பொது மாநாடு
மகிழ்ச்சி, என்றென்றும்
அக்டோபர் 2022 பொது மாநாடு


13:21

மகிழ்ச்சி, என்றென்றும்

உண்மை, நாம் நேசிக்கிறவர்களுடன் நீடித்த மகிழ்ச்சியும் நித்தியமும் தேவனின் மகிழ்ச்சியின் திட்டத்தின் சாராம்சமாகும்.

அன்பான நண்பர்களே, சகோதர சகோதரிகளே, நீங்கள் எப்போதும் உள்ள மகிழ்ச்சியில் நம்புவது அல்லது நம்ப விரும்புவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பின்னர் வாழ்க்கை நடக்கிறது. நாம் “வளர்கிறோம்.” உறவுகள் சிக்கலாகின்றன. இந்த உலகம் பாசாங்குடனும் தோரணையுடனும் சத்தம், நெரிசல், தள்ளுமுள்ளாக, உள்ளது. ஆயினும்கூட, நமது “ஆழ்ந்த இருதயத்தின் மையத்தில்,”1 எங்காவது, எப்படியோ, மகிழ்ச்சியாகவும், எப்போதும் உண்மையானதாகவும் சாத்தியமாகவும் இருக்கிறது என நாம் நம்புகிறோம், அல்லது நம்ப விரும்புகிறோம்.

“மகிழ்ச்சி, என்றென்றும்” என்பது விசித்திரக் கதைகளின் கற்பனையான காரியங்கள் அல்ல. உண்மை, நாம் நேசிக்கிறவர்களுடன் நீடித்த மகிழ்ச்சியும் நித்தியமும் தேவனின் மகிழ்ச்சியின் திட்டத்தின் சாராம்சமாகும். அவருடைய அன்புடன் ஆயத்தப்படுத்தப்பட்ட வழி நமது நித்திய பயணத்தை மகிழ்ச்சியாக என்றென்றும் இருக்கச் செய்யும்.

நாம் கொண்டாடுவதற்கும், அதற்கு நன்றி செலுத்துவதற்கும் நமக்கு நிறைய இருக்கிறது. ஆனாலும், நம்மில் யாரும், எந்த குடும்பமும் பூரணமானவர்கள் இல்லை. நமது உறவுகளில் அன்பும், சமூகமும் ஆளுமையும் அடங்கும், ஆனால் அடிக்கடி உராய்வு, காயம், சில நேரங்களில் ஆழ்ந்த வலிகூட இருக்கும்.

“ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”2 இயேசு கிறிஸ்துவில் உயிருடன் இருப்பது, நமது சரீர உயிர்த்தெழுதல் எனும் அவரது வரமான அழியாத தன்மையை உள்ளடக்கியது. நாம் விசுவாசத்துடனும் கீழ்ப்படிதலுடனும் வாழும்போது, கிறிஸ்துவில் உயிரோடிருப்பதில், தேவனுடனும் நாம் நேசிப்பவர்களுடனும் மகிழ்ச்சியுடன் நிறைந்த நித்திய ஜீவனையும் சேர்த்துக்கொள்ள முடியும்.

ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில், பல இடங்களில் நம்மை நெருங்கி வரும் பரிசுத்த ஆலய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் உட்பட, கர்த்தருடைய தீர்க்கதரிசி நம்மை நம் இரட்சகரிடம் இழுக்கிறார். புதிய ஆவிக்குரிய புரிதல், அன்பு, மனந்திரும்புதல் மற்றும் ஒருவருக்கொருவர் மற்றும் நமது குடும்பங்களுடன் மன்னித்தல் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆழமான வாய்ப்பும் வரமும் இக்காலத்துக்கும் நித்தியத்துக்கும் உள்ளது.

பரம்பரை மோதல்களைக் கூட இயேசு கிறிஸ்து குணப்படுத்துவதன் மூலம் குடும்பங்களை ஒன்றிணைப்பதைப்பற்றி நண்பர்கள் சொன்ன இரண்டு பரிசுத்தமான, அசாதாரண ஆவிக்குரிய நேரடி அனுபவங்களை அனுமதிபெற்று, பகிர்ந்து கொள்கிறேன்.3 “அநாதியும் நித்தியமுமான,”4 “மரணக் கயிறுகளை விட பெலமுள்ள,”5 இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி நமது கடந்த காலத்திற்கு சமாதானத்தையும், நமது எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கொண்டு வர உதவும்.

அவர்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சேர்ந்தபோது, என் நண்பரும் அவரது கணவரும் “மரணம் உங்களைப் பிரிக்கும்வரை மட்டுமே அல்ல” என குடும்ப உறவுகளை மகிழ்ச்சியுடன் கற்றனர். கர்த்தருடைய வீட்டில், குடும்பங்கள் நித்தியமாக ஒன்றிணைக்கப்படலாம் (முத்திரிக்கப்பட்டு).

ஆனால் என் தோழி தன் தந்தையுடன் முத்திரிக்கப்பட விரும்பவில்லை. “அவர் என் அம்மாவுக்கு நல்ல கணவர் இல்லை. அவர் தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக இல்லை,” என்று அவள் கூறினாள். “என் அப்பா காத்திருக்க வேண்டும். அவருடைய ஆலயப் பணியைச் செய்து, நித்தியத்தில் அவருடன் முத்திரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை.”

ஒரு வருடம், அவள் உபவாசம் இருந்தாள், ஜெபித்தாள், தன் தந்தையைப்பற்றி கர்த்தரிடம் நிறைய பேசினாள். இறுதியாக, அவள் தயாரானாள். அவள் தந்தையின் ஆலயப்பணி நிறைவேற்றப்பட்டது. பின்னர், அவள் கூறினாள், “என் தூக்கத்தில் என் அப்பா முற்றிலும் வெள்ளை உடையில் எனக்கு ஒரு கனவில் தோன்றினார். அவர் மாறிவிட்டார். அவர் சொன்னார், ‘என்னைப் பார். நான் சுத்தமாக இருக்கிறேன். ஆலயத்தில் எனக்காகப் பணி செய்ததற்கு நன்றி.’’ அவள் தந்தை மேலும் கூறினார், “எழுந்து ஆலயத்துக்குத் திரும்பப்போ; உன் சகோதரன் ஞானஸ்நானம் பெறக் காத்திருக்கிறான்.”

என் சிநேகிதி கூறுகிறாள், “எனது முன்னோர்களும், கடந்து சென்றவர்களும் தங்கள் பணிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

“என்னைப் பொறுத்தவரை, ஆலயம் குணப்படுவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை ஒப்புக்கொள்வதற்கும் ஒரு இடம்” என்று அவள் கூறுகிறாள்.

இரண்டாவது அனுபவம். மற்றொரு நண்பர் அவருடைய குடும்ப வரலாற்றை கவனமாக ஆராய்ந்தார். அவர் தனது கொள்ளுத்தாத்தாவை அடையாளம் காண விரும்பினார்.

ஒரு நாள் அதிகாலையில், எனது நண்பர் தனது அறையில் ஒரு மனிதனின் ஆவிக்குரிய பிரசன்னத்தை உணர்ந்ததாகக் கூறினார். அவர் தனது குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அறியப்பட விரும்பினார். அந்த மனிதன் தான் செய்த தவறுக்காக மனம் நொந்து இப்போது மனமாறியிருக்கிறார். என் நண்பன் அவனுடைய கொள்ளுத்தாத்தா என்று நினைத்த நபருடன் டி.என். ஏ தொடர்பு இல்லை என்பதை என் நண்பனுக்கு உணர்த்த அந்த மனிதர் உதவினார். “வேறு வார்த்தைகளெனில் , நான் என் கொள்ளுத் தாத்தாவைக் கண்டுபிடித்தேன், எங்கள் குடும்பப் பதிவுகள், எங்கள் கொள்ளுத் தாத்தா என்று சொன்ன நபர் அவர் அல்ல என்பதை அறிந்து கொண்டேன்” என்று என் நண்பர் கூறினார்.

அவரது குடும்ப உறவுகள் தெளிவுபடுத்தியது, என் நண்பர் கூறினார், “நான் இலகுவாக உணர்கிறேன், நிம்மதியாக இருக்கிறேன். எனது குடும்பம் யார் என்பதை அறிவது எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறது. என் நண்பர் கூறுகிறார், “ஒரு வளைந்த கிளை என்பது ஒரு மோசமான மரம் என்று அர்த்தமல்ல. நாம் எப்படி இந்த உலகத்திற்கு வருகிறோம் என்பதை விட இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது நாம் யார் என்பது முக்கியம்.

பரிசுத்த புத்தகங்கள் மற்றும் தனிப்பட்ட குணப்படுத்துதல் மற்றும் சமாதானத்தின் பரிசுத்த அனுபவங்கள், ஆவி உலகில் உயிருடன் இருப்பவர்கள் உட்பட, ஐந்து கோட்பாட்டுக் கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

முதலாவதாக: தேவனின் மீட்பு மற்றும் மகிழ்ச்சியின் திட்டத்தில் மையமான, இயேசு கிறிஸ்து, தம் பாவநிவர்த்தி மூலம், “இனி ஒருபோதும் பிரியாமல், முழு மகிழ்ச்சியைப் பெறுவோம்” என்று நமது ஆவியையும் சரீரத்தையும் ஒன்றிணைப்பதாக உறுதியளிக்கிறார்.6

இரண்டாவது: பாவநிவர்த்தி, கிறிஸ்துவில் ஒரே நேரத்தில், நாம் விசுவாசத்தை பிரயோகித்து, மனந்திரும்புதலுக்கான கனிகளைக் கொண்டுவரும்போது வருகிறது.7 நித்தியத்தில் இருப்பது போல, அநித்தியத்திலும். ஆலய நியமங்கள் நம்மையோ அல்லது ஆவி உலகில் உள்ளவர்களையோ தாமாகவே மாற்றுவதில்லை. ஆனால் இந்த தெய்வீக நியமங்கள் கர்த்தருடன் உடன்படிக்கைகளை பரிசுத்தமாக்க உதவுகின்றன, இது அவருடனும் ஒருவருக்கொருவருடனும் இணக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

நம்மீது இயேசு கிறிஸ்துவின் கிருபையையும் மன்னிப்பையும் உணரும்போது நமது மகிழ்ச்சி நிறைவடைகிறது. மேலும், அவருடைய கிருபையையும் மன்னிப்பையும் ஒருவருக்கு ஒருவர் வழங்கும்போது, நாம் பெறும் இரக்கமும், நாம் வழங்கும் இரக்கமும் வாழ்க்கையின் அநீதிகளை நீதியாக்க உதவும்.8

மூன்றாவது: தேவன் நம்மை அறிந்து பரிபூரணமாக நேசிக்கிறார். “தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்,” அல்லது அவரை ஏமாற்ற முடியாது.9 பரிபூரண இரக்கத்துடனும் நீதியுடனும், தாழ்மையுள்ள மற்றும் தவம் செய்பவர்களை அவர் தனது பாதுகாப்பு கரங்களால் அணைத்துக் கொள்கிறார்.

கர்த்லாந்து ஆலயத்தில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் தனது சகோதரர் ஆல்வின், சிலஸ்டியல் இராஜ்யத்தில் இரட்சிக்கப்பட்டதைக் கண்டார். இரட்சிப்பின் ஞானஸ்நான நியமத்தைப் பெறுவதற்கு முன்பே ஆல்வின் இறந்துவிட்டதால் தீர்க்கதரிசி ஜோசப் ஆச்சரியப்பட்டார்.10 ஆறுதலாக, கர்த்தர் ஏன் என விளக்கினார்: கர்த்தர் “[நம்] கிரியைகளின்படியும் [நம்] இருதயங்களின் வாஞ்சையின்படியும் நியாயந்தீர்ப்பார்.”11 நமது ஆத்துமா நமது செயல்கள் மற்றும் ஆசைகளைப்பற்றி சாட்சியமளிக்கின்றன.

நன்றிகூரும் விதமாக மரித்தவர்களும் “நியமங்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் மற்றும் கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் மனந்திரும்பிய மரித்தவர்களும் மீட்கப்படுவார்கள்12” என நாம் அறிவோம். ஆவி உலகில், பாவமும் மீறுதலும் உள்ளவர்கள் கூட மனந்திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது.13

மாறாக, வேண்டுமென்றே துன்மார்க்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள், மனந்திரும்புதலைத் தெரிந்தே தள்ளிப்போடுபவர்கள், அல்லது முன்கூட்டியே திட்டமிட்டு அல்லது தெரிந்தே எளிதில் மனந்திரும்புவதற்குத் திட்டமிடும் கட்டளைகளை மீறுபவர்கள், மேலும் “எல்லா [தங்கள்] குற்றங்களையும் தெள்ளத்தெளிவாக நினைவுகொள்பவர்கள்”14 தேவனால் நியாயந்தீர்க்கப்படுவார்கள். சனிக்கிழமையன்று நாம் தெரிந்தே பாவம் செய்ய முடியாது, பின்னர் ஞாயிற்றுக்கிழமை திருவிருந்தில் பங்கேற்பதன் மூலம் தானாகவே மன்னிப்பை எதிர்பார்க்க முடியாது. ஊழியக்காரர்கள் அல்லது ஆவியானவரைப் பின்தொடர்வது என்பது ஊழிய தரநிலைகள் அல்லது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை என்று கூறும் மற்றவர்களுக்கு, ஊழிய தரநிலைகள் மற்றும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது ஆவியானவரை அழைக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். நாம் யாரும் மனந்திரும்புதலை தள்ளிப் போடக்கூடாது. நாம் மனந்திரும்பத் தொடங்கும் போது மனந்திரும்புதலின் ஆசீர்வாதங்கள் தொடங்குகின்றன.

நான்காவதாக: மற்றவர்களுக்குத் தேவையான ஆனால் அவர்களுக்காகச் செய்ய முடியாத பதிலி இரட்சிப்பு ஆலய நியமங்களை நாம் வழங்குவதால், கர்த்தர் தம்மைப் போல் ஆக தெய்வீக வாய்ப்பைத் தருகிறார். நாம் “சீயோன் மலையில்… மீட்பர்களாக”16 ஆகும்போது, நாம் மிகவும் முழுமையானவர்களாகவும், பரிபூரணமாகவும் ஆகிவிடுகிறோம்.15 நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது, வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியானவர் நியமங்களை அங்கீகரித்து, கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவரையும் பரிசுத்தப்படுத்த முடியும். கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவரும் மாற்றும் உடன்படிக்கைகளை செய்து ஆழப்படுத்தலாம், காலப்போக்கில் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறலாம்.

இறுதியாக, ஐந்தாவது: தங்க விதி17 கற்பிப்பது போல, மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றில் ஒரு பரிசுத்தப்படுத்தும் சமச்சீர்மை, நமக்குத் தேவையான மற்றும் விரும்புவதை மற்றவர்களுக்கு வழங்க நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது.

சில சமயங்களில் வேறொருவரை மன்னிப்பதற்கான நமது விருப்பம் அவர்களும் நாமும் மனந்திரும்பி மன்னிக்கப்பட முடியும் என்று நம்புவதற்கு உதவுகிறது. சில நேரங்களில் மனந்திரும்புவதற்கான விருப்பமும் மன்னிக்கும் திறனும் வெவ்வேறு நேரங்களில் வரும். நம் இரட்சகர் தேவனிடத்தில் நம் மத்தியஸ்தராக இருக்கிறார், ஆனால் நாம் அவரிடம் வரும்போது நம்மை நம்மிடமும் ஒருவருக்கொருவரிடமும் கொண்டு வரவும் அவர் உதவுகிறார். குறிப்பாக காயமும் வலியும் ஆழமாக இருக்கும்போது, ​​நம் உறவுகளை சரிசெய்வது மற்றும் நம் இருதயங்களை குணப்படுத்துவது கடினம், ஒருவேளை நம்மால் சாத்தியமற்றது. ஆனால், எப்போது பிடிப்பது, எப்படி விட்டுவிடுவது என்பதை அறிய, பரலோகம் நமக்கு அப்பாற்பட்ட வல்லமையையும் ஞானத்தையும் அளிக்கும்.

நாம் தனியாக இல்லை என்பதை உணரும்போது நாம் அவ்வளவு தனியாக இருப்பதில்லை. நமது இரட்சகர் எப்போதும் புரிந்துகொள்கிறார்.18 நமது இரட்சகரின் உதவியால், நாம் நம்முடைய பெருமையையும், நம்முடைய காயங்களையும், நம்முடைய பாவங்களையும் தேவனிடம் ஒப்படைக்கலாம். நாம் தொடங்கும் போது எப்படி உணர்ந்தாலும், நம் உறவுகளை முழுமையடையச் செய்ய அவரை நம்புவதால், நாம் இன்னும் முழுமை அடைகிறோம்.

பரிபூரணமாகப் பார்த்து புரிந்து கொள்ளும் கர்த்தர், தான் மன்னிப்பவர்களை மன்னிக்கிறார்; (அபூரணமாக இருக்கும்) நம் அனைவரையும் மன்னிக்க வேண்டும். நாம் நம் இரட்சகரிடம் வரும்போது, நாம் நம்மீது குறைவாக கவனம் செலுத்துகிறோம். நாம் குறைவாக தீர்ப்பளிக்கிறோம், அதிகமாக மன்னிக்கிறோம். அவருடைய தகுதிகளை, இரக்கத்தை கிருபையை19 நம்புவது, பிணக்கு, கோபம், துஷ்பிரயோகம், கைவிடுதல், அநீதி மற்றும் சில சமயங்களில் மாம்ச உலகில் ஒரு மாம்ச உடலுடன் வரும் சரீர மற்றும் மன சவால்களிலிருந்து நம்மை விடுவிக்கும். மகிழ்ச்சி, என்றென்றும் என்பது ஒவ்வொரு உறவும் மகிழ்ச்சியாக என்றும் இருக்கும் என்று அர்த்தமல்ல. ஆனால் சாத்தான் கட்டப்பட்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகள்20 நாம் நித்தியத்திற்கு ஆயத்தமாகும்போது, நேசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், காரியங்களைச் செய்வதற்கும் நமக்குத் தேவையான நேரத்தையும் ஆச்சரியமான வழிகளையும் கொடுக்கலாம்.

பரலோகத்தின் ஐக்கியத்தை ஒருவருக்கொருவர் காண்கிறோம்.21 தேவனின் பணியும் மகிமையும் மகிழ்ச்சியாகவும், என்றென்றும் நிறைவேற்றப்படுவதை உள்ளடக்குகிறது.22 நித்திய ஜீவனும் மேன்மையடைதலும் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்வதாகும், எனவே, தெய்வீக வல்லமையின் மூலம், அவர்கள் இருக்கும் இடத்தில் நாம் இருப்போம்.23

அன்பான சகோதர சகோதரிகளே, நம்முடைய பரலோக பிதாவாகிய தேவனும் அவருடைய நேச குமாரனும் ஜீவிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு பாஷைக்காரருக்கும், நம் ஒவ்வொருவருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் குணப்படுத்துதலை வழங்குகிறார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசி வழி நடத்துகிறார். பிற்கால வெளிப்படுத்தல் தொடர்கிறது. நம்முடைய இரட்சகரின் பரிசுத்த இல்லத்தில் நாம் நெருங்கி வருவோம், கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட மனதுருக்கம், உண்மை, இரக்கம் ஆகியவற்றால் நம் இருதயங்களை நம் எல்லா தலைமுறைகளிலும் ஒன்றாக இணைத்து, இக்காலத்திலும் நித்தியத்திலும், மகிழ்ச்சியாகவும், என்றென்றைக்கும் அவர் நம்மை தேவனிடமும் ஒருவருக்கொருவரிடமும் சேர்த்துக்கொள்வாராக. இயேசு கிறிஸ்துவில், அது சாத்தியம்; இயேசு கிறிஸ்துவில், அது உண்மை. அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.