ள கர்த்தரின் விளக்கத்தை ஒன்றாக வாசியுங்கள். உங்கள் பிள்ளைகள் கோதுமையின் மறைக்கப்பட்ட படங்களைச் சேகரித்து, இயேசு கிறிஸ்துவிடம் அவர்கள் “கூட்டிச் சேர்க்கக்கூடிய” ஒருவரின் பெயரை எழுதலாம். இயேசு கிறிஸ்துவிடம் மக்களை கூட்டிச் சேர்ப்பது என்றால் என்ன? இதை நாம் செய்யக்கூடிய சில வழிகள் யாவை?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 86:11

நான் மற்றவர்களுக்கு ஒளியாக இருக்க முடியும்.

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 86:11 பற்றி கலந்துரையாடும்போது உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் கேட்கக்கூடிய சில கேள்விகள்: ஒளி நம்மை எவ்வாறு ஆசீர்வதிக்கிறது? நமக்கு ஒளி இல்லாத போது எப்படி இருக்கும்? நாம் எப்படி மற்றவர்களுக்கு ஒளியாக இருக்க முடியும்? நாம் “[இயேசுவின்] நற்குணத்தில் தொடரலாம்” மற்றும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வழிகளைப் பற்றி சிந்திக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 87:6, 8

நான் “பரிசுத்த ஸ்தலங்களில் நிற்க” முடியும்.

  • கடைசி நாட்களில் நடக்கும் என்று கர்த்தர் சொன்ன விஷயங்களைப் பற்றி அறிய, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 87:6, ஒன்றுகூடி வாசிக்கவும். அப்போது நீங்களும் உங்கள் குழந்தைகளும் எதிர்கொள்ளும் சில சவால்களைப் பற்றி பேசலாம். 8வது வசனத்தில், கடினமான காலங்களில் நாம் என்ன செய்ய முடியும் என்று கர்த்தர் கூறினார்?

  • உங்கள் பிள்ளைகள் ஆவிக்குரிய ஆபத்தை எதிர்கொள்ள உதவும் பரிசுத்தமான இடங்கள், பரிசுத்தமான எண்ணங்கள் மற்றும் பரிசுத்தமான செயல்களின் பட்டியலை உருவாக்க அவர்களுக்கு உதவுங்கள். ஆலோசனைகளுக்கு, “Standing in Holy Places” and “Stand Ye in Holy Places—Bloom Where You’re Planted” (Gospel Library) காணொலிகள் பார்க்கவும்.

    5:36

    Standing in Holy Places

    4:36

    Stand Ye in Holy Places - Bloom Where You’re Planted

தாய் தன் குழந்தைக்கு ஆலயத்தைக் காட்டுதல்

ஆலயம் ஒரு பரிசுத்தமான இடம்.

கூடுதல் ஆலோசனைகளுக்கு, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

வயலில் கோதுமை

கர்த்தர் தனது ஜனத்தை கோதுமை போல கூட்டிச் சேர்க்கிறார்.

பிள்ளைகளுக்கான நிகழ்ச்சி பக்கம்