“அக்டோபர் 6–12: ‘உங்கள் நன்மைக்காக சகல காரியங்களையும் நான் கட்டளையிடுவேன்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111–114,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111–114,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
அக்டோபர் 6–12: “உங்கள் நன்மைக்காக சகல காரியங்களையும் நான் கட்டளையிடுவேன்”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111–114
உங்களுடைய விசுவாசத்தில் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உணரவைத்த ஆவிக்குரிய அனுபவம் உங்களுக்கு எப்போதாவது கிடைத்திருக்கிறதா, ஆனால் வாழ்க்கையின் துன்பங்கள் உங்கள் விசுவாசத்தை பரீட்சித்தன, நீங்கள் முன்பு உணர்ந்த சமாதானத்தை மீட்டெடுக்க நீங்கள் போராடிக்கொண்டிருப்பதாக காண்கிறீர்களா? கர்த்லாந்தில் உள்ள பரிசுத்தவான்களுக்கும் இதுபோன்ற ஒன்று நடந்தது. கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டையுடன் இணைக்கப்பட்ட ஆவிக்குரிய வெளிப்பாடுகளுக்குப் பின், ஒரு வருடத்திற்குள், சிக்கல்கள் எழுந்தன. ஒரு நிதி நெருக்கடி, பன்னிருவர் குழுமத்தின் அபிப்பிராய பேதங்கள் மற்றும் பிற சோதனைகள், அவர்களுடைய முந்தைய அனுபவங்களைப் பொருட்படுத்தாமல் சிலரை தங்கள் நம்பிக்கையில் தடுமாற வழிவகுத்தன.
சோதனைகளை நம்மால் தவிர்க்க முடியாது, எனவே நம்முடைய விசுவாசத்தையும் சாட்சியத்தையும் அச்சுறுத்துவதைத் தடுப்பது எப்படி? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112ல் காணப்படுகிற, கர்த்லாந்தில் துன்பம் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது, கொடுக்கப்பட்ட கர்த்தரின் ஆலோசனையில் பதிலின் ஒரு பகுதியைக் காணலாம். கர்த்தர் சொன்னார், “எனக்கு முன்பாக உங்கள் இருதயங்களை பரிசுத்தப்படுத்துங்கள்” (வசனம் 28), “கலகம் செய்யாதிருங்கள்” (வசனம் 15), “வேலைக்காக அரைக்கச்சையை கட்டிக் கொள்ளுங்கள்” (வசனம் 7), மேலும் “தாழ்மையாயிரு.” (வசனம்10). இந்த ஆலோசனையை நாம் பின்பற்றும்போது, கர்த்தர் துன்பத்தில் குணப்படுத்துதலுக்கும் சமாதானத்திற்கும் “கரம்பிடித்து [நம்மை] வழிநடத்துவார்” (10, 13 வசனங்களைப் பார்க்கவும்).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111.
கர்த்தர் “அனைத்தையும் [என்] நன்மைக்காகக் கட்டளையிட முடியும்.”
1836வாக்கில், கர்த்தருடைய பணியைச் செய்வதில் பெரும் கடன்களை சபை குவித்தது. ஜோசப் ஸ்மித் மற்றும் பிறர் இந்த கடன்களைப்பற்றி கவலைப்படுவதாலும், அவற்றைச் செலுத்துவதற்கான வழிகளைக் கருத்தில் கொண்டனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111 பாகத் தலைப்பு பார்க்கவும்).
நீங்கள் பாகம் 111 வாசிக்கும்போது, ஜோசப்புக்கு கர்த்தர் சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு எப்படிப் பொருந்தக்கூடும் என்பதையும் நீங்கள் கவலைப்படுவதையும் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, “உங்கள் முட்டாள்தனங்கள் இருந்தபோதிலும்” தேவனின் அன்பை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள் (வசனம் 1)? எதிர்பாராத “பொக்கிஷங்களை” கண்டுபிடிக்க கர்த்தர் உங்களுக்கு எவ்வாறு உதவியுள்ளார்? ( வசனம் 10). “உங்கள் நன்மைக்காக சகல காரியங்களையும் கட்டளையிட” அவர் என்ன செய்திருக்கிறார் ( வசனம் 11)? “நீங்கள் விரைவாகப் பெற்றுக்கொள்ள முடிகிற அளவில்” என்ற சொற்றொடர் பரலோக பிதாவைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?
மத்தேயு 6:19-21, 33; “More Treasures Than One,” Revelations in Context, 229–34 ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:3–15, 22
நான் தாழ்மையுடன் அவருடைய சித்தத்தைத் தேடும்போது கர்த்தர் என்னை வழிநடத்துவார்.
பன்னிரெண்டு அப்போஸ்தலர்களின் குழுமத்தின் தலைவரான தாமஸ் பி. மார்ஷ், ஜோசப் ஸ்மித் தன்னைக் கலந்தாலோசிக்காமல், இங்கிலாந்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தனது குழுவில் இருந்த இருவரை அழைத்ததற்காக வருத்தப்பட்டார். அவர் தீர்க்கதரிசியைச் சந்தித்தார், அவர் ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார், அது தாமஸ் தனது புண்பட்ட உணர்வுகளை ஒதுக்கி வைக்க உதவியது. அந்த வெளிப்பாடு கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112 ஐ படிக்கும்போது இந்த சூழலை மனதில் கொள்ளுங்கள். தாமஸின் புண்பட்ட உணர்வுகளைக் குணப்படுத்தியிருக்கக்கூடிய எதை நீங்கள் காண்கிறீர்கள்? 3–15 மற்றும் 22 வசனங்களில், இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் தேடலாம்: பணிவு என்றால் என்ன? கர்த்தர் உங்களை “கரம்பிடித்து” வழிநடத்துவது என்பதன் அர்த்தம் என்ன? தாழ்மையுடன் இருப்பது கர்த்தரின் வழிகாட்டுதலைப் பெற உதவும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? “Pattern of Humility” in Elder Joseph W. Sitati’s message “Patterns of Discipleship” (Liahona, Nov. 2022, 87–88) இல் நீங்கள் கூடுதல் பதில்களைக் காணலாம்.
உங்களுக்குத் தெரிந்த ஒரு மனத்தாழ்மையுடையவரை நினைத்துப் பாருங்கள். பணிவு காட்ட இந்த நபர் என்ன செய்கிறார்? தாழ்மையாய் இருப்பது பற்றி இரட்சகரிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அவருடைய வாழ்க்கையில் அவர் மனத்தாழ்மை காட்டிய நேரங்களின் படங்களை ஒருவேளை நீங்கள் காணலாம்.
நீங்கள் உங்களைத் தாழ்த்திக் கொண்டபோது கர்த்தரால் வழிநடத்தப்பட்டதாக நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்?
See also Ulisses Soares, “Be Meek and Lowly of Heart,” Liahona, Nov. 2013, 9–11; “The Faith and Fall of Thomas Marsh,” in Revelations in Context, 54–60; Topics and Questions, “Humility,” Gospel Library; “Be Thou Humble,” Hymns, no. 130.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:12–26; 28, 33–34
உண்மையிலேயே மனமாற்றம் அடைந்தவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்கிறார்கள்.
1837-ல் சில அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிக்கு எதிராகத் திரும்பினார்கள் என்பது ஒரு நல்ல நினைவூட்டலாகும், நமது சபையின் அழைப்பைப் பொருட்படுத்தாமல் அல்லது சுவிசேஷத்தைப் பற்றி நாம் எவ்வளவு அறிந்திருந்தாலும், இயேசு கிறிஸ்துவில் மனமாறுவதை நாம் தனித்தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:12–26, 28, 33–34 வாசித்து, விசுவாசத்தின் சோதனையை வெல்ல அல்லது கர்த்தரிடம் முழுமையாக மனமாறுவதற்கு உதவும் சத்தியங்களைத் தேடுங்கள். பிறர் கிறிஸ்துவுக்குத் தங்கள் மனமாற்றத்தைப் பலப்படுத்த உதவுவதற்காக நீங்கள் கண்டறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள உணர்த்தப்படலாம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113.
ஜோசப் ஸ்மித் “கிறிஸ்துவின் கரங்களில் ஒரு வேலைக்காரனாக இருந்தார்”.
ஈசாவின் சந்ததியினரில் ஒருவரை “கிளை” என்றும் “வேர்” என்றும் ஏசாயா, குறிப்பிட்டான்( ஏசாயா 11: 1, 10). பாகம் 113ல், கிறிஸ்துவின் ஊழியரான இந்த சந்ததியான் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஜனத்தைக் கூட்டிச் சேர்ப்பதில் கருவியாக இருப்பான் என்று கர்த்தர் விளக்குகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113: 4, 6 பார்க்கவும்). இந்த தீர்க்கதரிசனம் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தை நன்றாக விவரிக்கிறது. பாகம் 113ல் உள்ள இதுவும் பிற சத்தியங்களும் கர்த்லாந்தில் அவர்கள் அனுபவித்த குழப்பத்தின்போது பரிசுத்தவான்களுக்கு எவ்வாறு ஊக்கமளித்திருக்கலாம்? வலிமையாக இருந்து இன்று கர்த்தருடைய பணியில் தொடர்ந்து பங்கெடுக்க இந்த வெளிப்பாட்டில் உங்களுக்கு உணர்த்துதல் தருவது என்ன?
See also Guide to the Scriptures, “Jesse,” Gospel Library; 2 Nephi 21:10–12; Joseph Smith—History 1:40.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111:2, 10–11
தேவனுடைய காரியங்கள் எனக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கலாம்.
-
பொக்கிஷம் என்ற வார்த்தையைக் கேட்கும்போது மனதில் தோன்றுவதை நீங்களும் உங்கள் குழந்தைகளும் வரையலாம். நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111:2, 10–11 வாசிக்கும்போது, மேலும் பூமிக்குரிய பொக்கிஷங்களுடன் கர்த்தர் பொக்கிஷமாகப் பார்க்கின்றவற்றை வேறுபடுத்தி நீங்கள் ஒன்றாக வாசிக்கலாம். (இந்த வார நிகழ்ச்சி பக்கம் பார்க்கவும்.) தேவனுடைய காரியங்களை நாம் எவ்வாறு அதிகம் பொக்கிஷப்படுத்தலாம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:10
கர்த்தர் என்னைக் கரம்பிடித்து நடத்தி, என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:10 நீங்கள் வாசித்தபிறகு, “Be Thou Humble” (Hymns, no. 130) நீங்களும் உங்கள் குழந்தைகளும் சேர்ந்து பாடலாம். நீங்கள் ஒருவரையொருவர் “கரம்பிடித்து” வழிநடத்துவதை உள்ளடக்கிய ஒரு விளையாட்டையும் விளையாடலாம் (தடைதாண்டும் தளம் போன்றவை). அவர் மாம்சத்தில் நம்முடன் இல்லாவிட்டாலும், கர்த்தர் எவ்வாறு நம்மை “கரம்பிடித்து” வழிநடத்துகிறார்? கர்த்தர் நம்மை வழிநடத்த வேண்டியது நமக்கு ஏன் தேவையாயிருக்கிறது? கர்த்தர் நம்மை வழிநடத்துவதை எப்போது உணர்ந்தோம்?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:10 வார்த்தைகளை நீங்கள் அல்லது உங்கள் குழந்தைகள் எழுதலாம், நாம் தாழ்மையுடன் அவரிடம் திரும்பும்போது கர்த்தர் நமக்கு அளிக்கும் ஆசீர்வாதங்களை அடிக்கோடிட்டுக் காட்டலாம். உங்கள் பிள்ளைகள் தாழ்மையுடன் கர்த்தரின் உதவியைக் கேட்டு, அவர்களின் ஜெபங்களுக்குப் பதில்களைப் பெற்ற அல்லது ஏதாவது நல்லதைச் செய்ய வழிவகுத்த நேரங்களைப் பகிர்ந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கவும் (மரோனி 7:13, 16 பார்க்கவும்).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:11
பரலோக பிதா நான் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
-
“அத்தியாயம் 41: கர்த்லாந்தில் பிரச்சினை” (in Doctrine and Covenants Stories, 158–60) நீங்களும் உங்கள் குழந்தைகளும் மாறி மாறி படிக்கலாம். கதையில் கர்த்லாந்தில் பிரச்சனைகளை மோசமாக்கியது யார்? அவற்றை சிறப்பாக்க யார் முயற்சி செய்தார்கள்? நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:11ஐ வாசித்து, நாம் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்று இரட்சகர் ஏன் விரும்புகிறார் என்பதைப் பற்றி பேசுங்கள். தம்மிடம் இரக்கமற்றவர்களிடம் அவர் எப்போது அன்பு காட்டினார்? (உதாரணமாக, லூக்கா 23:34 ஐப் பார்க்கவும்). “I’ll Walk with You” (Children’s Songbook, 140–41) மற்றவர்களை நேசிப்பது போன்ற ஒரு பாடலையும் நீங்கள் பாடலாம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:11–14, 24–26
உண்மையிலேயே மனமாற்றம் அடைந்தவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்கிறார்கள்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:24–26 வாசித்த பிறகு, நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒருவரின் பெயரை அறிவதற்கும் அவர்களை அறிவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி பேசலாம். கர்த்தரை அறிவதன் அர்த்தத்தைப்பற்றி வசனங்கள் 11–14 லிருந்து என்ன போதனைகள் நமக்கு உதவுகின்றன?