தேவ வார்த்தையின் நன்மை
பூர்வகால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளில் நன்மை உள்ளது, ஏனெனில் அவர்களின் வார்த்தைகள் கர்த்தரின் வார்த்தைகள்.
மார்மன் புஸ்தகத்தில், ஆல்மா தீர்க்கதரிசி எடுத்த ஒரு முக்கிய முடிவைப் பற்றி ஒரு அருமையான வசனத்தில் நாம் வாசிக்கிறோம். அந்த பழக்கமான வார்த்தைகளை மதிப்பாய்வு செய்வதற்கு முன், அந்த முடிவு எடுக்கப்பட்ட கடினமான சூழ்நிலையை என்னுடன் கருத்தில் கொள்ளுங்கள்.
சோரமியர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்ட ஒரு பிரிவினர், நேபியர்களிடமிருந்து1 பிரிந்து லாமானியர்களுக்கு அருகிலுள்ள தேசத்தின் எல்லைகளில் கூடினர்.2 பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட முன்னெப்போதும் நடந்திராத போரில் நேபியர்கள் சமீபத்தில் லாமானியர்களை தோற்கடித்தனர், 3 மேலும் “சோரமியர்கள் லாமானியர்களுடன் தொடர்பில் ஈடுபடுவார்கள் என்றும், அது பெரும் இழப்பை ஏற்படுத்தும் வழியாக இருக்கும் என்றும் பெரிதும் அஞ்சப்பட்டது.”4 யுத்தம் பற்றிய கவலையை விடவும், “சோரமியர்களுக்கு தேவ வசனம் பிரசங்கிக்கப்பட்டிருந்தது,”5 அவர்கள் விக்கிரக ஆராதனைக்கு திரும்பி, “கர்த்தருடைய வழிகளைப் புரட்டிப் போடுகிறார்கள்,”31:1என ஆல்மா அறிந்திருந்தான். இவை அனைத்தும் ஆல்மாவின் மீது அழுத்தம் கொடுத்தன, மேலும் அவன் “துக்கிக்க காரணமாயின.”7
இந்த சிக்கலான மற்றும் சவாலான சூழ்நிலைகளில் தான் இருப்பதைக் கண்டுபிடித்த ஆல்மா என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான். அவனது முடிவில், நம் நாளின் சிக்கலான மற்றும் சவாலான சூழ்நிலைகளில் நாம் செல்லும்போது, நமக்கு உணர்த்தவும் அறிவுறுத்தவும் பாதுகாக்கப்பட்ட வார்த்தைகளை வாசிக்கிறோம்.8
அவர்கள் சொல்கிறார்கள், “இப்போதும், நீதியானதைச் செய்யும்படி, ஜனங்களை வழிநடத்துகிற தன்மை, வார்த்தையை பிரசங்கிப்பதில் இருந்தாலும், பட்டயத்தைக் காட்டிலும் ஜனங்களுக்கு ஏற்பட்ட யாதொன்றைக் காட்டிலும், அது ஜனங்களின் மனதில் ஒரு வல்லமையான பயனை உண்டாக்குவதாலும், தேவ வார்த்தையின் நன்மையை அவர்கள் பிரயோகிக்க வேண்டியது அவசியமென ஆல்மா நினைத்தான்.”9
பல சாத்தியமான தீர்வுகளில், ஆல்மாவின் நம்பிக்கை அவர்கள் வார்த்தையின் வல்லமையை நம்புவதற்கு வழிவகுத்தது. வேதத்தில் எங்கும் காணப்படும் மிக வல்லமைவாய்ந்த சில பிரசங்கங்கள் அந்த முடிவைத் தொடர்ந்து உடனடியாக பிரசங்கிக்கப்பட்டன என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. ஆல்மாவின் 32 மற்றும் 33ம் அதிகாரங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் பற்றிய அவனது தலைசிறந்த சொற்பொழிவை வாசிக்கிறோம், மேலும் அதிகாரம் 34ல் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி பற்றிய அமுலேக்கின் முக்கிய போதனைகளைக் காண்கிறோம்.
வார்த்தையின் நன்மை பற்றிய விளக்கங்கள்
உண்மையில், தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையின் நன்மையை முயற்சி செய்யத் தேர்ந்தெடுத்தவர்கள் மீது ஊற்றப்பட்ட அற்புதமான ஆசீர்வாதங்களைப் பற்றி வேதம் முழுவதும் வாசிக்கிறோம்.10 தலைவர் ரசல் எம். நெல்சன் “நமது பிற்காலத்தில் பிழைத்திருக்க வழிகாட்டி” என்று விவரித்த புத்தகமாகிய11 மார்மன் புஸ்தகத்தின் மீது நம் கவனத்தைத் திருப்பும்போது என்னுடன் மூன்று உதாரணங்களைச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
முதலாவதாக, கர்த்தர் அவர்களுடைய பிதாக்களை எவ்வாறு விடுவித்தார் என்பதை தம் ஜனத்துக்கு நினைவூட்டி, ஆல்மா கற்பித்தான்: “இதோ, அவர்களுடைய இருதயங்களை மாற்றிப்போட்டார்; ஆம், அவர் அவர்களை கனநித்திரையிலிருந்து எழப்பண்ணினார், அவர்களும் தேவனை அறிந்து விழித்தெழுந்தார்கள். இதோ, அவர்கள் காரிருளின் நடுவே இருந்தாலும், அவர்களுடைய ஆத்துமாக்கள் நித்திய வார்த்தையின் வெளிச்சத்தால் ஒளிபெற்றன. 12 ஒருவேளை நீங்கள் இருளின் நடுவில் இருப்பது போல் உணரலாம். உங்கள் ஆத்துமா வெளிச்சத்திற்காக ஏங்குகிறதா? அப்படியானால், தயவுசெய்து தேவனுடைய வார்த்தையின் நன்மையை முயற்சிக்கவும்.
இரண்டாவதாக, ஒரு ஊழியக்காரனாக அவன் கண்ட லாமனியர்களைக் கர்த்தர் மனமாற்றியதைப் பற்றி நினைத்தபோது அம்மோன் கூறினான், “இதோ, எத்தனை ஆயிரமாயிரமான நம்முடைய சகோதரரை அவர் பாதாளத்தின் வேதனைகளிலிருந்து விடுவித்தார். அவர்கள் மீட்கும் அன்பைப்பற்றி பாட அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள், இது நம்முள் இருக்கும் அவருடைய வார்த்தையின் வல்லமையினால்தான்.”13 சகோதர சகோதரிகளே, மீட்கும் அன்பை பாட நாம் விரும்பும் ஒருவர் அழைத்து வரப்பட வேண்டும் என்று ஏங்கும் பலர் நம்மிடையே உள்ளனர். நம்முடைய எல்லா முயற்சிகளிலும், நம்மில் இருக்கும் தேவனுடைய வார்த்தையின் நன்மையை முயற்சி செய்வதை நினைவில் கொள்வோமாக.
மூன்றாவதாக ஏலமன் புஸ்தகத்தில் நாம் வாசிக்கிறோம், “ஆம், பிசாசினுடைய எல்லா வஞ்சனைகளையும் கண்ணிகளையும் தந்திரங்களையும், தகர்த்தெறிவதும், துன்மார்க்கரை பிடிக்க ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிற, அந்த என்றுமுள்ள துன்பமிக்க பாதாளத்தின் குறுக்கேயுள்ள இடுக்கமும் நெருக்கமுமான பாதையில் கிறிஸ்துவின் மனுஷரை நடத்துவதுமான, ஜீவனும் வல்லமையும் உள்ள தேவ வார்த்தையைப் பிடிக்கிற யாவரும்“ … அவர்களுடைய ஆத்துமாக்கள் … பரலோக ராஜ்யத்திலிருக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் போய்ச்சேரும் என நாம் பார்க்கிறோம்.”14 நம் நாளின் தத்துவங்களில் மிகவும் பரவலாக இருக்கும் பிசாசின் அனைத்து தந்திரங்களையும் கண்ணிகளையும் சூழ்ச்சிகளையும் வெட்ட முற்படுகிறீர்களா? உடன்படிக்கையின் பாதையில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக, அதிகப்படியான தகவல்களால் ஏற்படும் குழப்பத்தின் மேகங்களை கலைக்க விரும்புகிறீர்களா? தேவ வார்த்தையின் நன்மையை முயற்சி செய்யுங்கள்.
வார்த்தையின் வல்லமையால் மாற்றப்பட்ட ஒருவனாக, நமது அன்பிற்குரிய தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன் அவர்களால் மிகவும் அழகாகக் கற்பிக்கப்படும் இந்த சத்தியம்பற்றி நான் தனிப்பட்ட முறையில் சாட்சியமளிக்கிறேன்: “என்னைப் பொறுத்தவரை, மார்மன் புஸ்தகத்தின் வல்லமை, ‘உருக்கமான இருதயத்தோடு, உண்மையான நோக்கத்தோடு, கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து’ அதை வாசிப்பவர்களின் வாழ்க்கையில் வரும் மாபெரும் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. பல மனம் மாறியவர்கள் அந்த புஸ்தகத்தின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்காக தாங்கள் ஒரு காலத்தில் விரும்பி வைத்திருந்த பலவற்றை விட்டுவிடுகிறார்கள். … ஆன்மாக்களை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வர இது உங்களின் மிகச் சிறந்த கருவியாக இருக்கும்.”15
நன்மையின் தோற்றுவாய்
இந்த மற்றும் பிற விளக்கங்களில், அவருடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையின் நன்மையை நாம் காண்கிறோம். அந்த நன்மை அல்லது வல்லமையின் தோற்றுவாய் என்ன என்று நாம் கேட்கலாம்.
இந்த கேள்வியை நாம் கருத்தில் கொள்ளும்போது, வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள “வார்த்தை” என்ற சொல்லுக்கு குறைந்தது இரண்டு அர்த்தங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியம். “இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் ஒன்று ‘வார்த்தை’,” மற்றும் “பரிசுத்த வேதங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள இரட்சகரின் போதனைகளும் ‘வார்த்தையே’” என்று மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் சமீபத்தில் கற்பித்தார்.16
தீர்க்கதரிசி நேபி இந்த இரண்டு அர்த்தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கினார்: “இந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து கிறிஸ்துவை விசுவாசியுங்கள்; நீங்கள் இந்த வார்த்தைகளை விசுவாசியாவிட்டாலும் கிறிஸ்துவை விசுவாசியுங்கள். மேலும் நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால், இந்த வார்த்தைகளை விசுவாசிப்பீர்கள், ஏனெனில் அவை கிறிஸ்துவின் வார்த்தைகளாயிருக்கின்றன, அவர் அவைகளை எனக்குத் தந்தார்.”17 பண்டைய மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் கர்த்தரின் வார்த்தைகள் என்பதால் துல்லியமாக அவர்களின் வார்த்தைகளில் நன்மை இருப்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.18 என் அன்பான நண்பர்களே, இந்த நித்திய சத்தியத்தை ஏற்றுக்கொள்வது பிற்காலத்தில் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு முக்கியமானது.19 தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டபடி, “இதோ, தேசத்தில் பஞ்சம் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்.”20
இறுதியில், தேவனுடைய வார்த்தையின் நன்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.21 இதை நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளும்போது, அவருடைய தீர்க்கதரிசிகள் மற்றும் மீட்பரின் பாத்திரத்துக்கும் இடையே நித்திய முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பை ஏற்படுத்த முடியும். அவர் மீது நமக்குள்ள அன்பு, அவருடன் நெருங்கி வருவதற்கும் அவருடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு நமது வாஞ்சை, 22 நம்முடைய தனிப்பட்ட இரட்சகராகவும் மீட்பராகவும் அவரிடமிருந்து வரும் நன்மை, இரண்டுமே நம் வாழ்வில் வார்த்தையின் நன்மையை முயற்சி செய்ய நம்மை தூண்டும்,23 மேலும் “கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரவான்களுக்கு” என்ற வார்த்தைகள் மூலம் அவரிடமிருந்து வரும் நன்மையே.24 இரட்சகரையும் அவருடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் பற்றிய நமது ஆய்வில் மற்ற ஆதாரங்கள் எவ்வளவு உதவிகரமாக இருந்தாலும், அவை ஒருபோதும் அவைகளுக்கு மாற்றாக மாறக்கூடாது என்பதை நாம் புரிந்துகொள்வோம். நாம் ஆழமாகவும் அடிக்கடியும்,25 ஆதாரத்திலிருந்து நேரடியாக பருக வேண்டும்.26
உங்கள் ஒவ்வொருவருக்கும், என் சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அன்பில், தேவனுடைய வார்த்தையின் நன்மையை, குறிப்பாக மார்மன் புஸ்தகத்தின் மூலம், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும்படி நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, தலைவர் ரசல் எம். நெல்சனின் இந்த தீர்க்கதரிசன வாக்குறுதியை நீங்கள் அனுபவிப்பீர்கள்: “நீங்கள் ஒவ்வொரு நாளும் மார்மன் புத்தகத்தை ஜெபத்துடன் படிக்கும்போது, ஒவ்வொரு நாளும் சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் படிப்பதை சிந்தித்துப் பார்க்கும்போது, வானத்தின் பலகணிகள் திறக்கும், உங்கள் சொந்த கேள்விகளுக்கும் உங்களுக்குப் பதில் கிடைக்கும், உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் வரும் என்று நான் வாக்களிக்கிறேன். நீங்கள் தினமும் மார்மன் புஸ்தகத்தில் மூழ்கும்போது, அன்றைய தீமைகளுக்கு எதிராக நீங்கள் பாதுகாக்கப்பட முடியும் என்று நான் உறுதியளிக்கிறேன்.”27
நம்முடைய பரலோக பிதா நம்மை பரிபூரணமாக நேசிப்பதாலும், நாம் ஒவ்வொருவரும் அவருடன் என்றென்றும் வாழ வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பதாலும் நமக்கு வார்த்தையைக் கொடுத்திருக்கிறார் என்று நான் சாட்சி கூறுகிறேன். “வார்த்தை… மாம்சமானார்”, இயேசு கிறிஸ்து மற்றும் நம்மை இரட்சித்து மீட்பதற்கான அவருடைய வல்லமை பற்றி நான் சாட்சி கூறுகிறேன்.28 அவருடைய நன்மை கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அவருடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் வழியாக வருகிறது என்பதை நான் அறிவேன்.
தேவனுடைய வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும்,29 மேன்மைக்கும் நித்திய ஜீவனுக்கும் வழிவகுக்கும் உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்கவும் ஞானமும் சாந்தமும் நமக்கு இருக்க வேண்டும் என்பதே என் இருதயத்தின் ஜெபமாகும்.30 வார்த்தையின் நன்மையின் மூலம் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வலிமையான மாற்றத்தை நாம் தொடர்ந்து அனுபவிப்போமாக.31 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.