என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: லிபர்டி சிறைச்சாலை


“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: லிபர்ட்டி சிறைச்சாலை,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

“லிபர்ட்டி சிறைச்சாலை,“என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

மறுஸ்தாபித சின்னத்தின் குரல்கள்

மறுஸ்தாபிதத்தின் குரல்கள்

லிபர்ட்டி சிறைச்சாலை

மிசௌரியின் லிபர்ட்டியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜோசப் ஸ்மித்துக்கு ஆளுநரின் உத்தரவின் பேரில் மாநிலத்திலிருந்து விரட்டப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் ஆபத்தான நிலைமை குறித்து அவருக்கு கடிதங்கள் கிடைத்தன. அவரது மனைவி எம்மாவிடமிருந்து ஒரு சோகமான கடிதம் வந்தது. சபை வரலாற்றில் இந்த கடினமான நேரத்தில் அவருடைய வார்த்தைகளும், ஜோசப்பின் கடிதங்களும் அவர்களின் துன்பங்களையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.

லிபர்ட்டி சிறைச்சாலை

ஜோசப் ஸ்மித் மற்றும் பலர் 1838–39 குளிர்காலத்தில் இந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.

மார்ச் 7, 1839ல் ஜோசப் ஸ்மித்துக்கு, எம்மா ஸ்மித்திடமிருந்து கடிதம்

அன்புள்ள கணவரே

ஒரு நண்பர் மூலம் அனுப்ப ஒரு வாய்ப்பு கிடைத்ததால், நான் எழுத முயற்சிக்கிறேன், ஆனால் நீங்கள் இருக்கும் சூழ்நிலையால் எனது உணர்வுகளை முழுவதுமாக எழுத முயற்சிக்க மாட்டேன். சுவர்கள், கம்பிகள் மற்றும்தாழ்ப்பாள்கள், உருண்டோடும் ஆறுகள், ஓடும் நீரோடைகள், உயர்வான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், விரிவடைந்திருக்கும் சமதளங்கள் நம்மை பிரிக்கின்றன, முதலில் உங்களை சிறையில் தள்ளிவிட்டு இன்னும் உங்களை அங்கே வைத்திருக்கும் கொடூரமான அநீதி, இன்னும் பல விஷயங்கள், என் உணர்வுகளை விவரிப்பதற்கு அப்பால் வைக்கிறது.

இது உணர்வுடன் அப்பாவித்தனத்துக்காகவும், தெய்வீக இரக்கத்தின் நேரடி இடைவெளியாகவும் இருந்திருக்கவில்லையா, நான் கடந்து வந்த துன்பங்களின் காட்சிகளை ஒருபோதும் சகித்திருக்க முடியாது என்று நான் நம்புகிறேன் … ஆனால் நான் இன்னும் வாழ்கிறேன், உங்கள் பொருட்டு நான் இன்னும் துன்பப்பட தயாராக இருக்கிறேன் அது பரலோகத்தின் விருப்பம் என்றால்.

நாங்கள் அனைவரும் தற்போது நன்றாக இருக்கிறோம், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பிரெட்ரிக் தவிர.

இப்போது என் கைகளில் இருக்கும் குட்டி அலெக்சாண்டர் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட மிகச்சிறந்த சிறியவர்களில் ஒருவன். ஒரு நாற்காலியின் உதவியுடன் அவன் அறை முழுவதும் ஓடுமளவுக்கு அவன் மிகவும் வலிமையானவன் .…

“நமது வீடு மற்றும் இல்லத்தை விட்டு வெளியேறியபோது என் மனதின் பிரதிபலிப்புகள், என் இருதயத்தின் உணர்வுகள் தேவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, நமது சிறு குழந்தைகளைத் தவிர்த்து நாம் வைத்திருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு மிசௌரி மாநிலத்திலிருந்து என் பயணத்தில் , அந்த தனிமையான சிறையில் நீங்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும்போது வெளியேறினேன். ஆனால் நினைவு கூர்வது மனித இயல்பு தாங்க வேண்டியதை விட அதிகம்.…

… இன்னும் நல்ல நாட்கள் நமக்கு வர உள்ளன என்று நம்புகிறேன். … [நான்] எப்போதும் உங்கள் பாசமுள்ள.

எம்மா ஸ்மித்

எம்மா ஸ்மித்துக்கு ஜோசப் ஸ்மித்தின் கடிதம் , ஏப்ரல் 4, 1839

“அன்புள்ள—பாசமுள்ள— மனைவி.

“வியாழக்கிழமை இரவு நான் சூரியன் மறையும்போது அமர்ந்தேன், இந்த தனிமையான சிறைச்சாலையின் தடுப்புகளை நாங்கள் உற்று நோக்கும்போது, உனக்கு எழுதுவதற்காக, என் நிலைமையை நான் உனக்குத் தெரியப்படுத்துவதற்காக. நான் இப்போது ஐந்து மாதங்கள் மற்றும் ஆறு நாட்களாக என்று நம்பிகிறேன், நான் இரவும் பகலும் ஒரு காவலரின் கொடூரத்தின் கீழ் இருந்தேன், மற்றும் சுவர்கள், தடுப்புகள் மற்றும் இரும்புக் கதவுகளுக்குள் ஒரு தனிமையான, இருண்ட, அழுக்கு சிறை. தேவனுக்கு மட்டுமே தெரிந்த உணர்ச்சிகளுடன் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த சூழ்நிலைகளில் ஒருபோதும் மனிதர்கள் அனுபவிக்காத, நாங்கள் அனுபவிப்பதை, மனதின் சிந்தனைகள் பேனா, அல்லது நாக்கு, அல்லது தேவதூதர்கள் விவரிக்க அல்லது வண்ணம் தீட்ட, மறுக்கின்றன. … நம்முடைய விடுதலைக்காக நாங்கள் யேகோவாவின் கரத்தில் சாய்ந்திருக்கிறோம், வேறு யாரையும் அல்ல, அவர் அதைச் செய்யாவிட்டால், அது செய்யப்படாது என்று உனக்கு உறுதியளிக்கப்படலாம், ஏனென்றால் இந்த நிலையில் நம் இரத்தம் வேண்டி மிகுந்த தாகத்துடன் இருக்கிறார்கள்; நாங்கள் எதனாலும் குற்றவாளிகள் என்பதால் அல்ல. … என் அன்புள்ள எம்மா நான் உன்னையும் குழந்தைகளையும் தொடர்ந்து நினைக்கிறேன். … நான் குட்டி பிரடெரிக், ஜோசப், ஜூலியா, அலெக்சாண்டர், ஜோனா மற்றும் பழைய பெரிய [குடும்ப நாயை] பார்க்க விரும்புகிறேன். … உன்னைப் பார்க்கவும், மிகுந்த மகிழ்ச்சியாக நான் இங்கிருந்து வெறுங்காலுடன், வெறுந்தலையுடன், அரை நிர்வாணமாக மகிழ்ச்சியுடன் நடப்பேன். ஒருபோதும் கஷ்டமாக எண்ண மாட்டேன்… என் ஒடுக்குமுறையை எல்லாம் நான் துணிச்சலுடன் தாங்குகிறேன், என்னுடன் இருப்பவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்; எங்களில் ஒருவர் கூட இதுவரை படபடக்கவில்லை. நீ [நமது குழந்தைகள்] என்னை மறக்க விடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அப்பா அவர்களை ஒரு முழுமையான அன்போடு நேசிக்கிறார் என்று சொல், அவர்களிடம் வர, கும்பலிலிருந்து தப்பிச் செல்ல அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். … அவர்கள் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும், அம்மாவை கவனியுங்கள் என்று அப்பா கூறுகிறார் என அவர்களிடம் சொல், .…

“உனது,

ஜோசப் ஸ்மித் ஜூனியர்

குறிப்புகள்

  1. Letter from Emma Smith, 7 March 1839,” Letterbook 2, 37, josephsmithpapers.org; spelling, punctuation, and grammar standardized.

  2. Letter to Emma Smith, 4 April 1839,” 1–3, josephsmithpapers.org; spelling, punctuation, and grammar standardized.

  3. ஜோசப் மற்றும் அவரது தோழர்கள் அக்டோபர் 31, 1838 ல் கைது செய்யப்பட்டு, இரவும் பகலும் கடும் காவலில் வைக்கப்பட்டனர். மிசௌரியின் ரிச்மாண்டில் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், அவர்கள் டிசம்பர் 1 அன்று லிபர்ட்டி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.