அக்டோபர் 2022 பொது மாநாடு சனிக்கிழமை காலைக்கூட்டம் சனிக்கிழமை காலைக்கூட்டம் டாலின் எச். ஓக்ஸ்ஏழைகளுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் உதவுதல்தேவைப்படுபவர்களுக்கு உதவ பல அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் தேவன் உணர்த்துகிறார் என்றும் அந்த முயற்சியில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற சபை உறுதிபூண்டுள்ளது என்றும் தலைவர் ஓக்ஸ் போதிக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்இயேசு கிறிஸ்துவே இளைஞர்களின் பெலன்தேர்வுகளை செய்வதற்கு இயேசு கிறிஸ்து சிறந்த வழிகாட்டி என்று மூப்பர் உக்டர்ப் போதிக்கிறார். இளைஞர்களின் பெலனுக்காக புதிய வழிகாட்டியையும் அவர் அறிமுகப்படுத்துகிறார். டிரேசி ஒய். ப்ரவுனிங்நம் வாழ்வில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அதிகம் பார்த்தல்சகோதரி பிரவுனிங், நம் வாழ்வில் இரட்சகரை அதிகமாகக் காண்பதற்காக, நம் வாழ்க்கையை ஒரு சுவிசேஷ கண்ணோட்டத்தில் பார்க்க ஊக்குவிக்கிறார். டேல் ஜி. ரென்லண்ட்தனிப்பட்ட வெளிப்பாட்டிற்கான ஒரு கட்டமைப்புபரிசுத்த ஆவியின் மூலம் தனிப்பட்ட வெளிப்பாட்டை எவ்வாறு பெறுவது மற்றும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பது எப்படி என்று மூப்பர் ரென்லண்ட் போதிக்கிறார். ரபேல் இ. பினோநல்லது செய்வது நமது இயல்பானதாக இருப்பதாகசபையின் உறுப்பினர்கள் உடன்படிக்கையின் பாதையில் தங்க உதவுவதற்கு நான்கு பழக்கவழக்கங்களை மூப்பர் பினோ பரிந்துரைக்கிறார். ஹ்யூகோ மொன்டோயாஅன்பின் நித்திய கொள்கைதேவனை நேசிப்பதன் முக்கியத்துவத்தையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஊழியம் செய்வதையும் மூப்பர் மொன்டோயா போதிக்கிறார். ரோனால்ட் ஏ. ராஸ்பாண்ட்இத்தினம்தலைவர் நெல்சன் மார்மன் புத்தகத்தைப் பகிர்ந்ததற்கான உதாரணங்களை மூப்பர் ராஸ்பாண்ட் கொடுக்கிறார், தீர்க்கதரிசியின் முன்மாதிரியை அவர் எவ்வாறு பின்பற்ற முயன்றார் என்பதை விவரிக்கிறார், மேலும் அதையே செய்ய அனைவரையும் அழைக்கிறார். ரசல் எம். நெல்சன்எது உண்மை?துஷ்பிரயோகம் பற்றிய கர்த்தரின் போதனைகளை தலைவர் நெல்சன் உறுதிப்படுத்துகிறார், மேலும் தேவன் எல்லா சத்தியத்துக்கும் ஆதாரம் என்று சாட்சியமளிக்கிறார். சனிக்கிழமை மாலைக்கூட்டம் சனிக்கிழமை மாலைக்கூட்டம் ஹென்றி பி. ஐரிங்சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.தலைவர் ஓக்ஸ் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும் ஆதரிக்கும் வாக்குக்காக முன்மொழிந்தார். எம். ரசல் பல்லார்ட்விசுவாசத்தின் அடிச்சுவடுகளுடன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசத்துடன் பின்பற்றும்போது, முன்னோடிகளுக்கு அவர் செய்ததைப் போலவே கடினமான காலங்களில் நமக்கு அவர் உதவுவார் என தலைவர் பல்லார்ட் போதிக்கிறார். க்றிஸ்டின் எம். யீசாம்பலுக்கு பதிலாக சிங்காரம்: மன்னிப்பின் குணப்படுத்தும் பாதைமன்னிப்பின் குணப்படுத்தும் பாதையில் இரட்சகரைப் பின்பற்றும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று சகோதரி யீ போதிக்கிறார். பால் வி. ஜான்சன்அவரில் பூரணசற்குணராய் இருங்கள்இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் நம்முடைய பாவங்கள் மற்றும் அபூரணங்களிலிருந்து நாம் சுத்திகரிக்கப்பட முடியும் என்று மூப்பர் ஜான்சன் போதிக்கிறார். உலிசஸ் சோயர்ஸ்கர்த்தருடன் பங்காளியாகபெண்களும் ஆண்களும் உண்மையான மற்றும் சமமான திருமண பந்தத்தில் இணைந்து பணியாற்றும்போது, அவர்கள் இரட்சகரால் போதிக்கப்பட்ட ஒற்றுமையை அனுபவிப்பார்கள் என்று மூப்பர் சோயர்ஸ் போதிக்கிறார். ஜேம்ஸ் டபிள்யூ. மெக்கான்கிIIIஇயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினார்கள்.இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவரிடத்திற்கு வருவதற்கு ஒருவருக்கொருவர் உதவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மூப்பர் மெக்கான்கி போதிக்கிறார். ஜோர்ஜ் எப். ஜெபலோஸ்எதிரியை எதிர்க்கும் வாழ்க்கையை உருவாக்குதல்தேவனின் உதவியால் நாம் பாவம் மற்றும் சோதனையை எதிர்க்கவும், இந்த வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சியைக் காணவும் முடியும் என்று மூப்பர் ஜெபலோஸ் போதிக்கிறார். டி. டாட் கிறிஸ்டாபர்சன்சொந்தமாகுதலின் கோட்பாடுபன்முகத்தன்மையை வரவேற்பது, சேவை செய்வதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருத்தல் மற்றும் இரட்சகரின் பங்கை அறிந்துகொள்வது ஆகியவை சொந்தமாகுதல் கோட்பாட்டில் அடங்கும் என்று மூப்பர் கிறிஸ்டாபர்சன் போதிக்கிறார். சனிக்கிழமை மாலை கூட்டம் சனிக்கிழமை மாலை கூட்டம் ஜெரால்ட் காசேநம்முடைய பூலோகத்துக்குரிய உக்கிராணத்துவம்தேவனின் படைப்புகளை உக்கிராணக்காரர்களாக அவைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையை ஆயர் காசே கற்பிக்கிறார். மிச்செல் டி. க்ரெய்க்முழு இருதயத்துடன்சகோதரி க்ரெய்க் நமக்கு மூன்று உண்மைகளை போதிக்கிறார், அவை சீஷர்களாக வளரவும், நம்முடைய சோதனைகளின்போது கர்த்தரை நம்பவும் உதவும். கெவின் டபிள்யூ. பியர்சன்நீங்கள் இன்னும் மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?நம் வாழ்வின் மையத்தில் இரட்சகரை மனப்பூர்வமாக வைக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்று மூப்பர் பியர்சன் கற்பிக்கிறார். டெனல்சன் சில்வாசத்தியத்தை அறிவிக்கும் தைரியம்மூப்பர் சில்வா தனது மனமாற்ற அனுபவத்தை விவரிக்கிறார் மற்றும் இளைஞர்களையும் இளம் பெண்களையும்ஊழியச் சேவைக்கு ஊக்குவிக்கிறார். நீல் எல். ஆண்டர்சென்இரட்சகருக்கு நெருக்கமாய் வருதல்உடன்படிக்கைகளைச் செய்து இரட்சகருக்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதன் மூலம் இரண்டாம் வருகைக்குத் தயாராகலாம் என்று மூப்பர் ஆண்டர்சன் போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஜெப்ரி ஆர். ஹாலண்ட்சிலுவையின் மீது உயர்த்தப்பட்டார்இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக சிலுவையை எடுத்துக்கொள்வதன் அர்த்தம் என்ன என்பதை மூப்பர் ஹாலண்ட் போதிக்கிறார். ஜே. அனெட் டென்னிஸ்அவருடைய நுகம் மெதுவாயும் அவருடைய சுமை இலகுவாயும் இருக்கிறதுநாம் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக அனைவரிடமும் இரக்கமாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்று சகோதரி டென்னிஸ் கற்பிக்கிறார். கெரிட் டபிள்யூ.காங்மகிழ்ச்சி, என்றென்றும்நமக்கான தேவனின் திட்டத்தை நாம் பின்பற்றும்போது, நம் குடும்பங்களுடன் நித்திய மகிழ்ச்சியைக் காண்போம் என்று மூப்பர் காங் போதிக்கிறார். ஜோசப் டபிள்யூ. சிடாட்டிசீஷத்துவத்தின் மாதிரிகள்கிறிஸ்துவின் சிறந்த சீஷர்களாக ஆவதற்கு உதவும் பண்புகளை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம் என்பதை மூப்பர் சிட்டாட்டி போதிக்கிறார். ஸ்டீபன் ஜெ.லண்ட்நீடித்த சீஷத்துவம்தலைவர் லண்ட் எப்எஸ்ஒய் மாநாடுகளிலிருந்து வரும் ஆவிக்குரிய வலிமையை விவரிக்கிறார் மற்றும் இளைஞர்கள் அந்த வலிமையை எவ்வாறு பராமரிக்க முடியும் என்பதை போதிக்கிறார். டேவிட் ஏ.பெட்னார்சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்;மூப்பர் பெட்னார் ராஜ திருமண விருந்தின் உவமையைப் பயன்படுத்தி, நமது ஒழுக்க சுயாதீனத்தின் நீதியான பயன்பாட்டின் மூலம், நாம் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்படுவதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்உலகத்தை ஜெயித்து இளைப்பாறுதல் காணுங்கள்நமது உடன்படிக்கைகள் மூலம் நாம் பெறும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையால், நாம் உலகத்தை ஜெயிக்க முடியுமென தலைவர் நெல்சன் சாட்சியமளிக்கிறார். ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக் கூட்டம் ஹென்றி பி. ஐரிங்ஊக்குவித்தலின் மரபுதலைவர் ஐரிங் தனது தாயும், தீர்க்கதரிசியான மார்மனும் எவ்வாறு உலகத்தின் அனைத்து சோதனைகளினூடாகவும் நித்திய ஜீவனுக்குத் தகுதிபெற அவர்களின் சந்ததியினரை ஊக்குவித்தார்கள் என்பதைக் காட்டுகிறார். ரயான் கே.ஓல்சன்இயேசுவே பதில்.நமது சவால்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில் இயேசு கிறிஸ்து என்று மூப்பர் ஓல்சன் போதிக்கிறார். ஜோனத்தான் எஸ். ஸ்மிட்உம்மை அறிவதேஇயேசுவின் பல நாமங்களைப் பற்றி அறிந்துகொள்வதால், அவரைப் போலவே ஆக இயேசு நமக்கு உணர்த்துவார் என்று மூப்பர் ஷ்மிட் நமக்குப் போதிக்கிறார். மார்க் டி. எட்டிதேவ வார்த்தையின் நன்மை“தேவனின் வார்த்தையின் நன்மையை முயற்சிக்கவும்” மற்றும் வேதவசனங்களிலிருந்து “ஆழமாக பருகவும்” மூப்பர் எட்டி நம்மை அழைக்கிறார். காரி இ. ஸ்டீவென்சன்உங்கள் சாட்சியை போஷித்தலும் சொல்லுதலும்மூப்பர் ஸ்டீவன்சன் சாட்சியம் என்றால் என்ன என்பதையும், உங்கள் சாட்சியை வலுவாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும், அதை வார்த்தையிலும் செயலிலும் சொல்வதன் முக்கியத்துவத்தையும் கற்பிக்கிறார். ஐசக் கே. மாரிசன் அவர் மூலம் நாம் கடினமான காரியங்களைச் செய்ய முடியும்மூப்பர் மோரிசன், இக்கட்டான சமயங்களில் கர்த்தர் நம்மை எவ்வாறு பலப்படுத்துகிறார் மற்றும் நாம் அவரில் விசுவாசம் வைக்கும்போது நமக்கு உதவுகிறார் என்பதை நமக்கு போதிக்கிறார். க்வென்டின் எல்.குக்தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருங்கள்இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நம்முடைய சொந்த சாட்சிகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தைப்பற்றி, நம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்புதல் மற்றும் தேவனுக்கும் அவருடைய பணிக்கும் உண்மையாக இருத்தலைப்பற்றி மூப்பர் குக் போதிக்கிறார். ரசல் எம். நெல்சன்ஆலயத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.ஆலயங்களின் முக்கியத்துவம் குறித்து தலைவர் நெல்சன் பேசுகிறார், மேலும் புதிய ஆலயங்களைக் கட்டும் திட்டங்களை அறிவிக்கிறார்.