பொது மாநாடு
நீங்கள் இன்னும் மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?
அக்டோபர் 2022 பொது மாநாடு


11:30

நீங்கள் இன்னும் மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?

ஆகையால், பரிசுத்த ஆவியின் செல்வாக்கு இருக்கும் பரிசுத்த இடங்களில் நாம் எவ்வளவு நேரம் இருக்கிறோம் என்பதற்கு நமது விருப்பம் நேரடியான விகிதாசாரமாகும்.

பல வார பிணைய மாநாட்டு பணிகளுக்குப் பின்பு, ஒரு ஞாயிற்றுக்கிழமை, திருவிருந்தில் பங்கேற்க நான் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, ஒரு சுவாரஸ்யமான மற்றும் வல்லமையான எண்ணம் என் மனதில் ஓடியது.

ஆசாரியன் அப்பத்தை ஆசீர்வதிக்கத் தொடங்கியதும், நான் முன்பு பலமுறை கேட்ட வார்த்தைகள் என் மனதையும் இருதயத்தையும் அழுத்தமாக அழுத்தியது. “நித்திய பிதாவாகிய தேவனே, இந்த அப்பத்தில் பங்கெடுக்கிற யாவருடைய ஆத்துமாக்களுக்காகவும், அவா்கள் உம்முடைய குமாரனுடைய சரீரத்தின் நினைவு கூருதலில் புசிக்கவும், அவருடைய ஆவியை அவா்கள் எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படி உம்முடைய குமாரனுடைய நாமத்தை தங்கள் மீது எடுத்துக்கொள்ளவும், அவரை எப்பொழுதும் நினைவுகூரவும், தங்களுக்கு அவா் கொடுத்திருக்கிற அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும் மனமுள்ளவா்களாக இருக்கிறார்கள் என்று, நித்திய பிதாவாகிய தேவனே, உம்மிடத்தில் சாட்சி பகரவும், இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம்.”1 நாம் மனமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று எத்தனை முறை தேவனுக்கு நாம் சாட்சி கொடுத்திருக்கிறோம்?

அந்த பரிசுத்தமான வார்த்தைகளின் முக்கியத்துவத்தை நான் சிந்தித்தபோது, முன் எப்போதும் இல்லாத வகையில் மனமுள்ளவர்களாக என்ற வார்த்தை என்னைக் கவர்ந்தது. இரட்சகரின் பாவநிவராண பலிக்காகவும் என் குடும்பத்திற்கும் எனக்கும் பிதாவின் மீட்பின் திட்டத்தில் அவரது முக்கிய பங்கிற்காகவும் அன்புடனும் நன்றியுணர்வுடனும் இனிமையான மற்றும் பரிசுத்தமான அனுபவங்களின் வெள்ளம் என் மனதையும் இருதயத்தையும் நிரப்பியது. அப்போது, “அவர்கள் உம்மிடத்தில் சாட்சி பகரவும்… அவரை எப்பொழுதும் நினைவுகூரவும்” என்று அந்த தண்ணீருக்கான ஜெபத்தின் ஆழமான வார்த்தைகளை நான் கேட்டு உணர்ந்தேன்.2 எனது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது நல்ல நோக்கங்களை விட உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதை அந்த நேரத்தில் நான் தெளிவாக புரிந்துகொண்டேன்.

திருவிருந்தில் பங்கேற்பது நமது சம்மதத்தைக் குறிக்கும் செயலற்ற மத சடங்கு அல்ல. இது கிறிஸ்துவின் எல்லையற்ற பாவநிவர்த்தியின் உண்மையாயும் மையத்தன்மையாயும், அவரை எப்போதும் நினைவில் வைத்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தின் வல்லமைவாய்ந்த நினைவூட்டலுமாகும். இரட்சகர் மீது கவனம் செலுத்த விருப்பம் மிகவும் முக்கியமானது, திருவிருந்து ஜெபங்களான இது சபையில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட இரண்டு வேதங்களின் மைய செய்தியாகும் . பரலோக பிதா தம்முடைய ஒரே பேறான குமாரன் மூலம் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் விருப்பத்துடன் வழங்குவதைப்பற்றிய உண்மையைப் புரிந்துகொள்வது, பதிலுக்கு எப்பொழுதும் மனமுள்ளவர்களாக இருக்க நமது அதிகபட்ச முயற்சிகளைத் தூண்ட வேண்டும்.

நம்முடைய சொந்த ஆவிக்குரிய அடித்தளம் இயேசு கிறிஸ்துவின் மீது உறுதியாக கட்டப்பட்டிருக்கிறதா?

நமது ஆவிக்குரிய அடித்தளம் ஆழமற்றதாகவோ அல்லது மேலோட்டமாகவோ இருந்தால், சமூக செலவு பயன் பகுப்பாய்வு அல்லது தனிப்பட்ட அசௌகரியம் குறியீட்டின் அடிப்படையில் நமது விருப்பத்தை அடிப்படையாகக் கொள்ள நாம் சாயலாம். சபை முதன்மையாக காலாவதியான அல்லது அரசியல் ரீதியாக தவறான சமூகக் கொள்கைகளையும், உண்மையற்ற தனிப்பட்ட கட்டுப்பாடுகளையும் நேர அர்ப்பணிப்புகளையும் கொண்டுள்ளது என்ற கதையை நாம் ஏற்றால், விருப்பத்தைப்பற்றிய நமது முடிவுகளும் சமமாக குறைபாடுடையதாக இருக்கும். விருப்பத்தின் கொள்கை சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெறும் என்றோ அல்லது டிக்டோக் ஆர்வலர்களிடம் சாதகமாக இருக்கும் என்றோ நாம் எதிர்பார்க்கக்கூடாது. மனிதர்களின் கட்டளைகள் தெய்வீக உண்மையுடன் அரிதாகவே ஒத்துப்போகின்றன.

தேவனை நேசிக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றத் தயாராக இருக்கும் அபூரண நபர்களுக்கான கூடும் இடம் சபை. ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு, கிறிஸ்து என்ற யதார்த்தத்தில் அந்த விருப்பம் வேரூன்றியுள்ளது. இந்த தெய்வீக உண்மையை பரிசுத்த ஆவியின் வல்லமையால் மட்டுமே அறிய முடியும். ஆகையால், பரிசுத்த ஆவியின் செல்வாக்கு இருக்கும் பரிசுத்த இடங்களில் நாம் எவ்வளவு நேரம் இருக்கிறோம் என்பதற்கு நமது விருப்பம் நேரடியாக விகிதாசாரமாகும்.

பரலோகத்தில் உள்ள ஒரு அன்பான பிதாவுடன் நமது கவலைகளைப்பற்றி விவாதிப்பதில் அர்த்தமுள்ள உரையாடலில் அதிக நேரத்தை செலவிடுவது நல்லது, மற்ற குரல்களின் கருத்துக்களைத் தேடுவதற்கு குறைந்த நேரத்தை செலவிடுவோம். நமது தினசரி செய்தி ஊட்டத்தை பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கும், அவருடைய ஜீவனுள்ள தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கும் மாற்றவும் நாம் தேர்ந்தெடுக்கலாம்.

நமது ஓய்வுநாள் அனுசரிப்புக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், நேர்மையான தசமபாகம் செலுத்துதல், தற்போதைய ஆலய பரிந்துரை, ஆலயத்திற்குச் செல்வது, மற்றும் நமது பரிசுத்த ஆலய உடன்படிக்கைகளை மதிப்பது இவை அனைத்தும் நமது விருப்பத்தின் வல்லமை வாய்ந்த குறியீடுகள் மற்றும் நமது அர்ப்பணிப்புக்கான சான்றுகள் ஆகும். கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்த மேலோட்டமான முயற்சியை விட அதிகமாக செய்ய நாம் தயாராக இருக்கிறோமா?

பரலோக பிதா நம்மை பரிபூரணமாக நேசிக்கிறார், ஆனால் அந்த அன்பு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வருகிறது. நம் வாழ்வின் மையத்தில் இரட்சகரை மனப்பூர்வமாக வைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். எல்லாவற்றிலும் பிதாவுக்கு அடிபணிவதற்கான விருப்பத்திற்கு இரட்சகர் நமது சிறந்த உதாரணம். “அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்”.3 அவர் மனமுவந்து நம் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்தார். அவர் மனமுவந்து நம் சுமைகளை எளிதாக்குகிறார், நம் பயத்தை அமைதிப்படுத்துகிறார், நமக்கு பலத்தைத் தருகிறார், துன்பம் மற்றும் துயரத்தின் போது நம் இருதயங்களுக்கு அமைதியையும் புரிதலையும் தருகிறார்.

ஆனாலும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பது ஒரு தேர்வு. அவருடைய வார்த்தைகளில் “[நாம்] நம்ப விரும்புவதைத் தவிர வேறொன்றுமில்லை என்றாலும்,”4 நம்முடைய விசுவாசப் பயணத்தைத் தொடங்க அல்லது மீட்டமைக்க நமக்கு ஒரு தொடக்கப் புள்ளி உள்ளது. அவருடைய வார்த்தைகள், நம் இருதயங்களில் விதையாக விதைக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் போஷிக்கப்பட்டால், வேரூன்றி, நமது விசுவாசம் உறுதியளித்து, செயல் மற்றும் வல்லமையியின் கொள்கையாக மாறும். நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் மார்மன் புஸ்தகம் மிகவும் வல்லமை வாய்ந்த ஆதாரமாகும். விருப்பம் என்பது விசுவாசத்தின் கிரியாஊக்கி.

உலக வாழ்க்கை, தெய்வீக வடிவமைப்பால், எளிதானது அல்ல, சில சமயங்களில் மிகப்பெரியதாக இருக்கலாம். இருப்பினும், “[நாம்] சநதோஷமாக இருக்கவே, [நாம்] இருக்கிறோம்”!5 இரட்சகர் மீதும் நம்முடைய பரிசுத்த உடன்படிக்கைகள் மீதும் கவனம் செலுத்துவது நிலையான மகிழ்ச்சியைத் தருகிறது! அநித்தியத்தின் நோக்கம் நமது விருப்பத்தை நிரூபிப்பதாகும். “வாழ்க்கையின் பெரிய பணியும், [சீஷத்துவத்தின் விலையும்], கர்த்தருடைய சித்தத்தைக் கற்றுக்கொண்டு அதைச் செய்வதே.”6 உண்மையான சீஷத்துவம் மகிழ்ச்சியின் முழுமைக்கு வழிவகுக்கிறது. சீஷத்துவத்தின் விலையை கொடுக்க நாம் தயாராக இருக்கிறோமா?

உடன்படிக்கை பாதை ஒரு எளிய சரிபார்ப்பு பட்டியல் அல்ல; இது ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கான அர்ப்பணிப்பை ஆழமாக்குகிறது. ஒவ்வொரு கட்டளை, கொள்கை, உடன்படிக்கை மற்றும் நியமத்தின் மைய நோக்கம் கிறிஸ்துவில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பதாகும். எனவே, கிறிஸ்துவின் மீது நம் வாழ்க்கையை மையப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாடு சீரானதாக இருக்க வேண்டும், நிபந்தனை, சூழ்நிலை அல்லது மேலோட்டமானவை அல்ல. “எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் தேவனுக்குச் சாட்சியாக நிற்க வேண்டும்” என்ற நமது விருப்பத்திலிருந்து விடுமுறை நாட்களையோ தனிப்பட்ட நேரத்தையோ ஒதுக்கிவிட முடியாது.”7 சீஷத்துவம் மலிவானது அல்ல, ஏனென்றால் பரிசுத்த ஆவியின் தோழமை விலைமதிப்பற்றது.

நிச்சயமாக, பத்து கன்னிகைகளின் உவமையைப் போதித்த கர்த்தர் நம் நாளை நினைத்துக் கொண்டிருந்தார். புத்திசாலிகளான ஐவரைப்பற்றி அவர் கூறினார்: அவர்கள் “வழிநடத்துவதற்காக பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள், மற்றும் ஏமாற்றப்படாதவர்கள்”8 ஆனால் புத்தியில்லாதவர்களின் தீவட்டிகள் எண்ணெய் குறைவால் “அணைந்து போயிற்று.”9 ஒருவேளை நேபியின் வார்த்தைகள், சபையின் ஒரு காலத்தில் விசுவாசமாக இருந்த இந்த உறுப்பினர்களை சிறப்பாக விவரிக்கின்றன: “மற்றவர்களை அவன் சாந்தப்படுத்தி, ஆற்றி, சீயோனில் அனைத்தும் நலமே.”10, என்று சொல்லும்படியாக அவர்களை மாம்ச பாதுகாப்பிற்குள் போக வைப்பான்.

மாம்ச பாதுகாப்பு என்பது கிறிஸ்துவுக்குப் பதிலாக உலக விஷயங்களைத் தேடுவதும் நம்புவதும் ஆகும், வேறு வார்த்தைகளெனில், ஆவிக்குரிய லென்ஸுக்குப் பதிலாக மதச்சார்பற்ற லென்ஸ் மூலமாகப் பார்ப்பது. “இருக்கிறதையும், … இருக்கப்போவதுமான” காரியங்களைப் பார்க்கும் திறனை பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தருகிறார்.”11 “பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே [நாம்] சகலத்தையும்பற்றிய சத்தியத்தை அறியமுடியும்” 12 ஏமாற்றப்படாதீர்கள். நாம் கிறிஸ்துவை நம் வாழ்வின் மையமாக வைத்து, நாம் குருடராக இருப்பதால் அல்ல, ஆனால் நம்மால் பார்க்க முடிகிறதால் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்தை உறுதியளிக்கிறோம்.13

புத்தியில்லாத கன்னிகைகளுக்கு என்னவானது? அவர்கள் ஏன் ஆவிக்குரிய எண்ணெய் பாத்திரத்தை எடுத்துச் செல்ல விரும்பவில்லை? அவர்கள் வெறுமனே தள்ளிப் போட்டார்களா? அவர்கள், ஒருவேளை, மிகவும் சாதாரணமாக இருந்தார்களா, ஏனெனில் அது சிரமமாக இருந்ததா அல்லது தேவையற்றதாகத் தோன்றியதா? காரணம் எதுவாக இருந்தாலும், கிறிஸ்துவின் முக்கிய பங்கைப்பற்றி அவர்கள் ஏமாற்றப்பட்டனர். இதுவே ஆரம்பத்திலிருந்தே சாத்தானின் அடிப்படை வஞ்சகமாக இருந்து வருகிறது, மேலும் ஆவிக்குரிய எண்ணெய் இல்லாத காரணத்தால் அவர்களின் சாட்சி விளக்குகள் இதனாலே அணைந்துவிட்டன. இந்த உவமை நம் காலத்திற்கு ஒரு நவீன உருவகம். பலர் சபையை விட்டு வெளியேறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இரட்சகரையும் அவர்களது உடன்படிக்கைகளையும் விட்டுவிடுகிறார்கள்.

பூர்வ தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட முன்னெப்போதும் இல்லாத காலங்களில் நாம் வாழ்கிறோம், சாத்தான் “மனுப்புத்திரர் இருதயங்களில் சினம் கொள்ளச்செய்து, நன்மைக்கு விரோதமாய் கோபமடைய ஏவுவான்.”14. நமது இளைஞர்களில் பலர், மற்றும் நம்மில் பலர், தெய்வீக அடையாளம் மற்றும் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கைக்கு விரோதமான பொழுதுபோக்கு மற்றும் செய்திகளை அனுப்பும் ஆன்லைன் மெய்நிகர் உலகில் வாழ்கிறோம்.

ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் மிகவும் வல்லமை வாய்ந்த ஆவிக்குரிய செல்வாக்கு, தங்கள் சொந்த பரிசுத்த உடன்படிக்கைகளை உண்மையுடன் கடைப்பிடிக்கும் அன்பான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளின் நீதியான உதாரணம். உணர்வுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கற்பிக்கிறார்கள், அதனால் அவர்களும் “தங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக எதனைக் கண்நோக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்வார்கள்.” 15 தற்செயலான மற்றும் சீரற்ற உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பது ஆவிக்குரிய விபத்துக்கு வழிவகுக்கிறது. ஆவிக்குரிய சேதம் பெரும்பாலும் நம் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள், மேல் அதிகமாக உள்ளது. பெற்றோர்களே, தாத்தா பாட்டிகளே, நாம் இப்போதும் மனமுள்ளவர்களாய் இருக்கிறோமா?

“வருங்காலத்தில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலில்லாமல், வழிகாட்டுதலில்லாமல், ஆறுதலளிப்பில்லாமல், நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரியவிதமாக பிழைத்திருப்பது சாத்தியமில்லை”16 என தலைவர் ரசல் எம். நெல்சன் எச்சரித்தார். நமது விளக்குகளை ஒழுங்கமைக்கவும், நமது ஆவிக்குரிய எண்ணெய் இருப்புக்களை அதிகரிக்கவும் இது தெளிவான மற்றும் மறுக்கமுடியாத எச்சரிக்கையாகும். ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளைப் பின்பற்ற நாம் இன்னும் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறோமோ? உங்கள் விளக்கில் உள்ள ஆவிக்குரிய எண்ணெயின் அளவு என்ன? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் பரிசுத்த ஆவியின் செல்வாக்கை தொடர்ந்து பெற உங்களுக்கு உதவும்?

இன்று, இயேசுவின் காலத்தைப் போலவே, சீஷத்துவத்தின் விலையை ஏற்க விரும்பாமல் பின்வாங்குபவர்களும் இருப்பார்கள். இரட்சகரின் சபை மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது கடுமையான மற்றும் வெறுக்கத்தக்க விமர்சனங்கள் அதிகரித்து வருவதால், நமது சீஷத்துவத்திற்கு நமது ஆவிக்குரிய முதுகெலும்புகளை நேராக்கவும் பலப்படுத்தவும் அதிக விருப்பம் தேவைப்படும்.17

நமது ஆவிக்குரிய அடித்தளம் இயேசு கிறிஸ்துவின் மீது உறுதியாக கட்டப்பட்டால், நாம் விழ மாட்டோம், பயப்பட வேண்டியதில்லை.

“இதோ, இருதயத்தையும் உற்சாகமான மனதையும் கர்த்தர் கேட்கிறார்; மனம் பொருந்திச் செவிகொடுப்பவர்கள் இந்த கடைசி நாட்களில் சீயோன் தேசத்தின் நன்மையைப் புசிப்பார்கள்.”18

நாம் எப்போதும் ஆயத்தமாய் இருப்போமாக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.