“செப்டம்பர் 29– அக்டோபர் 5: ‘இது உமது வீடு, உமது பரிசுத்த ஸ்தலம்’ : கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109–110” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109–110,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
செப்டம்பர் 29– அக்டோபர் 5: “இது உமது வீடு, உமது பரிசுத்த ஸ்தலம்“
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109–110
கர்த்லாந்து ஆலயத்தின் கதவுகள் மார்ச் 27, 1836 காலை 8:00 மணி வரை திறக்கப்படக்கூடாது. ஆனால் பிரதிஷ்டை ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த பரிசுத்தவான்கள் 7:00 மணியளவில் வரிசையாக நிற்க ஆரம்பித்தனர். அனைவருக்கும் இடமளிக்க, நிரப்பும் இடம் மற்றும் இரண்டாவது அமர்வு தேவைப்பட்டது. அது அங்கிருக்க ஆர்வமாக இருந்த உயிரோடிருந்தவர்கள் மட்டுமல்ல. தூதர்களை, ஆலயத்துக்குள்ளும், கூரையிலும் கூட, பிரதிஷ்டையின்போதும் அதற்குப் பின்னரும் பல சாட்சிகள் பார்த்தனர். “பரலோக சேனைகள்” பிற்காலப் பரிசுத்தவான்களுடன் “பாடுவதற்கும் கூச்சலிடுவதற்கும்” வந்தன என்று உண்மையில் தோன்றியது (“The Spirit of God,” Hymns, no.2).
திரையின் இருபுறமும் ஏன் பெரிய உற்சாகம்? பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பூமியில் மீண்டும் கர்த்தருடைய வீடு இருந்தது. கர்த்தர் பரிசுத்தவான்கள் அனைவரையும் தரிப்பிக்க, “உன்னதத்திலிருந்து வல்லமையை” வழங்க விரும்புகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:32). இதை அவர் அறிவித்தார், “ஆசீர்வாதங்களின் ஆரம்பம்” [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:10). “பூமியின் திரை வெடிக்கத் தொடங்கியபோது” (“ The Spirit of God ”), மில்லியன் கணக்கான உயிரோடிருக்கிற மற்றும் மரித்தவர்களுக்கு விரைவான ஆலய பணிகள் மற்றும் நியமங்களுள்ள, நாம் இப்போது வாழும் சகாப்தம் கர்த்லாந்தில் தொடங்கியது.
Saints, 1:232–41; “A House for Our God,” Revelations in Context, 169–72 ஐயும் பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109.
ஆலய உடன்படிக்கைகள் மூலம் கர்த்தர் எனக்கு மிகுந்த ஆசீர்வாதங்களை வழங்குகிறார்.
கர்த்லாந்து ஆலயம் இன்று நமக்குத் தெரிந்த ஆலயங்களிலிருந்து வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, பீடங்களும் ஞானஸ்நான தொட்டியும் இல்லை. ஆனால் பாகம் 109ல் விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள், கர்த்லாந்து ஆலயத்துக்கான பிரதிஷ்டை ஆராதனை, இன்று நாம் கர்த்தருடைய வீட்டில் கிடைக்கப்பெறும் ஆசீர்வாதங்கள். இந்த ஆசீர்வாதங்களில் சிலவற்றைக் கண்டுபிடிக்க பின்வரும் வசனங்களை மதிப்பாய்வு செய்யவும், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் உறவைப் பலப்படுத்த அவை எவ்வாறு உதவும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
வசனங்கள் 5, 12–13 (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:6–8 ஐயும் பார்க்கவும்): கர்த்தரின் வீட்டில் அவர் நமக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும், அவருடைய வல்லமையை நாம் உணர முடியும்.
பிற ஆசீர்வாதங்கள்:
நீங்கள் கர்த்தருடைய வீட்டிற்குச் சென்றிருந்தால், உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
“The Spirit of God” (Hymns, no.2) எனும் பாடல் கர்த்லாந்து ஆலயத்தில் பிரதிஷ்டைக்காக எழுதப்பட்டது, இது ஒவ்வொரு ஆலய பிரதிஷ்டையிலும் பாடப்படுகிறது. பாடுவது அல்லது கேட்பது உங்கள் படிப்பு மற்றும் ஆராதனையின் ஒரு பகுதியாக கருதுங்கள். இந்த ஆலயத்தின் எந்த ஆசீர்வாதங்களைப் பற்றி இந்தப் பாடலில் விவரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109.
ஜெபம் என்பது பரலோக பிதாவுடன் தொடர்புகொள்வதாகும்.
பாகம் 109 தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்பாடு மூலம் வழங்கப்பட்ட ஒரு பிரதிஷ்டை ஜெபம் (பாகம் தலைப்பை பார்க்கவும்). இந்த பாகத்திலிருந்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக் கொள்ளுகிறீர்கள்? உதாரணமாக, தீர்க்கதரிசி எதற்காக நன்றி கூறினார், அவர் என்ன ஆசீர்வாதங்களைக் கேட்டார் என்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த ஜெபத்தில் அவர் வேறு என்ன சொன்னார்? நீங்கள் படிக்கும்போது, பரலோக பிதாவுடனான உங்கள் சொந்த தொடர்பை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். இந்த ஜெபத்திலிருந்து அவரையும் அவருடைய குமாரனையும் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
temples.ChurchofJesusChrist.org இல் உங்களுக்கு அருகிலுள்ள ஆலயம் உட்பட மற்ற ஆலயங்களின் பிரதிஷ்டை ஜெபத்தைப் படிக்க விரும்பினால், ஆலயம் பக்கத்தைப் பார்வையிடவும்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:1–10
தன் வீட்டில் கர்த்தர் தம்மை எனக்கு வெளிப்படுத்த முடியும்.
நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:1–10 இல் உள்ள இரட்சகரின் விவரிப்புகளை நீங்கள் வாசிக்கும்போது, பாகம் தலைப்பு உட்பட, இந்த வசனங்கள் அவரைப் பற்றி என்ன ஆலோசனையளிக்கின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
இயேசு கிறிஸ்து தம்முடைய வீட்டில் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் அல்லது தம்மை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்? உங்கள் தியாகங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதை அறிய அவர் உங்களுக்கு எப்படி உதவுகிறார்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:10–16
இரட்சகர் தனது பணியை ஆசாரியத்துவ திறவுகோல்கள் மூலம் வழிநடத்துகிறார்.
மோசே, எலியாஸ் மற்றும் எலியா ஆகியோர் ஆசாரியத்துவ திறவுகோல்களை மறுஸ்தாபிதம் செய்ய ஆலயத்தில் தோன்றுவதற்கு சற்று முன்பு, இயேசு கிறிஸ்து என்னுடைய ஜனங்களின் தலைகள் மீது பொழியப்படும் ஆசீர்வாதங்களின் ஆரம்பமாய் இது இருக்கும். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:10) 11–16 வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, இந்த திறவுகோல்களால் இயக்கப்பட்ட பணியின் மூலம் இரட்சகர் உங்கள் மீது பொழியும் ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்தியுங்கள். உதாரணமாக:
-
வசனம் 11: மோசே இஸ்ரவேலின் கூடுகையின் திறவுகோல்களை ஒப்படைத்தான் (அல்லது ஊழியப்பணி). அவரது சபையின் ஊழிய முயற்சிகள் மூலம் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எவ்வாறு ஆசீர்வதித்தார்?
-
வசனம் 12: எலியாஸ் மற்றும் ஆபிரகாமிய உடன்படிக்கை உட்பட ஆபிரகாமின் சுவிசேஷத்தின் திறவுகோல்கள். உங்கள் உடன்படிக்கைகளின் காரணமாக கர்த்தர் உங்களையும் “[உங்களுக்கு] பின் வரும் தலைமுறைகளையும்” எவ்வாறு ஆசீர்வதிக்க முடியும்? (See Russell M. Nelson, “The Everlasting Covenant,” Liahona, Oct. 2022, 4–11; Guide to the Scriptures, “Elias,” Gospel Library.)
-
வசனங்கள் 13–16: எலியா மற்றும் முத்திரிக்கும் வல்லமை, ஆலய மற்றும் குடும்ப சரித்திர பணிகள் மூலம் வெளிப்பட்டது. ஆலய நியமங்கள் மூலம் நீங்கள் உங்கள் முன்னோர்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பரலோக பிதா விரும்புகிறார் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? (See Gerrit W. Gong, “Happy and Forever,” Liahona, Nov. 2022, 83–86.)
தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுத்தும் பணியில் இந்த திறவுகோல்களுக்கும் நமது பொறுப்புகளுக்கும் இடையே என்ன தொடர்புகளை நீங்கள் காண்கிறீர்கள் (சுவிசேஷத்தின்படி வாழ்வது, தேவைப்படும் மக்களைக் கவனித்துக்கொள்வது, சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைப்பது மற்றும் குடும்பங்களை நித்தியமாக ஒன்றிணைப்பது)?
தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதல் பணியில் உங்களுக்கு என்ன அனுபவங்கள் உள்ளன? இரட்சகர், அவருடைய சபை மற்றும் அவருடைய பணியைப் பற்றி இந்த அனுபவங்கள் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன?
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:12–13; 110:1–7
ஆலயம் கர்த்தரின் வீடு.
-
நீங்களும் உங்கள் குழந்தைகளும் உங்கள் வீட்டில் நீங்கள் விரும்பும் ஒன்றைப் பற்றி பேசலாம். நீங்கள் கர்த்லாந்து ஆலயத்தின் படத்தைப் பார்த்து, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:12–13; 110:1–7 அந்த ஆலயம் எவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டு கர்த்தரின் வீடாக மாறியது என்பதைப் பற்றி பேசலாம் (மேலும் “அத்தியாயம் 39: கர்த்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது,” in Doctrine and Covenants Stories, 154, or the corresponding video in Gospel Library). கர்த்தருடைய வீட்டைப் பற்றி நீங்கள் விரும்பும் ஒன்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
ஒரு நண்பர் உங்கள் வீட்டைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் என்று நீங்களும் உங்கள் குழந்தைகளும் கற்பனை செய்யலாம். எந்த வீடு நம்முடையது என்பதை அறிய நம் நண்பருக்கு எப்படி உதவுவது? ஆலயம் கர்த்தரின் வீடு என்பதை எப்படி அறிவது? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:12–12 பார்க்கவும்).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110
இரட்சகர் ஆசாரியத்துவ திறவுகோல்கள் மூலம் தம் மக்களை ஆசீர்வதிக்கிறார்.
-
இந்த வார நிகழ்ச்சி பக்கம் அல்லது “அத்தியாயம் 40: கர்த்லாந்து ஆலயத்தில் தரிசனங்கள்” ஆலயத்துக்குச் சென்ற பரலோக வாசிகளைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்ல, (in Doctrine and Covenants Stories, 155–57, or the corresponding video in Gospel Library). இந்த குறிப்பின் முடிவில் உள்ள படத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
-
கர்த்லாந்து ஆலயத்தில் நடந்ததின் முக்கியத்துவத்தை அறிய, நீங்களும் உங்கள் குழந்தைகளும் திறவுகோல்கள் என்ன செய்கின்றன என்பதைப் பற்றி பேசலாம். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் மாறி மாறி சாவியைப் பிடித்துக்கொண்டு பூட்டிய கதவைத் திறப்பது போல் நடிக்கலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:11–16இல் உள்ள வார்த்தை திறவுகோல்களைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள், மேலும் இந்த திறவுகோல்கள் திறக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி பேசுங்கள். ஆசாரியத்துவ திறவுகோல்கள், அவருடைய சபையை வழிநடத்த தேவனின் அனுமதி என நீங்கள் விளக்கலாம். கர்த்தர் நமக்கு ஆசாரியத்துவ திறவுகோல் கொடுத்ததற்கு உங்கள் நன்றியை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:15
இரட்சகர் நான் என் இருதயத்தை என் முன்னோர்களிடம் திருப்ப வேண்டும் என்று விரும்புகிறார்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:15ஐ ஒன்றாகப் படித்த பிறகு, உங்கள் இருதயத்தை உங்கள் மூதாதையரிடம் திருப்ப உதவிய அனுபவத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். “Family History—I Am Doing It” (Children’s Songbook, 94)போன்ற ஒரு பாடலை நீங்கள் ஒன்றாக பாடலாம்.
-
மூதாதையர்களிடம் உங்கள் பிள்ளைகளின் “இருதயங்களைத் திருப்ப” எது உதவக்கூடும்? FamilySearch.org/discoveryல் சில வேடிக்கையான ஆலோசனைகளைக் காணலாம். ஆலய நியமங்கள் தேவைப்படும் முன்னோர்களை அடையாளம் காண நீங்கள் ஒன்றாக வேலை செய்யலாம். நாம் அவரது பணியைச் செய்ய வேண்டும் என்று இயேசு ஏன் விரும்புகிறார்?